டிஸ்கி: தலைப்பை ’பிரபல பதிவர்-தொழிலதிபர் இம்சை அரசன் பாபுவுடன் ஒரு பதிவர் சந்திப்பு’ என்று விரித்துப் புரிந்து கொள்ளவும்.
நமக்கு பதிவர்னாலே பயம்..அதுவும் பதிவர் சந்திப்புன்னா பயமோ பயம்..அதனால யார் கையிலயும் சிக்காம ஃப்ரீயா சுத்திக்கிட்டிருந்த எனக்கு சிரிப்பு போலீஸ் ரமேஷ் மூலமா ஒரு சோதனை வந்தது. இம்சை அரசன் பாபு கோவில்பட்டி தான்..நம்ம க்ளோஸ் ஃப்ரெண்டு..அவசியம் போய்ப் பாருங்கன்னு சொல்லி அட்ரசும் சொல்லிட்டார். டெய்லி அந்த வழியாத் தான் நான் போய்க்கிட்டு இருந்ததால பத்து நாள் தீவிரமா யோசிச்சு, இந்த சோதனையை எதிர்கொள்றதுன்னு முடிவு பண்ணேன்.
சிப்பு (இதை சிரிப்பு போலீஸ் ரமேஷ் என்று விரிக்கவும்!) ஃப்ரெண்ட்டுன்னா, அவர் மாதிரியே யாரோ ஒரு சின்னப் பையன்(!)ன்னு நினைச்சுக்கிட்டே அவர்கூட ஃபோன்ல பேசுனேன். இம்சை அரசனும் ரொம்ப சந்தோசமா “ஃப்ரீயா இருக்கும்போது வாங்க”ன்னார். ‘நம்மளோ குளிக்கும்போது தான் ஃப்ரீயா இருப்போம்..அப்போ எப்படிப் போறது’ன்னு நானா யோசிச்சுக்கிட்டே ‘இன்னைக்கு ஈவ்னிங் வர்றேன்’னு சொன்னேன்.
அப்புறம் தான் சோதனை ஆரம்பிச்சுச்சு..உடனே அவரு “வாங்க வாங்க..கோவில்பட்டிலேயே பெரிய்ய்ய ஹோட்டலாப் போய் ரெண்டு மணி நேரம் சாப்பிட்டுக்கிட்டே நிதானமாப் பேசலாம்”னு சொன்னாரு. என்ன இருந்தாலும் அவரு ஒரு பதிவர் இல்லியா..அதனால எங்கயும் சிக்கிக்காத படி ‘போகலாம்..சாப்பிடலாம்’னு சொல்றாரே ஒழிய யாரு காசு கொடுக்கணும்னு சொல்லவேயில்லை. நானும் வர்றேன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சுட்டேன்.
எனக்கோ இதுல யாரு பலியாடுன்னு புரியலை..எதுக்கு வம்பு..இப்படியே எஸ் ஆகிடுவோம்னு முடிவு பண்ணி சாயந்திரமா அவருக்குக் கூப்பிட்டு “அண்ணே, நான் ரொம்ப பிஸி..வர முடியலை”ன்னு சொன்னேன். அவரும் ‘பரவாயில்லைங்க..நாளைக்கு என் ஆஃபிசுக்கு வந்திருங்க’ன்னு சொன்னாரு.
எனக்கும் அது சரின்னு தோணுச்சு..காலைல பத்து மணிக்குப் போனா யாருக்கும் சேதாரம் இல்லாம தப்பிச்சுடலாம்னு முடிவு பண்ணி, ஒலக முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்புக்கு நான் ஒத்துக்கிட்டேன்.
ஆனாலும் விதி செஞ்ச சதியால பதினொரு மணிக்கு அவர் ஆஃபீஸ் பில்டிங் முன்னாடி போய் நின்னேன். ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல அண்ணன் ஆஃபீசு. மேல போயி ஆஃபீசுல வாசல்ல நின்னுக்கிட்டு ‘இப்போ எப்படிக் கேட்கறது..இம்சை அரசன்னு சொன்னாத் தெரியுமா’ன்னு யோசிக்கும்போதே ”வாங்க...வாங்க”ன்னு ஒரு தேன் மதுரக் குரல் கேட்டுச்சு..திரும்பிப் பார்த்துட்டு அசந்துட்டேன். நீங்களும் அசரணும்னா கீழே இருக்கிற ஸ்டில்லைப் பாருங்க:
‘என்னடா இது..நம்ம ஊருல இப்படி ஒருத்தரா..அஜித்குமாரோட அசல் மாதிரி இருக்காரே..பொதுவா பதிவர்னாலே பேக்கு மாதிரி தானே இருப்பாங்க’ன்னு பிரமிச்சு நின்னப்போ “வாங்க செங்கோவி..உட்காருங்க”ன்னு சொன்னார். ‘இவங்க தான் என் ஒய்ஃப்’ன்னு அண்ணியாரை அறிமுகம் செஞ்சு வச்சார். யாரை முதல்ல பார்த்தாலும் பேக்கு மாதிரி முழிக்கிற என் வழக்கப்படி ஒரு வணக்கம் போட்டுட்டு முழிச்சேன்.
அண்ணனைப் பார்த்தவுடனே எல்லாருக்கும் தோணுற அதே கேள்வி எனக்கும் தோணுச்சு..கேட்டேன்..”இவ்ளோ ஹேண்ட்சமா இருக்கிறீங்களே..நீங்க ஏன் உங்க ஸ்டில்லை உங்க ப்ளாக்ல போடுறதில்லை”ன்னு கேட்டேன்..”அது வேணாங்க..ரசிகைங்க தொல்லை ஜாஸ்தி ஆகிடும்..நானோ ஏக பத்தினி விரதன்”னாரு. எனக்கு புல்லரிச்சுடுச்சு.. அண்ணியாருக்கு கண் கலங்கிடுச்சு..கண்ணைத் துடைச்சுக்கிட்டே”நீங்க பேசிக்கிட்டிருங்க”ன்னு சொல்லிட்டு வெளில போய்ட்டாங்க.
அண்ணியாரும் பிசினஸ்ல கூடவே இருந்து உதவி செய்றாங்கன்னு சொன்னாரு..’அடப்பாவமே..வீட்டுக் கஜானாவை அவங்ககிட்ட கொடுத்தது பத்தாதுன்னு ஆஃபீஸ் கஜானாவையும் அங்க கொடுத்துட்டு உட்கார்ந்திருக்காரே..அப்போ நாம நேத்து எஸ்கேப் ஆனது சரி தான்’ன்னு நினைச்சுக்கிட்டேன்.
ஆனால் அண்ணன் யாரு..விட்டுடுவாரா..”அப்புறம், மதியம் சாப்பிட எங்க போகலாம்?”னாரு..’ஆஹா...மனுசன் கொலைவெறியோட இருக்காரு போலிருக்கே’ன்னு நினைச்சுக்கிட்டு ‘இல்லைண்ணே, இன்னிக்கு நான் விரதம்’னு ஒரே போடாப் போட்டுட்டேன்.
“ஒன்னுமே சாப்பிடமாட்டீங்களா?”ன்னாரு.
“ஒன்லி ஜூஸ்”ன்னு சொன்னேன். அவரும் ஆஃபீஸ் பாயை (பாய் தான்..!) மொபைல்ல கூப்பிட்டு “ஏதாவது ஜூஸ் வாங்கிட்டு வா..ஆப்பிள்..ஆரஞ்சு..எதுன்னாலும் ஓகே”ன்னு சொல்லிட்டு, என்கிட்ட பேச ஆரம்பிச்சாரு.
அண்ணன்கிட்ட ஒரு அருமையான குணம் இருந்துச்சு..பொதுவா ஒரு பதிவர்கிட்ட ‘நான் முருக வேட்டைன்னு ஒரு தொடர் எழுதறேன்’ன்னு சொன்னா, ‘ஆங்..பார்த்தேன்..நான்கூட ஒரு தொடர் எழுதுனேன் முன்னாடி படிச்சீங்களா’ன்னு ஆரம்பிச்சு அவங்க எழுதுனதைப் பத்தியே பேசுவாங்களேயொழிய நம்மளைப் பத்தி ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா அண்ணன் ரொம்ப நேரம் என் பதிவுகளைப் பத்தி விலாவரியாப் பேசுனாரு..
அப்புறம் தான் கவனிச்சேன்..அவருக்குப் பின்னாடி வரிசையா ஏகப்பட்ட சாமி ப்டங்களா மாட்டியிருந்துச்சு..அண்ணனோட தேஜஸ்க்கும் அதுக்கும் ஏகப் பொருத்தம்..நம்ம நித்திக்கு வேற மார்க்கெட் போயிருச்சே..பேசாம அண்ணன் கழுத்துல கொட்டையை மாட்டி, களத்துல இறக்கிடலாமான்னு யோசிச்சேன். ஆனாலும் ஆப்பிள் ஜூஸ் வர்ற வரைக்குமாவது சும்மா இருப்போம்னு நான் ஒன்னும் சொல்லலை.
ஆனாலும் தவளையும் தன் வாயால் கெடும்கிற கதையா ‘நான் இன்னிக்கு காலைல ஒரு போஸ்ட் போட்டிருக்கேன்..பார்த்தீங்களா?”ன்னு கேட்டுட்டேன். ‘அப்படியான்னு கேட்டுக்கிட்டே பக்கத்துல இருந்த கம்ப்யூட்ட்ர்ல ‘ஜெ.வின் ஓராண்டு ஆட்சி-ஒரு பார்வை’ங்கிற பதிவை ஓப்பன் பண்ணாரு..கொஞ்சம் படிக்கவுமே டென்சன் ஆகிட்டாரு. அண்ணன் அந்தக் காலத்துல இருந்தே மம்மி ரசிகர் போல..
’பதிவை இன்னும் நல்லா எழுதியிருக்கலாம்’னு ஆரம்பிச்சு ‘இது நல்ல ஆட்சி தான்’ங்கிற மாதிரியே பேசுனாரு. பேசிக்கிட்டே மொபைலை எடுத்து யாருக்கோ மிஸ்டு கால் வேற கொடுத்தாரு. நமக்கு பகீர்னு ஆகிடுச்சு..ஆஹா..தேவையில்லாம ஒரு தொழிலதிபரை பகைச்சுக்கிட்டமேன்னு கவலையாப் போச்சு.
ஜூஸ் வாங்கப் போன ஆளும் திரும்பி வந்தாரு..பார்த்தா அரை டம்ப்ளர்ல கொஞ்சூண்டு பெப்சி..’ஆஹா..அண்ணன் ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்து ஜூஸை பெப்சி ஆக்கிட்டாரே..இனிமே யாரையும் சந்திக்கிறதா இருந்தா, அன்னிக்கு பதிவே போடக்கூடாதுங்கிற பாடத்தைக் கத்துக்கிட்டேன். அப்புறம் அண்ணன் பல பதிவுகலக பயங்கர ரகசியங்களைப் பத்திப் பேசுனாரு..பல நல்ல அட்வைஸ்லாம் கொடுத்தாரு. அடுத்து அண்ணன் சொன்னதைக் கேட்டுத் தான் நான் மெல்ட் ஆகிட்டேன்.
ரொம்ப கேசுவலா “எங்கயும் போகணும்னா என் காரை எடுத்துக்கிட்டுப் போங்க..சும்மா தயங்காமக் கேளுங்க’ன்னாரு. நான்லாம் என் பையனோட பொம்மைக் காரையே யாருக்கும் தர மாட்டேன்..பக்கத்து வீட்டுப் பையன் வந்து கதவைத் தட்டுனா, அந்த பொம்மைக் காரை ஒளிச்சு வச்சுட்டுத் தான் கதவையே திறப்பேன்..ஆனா அண்ணனுக்கு எவ்ளோ பெரிய மனசுன்னு நினைச்சு புல்லரிச்சுப் போச்சு எனக்கு.
அண்ணனும் தொடர்ந்து “நான் ரொம்ப சிம்பிளா இருப்பேங்க..கார்ல ஆஃபீசுக்கு வந்தாலும், கீழேயே காரை விட்டுட்டு வந்திடுவேன். இந்த ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்கு நடந்தே தான் வருவேன்’ன்னாரு..இதன்மூலமா அண்ணன் பூந்தி மாதிரி இனிமையானவர் மட்டுமில்லை, காந்தி மாதிரி எளிமையானவர்னும் தெரிஞ்சுக்கிட்டேன்.
அப்புறமா வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிட்டு, வீடு இருக்கிற இடத்தைச் சொன்னாரு..அது என் அண்ணன் இருக்கிற ஏரியா..அவரைத் தெரியுமான்னு கேட்டேன்..அடடா..அவர் என் ஃப்ரெண்டுங்க..அவர் தம்பியா நீங்கன்னு ரொம்ப சந்தோசப்பட்டார்.
‘ஆஹா..நாம ஃபாரின் ரிட்டர்ன்..பெரிய அப்ப்பாடக்கர்னு பீலா விடலாம்னு வந்தா, மனுசன் மெயின் ஆளையே கைக்குள்ள வச்சிருக்காரே’ன்னு நினைச்சுக்கிட்டு, ஆஃப் ஆகிட்டேன்..
அதுக்குள்ள அந்த அரை டம்ப்ளர் பெப்சியும் தீர்ந்து போயிடுச்சு..”சரிண்ணே, நான் கிளம்பறேன்”ன்னு சொல்லிட்டு எழுந்தேன்.
அவரும் எழுந்து கை கொடுத்துட்டு “சரி, ஃப்ரீ ஆகிட்டு வாங்க..சாப்பிடப் போகலாம்”னாரு.
அடப்பாவிகளா..போகலாம்.போகலாம்ங்கிறாங்க..ஆனா யாரு பே பண்ணுவாங்கன்னு சொல்லவே மாட்டேங்கிறாங்களேன்னு நொந்துக்கிட்டே திரும்பிட்டேன்.
இவ்வாறாக ஒரு சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்த திருப்தியுடன், அந்த பதிவர் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.
வணக்கம்,செங்காவி!அடடே!பேட்டி ,பதிவர் சந்திப்புன்னு களை கட்டுது போல?சரி,அதுக்குள்ள "அந்த அரை டம்ப்ளர் பெப்சி"யும் தீர்ந்து போயிடுச்சு அப்புடீன்னு எழுதியிருக்கீங்களே,குடிச்சது அவரா?நீங்களா????
ReplyDeleteஹா..ஹா..ஐயா, அவரே பெரிய மனசு பண்ணி அரை டம்ப்ளர் கொடுத்தாரு..அதையும் குடிக்காட்டி கோவிச்சுப்பாருல்ல?
ReplyDeleteபாபு கலர்ல கொவில்பட்டிக்கே வெளிச்சம் குடுக்கலாமே
ReplyDeleteமன்னிக்கவும்,பெயரை தட்டச்சி விட்டு கவனிக்காது விட்டு விட்டேன்,"செங்கோவி".
ReplyDeleteகோவில்பட்டியின் ஒளிவிளக்கு, தென்னகத்தின் மணிவிளக்காம் இம்சையாரை தரிசித்து விட்டு வந்திருக்கிறீர்கள்........... கொடுத்து வைத்தவர்தான்............. (அண்ணன் அவ்ளோ சீக்கிரத்துல யாருக்கும் தரிசனம் கொடுக்க மாட்டார் தெரியும்ல?)
ReplyDelete///// தலைப்பை ’பிரபல பதிவர்-தொழிலதிபர் இம்சை அரசன் பாபுவுடன் ஒரு பதிவர் சந்திப்பு’ என்று/////
ReplyDeleteஇதுக்காக அவரு ப்ளாக்கு லிங்க தேடி கண்டுபுடிச்சி கொடுத்திருக்கீங்களே....... என்ன ஒரு அர்ப்பணிப்பு....... நெனச்சாவே கண்ணு காது மூக்கு எல்லாம் கலங்குதுண்ணே..........
///நமக்கு பதிவர்னாலே பயம்..அதுவும் பதிவர் சந்திப்புன்னா பயமோ பயம்.//////
ReplyDeleteஅது உங்களை பாத்து எல்லாரும் பயந்துடுவாங்கன்ன பயம்தானே?
/////இம்சை அரசன் பாபு கோவில்பட்டி தான்..நம்ம க்ளோஸ் ஃப்ரெண்டு..அவசியம் போய்ப் பாருங்கன்னு சொல்லி அட்ரசும் சொல்லிட்டார். டெய்லி அந்த வழியாத் தான் நான் போய்க்கிட்டு இருந்ததால பத்து நாள் தீவிரமா யோசிச்சு, இந்த சோதனையை எதிர்கொள்றதுன்னு முடிவு பண்ணேன்.///////
ReplyDeleteஒரு மனுசனுக்கு வில்லங்கம் எப்படியெல்லாம் வந்து சேருதுன்னு பாருங்க........
//////சிப்பு (இதை சிரிப்பு போலீஸ் ரமேஷ் என்று விரிக்கவும்!) ஃப்ரெண்ட்டுன்னா, அவர் மாதிரியே யாரோ ஒரு சின்னப் பையன்(!)ன்னு நினைச்சுக்கிட்டே அவர்கூட ஃபோன்ல பேசுனேன்.////////
ReplyDeleteஎன்னது சிப்பு யூத்தா? அவரு யூத்து படம் வேணா பத்து வாட்டி பாத்திருக்கலாம், அதுக்காக அவரையே யூத்துன்னா எப்படி?
//// அவரு “வாங்க வாங்க..கோவில்பட்டிலேயே பெரிய்ய்ய ஹோட்டலாப் போய் ரெண்டு மணி நேரம் சாப்பிட்டுக்கிட்டே நிதானமாப் பேசலாம்”னு சொன்னாரு.////////
ReplyDeleteகோவில்பட்டிலேய்யே......... பெரிய்ய்ய..... ஹோட்டலு.............. ம்ம்ம் வெளங்கிரும்........ ஒரு டீக்கடைல நின்னு போண்டா வடை சாப்புட்டு வர்ரதுக்கு எப்படியெல்லாம் பில்டப்பு கொடுக்கிறாங்க...........
அண்ணே! போங்கண்ணே உங்களுக்கு விபரமே பத்தவில்லை.. நான் நேரா அவர் வீட்டுக்கே போய்ட்டேன். அன்னி கையால காலையில் இரண்டு டீ, பூரி கிழங்கு. மதியம் அவங்க வீட்டில் சிக்கன் பிரியானி சாப்பிட்டு ராத்திரி நாலு இட்லி ஒரு தண்ணி பாட்டில் அவர் காசுல பார்சல் வாங்கிட்டு தான் ட்ரைன் ஏறினேன்... :)
ReplyDelete/////‘என்னடா இது..நம்ம ஊருல இப்படி ஒருத்தரா.. அஜித்குமாரோட அசல் மாதிரி இருக்காரே..பொதுவா பதிவர்னாலே பேக்கு மாதிரி தானே இருப்பாங்க’ன்னு பிரமிச்சு நின்னப்போ///////
ReplyDeleteஎன்னது அஜீத்குமாரா? யோவ் ஏன்யா... அவரு தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரின்னு கேள்விப்பட்டேனே?
////// TERROR-PANDIYAN(VAS) said...
ReplyDeleteஅண்ணே! போங்கண்ணே உங்களுக்கு விபரமே பத்தவில்லை.. நான் நேரா அவர் வீட்டுக்கே போய்ட்டேன். அன்னி கையால காலையில் இரண்டு டீ, பூரி கிழங்கு. மதியம் அவங்க வீட்டில் சிக்கன் பிரியானி சாப்பிட்டு ராத்திரி நாலு இட்லி ஒரு தண்ணி பாட்டில் அவர் காசுல பார்சல் வாங்கிட்டு தான் ட்ரைன் ஏறினேன்... :)//////////
சார், நடுவில டீ வடை, சமோசா, பஜ்ஜி சாப்புட்டத விட்டுப்புட்டீங்க சார்........
/////.’அடப்பாவமே..வீட்டுக் கஜானாவை அவங்ககிட்ட கொடுத்தது பத்தாதுன்னு ஆஃபீஸ் கஜானாவையும் அங்க கொடுத்துட்டு உட்கார்ந்திருக்காரே../////////
ReplyDeleteஅப்போ நீங்க ஒரு அப்பாவி பதிவரை சந்திச்சிருக்கீங்க...............?
////ஆனால் அண்ணன் யாரு..விட்டுடுவாரா..”அப்புறம், மதியம் சாப்பிட எங்க போகலாம்?”னாரு..’ஆஹா...மனுசன் கொலைவெறியோட இருக்காரு போலிருக்கே’ன்னு நினைச்சுக்கிட்டு ‘இல்லைண்ணே, இன்னிக்கு நான் விரதம்’னு ஒரே போடாப் போட்டுட்டேன்.//////////
ReplyDeleteஒரு பிரபல வெளிநாடுவாழ் பதிவர் இப்படி பண்ணலாமா? அவரு எவ்ளோ சிரமப்பட்டு இந்த மீட்டிங்க அரேஞ்ச் பண்ணாரு.........!
//////பொதுவா ஒரு பதிவர்கிட்ட ‘நான் முருக வேட்டைன்னு ஒரு தொடர் எழுதறேன்’ன்னு சொன்னா, ‘ஆங்..பார்த்தேன்..நான்கூட ஒரு தொடர் எழுதுனேன் முன்னாடி படிச்சீங்களா’ன்னு ஆரம்பிச்சு அவங்க எழுதுனதைப் பத்தியே பேசுவாங்களேயொழிய நம்மளைப் பத்தி ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா அண்ணன் ரொம்ப நேரம் என் பதிவுகளைப் பத்தி விலாவரியாப் பேசுனாரு..////////////
ReplyDeleteஅதெல்லாம் தினம் எழுதுற பதிவர்கள் பண்ற வேலை, இவருதான் ஆறு மாசத்துக்கு ஒருவாட்டி, லைட்டா எழுதுறவராச்சே? கடைசியா என்ன எழுதுனோம்னு அவருக்கே தெரியாது, உங்க கிட்ட எப்படி பேசுவாரு?
//////அப்புறம் தான் கவனிச்சேன்..அவருக்குப் பின்னாடி வரிசையா ஏகப்பட்ட சாமி ப்டங்களா மாட்டியிருந்துச்சு..அண்ணனோட தேஜஸ்க்கும் அதுக்கும் ஏகப் பொருத்தம்..நம்ம நித்திக்கு வேற மார்க்கெட் போயிருச்சே..பேசாம அண்ணன் கழுத்துல கொட்டையை மாட்டி, களத்துல இறக்கிடலாமான்னு யோசிச்சேன்.//////////
ReplyDeleteயோவ் யோவ், அவரு ஏற்கனவே கிட்டத்தட்ட அப்படி ஃபார்ம் ஆகிட்டு இருக்காரு.. நீங்க வேற...........
/////ஆனாலும் தவளையும் தன் வாயால் கெடும்கிற கதையா ‘நான் இன்னிக்கு காலைல ஒரு போஸ்ட் போட்டிருக்கேன்..பார்த்தீங்களா?”ன்னு கேட்டுட்டேன். ‘அப்படியான்னு கேட்டுக்கிட்டே பக்கத்துல இருந்த கம்ப்யூட்ட்ர்ல ‘ஜெ.வின் ஓராண்டு ஆட்சி-ஒரு பார்வை’ங்கிற பதிவை ஓப்பன் பண்ணாரு..கொஞ்சம் படிக்கவுமே டென்சன் ஆகிட்டாரு. அண்ணன் அந்தக் காலத்துல இருந்தே மம்மி ரசிகர் போல..///////////////
ReplyDeleteஅடடடடா............... அவரு மம்மின்னா பம்முற பார்ட்டியாச்சே....... அந்த பதிவ பார்த்துட்டு குமுறி இருப்பாரே?
//சார், நடுவில டீ வடை, சமோசா, பஜ்ஜி சாப்புட்டத விட்டுப்புட்டீங்க சார்.......//
ReplyDeleteஅது எல்லாம் கன்யாகுமாரியில் வாங்கி கொடுத்தாரு மச்சி... டீ, வடை, ஜூஸ், மிளகாய் பஜ்ஜி, சர்பத், சோடா, இளனீர், மரவள்ளி கிழங்கு சிப்ஸ்... :)
///////அது எல்லாம் கன்யாகுமாரியில் வாங்கி கொடுத்தாரு மச்சி... டீ, வடை, ஜூஸ், மிளகாய் பஜ்ஜி, சர்பத், சோடா, இளனீர், மரவள்ளி கிழங்கு சிப்ஸ்... :)///////////
ReplyDeleteடீ, ஜூஸ், சர்பத், சோடா.............. அடுத்து என்னன்னு எல்லாருக்கும் தெரியும், செங்கோவி அண்ணன் கோச்சுப்பாரேன்னு நீ அதை போடலை போல......... இருந்தாலும் இம்சையாரை யாரும் தப்பா நெனச்சிட கூடாது பாரு.........!
//////ரொம்ப கேசுவலா “எங்கயும் போகணும்னா என் காரை எடுத்துக்கிட்டுப் போங்க..சும்மா தயங்காமக் கேளுங்க’ன்னாரு. நான்லாம் என் பையனோட பொம்மைக் காரையே யாருக்கும் தர மாட்டேன்..பக்கத்து வீட்டுப் பையன் வந்து கதவைத் தட்டுனா, அந்த பொம்மைக் காரை ஒளிச்சு வச்சுட்டுத் தான் கதவையே திறப்பேன்..ஆனா அண்ணனுக்கு எவ்ளோ பெரிய மனசுன்னு நினைச்சு புல்லரிச்சுப் போச்சு எனக்கு.//////////////
ReplyDeleteயோவ் இன்னிக்கு பெட்ரோல் விக்கிற விலைல அதெல்லாம் எதுவும் பண்ணிட மாட்டீர்னு ஒரு நம்பிக்கைல சொல்லி இருப்பாரு.......
//////அண்ணனும் தொடர்ந்து “நான் ரொம்ப சிம்பிளா இருப்பேங்க..கார்ல ஆஃபீசுக்கு வந்தாலும், கீழேயே காரை விட்டுட்டு வந்திடுவேன். இந்த ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்கு நடந்தே தான் வருவேன்’ன்னாரு..////////
ReplyDeleteஅப்போ கிரவுண்ட் ஃப்ளோர்ல ஆபீஸ் இருந்திருந்தா அண்ணன் காரை வீட்லயே விட்டுட்டு வந்திருப்பாரோ?
//////இவ்வாறாக ஒரு சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்த திருப்தியுடன், அந்த பதிவர் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.////////
ReplyDeleteஅது என்ன சிங்கத்தை அதன் குகைலயே சந்திக்கறது? ஏன் வெளில சந்திச்சா அது ஒத்துக்காதா?
அருமையான பதிவு.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். எங்கள் ஊர் எப்போது வருகிறீர்கள்?
வாழ்த்துகள்.
தலைப்பை ’பிரபல பதிவர்-தொழிலதிபர் இம்சை அரசன் பாபுவுடன் ஒரு பதிவர் சந்திப்பு’ என்று விரித்துப் புரிந்து கொள்ளவும்.//
ReplyDeleteதொழிலதிபர்னா? சொந்தமா நாலு ஆம்னி வேன் வச்சு.. அதுல.... :-)
சிரிப்பு போலீஸ் ரமேஷ் மூலமா ஒரு சோதனை வந்தது. ///
ReplyDeleteஇது பொறந்ததே பூமிக்கு வந்த சோதனைதானே? :-)
‘நம்மளோ குளிக்கும்போது தான் ஃப்ரீயா இருப்போம்..அப்போ எப்படிப் போறது’ன்னு நானா யோசிச்சுக்கிட்டே ‘இன்னைக்கு ஈவ்னிங் வர்றேன்’னு சொன்னேன்//
ReplyDeleteஆனா.. அந்த பதிவர் எப்பவுமே ஃபிரீயாத்தான் இருப்பாரு :-)
ஆனாலும் விதி செஞ்ச சதியால பதினொரு மணிக்கு அவர் ஆஃபீஸ் பில்டிங் முன்னாடி போய் நின்னேன். ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல அண்ணன் ஆஃபீசு///
ReplyDeleteஓஒ.. இந்த தொழிலுக்கு ஆபிசு வேற போட்டாங்கப்பா :-)
// அஜித்குமாரோட அசல் மாதிரி இருக்காரே.. //
ReplyDeleteஎன்ன ஒரு வில்லத்தனம் ..நான் ஆசை அசித் குமார் மாதிரி இருப்பேன் ..இவரு அசல் அசித்ன்னு சொல்லிட்டாரே ..யோவ் நான் என்ன ஆவலோ பெரிய கிருதா மீசை எல்லாம் வச்சிருக்கனா என்ன ?
நல்ல பதிவர் சந்திப்பு...
ReplyDeleteஅவரே ரிஜெக்ட் பண்ணிட்டாரு!
ReplyDeleteஆஹா இப்படி வேற பேட்டி தொட ருங்கோ!
ReplyDelete