Wednesday, May 23, 2012

தன்ஷிகா தான் இனி ஹன்சிகாவா? (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

ஹய்யோ.ஹய்யய்யோ...
ஏ..ஹய்யோ.ஹய்யய்யோ...

ஷாக் அடிக்குது சோனா
நீ நடந்து போனா!

ஹார்ட் அடிக்குது தானா
நீ ராஜஸ்தானி மானா?

ஹய்யோ.ஹய்யய்யோ...
ஏ..ஹய்யோ.ஹய்யய்யோ!

பதிவர் கலந்துரையாடல்:

காலை 8 மணி:

நான் : ஹலோ...கஸாலி...எப்படி இருக்கீங்க?

கஸாலி: நல்லா இருக்கேங்க..இப்போ கடைக்குக் கிளம்பிக்கிட்டு இருக்கேன்..அப்புறம் நானே கூப்பிடட்டுமா?

நான்:ஓகே..ஓகே..நான் சும்மா தான் கூப்பிட்டேன்..பார்ப்போம்.

காலை 10 மணி :

கஸாலி: என்ன தலைவரே, எப்படி இருக்கீங்க?
நான் : நல்லா இருக்கேன், கஸாலி, நான் இப்போ கோவில்பட்டி போய்க்கிட்டு இருக்கேன். அப்புறம் கூப்பிடட்டுமா?
கஸாலி: பரவாயில்லைங்க..போய்ட்டு வாங்க..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.

மதியம் ஒரு மணி:

நான்: என்ன தலைவரே.........பிஸியா?
கஸாலி: இல்லைங்க..சாப்பிடப் போகலாம்னு கிளம்பினேன்.
நான்: ஓ..சரிசரி..சாப்பிடப் போங்க..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.

மாலை 4 மணி :

கஸாலி: என்னங்க..என்ன செய்றீங்க?
நான் : ஒரு நிலம் ஒன்னு பார்க்க வந்திருக்கிறேன்..அப்புறம் கூப்பிடட்டுமா?
கஸாலி: பாருங்க..அபருங்க..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.

மாலை 6 மணி:
நான் : கஸாலி..செங்கோவி பேசறேன்

கஸாலி : கடைல கொஞ்சம் கூட்டமா இருக்கு..அப்புறம் கூப்பிடட்டுமா?
நான் :ஓகே..ஓகே..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.


இத்தனையும் பார்த்துக்கிட்டிருந்த என் தங்கமணி : அடப்பாவிகளா.... நீங்க 2 பேரும் தான் இப்படியா? இல்லே, எல்லாப் பதிவர்களுமே இப்படித் தானா?

அவ்வ்வ்வ்வ்!

அஞ்சலியின் அட்டகாசம் :

கலகலப்பு படம் இன்னும் பார்க்கலை. ஆனாலும் அஞ்சலி அதீத கவர்ச்சி காட்டியிருக்கிறதா ஒரு தகவல்...ஏறகனவே அஞ்சலி கவர்ச்சி காட்டுறது ‘ராமராஜன் கையில மெசின்கன்னைக் கொடுத்தா மாதிரி’ இருக்குன்னு சொல்லிட்டேன்...ஆனாலும் அந்தப் புள்ளை திருந்தற மாதிரித் தெரியலியே..இதைவிடக் கேவலமா எப்படிச் சொல்ல..கேப்டன் கையில ரோசாப்பூ கொடுத்த மாதிரின்னு சொல்லலாமா? நமக்கு என்ன வருதோ, அதை ஒழுங்காப் பண்ணிக்கிட்டுப் போனாப் போதாதா..எதுக்கு இந்த வேண்டாத வேலை..

ஏன் அஞ்சலி இப்படி கவர்ச்சிக்கன்னி ஆகியே தீருவேன்னு அடம்பிடிக்குது? யாராவது அதுக்கு எடுத்துச் சொல்லக்கூடாதா?மத்தவங்களை விடுங்க.. ‘கூடவே’ இருந்த கேபிளாராவது “இதோ பாரும்மா..ஆண்டவனே நினைச்சாலும் இனிமே உன்னால கவர்ச்சியாவும் ஆக முடியாது..கன்னியாவும் ஆக முடியாது”ன்னு சொல்லியிருக்கலாம்ல? ஒருவேளை மனுசன் ‘யூத்’துங்கிறதுக்கு தப்பான அர்த்தத்தை அஞ்சலிக்கும் சொல்லிக் கொடுத்திட்டாரோ?..முடியலை பாஸ், முடியலை!


ரஞ்சிதானந்தா:

நித்தி ஒரு வழியா உண்மையை ஒத்துக்கிட்டாரு..ஆமாங்க..’நான் ஆணுமல்ல..பெண்ணுமல்ல’ன்னு ஓப்பனா சொல்லிப் புட்டாருல்ல..

அந்த வீடியோ பார்த்தப்பவே எனக்கு டவுட்டுங்க..என்னடா இது..ரஞ்சிதாவை சீரியல்ல பார்த்தாலே பசங்க நிலைமை சீரியஸ் ஆகிடுமே..இந்த மனுசன்  ரஞ்சி மாஞ்சு மாஞ்சு சேவை செய்யும்போது யார் வீட்டு எழவோனு டிவில சீரியல் பார்க்கானேன்னு நினைச்சேன்..நினைச்சது சரியாப் போச்சு..ஆனா, அந்த ரஞ்சியைத் தாங்க நம்மால புரிஞ்சிக்க முடியலை..ஏன் இப்படி ஒரு பாழுங்கிணத்துல போயி தண்ணி இறைச்சாரு?

தன்ஷா..ஹன்ஸா?:

போன வாரம் ஏதோ ஒரு வேகத்துல ஹன்சி மன்றத்தைக் கலைக்கலாமான்னு கேட்டுட்டேன்..உடனே ஒரு பதிவர் கிட்டேயிருந்து ஃபோன்..ஒரு பதிவர் என்ன..ஒரு பதிவர்..நம்ம தமிழ்வாசி தான் அது...(இப்போல்லாம் நாம ஒரு கிசுகிசு எழுதுனா, 4 பேர் வந்து என்னைத் தானே சொன்னே?-ன்னு கேட்டு 4 வேறவேற மேட்டர் சொல்றாங்க..எதுக்கு வம்பு!)..

தமிழ்வாசி ஃபோன் பண்ணி எனக்கு ஆறுதல் சொல்லிட்டு “நீங்க ஹன்சிக்குப் பதிலா தன்ஷிகாவை  ஏன் வச்சுக்கக்கூடாது?”ன்னு கேட்டார்.

இன்ப அதிச்சியாகி “வாட் டூ யூ மீன்”னு கேட்டேன். அவரும் உஷாராகி “தலைவியா ஏன் வச்சுக்கூடாது?”ன்னு கேட்டேன்,

“அப்படியா...சரி, தன்ஷிகா யாரு?”ன்னு கேட்டேன்.

“என்னய்யா இப்படிக் கேட்கீரு? தன்ஷிகா தெரியாதா? பேராண்மைல ‘ஒன்னுமில்லாம’ ஹாஸ்டலைச் சுத்தி வருமே..இப்போ அரவான்லகூட காட்டுகாட்டுன்னு காட்டியிருந்துச்சே”ன்னாரு..

நமக்கு டென்சன் ஆகிருச்சு..”யோவ், அது பார்க்கிறதுக்கு எங்கூர்ல ஆடு மேய்க்கிற பிள்ளை மாதிரில்ல இருக்கு..நம்ம ஹன்சி எங்கே..அது எங்கே..போய்யா”ன்னு ஃபோனை கட் பண்ணிட்டேன்..

என்ன அநியாயம் பாருங்கய்யா..நம்ம பரந்த மனசுக்கு ஏத்த மாதிரி ஒரு பரந்த ஃபிகரைக் காட்டாம இப்படி வத்தலும் தொத்தலுமாக் காட்டுனா எப்படிய்யா...ஹன்சியை ஏன் விடணும்..இல்லே, ஏன் விடணும்ங்கிறேன்..’பாழடைஞ்ச’ பத்மினியைவே நாம கைவிட்டதில்லையே..இந்த பளபள பங்களாவை ஏன்யா கைவிடணும்? கழுதை, அதுவும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும்கிறேன்..என்னாங்கிறீங்க?

குவைத்துக் காரனுகளாம்...........!

என் பையன் அட்டகாசம் தாங்க முடியலீங்க..குவைத்ல ஜெயில்ல இருந்த மாதிரி இருந்துட்டு, இங்க வரவும் ஆளைப் பிடிக்க முடியலை..கடைக்குப் போய்க் காசு கொடுத்தாத் தான் மிட்டாய் தருவாங்கன்னும் புரிஞ்சுக்கிட்டான்..ரெண்டு நாள் முன்னே, பர்ஸை எப்படியோ கீழே வச்சுட்டேன். பையன் அதுல இருந்து ஒரு ஆயிரம் ருபா நோட்டை உருவிக்கிட்டு, நைஸா கடையைப் பார்த்து எஸ் ஆகியிருக்கான். நேரா கடைக்குப் போய் ஆயிர ருபா நோட்டைக் கொடுத்துட்டு, ஒரு ருபா வாட்ச் மிட்டாய் வாங்கிட்டு திரும்பிட்டான். கடைக்காரர் தான் மிரண்டுட்டாரு..

‘ஏ..ஃபாரின் போன எத்தனையோ பயலுகளைப் பார்த்திருக்கேம்யா..ஆனா செங்கோவி மாதிரி ஒரு பந்தாப் பேர்வழியைப் பார்த்ததில்லைய்யா..பிள்ளைக்க்கு முட்டாய் வாங்க ஆயிர ரூபா நோட்டால்ல கொடுத்து வுடுதான்..இங்கே இருந்த வரைக்கும் நல்லாத் தானய்யா இருந்தான்..ஒரு வருசத்துக்குள்ள வடிவேலு மாதிரில்ல ஆகிட்டான்’-ன்னு ஆரம்பிச்சு கடைக்காரரு நம்மை நாறடிச்சுப்புட்டாரு...

அட அசட்டுப்பய மவனே..இப்படியாடா பண்ணுவே...அப்பன் பேரை ஒரே நாள்ல இப்படி ரிப்பேர் ஆக்கிட்டயே...சீக்கிரம் உன்னை பேக் பண்ணனும்டோய்!

தீவிரமா யோசிக்கிறது..:
நம்ம நாடு எப்போ ஃபாரின் மாதிரி ஆகும்னு முன்னாடி யோசிச்சிருக்கேன்..ஆனா விலைவாசி விஷயத்துல இப்பவே ஃபாரின் மாதிரி ஆகிடுச்சே..100 ரூபா இல்லாம பொட்டிக்கடைக்குப் போக முடியலை..500 ரூபா இல்லாம சும்மாகூட கோவில்பட்டிக்குப் போக முடியலை!

மாமனார் ஊருல இருந்து சொந்த ஊருக்கு வந்ததுல இருந்து கறியே எடுக்கலியே..இன்னிக்கு எடுப்போம்னு போனா..ஒரு கிலோ மட்டன் 400 ரூபாங்கிறாங்க..என்னய்யா இது..இப்படி இருந்தா ஒரு மனுசன் எப்படிக் க்றி சாப்பிடறது..இவங்களே நம்மளை ஜீவ காருண்ய சங்கத்துல சேர்த்து விட்ருவாங்க போலிருக்கே...

இப்போ என்ன பண்றது?..பேசாம மாமனார் ஊருக்கே திரும்பப் போயிடலாமா?......ஒரு மனுசனுக்கு எது முக்கியம்? மட்டனா?.....மான ரோசமா?

அய்யோ...அம்மா...:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

  1. ஹய்யோ.ஹய்யய்யோ...
    ஏ..ஹய்யோ.ஹய்யய்யோ...//////


    அய்யய்யோ.....அய்யய்யயோ....
    செம தல சாங்....

    ReplyDelete
  2. பதிவர் கலந்துரையாடல்:////

    இந்த சந்திப்பு எப்போ?

    ReplyDelete
  3. .(இப்போல்லாம் நாம ஒரு கிசுகிசு எழுதுனா, 4 பேர் வந்து என்னைத் தானே சொன்னே?-ன்னு கேட்டு 4 வேறவேற மேட்டர் சொல்றாங்க..எதுக்கு வம்பு!)..////

    இப்படித்தானா பிராங்க்கா இருக்கணும் மாம்ஸ்....

    ReplyDelete
  4. இந்த பளபள பங்களாவை ஏன்யா கைவிடணும்?/////

    ஹன்சி பளபளப்பா பங்களாவா? அப்போ நமீதா அப்பார்ட்மென்ட்டா?

    ReplyDelete
  5. இத்தனையும் பார்த்துக்கிட்டிருந்த என் தங்கமணி : அடப்பாவிகளா.... நீங்க 2 பேரும் தான் இப்படியா? இல்லே, எல்லாப் பதிவர்களுமே இப்படித் தானா?////

    யோவ்.....

    ரெண்டு பெரும் ஆபர்ல புல் டாக்டைம் ரீசார்ஜ் பண்ணிப்புட்டு இந்த கூத்து வேறயா?

    ReplyDelete
  6. நான் :ஓகே..ஓகே..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.////

    ரெண்டு பேரும் எத்தன தடவ தான்யா சும்மா சும்மா கூப்பிடுவிங்க?

    ReplyDelete
  7. அட அசட்டுப்பய மவனே..இப்படியாடா பண்ணுவே...அப்பன் பேரை ஒரே நாள்ல இப்படி ரிப்பேர் ஆக்கிட்டயே...சீக்கிரம் உன்னை பேக் பண்ணனும்டோய்!///

    மாப்ஸ் நம்ம ஊருக்கு வந்துட்டு ரொம்ப டெவலப் ஆயிட்டான் மாம்ஸ்.... கையில புடிச்சு வையுங்க....

    ReplyDelete
  8. ஒரு கிலோ மட்டன் 400 ரூபாங்கிறாங்க.///

    எந்த காலத்துல இருக்கீங்க மாம்ஸ், இங்க மதுரையில 440 ரூபா....

    ReplyDelete
  9. வணக்கம் செங்கோவி!நல்லாயிருந்திச்சு.நீங்க வயசுப் பசங்களுக்கு ஏத்தாப்புல எழுதிட்டு,பத்மினி ஆச்சிய சந்திக்கு இழுத்தத வன்மையாக் கண்டிக்கிறேன்!மன்றத்தை எல்லாம் கலைச்சுப்புடாதீங்க,அது பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும்!/////பையன் வெளிய தனியா போறது ஜாக்கிரதையா இருங்க.குவைத்தில ஓட்டுறது மாதிரி இந்தியாவுல வண்டி ஓட்ட மாட்டாங்க!

    ReplyDelete
  10. மன்றத்தை எல்லாம் கலைக்காதீங்க...
    ஹன்சிகா இருக்கும் போது தன்ஷிகாவை வச்... மன்னிக்கவும் தன்ஷிகாவுக்கும் மன்றம் வைக்கலாம்...

    பையனை பத்திரமாக பாத்துக் கொள்ளுங்கள்... தெருவில் எல்லாம் தனியாக விடாதீர்கள்...

    கடைசியாக எங்கள் தலைமையின் போட்டோவை போட்டு சிறப்புப் பதிவை சிரிப்புப் பதிவாக மாற்றியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  11. அப்படியே நம்மளுக்கும் போன் போட்டிருக்கணும்.........????

    உங்க வீட்டு அம்மணி...அதுக்கு அப்புறம்
    எப்படி என்னா சொல்லுவாங்கன்னு......
    தெரிஞ்சிருக்கும்......

    ReplyDelete
  12. வணக்கம் தலைவரே..
    நல்லா இருக்கீங்களா?

    சூப்பரா இருக்கு தொகுப்பு.
    அதுவும் நம்ம தமிழ்வாசி சார் காமெடி செம கடி...

    ReplyDelete
  13. கோவில்பட்டில ஒரு தகத்தாய சூரியன், தமிழ் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் பார் ( யோவ்.. இது டாஸ்மாக் பார் இல்லை ) புகழும் ஒரு பிரபல பதிவர சந்திச்சத பத்தி சொல்லவே இல்லை? :-))

    ReplyDelete
  14. வணக்கம் பாஸ் எப்படி சுகம்?

    நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்கள் அதிரடி மசாலா பதிவை படிக்க கிடைத்தது ரொம்ம சந்தோசம்

    ReplyDelete
  15. ////கலகலப்பு படம் இன்னும் பார்க்கலை. ஆனாலும் அஞ்சலி அதீத கவர்ச்சி காட்டியிருக்கிறதா ஒரு தகவல்...ஏறகனவே அஞ்சலி கவர்ச்சி காட்டுறது ‘ராமராஜன் கையில மெசின்கன்னைக் கொடுத்தா மாதிரி’ இருக்குன்னு சொல்லிட்டேன்...ஆனாலும் அந்தப் புள்ளை திருந்தற மாதிரித் தெரியலியே..இதைவிடக் கேவலமா எப்படிச் சொல்ல..கேப்டன் கையில ரோசாப்பூ கொடுத்த மாதிரின்னு சொல்லலாமா? நமக்கு என்ன வருதோ, அதை ஒழுங்காப் பண்ணிக்கிட்டுப் போனாப் போதாதா..எதுக்கு இந்த வேண்டாத வேலை../////

    ஹி.ஹி.ஹி.ஹி...............

    ReplyDelete
  16. கோவில்பட்டியில் சந்தித்த பிராப்ள ச்சீ பிரபல பதிவரை பத்தி சொல்லாததை கண்டித்து பன்னிக்குட்டி தீக்குளிப்பார் :)

    ReplyDelete
  17. வைகை said... [Reply]

    கோவில்பட்டில ஒரு தகத்தாய சூரியன், தமிழ் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் பார் ( யோவ்.. இது டாஸ்மாக் பார் இல்லை ) புகழும் ஒரு பிரபல பதிவர சந்திச்சத பத்தி சொல்லவே இல்லை? :-))
    //

    அதான அந்த பிராப்ள ச்சீ பிரபல பதிவரை ஏன் இருட்டடிப்பு செய்தீர்கள். இதை கண்டித்து பன்னிக்குட்டி தீக்குளிப்பார்

    ReplyDelete
  18. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    வைகை said... [Reply]

    கோவில்பட்டில ஒரு தகத்தாய சூரியன், தமிழ் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் பார் ( யோவ்.. இது டாஸ்மாக் பார் இல்லை ) புகழும் ஒரு பிரபல பதிவர சந்திச்சத பத்தி சொல்லவே இல்லை? :-))
    //

    அதான அந்த பிராப்ள ச்சீ பிரபல பதிவரை ஏன் இருட்டடிப்பு செய்தீர்கள். இதை கண்டித்து பன்னிக்குட்டி தீக்குளிப்பார்//

    மக்காஸ்...அது தனிப் பதிவா வரும்..!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.