“ப்ளீஸ் ஸ்டாப்பிட் சரவணன்..அந்த இன்ஸ்பெக்டர் இதை விட மோசமால்லாம் கேள்வி கேட்டுட்டார். அப்படி எதுவும் இல்லை.இருந்தா அவங்களை ஏன் நாங்க மறைச்சு, காப்பாத்தப்போறோம்? கொலைகாரன் எங்க குடும்பத்து ஆளாத்தான் இருக்கணும்னு இல்லை. அவர்கூட ஒர்க் பண்ணவங்களாக்கூட இருக்கலாம் இல்லியா? உங்க ஆஃபீஸ்ல ஒர்க் பண்றவங்களாக்குட இருக்கலாம்..ஏன், நீங்களாக்கூட இருக்கலாம்..பேசறதுன்னா என்ன வேணா பேசலாமா சரவணன்?” என்றார் ஸ்ரீனிவாசன்.
சரவணனுக்கு ஸ்ரீனிவாசனிடம் இதற்கு மேல் கேட்க ஏதுமில்லை. ஏற்கனவே போலீஸ் ரிப்போர்ட்டை முழுதாகப் படித்திருந்ததால், விசாரணையை முடித்துக்கொள்ளும்விதமாக எழுந்தான்.
“ஓகே, சாரி சார்..வேற ஏதாவது டீடெய்ல் தேவைப்பட்டா மறுபடி வருவோம். பொறுத்துக்கணும்”
“ஷ்யூர்..நிச்சயம் எங்களால முடிஞ்ச உதவியைச் செய்வோம்”
சரவணன் பாண்டியனுடன் வெளியே வந்தான். தலை வலிப்பது போல் இருந்தது.
“உஸ்ஸ்..பாண்டியா, எனக்கு ஒன்னும் விளங்கலை..ஒரு லீடும் கிடைக்கலை..எந்தத் தடயமும் இல்லாம பக்காவா ப்ளான் பண்ணிப் பண்ணியிருக்காங்க. உனக்கு ஏதாவது புரியுதா?”
பாண்டியன் சிரித்தான்.
“நீ பெரிய்ய ஆளு ..நீ தான் புத்திசாலின்னு புரமோசனை உனக்கு தூக்கிக்கொடுத்தால்ல அவகிட்டப் போய்க்க் கேளு, சொல்வா. என்கிட்ட ஏன்
கேட்கிறே?” என்றான் நக்கலுடன்.
சரவணன் கோபமானான். “அப்புறம் ஏன் வலிய எனக்கு அசிஸ்டெண்ட்டா வந்து சேர்ந்தே? ஒதுங்கிப் போனவன், அப்படியே போக வேண்டியது தானே?”
“ஹா..ஹா..இதோ பார்றா...நான் உனக்கு அசிஸ்ட் பண்ணத்தான் உன்கூட வந்தேன்னு நினைக்கிறயா? இதிலேயே தெரியுதே, நீ எவ்ளோ பெரிய்ய புத்திசாலின்னு..மடையா..நான் வேடிக்கை பார்க்க வந்திருக்கிறேன்..உன்னால ஒன்னும் கிழிக்க முடியாதுன்னு எல்லாருக்கும் தெரிய வைக்க வந்திருக்கிறேன். நீயே உனக்கு வந்த புரமோசன் தப்புன்னு ஒத்துக்கறவரைக்கும் விட மாட்டேன்.”
”நான் கொலையாளியைப் பிடிச்சுட்டா?”
“உன்னால முடியாது..இங்கேயே இப்படியே நிற்க வேண்டியது தான்..கேஸ் இதுக்கு மேல ஒரு அடிகூட நகராது. ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் ஏதாவது கிடைச்சிருக்கா சரவணா?”
“இல்லை”
“வேற ஏதாவது நகமோ, முடியோ கிடைச்சிருக்கா?”
“இல்லை”
“வேற என்ன தான் லீடு வச்சிருக்கே?”
“ஒன்னும் இல்லையே...கொலையாளி கண்டிப்பா புத்திசாலியாத் தான் இருக்கணும்”
“ஹா..ஹா..அப்படி ஒத்துக்கோ..அது தான் எனக்கு வேணும்”
“என்ன சொல்றே?”
“ஹா..ஹா..முத்துராமனைக் கொன்னது யாருன்னு எனக்குத் தெரியும்”
“என்ன?”
“ஆமா, எனக்குத் தெரியும். யாருன்னு சொன்னா, ஆதாரத்தோட பிடிச்சு உள்ளே போட்டிடுவயா?”
“யாரு?..சொல்லு, யாரு?”
”யாருன்னு நான் சொன்னாலும் உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது.”
“யாருன்னு சொல்லு..கிழிச்சுக் காட்டறேன்”
“நான் தான்”
சரவணன் அதிர்ச்சியானான்.
“என்ன?”
“நான் தான் முத்துராமனைக் கொன்னேன். நீ ஒரு முட்டாள்னு எனக்குத் தெரியும். இன்னும் ஒரு வருசம் ஆனாலும் இந்தக் கேஸை உன்னால க்ளோஸ் பண்ண முடியாதுன்னும் எனக்குத் தெரியும். இதோ, நானே சொல்றேன். நான் தான் கொலையாளி. முடிஞ்சா, அதை ப்ரூஃப் பண்ணு. என்னை ஆதாரத்தோட உள்ளே தள்ளுனா, அப்போ ஒத்துக்குவேன், புரமோசன் வாங்க நீ தகுதியானவன் தான்னு..இதை ஒரு சவாலாவே சொல்றேன். என்னைப் பிடிச்சுக்காட்டு, பார்ப்போம்”
சரவணன் உறைந்து போய் நின்றான்.
(தொடரும்)
Wow.....
ReplyDeleteSema twist....
இப்படிப் போகுதோ கதை பார்ப்போம் உண்மையில் இந்த நண்பன் தான் குற்றவாளியா ???இல்லை அதிலும் திருப்பம் வருமோ?
ReplyDeleteமாம்ஸ்..............
ReplyDeleteசெம திருப்பம்...........
எதிர்பாக்கவே இல்லை...........
இனி சரவணன் என்ன செய்யப் போகிறார்??????????????
“நான் தான் முத்துராமனைக் கொன்னேன். நீ ஒரு முட்டாள்னு எனக்குத் தெரியும்.///
ReplyDeleteஇது பொய் இல்லையே...
ஹி..ஹி.... எங்கள முட்டாள் ஆக்கலியே????
பாண்டியன் நல்லவனா கெட்டவனா நானா ஜோசிக்கின்றேன் செங்கோவியாரே!:))))
ReplyDelete........
ReplyDeleteஇனி சரவணன் என்ன செய்யப் போகிறார்??????????????
@ தமிழ்வாசியை முட்டிக்கு முட்டி தட்டப்போறார் மாப்பிள!:)))))) ( நலம்தானே பிரகாஸ் அண்ணா ?)
தனிமரம் said... [Reply]
ReplyDelete........
இனி சரவணன் என்ன செய்யப் போகிறார்??????????????
@ தமிழ்வாசியை முட்டிக்கு முட்டி தட்டப்போறார் மாப்பிள!:)))))) ( நலம்தானே பிரகாஸ் அண்ணா ?)///
நேசா, நலமே......... நீங்க?
வணக்கம் செங்கோவி!க்ரைமுன்னா இது க்ரைம்!புடிச்சு உள்ள தள்ளுங்க(பிரகாஷை)பாண்டியன!அப்போ தெரியும் நீங்க யாருன்னு,ஹ!ஹ!ஹா!!!!
ReplyDeleteபாதிலயே நான் கெஸ் பண்ணீட்டேன், பட் பாண்டியன் இப்படி ஓப்பனா சவால் விடுவார்னு நினைக்கல.............
ReplyDelete