Sunday, June 3, 2012

இன்று புதிதாய்ப் பிறந்தேன்....


என் மனைவியின் ஊர் பேரைக் கேட்ட்தும் அலறினேன். ‘அங்கெயா..பொண்ணா...வேண்டாம்’ என்றேன். ஏனென்றால் அங்கே ஏற்கனவே என் சொந்தக்கார குடும்பம் ஒன்று இருந்த்து.. சொந்தக்காரங்க எப்படி இருப்பாங்கன்னு உங்களுக்கு தெரியும்தானே..
கல்யாணக் கல்.....
என் பெரியப்பா என்னைச் சமாதானப்படுத்தினார். “நல்ல குடும்பம்பா..நீ வருவேன்னு வாக்கு கொடுத்துட்டேன். போய் பொண்ணைப் பாரு..நல்ல பிள்ளை” என்றார். மற்ற உறவுகளும் கடும் நெருக்கடியைக் கொடுத்தார்கள். உண்மையில் எனக்கு திருமணத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை. வேண்டா வெறுப்பாக ‘சரி’ என்றேன்.

“நல்லதுப்பா..நீங்க கிளம்பும்போது, அவங்களுக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லிடுங்க. அப்போதான் அவங்க பொண்ணை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர கரெக்டா இருக்கும்” என்றார் பெரியப்பா.

நான் கொந்தளித்தேன்.” இதுக்குத் தான் அந்த ஊர் வேண்டாம்னு சொன்னேன்..என்னால ஒரு பொண்ணு படிப்பு பாழாக வேண்டாம்..அந்தப் பொண்ணு நல்லா படிச்சு..”

பெரியப்பா இடைமறித்தார், “ஏலே, பொண்ணு படிக்கலைலே, டீச்சரா வேலை பார்க்குது” என்றார். ’ரொம்ப ஓவரா யோசிக்கிறோமோ’ன்னு குழம்பிக்கிட்டே பெண் பார்க்கப் போனேன்..

என்னிடம் உள்ள பெரிய பிரச்சினை, முதல் சந்திப்பில் நன்றாகப் பேசமாட்டேன். ‘முதல்ல நல்லாப் பழகணும்’..அப்புறம்தான் பேசவே ஆரம்பிப்பேன். எனவே அங்கே போய் ’எதையோ தின்ற எதுவோ போல்’ அமர்ந்திருந்தேன். மிக்ஸர், காஃபி எல்லாம் யாராலோ கொடுக்கப்பட்ட்தும், என் முகம் மேலும் அழகானது! பிறகு பெண்ணை அழைத்து வந்தார்கள்.

நான் அவங்களைப் பார்த்தேன். ஏதோ ஒன்று எனக்குள் நடந்தது. எனக்கு உடனே தோன்றிய எண்ணம் ‘இந்தப் பெண்ணை நல்லபடியாப் பாத்துக்கணும்’ என்பதுதான். நான் பேச ஆரம்பித்தேன்.

என் அருகே அம்ர்ந்திருந்த மாமனாருடன் பல நாள் பழகிய தோழன் போலப் பேசினேன்..பேசினேன்..பேசிக் கொண்டேயிருந்தேன். ‘விட்டுடாதடா செங்கோவி” என்று உள்ளே ஒரு குரல் ஒலித்தது.

மாமனார் வலையில் விழுந்தார். ‘என்னமாப் பேசுதாரு மாப்ள’ என்று பெருமைப்பட்டுக்கொண்டார். கல்யாணம் முடிந்தது. பிறகு அவரே என் பெரியப்பாவிற்குப் போன் செய்து ‘ மாப்ள பேசவே மாட்டேங்கிறாரு’ என்று கம்ப்ளெய்ண்ட் செய்தார்!

என் மனைவி எனக்கு நேரெதிராக இருந்தார். நான் உடல் உழைப்பில் சோம்பேறி. அவரோ ரொம்ப சுறுசுறுப்பு.
எனக்கு நீச்சல் தெரியாது. அவருக்கு நீச்சல் தெரியும். (கவலைப்படாதீங்க, நான் உங்களைக் காப்பாத்திடுவேன்!)

நீச்சல் மட்டுமல்ல, சைக்கிள் ஸ்கூட்டர் போதாதென்று பைக்கும் ஓட்டப் பழகினாராம். இதை அவர் என்னிடம் சொன்னபோது, என் நாக்கில் சனி வந்து உட்கார, நான் அவரைக் கேட்டேன்: ”அப்போ மரம் ஏறவும் தெரியுமா..ஏன்னா எனக்குத் தெரியாது” டீச்சர் டென்சன் ஆனதில் வீடு இரண்டானது. (திருவள்ளுவரும் ஹனிமூனில் வாங்கிய தர்மபத்தினி அடியும்..ஞாபகம் இல்லையா!)

நான் உள்ளூர் சினிமா முதல் உலக சினிமாவரை பார்ப்பவன். அவரோ சோகமான முடிவுள்ள படம் என்றால் பார்க்கமாட்டார். ஏன்னா “அப்புறம் ரெண்டு நாளைக்கு அழுவேன்..சாப்பிடக்கூட மாட்டேன்” என்றார். (அதாவது ரெண்டு நாளைக்கு சமைக்க மாட்டார்..உஷாரய்யா..உஷார்)

நான் ஒரு தீவிர இலக்கிய வாசகன்..அவரோ அதிலும் சுத்தம்.அரசியல் பேசத் தொடங்கினால் அவ்வளவுதான்..(ராமதாஸ்-ன்னா கண்ணாடி போட்டிருப்பாரே...அவர்தானே..)

எனவே எதைப் பற்றியும் பேச முடியாமல் போனதால், நாங்கள் எங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். எங்கள் வீட்டில் யாருக்கும் யார் மீதும் பயமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கினோம். சுதந்திரமே முதல் அடிப்படைத் தேவை என்று முடிவு செய்தோம். வீடு அன்பின் பிடியில் சென்றது.

உண்மையில் இப்படி ஒரு திருமண வாழ்வை நான் எதிர்பார்க்கவில்லை. அது மிகவும் மோசமானதாக அமையும் என்றே நினைத்திருந்தேன். ஏனென்றால்..
பெற்றோர், அண்ணன், அக்கா என எல்லோராலும் கைவிடப் பட்டவன் நான். எல்லா உறவுகளும் எனக்கு துக்கத்தையும் அவமானத்தையும் துரோகத்தையும் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

எனவே, ரத்த சொந்தங்களே இப்படி இருக்கும்போது, ’எங்கிருந்தோ வருகின்ற சொந்தம் மட்டும் நன்றாகவா வந்துவிடப் போகிறது ‘ என்றே நினைத்திருந்தேன்.

கடவுள் கருணைமிக்கவர். இழந்த எல்லாவற்றையும் இந்த புதிய உறவின் மூலம் மீட்டுக் கொடுத்தார்.

நான் மூன்று வேளையும் சாப்பிடுகிறேனா என்று பார்க்க ஒரு உயிர்..எனக்கு காய்ச்சல் என்றால் தொட்டுப் பார்க்கவும், அக்கறை கொள்ளவும் ஒரு உயிர்..எனக்காக..நினைக்கவே ஆச்சரியமாக உள்ளது. நான் நேரத்திற்கு வீடு திரும்பவில்லையென்றால், எனக்காக கவலைப்படவும் ஒரு உயிர்..ஒன்றல்ல, இப்போது இரண்டு உயிர்கள்.


நான் பிறந்த தினத்தன்றே என் தாயார் இறந்ததால், நான் என் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. கல்லூரி வாழ்விலும் அலுவலக வாழ்விலும் நண்பர்களிடம் இருந்து என்  பிறந்த நாளை மறைக்க பெரும்பாடு படுவேன். நான் வேலை பார்த்த ஒரு அலுவலகத்தில் ஹெச்.ஆர்.டிபார்ட்மெண்ட்டே எம்ப்ளாயிஸின் பிறந்த நாளைக் கொண்டாடும். எனக்கு அப்படிச் செய்ய வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்ட நாளும் உண்டு.

ஆனால் திருமணத்திற்குப் பின் யார் கேட்டாலும் தைரியமாக ஜீன் - 3 தான் என் பிறந்த நாள் என்று சொல்வேன்..ஆம், இன்று புதிதாய்ப் பிறந்தேன்.

இது கனவல்ல என்ற நம்பிக்கையுடன் இன்று என் திருமண வாழ்வில் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றேன்.

நன்றி முருகா!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

34 comments:

  1. இனிய திருமண and பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. // எல்லா உறவுகளும் எனக்கு துக்கத்தையும் அவமானத்தையும் துரோகத்தையும் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.//

    உள்ளத்தில் எதோ நெருடுகிறது (உன்னை போல் ஒருவன் என்று)


    இனிய பிறந்த நாள்/ திருமண நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. என் வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  4. இந்த அன்புவின் அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வணக்கம்,செங்கோவி!!!!இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!இன்று போல் என்றென்றும் எல்லா நலனும் பெற்று வாழ்க்கைப் பாதையில் முன்னேற நீங்கள் வணங்கும் முருகப் பெருமான் துணை இருக்க வேண்டுமென இன் நன்னாளில் நான் பிரார்த்திக்கிறேன்,வாழ்த்துக்கள்,நூறு அல்ல ஆயிரமாயிரம் தடவைகள்!உங்கள் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது!!

    ReplyDelete
  6. திருமண நாளுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வாத்தியாரே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதலில்!

    ReplyDelete
  8. இல்லறம் என்ற நல்லறத்தில் இனைந்த இந்த பொன்நாளில்  நானும் வாழ்த்துகின்றேன் பல்லாண்டு வாழ இந்த குடும்பம் என்று !

    ReplyDelete
  9. ஒரு டவுட் நீங்களும் வட்டக்கல் தூக்கியா தங்கமணி அக்காவை கைபிடித்தீங்க???

    ReplyDelete
  10. இனிய வணக்கம் அண்ணா ...


    உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் திருமண நாள் வாழ்த்துக்களும் ,,,,,


    இனிமேல் வரும் எல்லா நாளும் சந்தொசமும் அன்பும் கிடைத்து நல்ல சுகத்தோடு இருக்கு இறைவனை வேண்டுகிறேன் .....

    ReplyDelete
  11. இனிய திருமண நல்வாழ்த்துகள்..வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  12. Hi,
    Sengovi happy birth day /wedding day.

    Eppa wifai pogaluthu eluthinna ethavuthu unga mama gold coin koodukarara secretai sonna engalugum vasathiya erukum :-)

    ReplyDelete
  13. இன்று பிறந்த நாள் கானும் உங்களுக்கு ஹன்சிகா கனவில் வந்து





    ஒரு......








    ஒரு....................









    கை கொடுத்து வாழ்த்து மட்டும் சொல்லுவாங்க..!
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. இனிய திருமண and பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  15. இனி ஜூன் மாதம் சென்கோவி மாதம் என்று அழைக்கப்படும்......










    இவன்.....

    சென்கொவியின் அடி விழுதுகள்......
    துபாய் பாசறை.....

    அண்டம் அகிலம்...எல்லாம்

    ReplyDelete
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும்
    திருமண நாள் வாழ்த்துக்களும்
    எல்லாம் பெற்று வாழ்க வளமுடன்

    ReplyDelete
  17. செங்கோவி,

    இனிய பிறந்த நாள்/ திருமண நல்வாழ்த்துக்கள்

    பாலா...

    ReplyDelete
  18. வாழ்த்துகள் செங்கோவி, ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு.

    ReplyDelete
  19. Happy wedding anniversary sengovi brother. May peace, prosperity and love shower in your home and life..

    Sorry for the mobile comment

    ReplyDelete
  20. வணக்கம் மாம்ஸ்,

    இனிய திருமணநாள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....

    என்றும் மகிழ்ச்சியும், எல்லா வளமும் பெற்று நலமுடன் இருக்க வாழ்த்துகிறேன்....

    ReplyDelete
  21. இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
    என் கணிப்பு சரி தான்.
    இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. வணக்கம் பாஸ்
    உங்களுக்கும் அண்ணிக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் சார்...வாழ்க்கை துணை என்பது தான் வாழ்க்கையின் அச்சாணியே...என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்திக்கிறேன்!

    ReplyDelete
  25. valthukkal nanbarey,,inbampongatum ilvalvil

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் செங்கோவி.. இனியும் இந்த மகிழ்சிகள் தொடர வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  27. தாயோ- தாரமோ- காதலியோ- குழந்தையோ பெண்களிடமே நாம் மீண்டும் மீண்டும் பிறக்கின்ற எண்ணத்தைப் பெறுகிறோம்.

    புதிதாய் பிறந்த கால்யாண நாளுக்கு வாழ்த்துக்கள் செங்கோவி!

    ReplyDelete
  28. //என்னிடம் உள்ள பெரிய பிரச்சினை, முதல் சந்திப்பில் நன்றாகப் பேசமாட்டேன். ‘முதல்ல நல்லாப் பழகணும்’..அப்புறம்தான் பேசவே ஆரம்பிப்பேன்.//
    அண்ணே அப்பிடியே நம்மள மாதிரியே இருக்கீங்களே! நிறைய இடத்தில் இதாலயே எனக்குக் கெட்டபேர்!
    அத விடுங்க இண்டர்வியூல கூட அப்பிடித்தான் முதல்ல சொதப்பிடுவேன்! :-)

    ReplyDelete
  29. கல்யாணக் கல் எல்லாம்..எனக்கென்னவோ அண்ணன் செங்கல்லே தூக்க மாட்டார்ன்னு தோணுது! :-)

    கலக்கல் பதிவு!!!

    ReplyDelete
  30. மிகத்தாமதமாக சொல்கிறேன்

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

    நீடூழி வாழ்க, உங்கள் வாழ்வில் என்றும் சந்தோசமே நிலைத்திருக்கட்டும்

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள். கொஞ்சம் தாமதமானதற்கு ஸாரி

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.