Tuesday, August 21, 2012

கும்கி - திரைப்படமும் பாடல்களும்!....ஒரு பார்வை

கமலின் விஸ்வரூபம், விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் மாற்றான், விக்ரமின் தாண்டவம் என பெரிய ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் நிலையில், நான் எதிர்பார்க்கும் முக்கியமான படம் மைனா இயக்குனர் பிரபு சாலமனின் “கும்கி”.

காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வரும் யானையை, மீண்டும் காட்டுக்குள் விரட்ட உதவும் ‘பழக்கப்படுத்தப்பட்ட யானையே கும்கி. அந்த கும்கி யானையின் பாகனின் காதலைச் சொல்லும் படமாக உருவாகி வருகிறது கும்கி திரைப்படம்.

நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம்பிரபு நாயகனாக அறிமுகம் ஆகிறார். ஏற்கனவே இரண்டு சிவாஜி பேரன்கள் நடிக்க வந்து ‘நடிகர் திலகத்தின் பேரன்’ என்ற இமேஜை டேமேஜ் ஆக்கியது உங்களுக்கும் ஞாபகம் இருக்கலாம். அது ஒருவிதத்தில் விக்ரம்பிரபு மீதான எதிர்பார்ப்பைக் குறைக்க உதவுகிறது! 
இருப்பினும் முதல்படத்திலேயே பஞ்ச் வசனம் பேசி நம்மை பஞ்சர் ஆக்காமல், பிரபு சாலமனைத் தேடிப் போய் வாய்ப்புக் கேட்டதிலேயே, இவர் வித்தியாசமான ஆளாகத் தெரிகிறார்.

ஹீரோயினாக லட்சுமி மேனன் என்ற கேரளத்துப் பெண்குட்டி நடித்த்ருக்கிறார்.(ரைட்டு!). கூடவே மைனாவில் கலக்கிய தம்பி ராமையாவும் கும்கியில் உண்டு. மைனா போன்றே, இதிலும் இயற்கை எழில் கொஞ்சும், இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத இடங்களைத் தேடிபோய் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். வெளியாகியிருக்கும் ஸ்டில்களில் பச்சைப் பசேலென்று பசுமை கண்ணைப் பறிக்கிறது. (இதனால் அறியப்படும் நீதி : நான் ஹீரோயினை மட்டுமே பார்க்கவில்லை!).

இவற்றைவிட நம்மை அதிகம் கவர்வது கும்கியாக வரும் யானை தான். தமிழ்சினிமாவில் (ஜட்டி போட்ட!)யானைகளை ராம.நாராயணன் படங்களில் மட்டுமே பார்த்துச் சலித்த நமக்கு, கும்கி ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது படத்தின் பாடல்களும் வெளியாகி, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கின்றன.

டி.இமான் வழக்கமாக ஒரு படத்தில் இரண்டு பாடல்களை மட்டுமே ஹிட் ரகமாகக் கொடுப்பார்கள். மீதிப் பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடிக்கும் வகையறாக்களாகவே இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் இமான் கலக்கியிருக்கிறார். 

குத்துப்பாட்டு-ஹீரோ துதி என்று இம்சைப்படுத்தும் பாடல்களுக்கு நடுவே மனதை வருடும் மெலோடீஸ்களாகப் போட்டிருப்பது இன்னொரு விசேஷம் (சொய்..சொய் பாடலைத் தவிர!). பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். ரொம்ப நாளைக்கு அப்புறம், நல்ல தமிழ் வார்த்தைகளைக் கொண்ட இனிமையான பாடல்கள். அந்தப் பாடல்களைப் பற்றிய ஒரு பார்வை கீழே:

1. அய்யய்யய்யோ ஆனந்தமே :

இருப்பதிலேயே அதிகம் நம்மைக் கவரும் பாடல் இது தான்..முதன்முதலில் காதலியைக் கண்டதும் பாடும் காதலனின் வார்த்தைகளாகப் பாடல் விரிகிறது. ‘கண்கள் இருப்பது உன்னை ரசித்திட..என்று சொல்லப் பிறந்தேன்..கைகள் இருப்பது தொட்டு அணைத்திட..அள்ளிக்க்கொள்ளத் துணிந்தேன்’ என்று வந்து விழுந்திருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை! 

ஹரிச்சரண் அனுபவித்துப் பாடியிருக்கிறார். அதுவும் கடைசியில் வரும் வயலின் (தானே அது?) இசை மனதை உருக்குகிறது! எனது மகனின் ஃபேவரிட்டாகவும் இந்தப் பாடல் ஆகிவிட்டது..’அய்யோ..ஆந்தம்மே’ என்று கூடவே சேர்ந்து பாடுகிறான்.

2. நீ எப்போப் பிள்ளை சொல்லப் போறே?:

காதலி எப்போது தன் காதலைச் சொல்வாள் என்று தவிக்கும் பாடலாக அல்ஹான்ஸ் ஜோசப்பின் குரலில் நம்மை மயக்குகிறது இந்தப் பாடல்..வெள்ளிநிலா வானோட..வெத்தலையும் வாயோட..என்னுலகம் உன்னோட!’ என்று கவிஞரும் கூடவே சேர்ந்து உருகி எழுதியிருக்கிறார் பாடலை! தவிப்பை வெளிப்படுத்தும் மெலோடி என்றாலும், கொஞ்சம் ஃபாஸ்ட் பீட்டுடன் விறுவிறுப்பாகச் செல்கிறது இந்தப் பாடல்.

3. சொல்லிட்டாளே..அவ காதலை :
எதிர்பார்த்த வார்த்தையை காதலி சொல்லிவிட்டால் என்றால், சந்தோசத்திற்கு அளவேது? ரஞ்சித் உடன் ஸ்ரேயா கோஷலின் மெஸ்மரிக்கும் குரலில் வரும் டூயட் பாடல் இது..’சொல்லிட்டேனே என் காதலை..சொல்லும்போதே சுகம் தாங்கலை.உன் அன்பு ஒன்றே போதும்..அதுக்கு ஈடே இல்லை ஏதும்’என்று பல்லவியிலேயே நம்மை வசீகரிக்கிறது இந்தப் பாடல்..ஸ்ரேயா கோஷலின்
குரலுக்காகவே மீண்டும் மீண்டும் கேட்கலாம் இந்தப் பாடலை.

4. சொய்..சொய்:
எல்லாப் பாடலுமே மெலோடியானால் எப்படி? எனவே ஸ்பீடான தெம்மாங்கு மெட்டில் மகிழினி மணிமாறன் என்ற புதியவர் பாடியிருக்கும் பாடல் இது.  வெறும் குத்துப்பாட்டாக இல்லாமல் ‘நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான்..நாம மாண்டு போனாலும் தூக்கித் தீவைக்க உறவு வேணும் மச்சான்’ என்று கொஞ்சம் தத்துவார்த்தமாகப் போகிறது பாடல். எல்லா மியூசிக் சேனல்களுக்கும் சரியான வேட்டையாக  இருக்கப்போகிறது இந்தப் பாடல்.

5. ஒன்னும் புரியலை...:
இசையமைப்பாளர் டி.இமானே பாடியிருக்கும் பாடல் இது. பொதுவாக இசையமைப்பாளர் பாடினால், அது படத்திலேயே ஹிட் சாங்காக இருக்கும். ஆனால் இது மற்ற பாடல்களை பெட்டர் என்று சொல்ல முடியாது. வழக்கமான இமானின் ஆவரேஜாக இந்தப் பாடல் இருக்கிறது. எனவே நம் பார்வையில் ஐந்தாவது இடத்தையே இந்தப்பாடல் பிடிக்கிறது.

6. எல்லா ஊரும்..:
யானைப் பாகனின் வாழ்க்கையைச் சொல்லும் பாடலாக, சுமாரான வார்த்தைப் பிரயோகத்துடன் வந்திருக்கும் பாடல் இது. நல்லவேளையாக இரண்டு நிமிடப் பாடலாக மட்டுமே வருகிறது. படத்தை எடுத்து முடித்துவிட்டு, கடைசில் சேர்த்ததாக பிரபு சாலமன் சொன்னார். அதனாலோ என்னவோ, முதல் பாடலுக்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம்.

இதைத் தவிர அய்யய்யோ பாடல் கார்த்திக் என்பவரின் மயக்கும் வயலின் ஓசையுடன் அதிதி பால் என்ற பாடகியின் குரலில் மற்றொரு முறை வருகிறது. படத்திலேயே சூப்பர் ஹிட் பாடலாக ஹரிச்சரண் பாடிய பாட்ல் அமைகிறது.

மொத்தத்தில் மைனா டீம், இந்தப் பாடல்களின் மூலம் முதல் வெற்றியை அடைந்திருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டி.இமான் அதிகரிக்க வைத்திருக்கிறார். அனைவரும் கேட்டு ரசிக்க வேண்டிய மியூசிக் ஆல்பம் கும்கி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

 1. //எனவே நம் பார்வையில் ///

  அது யாரு? நம்? ஒரு க்ரூப்பா எழுதுனீங்களாண்ணே? இல்ல பிஸியா இருந்தப்போ பக்கத்து வீட்டு பரிமளம் அக்கா உங்களுக்காக பதிவு போட்டாங்களா?

  ReplyDelete
 2. யோவ் மொக்கை, பரிமளம் அக்கா அட்ரஸ் கொடும்..கேட்டுச் சொல்றேன்!..கொஞ்சம் கெத்தா இருக்கட்டுமேன்னு ‘நம்’ போட்டா.......

  ReplyDelete
 3. ஹீ ஹீ.... சும்மா சொல்லக்கூடாது உங்க பங்குக்கு நீங்களும் எதிர்பார்ப்ப கூட்டிருகீங்க...ஆனா முந்தைய படம் சூப்பர் ஹிட்டானா அடுத்த படத்த செம சொதப்பு சொதப்புறது நம்ம கோலிவூட் டைரக்டர்ஸ் வழக்கம்.. அது போக விக்ரம் பிரபு கொஞ்சம் ஸ்டைலிஷா அதிகமா இங்கிலீஷ்லயே பேசுறாரு! அவரு எப்புடி இந்த யானை பாகன் கேரக்டருக்கு? இந்த ரெண்டயும் பிரபு சாலமன் நல்லா சமாளிச்சிருந்தாருன்னா படம் ஹிட்டாகிடும்.. பாப்போம்!!

  ReplyDelete
 4. //செங்கோவி said...

  யோவ் மொக்கை, பரிமளம் அக்கா அட்ரஸ் கொடும்..கேட்டுச் சொல்றேன்!..கொஞ்சம் கெத்தா இருக்கட்டுமேன்னு ‘நம்’ போட்டா...///

  ஹீ ஹீ.. இல்லண்ணே இப்ப எல்லாம் நாம பிஸியா இருந்தா இந்த மாதிரி யாராவது பெண் பதிவர்கள வச்சி நம்ம போஸ்ட்ட போட சொல்லன்னுமாம்.. அதுதான்...

  ReplyDelete
 5. Athhanai paadalkalum nan virumpi kedkum paadalkal.

  ReplyDelete
 6. ////(இதனால் அறியப்படும் நீதி : நான் ஹீரோயினை மட்டுமே பார்க்கவில்லை!).////

  பாஸ் இது அதுக்கு சரிப்பட்டு வராது அதாவது நம்ம ரசனைக்கு சரிப்பட்டு வராது என்று உங்களுக்கு தெளிவாக புரிஞ்சு போச்சு யார்கிட்ட கதைவிடுறீங்க ஹி.ஹி.ஹி.ஹி......

  ReplyDelete
 7. விமர்சனம் அழகாக இருக்கிறது,செங்கோவி!பார்க்கலாம்,டி.வி.டி ல வர்றப்போ,ஹி!ஹி!ஹீ!!!!!!!!!.

  ReplyDelete
 8. படத்தை எதிர் பார்த்திருக்கும் வேளையில் பாடல்களும் வஞ்சகம் செய்யவில்லை

  ReplyDelete
 9. அருமையான பாடல்கள்...

  ReplyDelete
 10. சிறப்பான பகிர்வு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  ReplyDelete
 11. Ungalaoda annaithu pathivukalum arumai

  ReplyDelete
 12. Ungalaoda annaithu pathivukalum arumai

  ReplyDelete
 13. Ungalaoda annaithu pathivukalum arumai

  ReplyDelete
 14. நல்ல விமர்சனம்நன்றி,ஜோசப்http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.