Monday, August 13, 2012

பில்லா-2 : தோல்வி ஏன்?


டிஸ்கி : தனிப்பட்ட முறையில் நமக்கு அஜித்தைப் பிடிக்கும் என்றாலும், ‘பில்லா-2 வெற்றியே’ என்று வாதிடுவது அஜித்திற்குக்கூட நல்லதல்ல என்றே நம்புகிறேன். அப்படி வாதிட விரும்பும் அதிதீவிர அஜித் ரசிகர்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான பில்லா-2 படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தியேட்டர்களில் இருந்து தூக்கப்படும் இந்தச் சூழலில், இந்தப் படம் ஏன் தோல்வியடைந்தது என்று புரிந்து கொள்ள முனைவோம்.

பொதுவாக ஹாலிவுட்டில் மட்டுமே ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் தொடர்ச்சியாக பல படங்கள் வெளியாகும். ஆனால் தமிழ் சினிமாவில் முதல் முறையாக பில்லா-1 படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் தயாராவதாக அறிவிக்கப்பட்டபோது, நமக்கு ஆச்சரியமே உண்டானது. ஏனென்றால் பில்லா-1 படம் ஒரு சராசரிப் படமே. லாஜிக்கலாக படத்தில் நிறையக் குறைகளுடன் உருவான படம் அது. (உதாரணம் - இந்த நவீன எலக்ட்ரானிக் யுகத்தில், மலேசியாவில், வேலு தன் அடையாளத்தை நிரூபிப்பது கஷ்டமான காரியம் அல்ல, அதற்கு பிரபுவுடன் வேலு பேசிய சிம் கார்டே போதுமானது.).

’மேலும் பில்லா எப்படி தாதா ஆனான்?’ என்பது ஒன்றும் நமக்குப் புதிய கதையும் அல்ல. தமிழ்சினிமாவில் காதலுக்கு அடுத்து அதிகம் கசக்கிப் புழியப்பட்டது இந்த தாதாக்கள் தான்! பழைய சப்ஜெக்ட்டையே ‘பில்லா’ எனும் பெயருக்கு இருக்கும் வசீகரத்தைப் பயன்படுத்தி விற்க முனைகிறார்கள் என்பது கொஞ்சம் சினிமா அறிவுள்ளவர்களுக்கும் புரிந்து போனது.

அதை விடவும் முக்கியமான விஷயம், அந்த சப்ஜெக்ட் அனைவரையும் கவரும் சப்ஜெக்ட் அல்ல. (நாம் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி,) பில்லா-2 படம் குடும்பத்துடன் படம் பார்க்கச் செல்வோரை, குறிப்பாக பெண்களை ஆரம்பம் முதலே கவரவில்லை என்பதே உண்மை. படத்தின் ஸ்டில்களும், படத்திற்குக் கிடைத்த ஏ சர்ட்டிஃபிகேட்டும் ‘இது வன்முறை நிறைந்த படம்’ என்ற செய்தியை முதலிலேயே நமக்குத் தெரிவித்துவிட்டன. 

சினிமா என்பது பெரும்பாலான மக்களுக்கு பொழுதுபொக்குச் சாதனமே. படத்தின் மேக்கிங்- உலகத்தர ஒளிப்பதிவு - ஆர்ட் போன்ற டெக்னிகல் விஷயங்களை விட, நம் மக்களுக்குத் தேவை ‘படம் ஜாலியாப் போகுதா? பார்க்கலாமா?’ என்பதே. நாம் எடுப்பது கலைப்படம் என்றால், மக்களின் ரசனை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. வணிகப்படம் எடுப்பதாக முடிவு செய்தபின், மக்களைப் பற்றி யோசித்தே ஆக வேண்டும். (சக்ரி டோல்ட்டியின் நோக்கம் கலைப்படம் அல்ல என்பது தெளிவு.)

எனவே மக்களைக் கவராத, மக்கள் சலித்துப்போன தாதா கதையுடன் இறங்கியது முதல் கோணல். அதற்கடுத்த விஷயம் கதாநாயகிகள். இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக முன்னாள்-இந்நாள் கதாநாயகிகள் மன்னிக்க வேண்டும். தமிழ் சினிமாவில் இந்தளவுக்கு ரசிகனுக்கு அந்நியமான, அசிங்கமான’ ஹீரோயின்ஸ் வந்ததே இல்லை என்று சொல்லலாம். தமிழ்ப்பெண்ணுக்குரிய எந்த லட்சணமும் இல்லாமல், க்ளோசப் காட்சிகளில் பார்க்கச் சகிக்காத முகங்களுடன் இரண்டு குஜிலீஸை நடிக்க வைத்து விட்டு, தைரியமாக ‘மக்கள் வரவை’ எதிர்பார்ப்பது எந்த வகையில் சரி என்றே நமக்குப் புரியவில்லை. ராமராஜன் படத்தைக்கூட தேவயானிக்காக பார்த்த கூட்டத்தை நான் அறிவேன். (படத்தில் ஹீரோயின் இறக்கும் காட்சியில், என் அருகில் இருந்தவர் அடித்த கமெண்ட் : இவளை முதல்லயே போட்ருக்கலாம்!)

இந்தப் படம் லாஜிக் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத படம். பில்லா தூத்துக்குடியில் ஆரம்பித்து கொலையாய்க் கொல்லும்போது, லோக்கல் போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது என்பது பற்றிப் படத்தில் எந்த விளக்கமும் இல்லை. SACRFACE படத்தினை அப்படியே காப்பி அடித்தால் போதும்..ஹாலிவுட் தரத்தில் படம் உருவாகிவிடும் என்று நினைத்த சக்ரி டோல்ட்டிக்கு, சராசரி தமிழ்ரசிகனின் ரசனையைப் பற்றியை எவ்வித அடிப்படை அறிவும் இல்லையென்றே சொல்ல வேண்டும். GOD FATHER -ஐ அடித்த மணிரத்னத்திடம் இவர் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது. கமல் படத்தின் ’இயக்குநர்’ என்றால் என்ன அர்த்தம் என்று எல்லாருக்கும் தெரியும். அது அஜித்திற்குத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.

அஜித் போன்ற தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களுக்கு பேராபத்தாய் வந்திருப்பது ‘10 டேஸ் ஓப்பனிங் கலெக்சன்’-ஐ மட்டுமே குறிவைத்து தயாரிப்பாளர்கள்/இயக்குநர்கள் படம் எடுப்பது. ஓரிரு படங்களுக்கு ஓப்பனிங் கலெக்சன் வந்தாலும், கூடிய விரைவில் ரசிகர்கள் விழித்துக்கொள்வார்கள் என்பதை முண்ணனி ஹீரோக்கள் உணர்ந்து கொள்வது அவசியம். இந்தப் பட வெளியீட்டிற்கு முன், இதை வெளியிட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரன் ‘இந்தப் படம் ஒரு வாரம் ஓடினாலே போதும். 64 கோடி கலெக்சன் ஆகிடும்’ என்று பேட்டியளித்தார். இது ஒரு விநியோகச்தருக்குப் போதும் என்றாலும், நம் போன்ற நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கும், அஜித் போன்ற ஹீரோக்களுக்கும் இது போதுமா என்பதை அனைவரும் யோசிப்பது அவசியம்.

நடிகர் பிரபு, தன் ஹீரோ காலகட்டத்தின் கடைசியில் இருக்கும்போது சொன்னார். ‘முன்பெல்லாம் ஹிட் படம் - ஆவரேஜ் படம் - ஃப்ளாப் படம் என்று மூன்று பிரிவு இருந்தது. எங்களைப் போன்ற ஹீரோக்களால் மினிமம் கேரண்டி ஹீரோவாக ஆவரேஜ் வெற்றிகளைக் கொடுக்க முடிந்தது. ஆனால் இப்போது ஆவரேஜ் படம் என்பதே கிடையாது. ஹிட் அல்லது ஃப்ளாப். இது தான் எங்களின் மிகப்பெரிய பிரச்சினை’ என்றார். அதுவே அவரைப் போன்ற ஹீரோக்களை வீட்டிற்கு அனுப்பியது.

இன்றைய ஹீரோக்கள் புரிந்துகொள்ள வேண்டியதும் அதைத் தான்..’பரவாயில்லை..பார்க்கலாம்’ என்றாலே படம் பப்படம் என்று தான் அர்த்தம். நல்ல படம் என்றால் மட்டுமே ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். ’ஓப்பனிங் கலெக்சனோடு ஆவரேஜ் படம் கொடுத்தால் போதும்’ என்று நினைப்பதை நம் ஹீரோக்கள்/டைரக்டர்கள் தவிர்ப்பது நலம். இல்லையென்றால் ஒரு ஈ-யிடம் சூப்பர் ஹீரோக்கள் தோற்கும் அவலம் தொடரும்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

23 comments:

 1. காலை வணக்கம்,செங்கோவி!நலமா?அலசிக் காய விட்டிருக்கிறீர்கள்."இந்தப்" படத்தைப் பார்க்க என் பிள்ளைகள்(விஜய் ரசிகைகள்/கர்) அனுமதிக்கவில்ல!"ஈ"பார்க்கலாம் போல?

  ReplyDelete
 2. ஈ என்றால் இளக்காரமா?

  உருப்படியான திரைக்கதை இல்லை என்றால் அஜித் என்ன எந்த HAIR-யாண்டியாலும் ஒன்னும் பண்ண முடியாது

  ReplyDelete
 3. விரிவான அலசல்! உண்மையான கருத்துக்கள்! சிறப்பு!

  இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

  ReplyDelete
 4. வணக்கம்ணே!
  எல்லாருக்கும் அஜித்தை தனிப்பட்ட முறையில்தான் பிடிக்கும் என நினைக்கிறேன் படத்தை பாத்து பிடிக்க அப்பிடி என்ன...
  பில்லா 1 - ஸ்டைல் தவிர - ஒரு மொக்கைப்படம்தான்...அநியாயத்துக்கு ஸ்லோ வேற!

  ReplyDelete
 5. SCARFACE படத்தையே நம்மாளுகள் பொறுமையாப் பாப்பாங்களாங்கரதே யோசிக்க வேண்டிய விஷயம்!
  நீங்க சொன்னது போலதான் அஜித்படம் ரெண்டு டைப்தான் சூப்பர்ணா செம ஹிட்டு! பரவால்லன்னா அட்டர் பிளாப்!

  ReplyDelete
 6. அண்ணன் ஹீரோயின்கள்கிட்ட பெருசா எதிர்பார்த்து (பில்லா-1 மாதிரியே) போயிருக்காரு, அதான் ரொம்ப கோவமாகிட்டாரு போல.......!

  ReplyDelete
 7. ////ராமராஜன் படத்தைக்கூட தேவயானிக்காக பார்த்த கூட்டத்தை நான் அறிவேன்.//////

  அண்ணன் தேவயானி ரசிகர்ங்கறத எவ்ளோ நேக்கா சொல்றாரு..... நீர் ரசிகன்யா..... ரசிகன்......!

  ReplyDelete
 8. /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]
  பில்லா 3 யில் மீட் பண்ணலாம்//////

  எல்லாருக்கும் பில்லா 3 டிக்கட் வாங்கி கொடுக்க போறீயா?

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் செங்கோவி...... விகடன் வலையோசை(மதுரை)யில் இடம் பிடித்தமைக்கு...
  http://www.vikatan.com/envikatan/article.php?aid=22690&sid=616&mid=34

  ReplyDelete
 10. // கூடிய விரைவில் ரசிகர்கள் விழித்துக்கொள்வார்கள் என்பதை முண்ணனி ஹீரோக்கள் உணர்ந்து கொள்வது அவசியம். //

  பில்லா – 2 தியேட்டரில் பார்த்து தூங்கிய பலர்(நான் உட்பட) சீக்கிரம் விழித்து கொள்ளும் காலம் வந்தே விட்டது.

  ReplyDelete
 11. இது சரி தா க, மதுரைல இன்னும் ஈ படம் ஓடிட்டு இருக்கு. movie above 40 days ஆச்சு, இன்னும் இங்க நல்ல(ஆரம்பத்துல iruthu ஆவரேஜ்வசூல்) வசூல்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்ணே..விகடன்ல வந்ததுக்கு! உங்க படம் பார்த்துட்டேன்! :-)

  ReplyDelete
 13. என் விகடனில் உங்கள் பதிவு. வாழ்த்துகள்.ஃபோட்டோ சூப்பர்

  ReplyDelete
 14. // Blogger ஜீ... said...

  வாழ்த்துக்கள்ணே..விகடன்ல வந்ததுக்கு! உங்க படம் பார்த்துட்டேன்! :-)//

  சேதாரம் ஒன்னும் இல்லியே?

  ReplyDelete
 15. //சென்னை பித்தன் said...

  என் விகடனில் உங்கள் பதிவு. வாழ்த்துகள்.ஃபோட்டோ சூப்பர்//

  நன்றி சீனியரே!

  ReplyDelete
 16. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ////ராமராஜன் படத்தைக்கூட தேவயானிக்காக பார்த்த கூட்டத்தை நான் அறிவேன்.//////

  அண்ணன் தேவயானி ரசிகர்ங்கறத எவ்ளோ நேக்கா சொல்றாரு..... நீர் ரசிகன்யா..... ரசிகன்......!//

  யோவ், அதுகிட்ட நம்ம எதிர்பார்க்கிறது கிடையாதே!

  ReplyDelete
 17. //Yoga.S. said...

  காலை வணக்கம்,செங்கோவி!நலமா?அலசிக் காய விட்டிருக்கிறீர்கள்."இந்தப்" படத்தைப் பார்க்க என் பிள்ளைகள்(விஜய் ரசிகைகள்/கர்) அனுமதிக்கவில்ல!"ஈ"பார்க்கலாம் போல?//

  பயணம் முடிந்து திரும்பியதில் மகிழ்ச்சி...ஈ கண்டிப்பாகப் பார்க்கலாம்.

  ReplyDelete
 18. சூப்பர் சரியாய் சொன்னிங்க

  ReplyDelete
 19. I like that you mentioned BILLA2 is just a remake of SCARFACE movie. "Al Pacino" would have overacted in that movie but worked out since it was release during early 80's. Our directors should at least start realizing now that it will not work if the story line and the screenplay is not different and interesting.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.