Monday, October 1, 2012

முருக வேட்டை_40

ருநாள் எங்க சமூகம் சாமி கும்பிடுவோம்னு போனப்போ, அங்கே எங்க சாமியும் இல்லை, அதுக்குக் கீழே இருந்த எங்க சேமிப்பும் இல்லை.”

"அய்யோ..அப்புறம் என்ன ஆச்சு?”

என் தாத்தாவும் கோவில் பூசாரியும் போலீஸ்ல போய்க் கம்ப்ளைண்ட் கொடுத்தாங்க. எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்துல உள்ளே வந்தாங்க. எத்தனையோ போராட்டம், பதிலுக்கு எத்தனையோ மிரட்டல்கள். அங்கே அப்படி ஒரு சிலையே இல்லை, நாங்க பொய் சொல்றோம்னு சொல்லிக் கேஸை மூடிட்டாங்க. எங்ககிட்ட எந்த ஆதாரமும் இல்லை. அதோட அவங்க விடலை..எங்க கோவில் இருந்த பகுதி, நாங்க வசித்த பகுதி எல்லாத்தையும் வனத்துறையோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவந்துட்டாங்க. எங்களை எங்க மண்ணை விட்டே விரட்டி அடிச்சிட்டாங்க.”

கவிதா என்ன சொல்வதென்றே தெரியாமல் கலங்கிப் போய் நின்றுகொண்டிருந்தாள். பாண்டியன் தொடர்ந்தான்.

அந்த அதிர்ச்சியில எங்க தாத்தா இறந்துட்டார். எங்க சமூகமும் ஆளுக்கொரு பக்கமா சிதறிடுச்சு. அந்தக் கோவில் பூசாரி குடும்பம் மருதமலை கோவில் வாசல்ல போய் உட்கார்ந்திடுச்சு. இன்னிக்கு நீங்க பார்த்தீங்களே..ஒரு பெரியவர், அவர் ஒய்ஃப், அவங்க பையன்..”

உங்களுக்கு அது தெரியுமா?”

ம்..அந்தப் பையன் ஃபோன் பண்ணிச் சொன்னான்...எங்க தாத்தா இறந்தப்புறம், எங்க அப்பா எப்படியும் அந்தச் சிலையை மீட்டே ஆகணும்னு முடிவு பண்ணாரு. எங்களுக்கு இருந்த முக்கியப் பிரச்சினை கல்வி தான்..அதுதான் உங்களோட எங்களை மிங்கிள் ஆகவிடாம, பிரிச்சுக்காட்டுச்சு. அதனால என்னை நல்லா படிக்க வச்சாரு. எங்களோட ஒரே நோக்கம், படிச்சு போலீஸ் வேலைல. அதுவும் சிபிசிஐடி ஆபீசுக்குள்ள நுழையணும்ங்கிறது தான். முருகன் அருளால, முப்பது வருசப் போராட்டத்துக்கு அப்புறம் அது நடந்துச்சு..”

ஏன் சிபிசிஐடி ஆகணும்னு முடிவு பண்ணீங்க?”

அந்தக் கேஸை கடைசியா டீல் பண்ணது சிபிசிஐடி தான். பாதியிலேயே இந்த விசாரணையை நிறுத்திட்டாங்க. சோ, உள்ளே வந்தா, என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாம். அந்த தங்கவேல் எங்கே இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்னு தான் வந்தேன்.”

அந்தக் கேஸை டீல் பண்ணது முத்துராமனா?”

ஆமா..அதனால அவரை அகிலா மூலமா நெருங்கினேன். அவர்கிட்ட நல்லாப் பழகி, தனியா அவரை மீட் பண்ற அளவுக்கு க்ளோஸ் ஆனேன். முதல்ல அவர்கிட்ட கேசுவலாப் பேசுறமாதிரி, அந்த கேஸ் பத்திப் பேசிப்பார்த்தேன். அவர் வாய் திறக்கலை. அப்புறம் ஃபோன்ல வேற பேர்ல அவரை மிரட்ட ஆரம்பிச்சேன்

மிரட்டினீங்களா? என்னன்னு?”

ஆமாம்..அந்தக் கேஸில் உண்மை என்ன, நீ என்ன பண்ணே-ன்னு எல்லாமே எனக்குத் தெரியும். நீ செஞ்ச பாவத்திற்கான தண்டனை அடையும் நேரம் இதுன்னு சொன்னேன்.”

அதுக்கு அவர் என்ன சொன்னார்?”

நான் தப்புப் பண்ணலேன்னு அவர் சொல்லலை..நீ யாருன்னு கேட்டார். உனக்கு என்ன வேணும்னு கேட்டார். நான் அந்த வேல் வேணும்னு சொன்னேன். அவர் பதிலே சொல்லலை..ரொம்ப டென்சன் ஆகிட்டார்..ஃபோனை வச்சிட்டார். அவரைத் தொடர்ந்து வாட்ச் பண்ணப்போ, ஒரு விஷயம் புதிரா இருந்துச்சு. என் ஃபோன் வந்தப்புறம், அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறலை. கோவிலுக்கு குடும்பத்தோட போறவர், அதுக்கப்புறம் குடும்பத்தை அனுப்பிட்டு தனியா இருக்க ஆரம்பிச்சார்

ஏன்..வெளில வர பயந்துட்டாரா?”

நானும் அப்படித் தான் நினைச்சேன். அந்தக் கொலை நடந்த அன்னிக்கு அவர் வீட்ல எல்லாரும் மருதமலை கிளம்பினாங்க..எங்க சாமிக்கும் மருதமலை முருகனுக்கும் உள்ள தொடர்பு அவங்களுக்குத் தெரியும். அதனாலதான் பாவப்பிராயச்சித்தமா, அடிக்கடி மருதமலை போவாங்க. அவர் தனியா இருக்கிறது தெரிஞ்சு, நான் அன்னிக்கு நைட் அங்கே போனேன். அந்த சிலை இப்போ, யார்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சிக்கிறதுக்காகப் போனேன்.”

இந்தக் கேஸ்ல எத்தனையோ பேர் சமபந்தப்பட்டிருக்காங்க. ஏன் முத்துராமனை மட்டும் குறிவச்சுப் போனீங்க?”

அந்த முன்னாள் மந்திரி-அவர் பிள்ளைங்க-அந்த வனத்துறை மந்திரி-அவங்களோட கட்சி ஆட்கள்னு பெரிய குருப்பே இதுக்குப் பின்னால இருந்துச்சு. என் நோக்கம் பழி வாங்கறதுகூட இல்லை. எங்க சாமியை மீட்கறது மட்டும் தான். அதனால, அவர் மூலமா அது இருக்கிற இடத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, அப்புறம் யார்கிட்ட அந்தச் சிலை இருக்கோ, அவங்களை அட்டாக் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். ஆனால் விதியின் விளையாட்டு வேறு விதமா இருந்துச்சு

ஏன்..அன்னிக்கு நைட் என்ன ஆச்சு?” என்று கேட்டான் சரவணன்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

 1. முடிஞ்சிடும்னு பாத்தா அதுக்குள்ள இன்னொரு சஸ்பென்சா?

  ReplyDelete
 2. நெருங்கி வருகிறது எல்லாக் கேள்விகளுக்குமான விடை!

  ReplyDelete
 3. கமெண்டைக் காணோம்!

  ReplyDelete
 4. திகிலில் திசை திருப்பும் உத்தி இனி செங்கோவி ஐயாவிடம் நான் படிக்கவேண்டும்!ம்ம் கதையில் விதியா!ம்ம்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.