Thursday, October 4, 2012

அடிப்படைக் குழாயியல்(Basics of Piping)_1

குழாயியல்

வரையறை :

ஒரு திரவ அல்லது வாயுப் பொருளை ஓரிடத்தில் இருந்து, மற்றோர் இடத்திற்கு இடமாற்றம் செய்ய உதவும் துறை அல்லது அமைப்பே குழாயியல் ஆகும்.

குழாயியல் தொழிற்துறையில் முக்கியப் பங்காற்றுகின்றது. உதாரணமாக கீழ்க்கண்ட தொழிற்சாலைகளைச் சொல்லலாம்:

1. மின் நிலையங்கள்
2. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள்
3. காகிதத் தொழிற்சாலைகள்
4. கட்டிடஙகள்
5. கப்பல்கள்

ஒரு தொழிற்சாலைக்குள் சென்று பார்த்தோமென்றால், குறுக்கும் நெடுக்குமாக பல குழாய்கள் சென்று கொண்டிருக்கும். கீழே உள்ள படத்தினைப் பாருங்கள்.


ஒவ்வொரு குழாயும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே செல்கின்றன. ஒரு கப்பலை/தொழிற்சாலையை வடிவமைக்கும்போதே, என்னென்ன தேவைக்கு குழாய்கள் தேவைப்படும் என்று முடிவு செய்துவிடுவார்கள். உதாரணமாக ஒரு கப்பலை எடுத்துக்கொண்டால், அடிப்படைத் தேவையாக இருப்பது கப்பலின் எஞ்சினை இயக்கத் தேவைப்படும் எரிபொருளான டீசல் தான். தேவையான அளவிற்கு எரிபொருள் இருந்தால்தான், மாதக்கணக்கில் கப்பல் பயணம் செய்ய முடியும். நடுக்கடலில் எரிபொருள் தீர்ந்துபோனால், எங்கு போய் டீசல் நிரப்புபது? எனவே முதலிலேயே டேங்க்கில் டீசலை நிரப்பிக் கொள்வார்கள். அந்த டேங்கில் இருந்து எஞ்சினிக்கு டீசலை எடுத்துச் செல்ல குழாய்கள் உதவும். அந்த அமைப்பு எரிபொருள் அமைப்பு (Fuel Oil System) என்று அழைக்கப்படும்.

இதே போன்றே அடுத்த முக்கியத் தேவையாக குடிநீர் வரும். குடிநீரும் தேவையான அளவு குடிநீர் டேங்கில் சேமித்து வைக்கப்படும். அங்கிருந்து குடிநீர் டேப் உள்ள இடங்களுக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படும்.(நம் வீடுகளில் உள்ளது போன்றே!). இதனை Fresh Water System அல்லது Potable Water System என்பர்.

இதுபோல் பல்வேறு அமைப்புகள் ஒரு கப்பல்/தொழிற்சாலைக்கு தேவைப்படும். அவற்றில் சில கீழே கொடுக்கப்படுகின்றன :

1. Fuel Oil System
2. Lube Oil System
3. Compressed Air System
4. Fresh Water System
5. Fresh Water Cooling System
6. Sea Water Cooling System
7. Gravity Drain System
8. Flare System
9. Effluent Water System
10. Dry and Wet Crude Storage System............etc.


இனி, ஒரு குறிப்பிட்ட குழாயியல் அமைப்பினை ஆராய்வோம். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தினைப் பாருங்கள்:
இது ஒரு Process Flow Drawing. (இதைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம்). கப்பலின் எஞ்சினை குளிர்விக்க, Fresh Water System  இருக்கும். அந்த Fresh Water-ஐ குளிர்விக்கவும் ஒரு அமைப்பு வேண்டுமல்லவா? அதுவே Sea Water System ஆகும். மேலே உள்ள படத்தில் இருந்து நாம் கீழ்க்கண்ட விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம்:

1. கப்பலின் கீழே உள்ள Sea Chest-ல் இருந்து தண்ணீர் பம்ப்புக்கு வருகின்றது.
2. இரண்டு பம்புகள் அந்த சிஸ்டத்தில் உள்ளன. ஒன்று எப்போதும் உபயோகத்தில் இருக்கும். மற்றது முந்தைய பம்ப் வேலை செய்யாத சமயத்தில் ஓட்டப்படும்.
3. பம்ப்பானது கடல் நீரை ஒரு Heat Exchanger-க்கு அனுப்பி வைக்கின்றது.
4. Heat Exchanger-ல் கடல் நீர், எஞ்சினில் இருந்து வரும் Fresh Water-ஐ குளிர்விக்கின்றது.
5. இப்போது Heat Exchanger-லிருந்து வெளிவரும் கடல் நீர், சூடாக ஆகியிருக்கும். எனவே அது Free Board line வழியாக மீண்டும் கடலிலேயே கொட்டப்படுகிறது.
6. குளிர்விக்கப்பட்ட கடல் நீரானது, மீண்டும் எஞ்சினை குளிர்விக்க அனுப்பப்படுகிறது.

இதுவே Sea Water System செயல்படும் முறையாகும். இவ்வாறு ஒவ்வொரு அமைப்பிற்கும் Process Flow Drawing இருக்கும். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக அங்கே என்ன நடக்கின்றது என்று நாம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு ஒரு கப்பல்/தொழிற்சாலை என்பது பல்வேறு அமைப்புகளின் இயக்கங்கள் மூலம் செயல்படுகிறது.

பல்வேறு தொழிற்சாலைகளில் குழாயியல் பயன்படுவதைப் பார்த்தோம். மேலும் தொழிற்சாலையினுள் எங்கெல்லாம் குழாயியல் தேவைப்படுகிறது என்றும் பார்த்தோம். 

இனி ஒரு குழாயியல் அமைப்பில் உள்ள முக்கிய உறுப்புகள் என்னென்ன என அடுத்த பகுதியில் பார்ப்போம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

  1. செங்கோவி அன்னே பாடம் நடத்த ஆரம்பிச்சுடார் எல்லோரும் வாங்க.ம்ம்ம்ம் நடத்துங்கன்னே ! விறு விறுப்பா போகுது.

    ReplyDelete
  2. நல்லது நண்பரே . எனக்கு இந்த Pipe bend பண்றதுக்கு காள்குலேசன் இருக்குல்ல அது கொஞ்சம் விளக்க முடியுமா ??sine ,cos , tan வச்சு கணக்கிடுவாங்களே அது பற்றி தெரியனும் , வாய்பிருந்தால் உதவுங்கள் .நன்றி sayrabala @gmail .com

    ReplyDelete
  3. கொஞ்சமா தெரிஞ்சுக்கிட்டேன்..

    ReplyDelete
  4. @பாலா

    கருத்துக்கு நன்றி நண்பரே..டியூப் நீளம் எவ்வளவு தேவை என கணக்கிடப்போகிறீர்கள் என்றால், கீழே உள்ள ஃபார்முலா உதவும்:

    Length of Tube = 0.017453*Center Line Radius(i.e.Radius of Die)*Degree of Bend

    அல்லது கீழே உள்ள லின்க்கைப் பாருங்கள். படத்துடன் விளக்கியுள்ளார்கள் :

    http://www.pirate4x4.com/tech/bendin_tube/index.html

    ReplyDelete
  5. //

    Blogger Arif .A said...

    விறு விறுப்பா போகுது.//

    யோவ், ஆரம்பிக்கவே இல்லை..அதுக்குள்ள விறுவிறுப்பா? நக்கல் தானே?

    ReplyDelete
  6. //Blogger Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

    Finally you started this! All the best Anne.//

    கொஞ்சம் உருப்படியா ஏதாவது செய்வோம்னு தான்.

    ReplyDelete
  7. //Blogger தமிழ்வாசி பிரகாஷ் said...

    கொஞ்சமா தெரிஞ்சுக்கிட்டேன்..//


    போதும்..போதும்.

    ReplyDelete

  8. செங்கோவி said... [Reply]
    //

    Blogger Arif .A said...

    விறு விறுப்பா போகுது.//

    யோவ், ஆரம்பிக்கவே இல்லை..அதுக்குள்ள விறுவிறுப்பா? நக்கல் தானே?//

    ஹா..ஹா...சத்திய சோதனை!!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.