Wednesday, October 3, 2012

முருக வேட்டை_43



பெட்டியின் உள்ளே குழந்தையைப் போல் படுத்திருந்த, தங்கத்தால் ஆன வேலைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள் கவிதா.

பாண்டியன் தொடர்ந்து பேசினான். “இந்த உலகத்துல உங்களைத் தவிர வேறு யாரையும் நான் நம்ப முடியாது சிஸ்டர். எங்கெல்லாமோ சிதறிக்கிடக்கிற என் சமூகத்தை ஒன்னாக்கி, இந்த வேலை அவங்ககிட்ட ஒப்படைக்க வேண்டியது உங்க பொறுப்பு. நீங்க என்னை சொந்த அண்ணனாவே ட்ரீட் பண்ணியிருக்கிறீங்க. அதனால, எனக்கு இருக்கிற அதே பொறுப்பு, என் தங்கையா உங்களுக்கும் இருக்கு. இன்னிக்கு மருதமலைல பார்த்த அந்த பெரியவரைப் போய்ப் பாருங்க. உங்களுக்கு அவர் உதவி செய்வார். நாங்க சேர்ந்து வாழ, இன்னொரு இடம் செலக்ட் பண்ணியிருக்கிறோம். அங்கே ஒரு இந்த வேலுக்கு ஒரு கோவில் கட்டி, அவங்க வாழ உதவி செய்யுங்க.”

எவ்வளவு பெரிய பொறுப்பு...நம்மேல் எவ்வளவு நம்பிக்கை.’ என்று நினைக்கும்போதே,கவிதாவிற்கு தொண்டையை அடைத்தது. “பத்திரமாக என்னை மலையில் கொண்டு போய் விட்டு வருவாயா?”என்று கனவில் முருகர் கேட்டது ஞாபகம் வந்தது. கண்ணில் நீர் வழிய, சரி என்பது போல் பாண்டியனைப் பார்த்து தலையாட்டினாள்.

கவிதா, ஹோட்டல் காரை வரச்சொல்றேன். நீ இந்தப் பெட்டியோட ஹோட்டலுக்குக் கிளம்பு. அகிலா மேம்கிட்ட பேசிட்டு, பாண்டியனை லோக்கல் போலீஸ்கிட்ட ஒப்படைச்சுட்டு நான் வந்திடறேன். எப்படியும் இந்த கேஸை இதுக்கு மேல நான் டீல் பண்ண முடியாது, டூட்டில ஜாயின் பண்ணவும் 10 நாள் இருக்கு. மறுபடியும் நாளைக்கு நாம மருதமலை போவோம். நாம சேர்ந்தே, இந்த நல்ல காரியத்தைச் செய்வோம். கவலைப்படாதே, முருகனருள் முன்னிற்கும்என்றான் சரவணன்.

கவிதா ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். அதைக் கவனிக்காது பாண்டியனிடம் திரும்பிய சரவணன், “நாங்க மருதமலை போறோம். அவங்க எங்களை நம்புவாங்களா?” என்றான்.

அவங்களுக்கு உங்களைத் தெரியும். நான் உங்களை ஏற்கனவே மருதமலைகூட்டி வந்ததே, அவங்களுக்குக் காட்டத்தானே? நீங்க எப்போ எங்க சாமியோட வருவீங்கன்னு தான் அந்தக் குடும்பம் அங்க காத்திருக்குது. அதனால ஒன்னும் பிரச்சினை இருக்காது.” என்றான் பாண்டியன்.

எல்லாமே கரெக்டா ப்ளான் பண்ணிப் பண்ணியிருக்கிறே, போல?” என்று கேட்டுவிட்டுச் சிரித்த சரவணன் அகிலாவிற்கு ஃபோன் செய்தான்.

மேம், நாந்தான் சரவணன் பேசுறேன்

சொல்லுங்க..மருதமலை போயாச்சா?”

போய்ட்டு வந்திட்டோம் மேம்..முத்துராமன் சாரைக் கொன்னது யாருன்னு கண்டுபிடிச்சுட்டோம்என்றான்.

யாரு? செந்தில் பாண்டியன் தானே?”

சரவணன் அதிர்ந்து போய்ஆமாம் மேம்என்றான்.

நானும் கண்டுபிடிச்சுட்டேன். ஆளு இப்போ மிஸ்ஸிங்என்றாள் அகிலா.

இல்லை மேம்..இங்க தான் இருக்கான்..நான் பிடிச்சுட்டேன்.”

அப்படியா? வெரிகுட்.வெரிகுட்

நகைக்காகத் தான் கொன்னிருக்கான் மேம்

..அப்படியா?”என்றாள் அகிலா கிண்டலாக!

அதைக் கவனிக்காமல் சரவணன் பேசிக்கொண்டே போனான். “ஆமாம் மேம்..அவன் வீட்டுக்கு திடீர்னு போய், சர்ச் பண்ணேன்ன். அவரைக் கொன்ன கத்தி, கயிறு எல்லாமே இங்க தான் இருக்கு. அவனையும் பிடிச்சுட்டேன் மேம்.”

ஓகே..இப்போ என்ன செய்யப்போறீங்க?”

நான் இப்போ ஒன்னும் செய்ய முடியாதே மேம்..அதனால லோக்கல் சிபிசிஐடி போலீஸ்கிட்ட ஒப்படைச்சிடறேன். அப்புறம் நீங்க பார்த்துக்கோங்க.”

ஓகே..நீங்க இருக்கிற இடத்தைச் சொல்லுங்க. அவங்களை நான் அனுப்பி வைக்கிறேன்.” என்றாள் அகிலா.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இரண்டு வருடங்களுக்குப் பிறகு.....

ங்க, இவனைப் பிடிங்க..எவ்ளோ நேரமா டயஃபர் மாட்ட போராடிக்கிட்டு இருக்கேன்..ஒரு இடத்துல நிக்கிறானா?..ட்ரெயினுக்கு வேற டயம் ஆச்சுஎன்று மகனைப் பற்றி சரவணனிடம் கம்ப்ளைண்ட் செய்தாள் கவிதா.

சரவணன் தன் மகன் பாலமுருகனைப் பிடித்தான். “முருகரே, இப்படி ஓடலாமா? கோவனாண்டி டயஃபர் மாட்டறதுக்குப் பயப்படலாமா? இதுவும் கோவணம் தாம்யா..நவீன கோவணம்என்றான் சரவணன்.

புரிந்தும் புரியாமலும் பாலமுருகன் சிரித்தபடி நின்றான்.

அப்போது கவிதாவின் ஃபோன் ஒலித்தது.

முருகன் என்றால் அழகன் என்று...”

கவிதா ஃபோனை எடுத்துஹலோஎன்றாள்.

என்ன கவிதா..கிளம்பியாச்சா?” என்றது அகிலாவின் குரல்.

நாங்க கிளம்பிட்டோம்..பையன் தான் அநியாயம் பண்றான்.”

ஹா..ஹா..ஊருக்குப் போறதுன்னாலே குஷி தான் இல்லியா?”

ஆமாக்கா..சொந்த ஊருன்னாலே தனி குஷி தானே?”

ம்..உங்க ஊரு திருநெல்வேலி பக்கம் தானே?”

ஆமாக்கா...அதில் என்ன சந்தேகம்?”

சந்தேகம் எல்லாம் ஒன்னுமில்லை. திருநெல்வேலி போறதுக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ்ல டிக்கெட் போட்டிருக்கீங்களே, அதான் கேட்டேன்

அக்கா..”என்று அதிர்ச்சியில் இழுத்தாள் கவிதா.

கந்த சஷ்டிக் கவசம் அரங்கேறின இடம் எது தெரியுமா கவி?

“செ...சென்னிமலைக்கா

அந்த மலையும் மலையடிவாரமும் ரொம்ப ரம்மியமா இருக்கும் இல்லே? அந்த மலையடிவார மக்கள்கூட ரொம்ப நல்லவங்க, இல்லியா?

அக்கா..அதுவந்து..”

கவிதா..அறியாமையே எல்லாத் துன்பத்துக்கும் காரணம்னு பெரியவங்க சொல்றாங்க இல்லியா? அறிதலே சந்தோசம், பயம், கோபம், சந்தேகம் எல்லாத்தில இருந்தும் விடுதலை பண்ணும், இல்லியா?”

“……….....”

இரண்டு வருசத்துக்கு அப்புறம் இன்னிக்குத் தான் நான் விடுதலை ஆகியிருக்கேன்..ஹேப்பி ஜர்னி கவிதா..போய் நல்லபடியா சாமி கும்பிட்டு வாங்க..பார்ப்போம்


(முற்றும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

21 comments:

  1. செங்கோவி, அருமையான தொடர்..எப்படி இவ்வளவு விபரங்கள் சேகரித்தீர்கள்? குறிப்பாக, கென்ய கடவுள் பற்றி. இது போல இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம்ணே!
    நீண்ட நாட்களாக வேறு விஷயங்களை பெரும்பாலும் தவிர்த்து, நிறைய உழைத்து, எழுதியிருப்பது ஒவ்வெரு பகுதியிலும் தெரிந்தது. பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன். சமீபத்தில் இந்துமதம் பற்றி ஒரு நண்பர் கேட்டபோது, உண்மையில் எதுவுமே தெரியாமல் முழித்திருக்க வேண்டிய நான், நிறையத் தெரிந்ததுபோல்..என் இயல்புக்கு மாறாக, நாலுவரி சேர்ந்தாற்போல பேசியதற்குக் காரணம் இந்தத் தொடர்தான். நன்றி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. //“இரண்டு வருசத்துக்கு அப்புறம் இன்னிக்குத் தான் நான் விடுதலை ஆகியிருக்கேன்..ஹேப்பி ஜர்னி கவிதா..போய் நல்லபடியா சாமி கும்பிட்டு வாங்க..பார்ப்போம்”//

    என்னன்னே இது, இப்படி போட்டு குழப்பி விட்டுட்டீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல... சின்னப்பையனுக்கு கொஞ்சம் விளக்கிச்சொல்லுங்கண்ணே... (ஒருவேள இவரு முருக வேட்டை பார்ட் 2 வுக்கு லீடு குடுக்கறாரோ? - மைன்ட் வாயிஸ்)

    ReplyDelete
  4. மிக அருமையான தொடர் செங்கோவி, பிரமிக்க வைக்கும் உங்கள் உழைப்பு, அந்த டீட்டெயிலிங் எல்லாமே அற்புதம். பல இடங்கள்ல ஆழ்ந்த தத்துவங்கள்.. கென்யா சம்பந்தமான விஷயங்கள் எல்லாமே திரும்ப திரும்ப படிச்சேன்...... நிஜமாவே நடந்திருக்குமோன்னு தோன வெச்சிட்டீங்க..... வெல்டன் வெல்டன்.......!

    ReplyDelete
  5. இரவு வணக்கம் செங்கோவி!அருமையாகச் சொல்லி முடித்து விட்டீர்கள்.தகவல்கள் யாவும் அருமையாக ஆதியோடு அந்தமாக தொகுத்து நிறையவே சிரமப்பட்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது,வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. உழைப்பு ,தேடல் நம்பிக்கை அறிவுவளர்ச்சி, நவீன தலைமுறையின் கூச்சல் ,குழப்பம் மற்ற மதவாதிகளுக்கு ஒரு நடுநிலையான கருத்து என இந்த தொடர் ஒரு சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் பதிவுலகில் நான் தொடரந்து படித்ததில் இது இன்னும் மொரு சாதனைத்தொடர்! மீண்டும் வாழ்த்துக்கள் செங்கோவியாரே!

    ReplyDelete
  8. மிக அருமையான தொடர் செங்கோவி, பிரமிக்க வைக்கும் உங்கள் உழைப்பு, அந்த டீட்டெயிலிங் எல்லாமே அற்புதம். பல இடங்கள்ல ஆழ்ந்த தத்துவங்கள்.. கென்யா சம்பந்தமான விஷயங்கள் எல்லாமே திரும்ப திரும்ப படிச்சேன்...... நிஜமாவே நடந்திருக்குமோன்னு தோன வெச்சிட்டீங்க..... வெல்டன் வெல்டன்.......!

    October 3, 2012 11:07 PM// உண்மைதான் பன்னிக்குட்டியண்ணே! நலம் தானே அடிக்கடி பார்க்க முடியவில்லை உங்களை!ம்ம்

    ReplyDelete
  9. மன்னிக்கவும் அண்ணன் செங்கோவி.. மன்மதன் லீலைகளையாவது பாதியில இருந்து பிக்கப் பண்ணிகிட்டேன்.. இது ஆன்மிக பதிவுன்னு தோணுனதனால தொடர்ந்து வாசிக்கல.. இப்போதான் முடிஞ்சிருச்சே,தொடர்ந்து வாசிச்சவுங்க எல்லாருமே பாராட்டுறாங்க.. ஒரே மூச்சா 43எபிசோட்சையும் வாசிக்கலாம்னு இருக்கேன்... pdfல போடுவீங்கதானே?
    மீண்டும் மன்னிப்பு..

    ReplyDelete
  10. இப்பொழுதுதான் இந்த தொடரை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்... நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  11. அருமையான தொடர் செங்கோவி சார். சீக்கிரம்முடிசிட்டிங்கனு வருத்தமா இருக்கு.முருகனருள் உங்களுக்கு கிடைக்கட்டும்

    ReplyDelete
  12. //Sundar said...
    செங்கோவி, அருமையான தொடர்..எப்படி இவ்வளவு விபரங்கள் சேகரித்தீர்கள்? குறிப்பாக, கென்ய கடவுள் பற்றி. இது போல இன்னும் தொடர வாழ்த்துக்கள்.//

    பாராட்டுக்கு நன்றி பாஸ்..முடிவுரையில் சில லின்க் கொடுத்துள்ளேன், பாருங்கள்!

    ReplyDelete
  13. /Blogger ஜீ... said...
    வணக்கம்ணே!
    நீண்ட நாட்களாக வேறு விஷயங்களை பெரும்பாலும் தவிர்த்து, நிறைய உழைத்து, எழுதியிருப்பது ஒவ்வெரு பகுதியிலும் தெரிந்தது. பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன். சமீபத்தில் இந்துமதம் பற்றி ஒரு நண்பர் கேட்டபோது, உண்மையில் எதுவுமே தெரியாமல் முழித்திருக்க வேண்டிய நான், நிறையத் தெரிந்ததுபோல்..என் இயல்புக்கு மாறாக, நாலுவரி சேர்ந்தாற்போல பேசியதற்குக் காரணம் இந்தத் தொடர்தான். //

    இந்த தொடர் உங்களுக்கு நல்ல ஆரம்பம் மட்டுமே..மேலும் தேடி நல்ல புத்தகங்களைப் படியுங்கள் ஜீ.

    ReplyDelete
  14. //Blogger Dr. Butti Paul said...
    என்னன்னே இது, இப்படி போட்டு குழப்பி விட்டுட்டீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல... சின்னப்பையனுக்கு கொஞ்சம் விளக்கிச்சொல்லுங்கண்ணே... (ஒருவேள இவரு முருக வேட்டை பார்ட் 2 வுக்கு லீடு குடுக்கறாரோ? - மைன்ட் வாயிஸ்)//

    ஆமா..இது பெரிய்ய ஹாலிவுட் மூவி..இதுக்கு செகண்ட் பார்ட் வேற.............யோவ், முத்துராமன் வச்சிருந்த தங்கவேலை இப்போ யார் வச்சிருக்காங்கன்னு 2 வருசமாத் தெரியலை..கவியை 2 வருசமா ஃபாலோ பண்ணி, அகி இப்போ தெரிஞ்சுக்கிச்சுன்னு அர்த்தம்யா!

    ReplyDelete
  15. //Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
    மிக அருமையான தொடர் செங்கோவி, பிரமிக்க வைக்கும் உங்கள் உழைப்பு, அந்த டீட்டெயிலிங் எல்லாமே அற்புதம். பல இடங்கள்ல ஆழ்ந்த தத்துவங்கள்.. கென்யா சம்பந்தமான விஷயங்கள் எல்லாமே திரும்ப திரும்ப படிச்சேன்...... நிஜமாவே நடந்திருக்குமோன்னு தோன வெச்சிட்டீங்க..... வெல்டன் வெல்டன்.......!//

    இந்த தொடருக்கு நீங்கள் தந்த ஆதரவு, குறிப்பிடத்தக்கது..ரொம்ப நன்றி பன்னியாரே..

    ReplyDelete
  16. //Blogger Yoga.S. said...

    இரவு வணக்கம் செங்கோவி!அருமையாகச் சொல்லி முடித்து விட்டீர்கள்.தகவல்கள் யாவும் அருமையாக ஆதியோடு அந்தமாக தொகுத்து நிறையவே சிரமப்பட்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது,வாழ்த்துக்கள்!//

    ஆள் இல்லாத என் கடையில், தைரியமாக தனியாக உட்கார்ந்து, படித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தியது நீங்கள் தான்..நன்றி ஐயா.

    ReplyDelete
  17. //Blogger தனிமரம் said...
    உழைப்பு ,தேடல் நம்பிக்கை அறிவுவளர்ச்சி, நவீன தலைமுறையின் கூச்சல் ,குழப்பம் மற்ற மதவாதிகளுக்கு ஒரு நடுநிலையான கருத்து என இந்த தொடர் ஒரு சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் பதிவுலகில் நான் தொடரந்து படித்ததில் இது இன்னும் மொரு சாதனைத்தொடர்! மீண்டும் வாழ்த்துக்கள் செங்கோவியாரே!//

    உங்கள் ஆதரவுக்கும் நன்றி நேசரே.

    ReplyDelete
  18. //Blogger மொக்கராசு மாமா said...

    மன்னிக்கவும் அண்ணன் செங்கோவி.. மன்மதன் லீலைகளையாவது பாதியில இருந்து பிக்கப் பண்ணிகிட்டேன்.. இது ஆன்மிக பதிவுன்னு தோணுனதனால தொடர்ந்து வாசிக்கல.. இப்போதான் முடிஞ்சிருச்சே,தொடர்ந்து வாசிச்சவுங்க எல்லாருமே பாராட்டுறாங்க.. ஒரே மூச்சா 43எபிசோட்சையும் வாசிக்கலாம்னு இருக்கேன்... pdfல போடுவீங்கதானே? மீண்டும் மன்னிப்பு..//

    பிடிஎஃப் போட்டிடுவோம்...இதுக்கு எதுக்குய்யா மன்னிப்பு..டைம் இருந்தா, படிங்க..இல்லேன்னா ஒன்னும் குடி முழுகிடாதுய்யா..

    ReplyDelete
  19. //Blogger பி.அமல்ராஜ் said...
    இப்பொழுதுதான் இந்த தொடரை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்... நன்றாக இருக்கிறது.//
    உங்கள் கென்யா பற்றிய பதிவு, எனக்கு மிகவும் உதவியாக இருந்தது பாஸ்..நன்றி.

    ReplyDelete
  20. //Blogger Indhuja chellam M said...
    அருமையான தொடர் செங்கோவி சார். சீக்கிரம்முடிசிட்டிங்கனு வருத்தமா இருக்கு.முருகனருள் உங்களுக்கு கிடைக்கட்டும் //

    உங்கள் தொடர்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  21. இந்த தொடரை பாதியில் இருந்துதான் வாசித்தேன்! இதை எழுத உங்களின் வோம் ஒர்க் ரொம்பவும் கவர்ந்தது.அருமையாக சுவாரஸ்யமாக கொண்டு சென்றீர்கள், இடையில் எனது கணிணி மக்கர் செய்தமையால் படிக்க முடியாமல் போனது. இன்று நேரமும் அம்மா புண்ணியத்தால் மின்சாரமும் இருக்க முழுவதும் படித்தேன்! அருமையான தொடர் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.