Monday, October 1, 2012

முருக வேட்டை_41

கிலா தன் ஜீப்பை முத்துராமனின் பங்களா முன் நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்தாள். வீட்டின் முன் நின்றுகொண்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.

செந்தில் பாண்டியனும் இப்படித் தான் வந்திருப்பானா?’

ஸ்ரீனிவாசன் கதவைத் திறந்துவாங்க அகிலாஎன்றார்.

முத்துராமன் சாரும் இப்படித் தான் பாண்டியனை நம்பி அழைத்திருப்பாரா?’

 அகிலா புன்சிரிப்புடன் உள்ளே நுழைந்தாள்.

வாங்க..உட்காருங்கஎன்று சோஃபாவைக் காட்டினார் ஸ்ரீனிவாசன்.

பாண்டியனும் இப்படித்தான் அமர்ந்தானா?’

சொல்லுங்க அகிலா..என்ன திடீர்னு?”

அகிலா சுயநினைவுக்கு வந்தவளாகஒன்னும் இல்லை சார்..கேஸ்ல இன்னும் சில விவரம் கிடைச்சிருக்கு..அதனால உங்க பூஜை ரூமையும் சார் ரூமையும் மறுபடியும் ஒருதடவை பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்.” என்றாள்.

ஸ்ரீனிவாசனுக்கு எத்தனை முறை இவர்களுக்கு சுற்றிக்காட்டுவது என்று சலிப்பாக இருந்தது. கேட்பது அகிலா என்பதால் ஒன்றும் சொல்லாமல், “ஓகே..உங்களுக்குத் தான் எல்லா இடமும் தெரியுமே..போய்ப் பாருங்கஎன்றார்.

அம்மா இருக்காங்களா?” என்று கேட்டாள் அகிலா.

இல்லை..சிஸ்டர் வீட்டுக்குப் போய்ட்டாங்க..இனிமே இங்கே அவங்களால எப்படி இருக்க முடியும்?”

கஷ்டம் தான்என்று சொல்லிவிட்டு, அகிலா எழுந்தாள்.

இதே சோஃபாவில் தான் பேசிக்கொண்டிருந்தார்களா?..தங்க வேலை எங்கே? என்று கேட்டுத் தான் டார்ச்சர் செய்தானா?’ அகிலா யோசனையுடன் மாடிப்படிகளில் ஏறினாள்.
பூஜை ரூம் வாசலில் போய் நின்றாள்.

எப்போதும், எல்லாரையும் ஆச்சரியப்படுத்துவது இந்த பூஜை ரூமின் சைஸ் தான்..’வீட்டுக்குள்ளேயே கோவில் மாதிரி கட்டியிருக்கிறாங்க மேம்என்று சரவணன் ஆச்சரியப்பட்டது ஞாபகம் வந்தது.

கோவில் மாதிரியா? கோவிலே தானா?’ என்று நினைத்தபடி அகிலா உள்ளே நுழைந்தாள். குறைந்தது 20 பேராவது ஒரே நேரத்தில் சாமி கும்பிட முடியும் என்று தோன்றியது. நேரெதிரே மூன்று செல்ஃப்கள் இருந்தன. முதல் செல்ஃபில் எதுவும் இல்லை. இரண்டாவதில் சாமி படங்கள். மூன்றாவதில் பூஜை சாமான்கள்..அப்படியென்றால், முதல் செல்ஃபில் என்ன இருந்தது? பூர்வீக நகைகள் இருந்தது லாக்கரில்..அப்படியென்றால்........’

அகிலா அதற்கு மேல் சிந்திக்கக்கூட முடியாமல், அந்த செல்ஃபையே பார்த்தாள்..’அதுவா?...அது இங்கேயா இருந்தது? அதற்காகத்தான் இத்தனை பெரிய பூஜை ரூமா? குடும்பத்தில் அனைவரும்கூடி, கும்பிட்டது அதைத் தானா?’

அதற்கு நேர்மேலே எழுதியிருந்ததைப் பார்த்தாள் அகிலா.

MARS 1024

அதற்குக் கீழே காலியான செல்ஃப்..அதற்கும் கீழே சாமி படங்கள்..கீழே பார்த்த அகிலா அதிர்ந்தாள்.

வரிசையாக இருந்த பல சாமி படங்களில், முருகர் படம் மட்டும் MARS 1024க்கு நேர்கீழே இருந்தது..

க்ளியர்!..மிகச் சரியாக முருகர் படத்திற்கு மேலே எழுதிவிட்டுப் போயிருக்கிறான்..இதை எப்படிக் கவனிக்காமல் விட்டோம்..இதை நிச்சயம் முத்துராமன் ஃபேமிலி கவனித்திருக்க வேண்டும்..அவர்களுக்கு எதனால் கொலை என்று புரிந்து தான், அமைதியாகி விட்டார்களா? ஒருமுறைகூட ஸ்ரீனிவாசன்கொலைகாரனைக் கண்டுபிடிச்சாச்சா?’ என்று கேட்கவில்லையே? இதைக் கண்டுபிடித்தால், பல விஷயங்கள் வெளியே வரும்..அதனால்தான் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்களா?’

அகிலா யோசித்தபடியே, மாடிப்படிகளில் இருந்து கீழே வந்தாள்.

ஸ்ரீனிவாசன்அப்பா ரூமைப் பார்க்கலியா?” என்றார்.

இல்லை..தேவையில்லைன்னு நினைக்கிறேன்..சார், காணாமல் போன எல்லாத்தையுமே சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவோம்னு நம்புறேன்என்று சொல்லிவிட்டு, ஸ்ரீனிவாசனைக் கூர்ந்து பார்த்தாள் அகிலா.

அவர் சலனமேயில்லாமல்கண்டுபிடிச்சா நல்லது தான்என்றார்.

அது திரும்பக் கிடைக்கணும்னு உங்களுக்கு ஆசை இல்லியா சார்?’ என்றாள்.

கிடைக்கறதும் கிடைக்காததும் முருகனோட விருப்பம்...அவன் மேலேயிருந்துக்கிட்டு என்ன முடிவெடுக்கிறானோ, அதுக்குக் கட்டுப்படறது தானே சரி..அப்பாவும்எதையும் முடிஞ்சவரை காப்பாத்தணும்..அப்புறம் அவன் இஷ்டம்னு சொல்வார்..எங்களோட பொருள்னு முருகன் நினைச்சா, எங்களுக்கே திரும்பக் கிடைக்கும்..நடக்கறது நடக்கட்டும்என்றார் ஸ்ரீனிவாசன்.
அகிலாவும் புரிந்துகொண்டு, அங்கிருந்து வெளியேறினாள்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

  1. குட்டு உடைகிறது?நெருங்கி விட்டார்களோ?அருமை,செங்கோவி!

    ReplyDelete
  2. ம்ம் அடுத்த சஸ்பென்சு தொடரும் போல!ம்ம்

    ReplyDelete
  3. ஆர்வம் அதிகரிக்கிறது! அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.