சென்ற வருடம் வந்த படங்களில் குறிப்பிடத்தக்க படமாய் அமைந்தது விடியும் முன். படத்தின் மேக்கிங்கிற்காக மட்டுமல்லாது, திறமையாய் சுட்ட படம் என்பதாலும் குறிப்பிடத்தக்க படம் தான் அது. London to Brighton படத்தின் அப்பட்டமான காப்பி என்பதாலும், இங்கே படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதாலும் விடியும் முன் படத்தை ரிலீஸின் போது நான் பார்க்கவில்லை. ஆனால் சமீபத்தில் பார்த்தபோது, அசந்துவிட்டேன். பொதுவாக ஒரிஜினல் படத்தைப் பார்த்தபின் காப்பியை பார்க்க கண்றாவியாக இருக்கும். ஆனால் நந்தலாலாவிற்கு அப்புறம், ஒரிஜினலை விட பெட்டராக வந்த ‘காப்பி படம்’ என்று இதனைச் சொல்லலாம்.
கதை :
ஒரு பணக்காரன் விபச்சாரத் தரகனிடம் ஒரு சிறுமி வேண்டும் என்று கேட்கிறான். வீட்டை விட்டு ஓடிவந்த ஒரு சிறுமியை, ஒரு விபச்சாரி/பாலியல் தொழிலாளியின் துணையுடன் ஏமாற்றி அந்த பணக்காரனிடம் அனுப்பி வைக்கிறான் தரகர். சிறுது நேரம் கழித்து, அந்த சிறுமியும் பாலியல் தொழிலாளியும் ட்ரெயினில் ஊரைவிட்டே ஓடுகிறார்கள். அந்த பணக்காரனின் மகன்(மெயின் வில்லன்?), ஓடுகின்ற இருவரையும் பிடித்துக்கொண்டுவரச் சொல்கிறான். தரகன் அவர்களைத் தேட ஆரம்பிக்கிறான். இருவரும் தப்பினார்களா? அந்த பணக்காரனுக்கு என்ன நடந்தது என்பதே கதை.
ஒரிஜினலுக்கும் காப்பிக்கும் எந்த வித்தியாசமும் கதையில் கிடையாது. இரண்டு படத்திலுமே அதே கதை தான்.
திரைக்கதை :
ஒரிஜினலில் இரு பெண்களும் தப்பி ஓடுவதில் படம் ஆரம்பிக்கிறது. பணக்காரனின் மகன், தரகனைத் தேடி வரும்போதே நமக்கும் நடந்த கதை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வைக்கப்படுகிறது. பாலியல் தொழிலாளி தன் தோழியின் வீட்டு(Brighton)க்குப் போகிறாள். அங்கே அவள் இருப்பதை அறியும், தரகன் மெயின் வில்லனுக்கு தகவல் சொல்கிறான். அவர்களை ஒரு இடத்திற்கு கொண்டு வரச்ச்சொல்கிறான் வில்லன். அங்கே கிளைமாக்ஸ்.
தமிழ்ப்படத்திலும் இதே டெம்ப்ளேட் தான். பெரிய மாற்றங்கள் இல்லாமல், அதே ஏற்ற இறக்கத்துடன் அதே டெம்ப்ளேட்டில் படம் பயணிக்கிறது. அங்கே London to Brighton என்றால், இங்கே சென்னை டூ ஸ்ரீரங்கம்.
கேரக்டர்கள்:
தமிழ்ப்படம், ஒரிஜினலை விட பெட்டராக ஆவது கேரக்டரைசேசனால் தான். படத்தின் முக்கிய கேரக்டர்களான பணக்காரன் - பாலியல் தொழிலாளி அப்படியே ஒரிஜினலின் காப்பி தான். ஆனால் அவர்களைத் தவிர்த்து பிற கேரக்டர்கள் எல்லாம், ஒர்ஜினலைவிட யதார்த்தமாக இருக்கிறார்கள். பூஜாவுக்கு லைஃப் டைம் கேரக்டர். மெச்சூரிட்டியான நடிப்பு. அந்த சிறுமி கேரக்டரும் ஒரிஜினலில் சிகரெட் பிடித்தபடி, F பாம் போட்டபடி வரும். தமிழில் நம் கலாச்சாரத்திற்கு ஏற்றபடி, அவள்மேல் பரிதாபம் வரும்படி பெர்ஃபக்ட்டாக அமைத்திருக்கிறார்கள். சிறுமியாக நடித்த மாளவிகா நல்ல நடிப்பு.
அவர்களை தேடிப்போகும் தரகனாக தமிழில் நடித்திருக்கும் அமரேந்திரன் நல்ல அறிமுகம். அவர் உருவமும், கொஞ்சம் அப்பாவித்தனமான முகமும் அப்படியே பிரச்சினையில் சிக்கிய கேரக்டருக்கு பொருந்திப்போகிறது. ஒரிஜினலில் அந்த கேரக்டர்,நம்மை பெரிதாக பாதிப்பதில்லை. ஆனால் இங்கே அந்த கேரக்டரை ரசிக்கவே ஆரம்பித்துவிடுகிறோம்.
ஒரிஜினலில் இல்லாத, புதிய கேரக்டர்களும் படத்தில் நிறைய வருகின்றன. ஆங்கிலப்படத்தில் ஒரு ரயில்வே ஸ்டேசனில் இருக்கும் சிறுமியை ஜஸ்ட் லைக் தட் பேசி, கூட்டி வந்துவிடுவார்கள். பெரிய அளவில் லாஜிக் இருக்காது. இங்கே துரைசிங்கம் எனும் குழந்தைகளை கடத்தி விற்கும் தாதாவிடம் இருந்து பூஜா, அந்த சிறுமியை கூட்டிவருவதாக வருகிறது. அந்த துரைசிங்கம் கேரக்டர், அட்டகாசம். துரை சிங்கத்திற்கும் பூஜாவுக்குமான உறவும் வசனத்துலேயே பூடகமாக சொல்லி இருப்பது அருமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
Brighton-ல் இருக்கும் தோழி கேரக்டரும் ஏனோதானோவென்று இருக்கும். ஆனால் இங்கே அந்த கேரக்டர்(லட்சுமி ராமகிருஷ்ணன்) செண்ட்டிமெண்ட்டாக நம்மை டச் செய்கிறது. தரகனுக்கு உதவ வரும் தனியார் டிடெக்டிவ் கேரக்டரும் படத்தின் சுவாரஸ்யத்தைக் ஊட்டுகிறது. ஒரிஜினலில் Brighton-ல் அவர்கள் இருப்பதை ஈஸீயாக கண்டுபிடித்து விடுவார்கள். இங்கே அதை கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிப்பது த்ரில்லைக் கூட்டுகிறது.
மெயின் வில்லன் கேரக்டர் பற்றி பெரிதாக டீடெய்லிங் ஒரிஜினலில் இருக்காது. தமிழ்ப்படத்தில் அப்படி விட்டால் புரியாது என்பதால், தெளிவாக விளக்குகிறார்கள். அது கிளைமாக்ஸ் நீளத்தை கூட்டுவது தான் ஒரே குறை.
ஒரிஜினலில் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு குளியல் சீன் வந்து, நம்மை பதற வைக்கும்.(ஒரிஜினல் பார்க்கிறவங்க எச்சரிக்கையா இருங்கப்பா!) தமிழில் அப்படி வைக்க முடியாது என்பதால் நீட்டாக முடித்துவிட்டார்கள்.(நான் சந்தோசப்படுறனா, வருத்தப்படறனா???)
மற்றவை:
தமிழில் நம்மைக் கவர்ந்த விஷயம், வசனங்கள் தான். படம் முழுக்க யதார்த்தமான வசனங்கள். அமரேந்திரன் சொல்லும் ராஜா-நாய் கதை சூப்பர். அந்த கதையுடன் காட்சிகளைப் பொருத்திய எடிட்டிங் அற்புதம். பாராட்டப்பட வேண்டிய எடிட்டிங் (சத்யராஜ்-எடிட்டர்). அதே போன்றே பூஜா, ஸ்ரீரங்கம் போவதைக் கண்டுபிடிக்கும் காட்சியிலும் எடிட்டிங் சூப்பர். அந்த 5 நிமிடங்களில் செம பரபரப்பு. படத்தில் இன்னொரு நல்ல விஷயம், ஒளிப்பதிவு. பெரும்பாலும் இரவில் நடக்கும் காட்சிகள் தான். ஆனாலும் பார்க்க ஒவ்வொரு காட்சியும் அழகாக இருக்கிறது. நிறைய காட்சிகளில் நல்ல காம்போசிசன் மற்றும் லைட்டிங்.
Apne Desh ஹிந்தி படத்தில் வந்த ‘துனியா மே’ பாடலை சரியான இடத்தில் யூஸ் பண்ணி இருக்கிறார்கள். திடீரென வரும் அந்த பாடலும், அதன் இசையும், காட்சிகளும் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கின்றன. அந்த நிழல் டான்ஸ் ஐடியாவும் சூப்பர். படத்தின் பிண்ணனி இசையும் பட்டாசு.
மொத்தத்தில் ஒரிஜினலைப் பார்த்தவர்களால்கூட இதை ரசிக்க முடியும். நல்ல திறமையான டீம். இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு ஏன் காப்பியில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. இயக்குநர் பாலாஜி.கே.குமாரின் அடுத்த ‘ஒரிஜினல்’ படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
எல்லாம் சரிண்ணே, அனால் உங்களுக்கு மிஸ்கினுக்கும் உள்ள உறவு மட்டும் புரியவே மாட்டேங்குது... இங்க நந்தலாலா, சித்திரம் பேசுதடி, ஓ.ஆக்கும் ஓவர் பிரமோஷனோன்னு தோணுது...
ReplyDeleteஉண்மைதான் பாஸ். ஒரிஜினலை விட தமிழ் வெர்சன் அட்டகாசம் .
ReplyDelete//மொ.ராசு (Real Santhanam Fanz ) said... [Reply]
ReplyDeleteஎல்லாம் சரிண்ணே, அனால் உங்களுக்கு மிஸ்கினுக்கும் உள்ள உறவு மட்டும் புரியவே மாட்டேங்குது... //
மிஷ்கின் தமிழ் சினிமா படைப்பாளிகளில் முக்கியமானவர். அவரது படங்கள், எமக்குப் பாடங்கள். -இது தான் என் நிலைப்பாடு. உங்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம், தப்பில்லை.
//Manimaran said...
ReplyDeleteஉண்மைதான் பாஸ். ஒரிஜினலை விட தமிழ் வெர்சன் அட்டகாசம் //
ஆமாம்ணே..அவநம்பிக்கையோட தான் பார்க்க ஆரம்பிச்சேன்..கலக்கிட்டாங்க.
"அந்த" ஒரிஜினல் நான் பார்க்கவில்லை.இது நிறைய தடவைகள் பார்க்க வைத்தது.உங்கள் விமர்சனப்படி எல்லாமே அருமை தான்!
ReplyDeleteஅருமையான படம்...
ReplyDeleteநல்ல விமர்சனம்...
இன்னும் பார்க்கவில்லை விரைவில் பார்ப்போம்.பகிர்வு நன்றி.
ReplyDeleteஒரிஜினலை நான் பாக்கற வாய்ப்புக் கிடைக்கலையே... தேடிப் பார்த்துடறேன்!
ReplyDeleteஎவ்வளவோ பார்த்துட்டோம்.. அந்த ஒரிஜினலையும் பார்த்துடுவோம்.. (நல்ல கதை இருக்குங்கறதுக்காக தான் பார்க்க போறேன், மத்தபடி நீங்க சொன்ன அந்த குளி சீனுக்காக அல்ல என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.. ஹிஹிஹி :P )
ReplyDelete//Subramaniam Yogarasa said... [Reply]
ReplyDelete"அந்த" ஒரிஜினல் நான் பார்க்கவில்லை.இது நிறைய தடவைகள் பார்க்க வைத்தது.உங்கள் விமர்சனப்படி எல்லாமே அருமை தான்!//
நன்றி ஐயா.
//சே. குமார் said... [Reply]
ReplyDeleteஅருமையான படம்...நல்ல விமர்சனம்... //
நல்ல கமென்ட்..நன்றி குமார்.
//thanimaram nesan said... [Reply]
ReplyDeleteஇன்னும் பார்க்கவில்லை விரைவில் பார்ப்போம்.பகிர்வு நன்றி. //
பாருங்கோ நேசரே.
//பால கணேஷ் said... [Reply]
ReplyDeleteஒரிஜினலை நான் பாக்கற வாய்ப்புக் கிடைக்கலையே... தேடிப் பார்த்துடறேன்!//
இனிமே ஒரிஜினல் பார்த்தா, பிடிக்காது சார். தமிழ் வெர்சன் பெட்டர்.
இன்னும் படம் பாக்கல????????
Delete//கோவை ஆவி said... [Reply]
ReplyDelete(நல்ல கதை இருக்குங்கறதுக்காக தான் பார்க்க போறேன், மத்தபடி நீங்க சொன்ன அந்த குளி சீனுக்காக அல்ல என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்..//
அது பூஜா மாதிரி டூப்ளிகேட் ஆன்ட்டி அல்ல..ஒரிஜினல் ஆன்ட்டி..பீ கேர்ஃபுல்.