அன்பு நண்பர்களே,
மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியில் இருந்து) தொடர் வெளியான காலம், என் வலைப்பூவின் வசந்த காலம் என்று சொல்லலாம். அனைத்து நண்பர்களும் அந்த நேரத்தில் கொடுத்த ஆதரவு இன்னும் பசுமையாய் ஞாபகம் உள்ளது. தொடரின் அடுத்தபகுதி வெளியாக ஒருநாள் லேட் ஆனாலே, மின்னஞ்சலில் மிரட்டும் அளவிற்கு பலரின் மனதைக் கவர்ந்ததாய் இருந்தது அந்த தொடர்.
'மன்மதன் லீலைகள்' என்ற பெயரைப் பார்த்து படிக்காமல்விட்ட சில சகோதரிகள், தாமதமாக தொடர் பற்றி அறிந்து படித்த கூத்தும் அப்போது நடந்தது. பெண்களுக்கும், பெண்ணைப் பெற்றோருக்கும், பெண்ணை வாழ்க்கைத்துணையாய் ஏற்கப் போவோர்க்கும் சுவாரஸ்யமாய் ஒரு நல்ல செய்தியைச் சொன்னோம் என்ற மனநிறைவை இந்த தொடர் கொடுத்தது.
சிலநாட்களுக்கு முன் பதிவர் வினையூக்கி தொடர்பு கொண்டு, இதை மின்னூலாக வெளியிடுவோம் என்று கேட்டார். நான் எப்போதும்போல் 'என்னாத்த வெளியிட்டு..என்னாத்த படிச்சு..ஏற்கனவே புக் ஃபேர் அலப்பறைகளால் புக்குன்னால அலர்ஜி ஆகற அளவுக்கு நிலைமை இருக்கு. நாம வேற மக்களை இம்சை பண்ணனுமா?' என்றேன். 'நீ ஒத்து..எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்' என்று களமிறங்கி, கடந்த நான்கு நாட்களாக ப்ரூஃப் சரிபார்த்து, அட்டைப்படம் வடிவமைத்து, அன்பர் டான் அஷோக்கிடம் முன்னுரை வாங்கி மின்னூலை ரெட் செய்துவிட்டார். அவரது உழைப்புக்கு என் மரியாதை கலந்த நன்றிகள்.
முன்பின் அறிமுகம் இல்லாவிட்டாலும், வினையூக்கியின் சொல்லை நம்பி டான் அசோக் இந்த புத்தகத்தை படிக்கவும், பிடித்திருந்தால்(!) முன்னுரை எழுதித்தரவும் ஒத்துக்கொண்டார். மின்னூல் நம் மானத்தைக் காப்பாற்றிவிட்டதால், அருமையான முன்னுரையும் எழுதிக்கொடுத்துள்ளார். இரண்டு நாட்களாக, மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டுப் படித்து, முன்னுரை வழங்கிய டான் அசோக்கிற்கு எம் மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துரை எழுதிக்கொடுக்க முன்வந்த முகநூல் பிரபலம் கிளிமூக்கு அரக்கனுக்கும் நன்றிகள். இந்த மின்னூலை வெளியிட்ட http://freetamilebooks.com/ நிர்வாகத்தாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே மூச்சில் மின்னூலாக மன்மதன்லீலைகளைப் படித்தபோது, பழைய வசந்தகாலம் மனதில் வந்துபோனது. தொடருக்கு கொடுத்த அதே ஆதரவை மின்னூலுக்கும் தரும்படி, அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். மின்னூலை படிக்கும் நண்பர்கள், தங்கள் விமர்சனத்தையும் சொன்னால் என்னை செம்மைப்படுத்திக்கொள்ள உதவும்.
மின்னூல் தரவிறக்க: மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியில் இருந்து)
அன்புடன்
செங்கோவி
செங்கோவி
பதிவராக இல்லாமல் சக நண்பனாக, வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வாத்துகள்யா.
ReplyDeleteவாத்துக்கு நன்றி கஸாலி.
Deleteயோவ் கை நடுக்கி ழ் விட்டுப்போச்சுய்யா அதுக்காக நீயும்அப்படியே எழுதுவியாய்யா.
Deleteவாழ்த்துகள் செங்கோவி !!
ReplyDeleteதலையைப் பிடிச்சுக்கிட்டே வாழ்த்து சொல்லாதீரும்யா..பார்க்கிறவங்க தப்பா நினைக்கப்போறாங்க.
Deleteகஸாலி.. என்னது வாத்துகளா?
ReplyDeleteஅவர்கிட்ட பப்ளிக்ல திட்டாதய்யா பலதடவை சொல்லியாச்சு..கேட்க மாட்டேங்கிறார்.
Deleteவிடுய்யா விடுய்யா எழுத்தாளர்னா எழுத்துப்பிழை வருவதும், இலக்கியவாதின்னா சண்டை போடறதும் சகஜம்யா.
Deleteஎன்னிடம் வாழ்த்துரை வாங்காமல் புத்தகத்தை வெளியிட்ட செங்கோவியை கண்டித்து முகநூல், ப்ளாக்கை தொடர்ந்து பத்து நிமிடம் புறக்கணிக்கிறேன்.
ReplyDeleteப்ளாக் பரவாயில்லை..ஆனா ஃபேஸ்புக்கு? நீங்க இல்லேன்னா மார்க்கே மண்டை காஞ்சிருவானே!
Deleteமுழுவதும் படித்தது இல்லை! சில பகுதிகள் படித்துள்ளேன்! மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்! தரவிறக்கி படித்துவிட்டு சொல்கிறேன்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்..படிச்சிட்டு சொல்லுங்க.
Deleteநான் படிக்காமல் விட்டுப் போன தொடர்
ReplyDeleteமின்னூலில் கிடைக்கச் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றியும் நல்வாழ்த்துக்களும்..
உங்க வாழ்த்தைக் கண்டு ரொம்ப சந்தோசம் சார்..நன்றி!
Deleteஅடடா... நல்லதொரு ஆரம்பம்... அண்ணன் ஜோதிஜி அடுத்து நீங்களும் மின்னூலை தேர்ந்தெடுத்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்றைய பதிவு இதைப் பற்றி(யும்) தான்... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்... நன்றி...
Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html
நன்றி தனபாலன்.
Delete//சிலநாட்களுக்கு முன் பதிவர் வினையூக்கி தொடர்பு கொண்டு, இதை மின்னூலாக வெளியிடுவோம் என்று கேட்டார்//
ReplyDelete//வாழ்த்துரை எழுதிக்கொடுக்க முன்வந்த முகநூல் பிரபலம் கிளிமூக்கு அரக்கனுக்கும் நன்றிகள்//
வினையூக்கி அவர்களுக்கு இரண்டு நன்றிகள்
ha..ha.
Deleteபுத்தகமாக வெளியிட்டிருக்கலாம்...ஒண்ணும் பிரச்சினை இல்லை புத்தகமாகவும் வெளியிடுங்கள்...சிறந்த படைப்பு..வாழ்த்துக்கள் பொறுமையாக படிக்காமல் விடுபட்ட பகுதிகளையும் வாசிக்கிறேன்
ReplyDeleteஅப்படி நினைத்துத்தான் 2 வருசம் வீணாப் போச்சு..சரி, ஈபுக்காவது விடுவோம்னு விட்டுட்டேன்.
Deleteவாழ்த்துக்கள் நண்பா நான் இன்னும் படித்ததில்லை படிக்கிறேன்
ReplyDeleteநன்றி நண்பரே..படிங்க.
Deleteவாழ்த்துக்கள்,செங்கோவி!பெருமிதம்!!வினையூக்கி & கிளி மூக்கு அரக்கனுக்கும்(ஒரே ஆள்!) வாழ்த்துக்களும்,நன்றிகளும்!!!
ReplyDeleteபெருமிதத்திற்கு நன்றி ஐயா.
Deleteவாழ்த்துக்கள் செங்கோவி...
ReplyDeleteதொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி...
நன்றி எழுத்தாளரே!
Deleteநீங்கள் எழுதிய வசந்தகாலத்தில் நான் பிறந்திருக்கவே இல்லை :-)
ReplyDeleteபேஸ்புக்கில் பார்த்தபோது உடனடியாக மனதில் 'அட நீங்க கட்டுரை தவிர்த்து கதையெல்லாம் எழுதுவீங்களா ? அதுவும் நாவல் ? என்று தான், நினைத்தேன்..
நாவல் குறித்த முன்னுரை மற்றும் தலைப்பு படிக்கும் ஆவலை தூண்டுகிறது.. டவுன்லோடி விட்டேன்..
இதை மின்னூல் வடிவத்திற்கு கொண்டுவந்த வினையூக்கி அவர்களுக்கும் பாராட்டுக்கள் :-)
//நீங்கள் எழுதிய வசந்தகாலத்தில் நான் பிறந்திருக்கவே இல்லை :-) //
Deleteஹா..ஹா..ஆமாம்..நான் தற்காலிகல ஓய்வில் இருந்தபோது, ப்ளாக்கிற்கு வந்தீர்கள்.
மின்நூல் வெளியாக உழைத்த நல்ல உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்த மின் நூல் இன்னும் பலரைச்சென்றடைய பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteமுருகவேட்டையும் மின்நூல் காணவேண்டும் என்பது என் ஆவல் செங்கோவியாரே.
ReplyDeleteவிரைவில் வரும் நேசரே!
Deleteவாழ்த்துகள் செங்கோவி சார்.
ReplyDeleteசெல்வகுமார்(வினையூக்கி),உங்கள் முயற்சியால் தான் இது சாத்தியமாயிற்று!(பையன் 'படு' சோம்பேறியாக்கும்!)
Deleteவாழ்த்துக்கள் செங்கோவி சார்.
ReplyDeleteநன்றி பாஸ்.
ReplyDeleteரொம்ப நன்றிண்ணே. நீண்ட நாட்களுக்கு அப்புறம் மறுபடியும் படிக்கறதுல ஒரு சந்தோஷம். இந்த அனுபவத்துக்கு நன்றி. வாழ்த்துக்கள். உங்க பாதியில நின்னு போன ஒரு தொடர் இருக்குன்னு நினைக்கிறேன், சும்மா ஜஸ்ட் ரிமைண்டிங்க்..
ReplyDeleteவலையில் வந்த பொழுது படிக்க முடியவில்லை, இப்போ MOBI பார்மாட்டில் கிண்டில் ரீடர் மூலம் படித்துகொண்டிருக்கிறேன் படு சுவாரசியமான கதை, முருக வேட்டை கதை நாயகனின், கென்ய பயணத்துடன் நிற்கிறது அதையும் படிக்கணும்.
ReplyDeleteமுருகன் நேரம் அருள்வாராக.... அரஹரோஹரா
நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள்.
ReplyDeletevazhthukkal Sengovi. please start your pipeline thodar also.
ReplyDelete//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... [Reply]
ReplyDelete. உங்க பாதியில நின்னு போன ஒரு தொடர் இருக்குன்னு நினைக்கிறேன், சும்மா ஜஸ்ட் ரிமைண்டிங்க்..//
உண்மை தான் பால்..வேற ஒரு எழுத்து வேலையில் சிக்கிட்டேன். சீக்கிரம் எழுதறேன்.
//siva said...
ReplyDeletevazhthukkal Sengovi. please start your pipeline thodar also.// மேலே சொன்னது தான் சிவா..நிச்சயம் தொடர்வேன்.
//Rohajet said...
ReplyDeletethe story is very nice, and i liked your writing style very much.//
பாராட்டுக்கு நன்றி பாஸ்.
தன்னோட பதிவில காமெண்ட் போட ஏன் இவரு(வினையூக்கி/செல்வகுமார்.) இடம் ஒதுக்க மாட்டேங்குறாரு?
ReplyDeleteபிரபல, மூத்த பதிவர்-ன்னா அப்படித்தான் இருக்கணுமாம் ஐயா!
ReplyDelete