Sunday, March 16, 2014

The Lodger (1927) - திரை விமர்சனம்

தலைவர் ஹிட்ச்காக் தனது கலைப்பயணத்தை ஆரம்பித்தது மௌனப்படங்களின் காலமான 1920களில். பத்து மௌனப்படங்களை இயக்கி இருக்கிறார். அதில் முதல் ’ஹிட்ச்காக் ஸ்டைல்’ மூவியாக உருவானது தி லாட்ஜர் படம். மௌனப்படமாக ஒரு த்ரில்லரைக் கொடுப்பது சவாலான காரியம். அதில் முதல்முறையாக இறங்கி ஜெயித்தார் ஹிட்ச்காக். ஆனால் இது அவரது ஃபேவரிட்டான சஸ்பென்ஸ் டைப் மூவி அல்ல, சர்ப்ரைஸ் டைப் மூவி.
ஒரு சிட்டியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் Blonde பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அங்கே இருக்கும் ஒரு லாட்ஜில் தங்க ஹீரோ வருகிறான். வந்ததுமே ரூமில் இருக்கும் Blonde பெண்களின் ஓவியங்களைப் பார்த்து சைக்காலஜிக்கலாக பதறுகிறான். அந்த படங்களை ரூமை விட்டே எடுக்கிறார்கள். அந்த லாட்ஜ் ஓனர் பெண்மணிக்கு ஹீரோ மேல் சந்தேகம் வருகிறது. லாட்ஜ் ஓனரின் பெண்ணிற்கு ஹீரோ மேல் காதல் வருகிறது. அந்த சீரியல் கில்லரை விசாரிக்கும் போலீஸ் ஆபிசர்க்கு ஹீரோயினை கல்யாணம் செய்துவைப்பதாக ஏற்கனவே ஒரு ப்ளான் இருக்கிறது. இப்படி எல்லாப் பக்கமும் இடியாப்பச் சிக்கலாக, அப்புறம் என்ன ஆச்சு என்பது தான் கதை.

ஒரு ப்ளாண்ட் பெண், ஸ்க்ரீன் முழுக்க முகத்தையும் முடியையும் பரப்பி ‘வீல்’ என்று அலறும் காட்சியுடன் படம் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. அந்தக் காலத்தில் அது ஒரு புதுமையான ஷாட். ஒரு கண்ணாடி ஃப்ளோரில் அந்த பெண்ணை படுக்க வைத்து, ஸ்க்ரீன் முழுக்க ப்ளாண்ட் ஹேர் பரவிக்கிடக்கும்படி செய்து, கண்ணாடிக்குக் கீழே கேமிராவை ஃபிட் செய்து எடுத்திருக்கிறார்கள். ஒரு பெண், குறிப்பாக ப்ளாண்ட் ஹேர் பெண் கொலை செய்யப்படுகிறாள் எனும் மெசேஜை ஆடியன்ஸுக்கு இந்த ஒரு ஷாட்டிலேயே சொல்லி அசத்துகிறார் ஹிட்ச்காக்.
பலவிதங்களில் இந்தப் படம், தற்போது வரும் படங்களுக்கு முன்மாதிரியாக விளங்கிவருகிறது. ஒரு இடத்தில் ஒரு ஆபத்து இருக்கிறது. அது முதலில் படத்தில் வரும் கேரக்டர்களில் ஒருவருக்கு மட்டும் தெரிகிறது. அதை அவர் வெளியே சொன்னாலும் யாரும் நம்புவதில்லை. தொடர்ந்து நடக்கும் சம்பவங்களால், ஒவ்வொருவராக அதை உணர்கிறார்கள். லேட்டஸ்ட் படங்களில், உணர்கின்ற ஒவ்வொருவரும் கொல்லப்படுவார்கள். இன்னொரு பக்கம் போலீஸ் அல்லது சைண்டிஸ்ட் அல்லது வேறு யாரோ ஒரு குழு, இந்த ஆபத்தை அழிக்க வேலை செய்துகொண்டிருக்கும். இறுதியில் அந்த குழுவும், பாதிக்கப்பட்ட குழுவில் மிஞ்சியோரும் இணைந்து அந்த ஆபத்தை அழிப்பார்கள். ஜூராசிக் பார்க் போன்ற அத்துவானக் காட்டுக்குள்ளே ஒரு ஆபத்து என்று சொல்லும் கதைகளாலும், புதிதாகக் குடியேறும் பங்களாவில் பேய் எனும் கான்செப்ட்டானாலும், தி லாட்ஜரின் திரைக்கதையை தெரிந்தோ, தெரியாமலோ பின்பற்றித்தான் ஆகவேண்டும்.

அந்த டெம்ப்ளேட் போன்ற இன்னொரு முக்கியமான விஷயம், ஹீரோவுக்கும் வில்லனுக்கும் (அல்லது இரு ஹீரோக்களுக்கும்) இடையே அஃபிசியலாக மட்டுமல்லாது பெர்சனலாகவும் பிரச்சினை இருப்பது. சீரியல் கில்லர் என சந்தேகிக்கப்படும் ஹீரோ லவ் பண்ணுவது, அந்த கேஸை டீல் பண்ணும் போலீஸ்காரரின் வுட்பியை! இது படத்தில் மேலும் கான்ஃப்ளிக்ட் உண்டாவதற்காகவும், பார்ப்போருக்கு ஆவலை மேலும் தூண்டுவதற்காகவும் யூஸ் ஆகும் டெக்னிக். இதை ஃபாலோ செய்த பல படங்களில் உடனே ஞாபகம் வருவது ஜெண்டில் மேன்!
மற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஹிட்ச்காக்கிற்கே இந்தப் படம் தான் ரெஃபரென்ஸாக அமைந்தது.அவரது ஃபேவரிட் தீம் ஆகிய ‘ஒரு அப்பாவி மேல் பழி சுமத்தப்படுவது. அவன் தப்பி ஓடியபடியே தன்னை நிரபராதி என்று நிரூபிப்பது’ என்பதற்கு ஆரம்பப்புள்ளி இந்தப்படம் தான்.  இதுவும் ஒரு நாவலில் இருந்து தான் படமாக்கப்பட்டது. நாவலைப் படித்து முடித்ததும் ஹிட்ச்காக்கிற்கு முதலில் முடிவு செய்த விஷயம், கதையை யாருடைய பாயிண்ட் ஆஃப் வியூவில் சொல்வது என்பது தான். நாவலில் ஒரு கதையை சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு பாத்திரங்கள் தாங்கி, நகர்த்தும். ஆனால் சினிமாவில் அதைச் செய்தால், படம் திக்கற்று அலைபாய்வது போல் தோன்றிவிடும். எனவே அந்த லாட்ஜ் ஓனர் பெண்மணியின் பார்வையில், கதை நகர்வதாக முடிவு செய்தார் ஹிட்ச்காக். ஏனென்றால் அந்த லாஜ்ட் தான் எல்லா முக்கிய கேரக்டர்களும் கூடும் இடமாக இருக்கிறது.

சிறந்த எக்ஸ்போசிசன் உள்ள படங்களில் ஒன்று, இந்த தி லாட்ஜர். ‘ஒவ்வொரு செவ்வாயும் ப்ளாண்ட் பெண்கள் கொலைசெய்யப்படுகிறார்கள். போலீஸ் தீவிரமாக முயற்சித்தும் பிடிக்க முடியவில்லை. கில்லர் ஒரே இடத்தில் இருக்காமல், தொடர்ந்து மூவ் ஆகிக்கொண்டே இருக்கிறான்’ என்பது போன்ற விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆடியன்ஸுக்கு தெரியப்படுத்தும் ஸ்டைல் தான் ஹிட்ச்காக்கின் பலம்!

படத்தின் இறுதியில் ஹீரோ கை விலங்குடன் தப்பி ஓடுவதாகவும், அதை மறைக்க கஷ்டப்படுவதாகவும் சில சீன்கள் வரும். பலவருடங்களுக்குப் பிறகு, அதைப் பற்றி அவரிடம் ‘இந்த ஐடியா எப்படித் தோணுச்சு?’ என்று கேட்டதற்கு அவர் கேஷுவலாகச் சொன்ன பதில் : “அதுவா?..அப்போ ஒரு ஜெர்மன்காரன் எழுதுன புக் ஒன்னு ஃபேமஸா இருந்துச்சு. கை விலங்கோட ஒருத்தன் சமூகத்தில் நடமாடுனா எப்படி மக்கள் ரியாக்ட் பண்ணுவாங்கன்னு பெர்சனலா செஞ்சு பார்த்து நாவல் எழுதி இருந்தான். அதை பேஸ் பண்ணித்தான் அந்த சீன்ஸ் வச்சேன்’. இதைப் படிக்கவும் பதறிவிட்டேன். ‘அய்யய்யோ காப்பி..ஹிட்ச்காக்குக்கு ஒன்னுமே தெரியாது. முட்டாள்.’ன்னு யாரும் கத்துடுவாங்களோன்னு நினைச்சேன். அப்புறம்தான் ஞாபகம் வந்தது, அவர் தமிழன் இல்லை. ஹாலிவுட்காரர்னு!
படம் வெளியாகி, பிரிட்டிஷ் படங்களிலேயே சிறந்த படம் என்று பெயர் வாங்கியது. (ஆம் பாஸ். அவர் ஹாலிவுட்டுக்கு வந்தது பின்னாளில் தான்.). படமும் கமர்சியலாக சூப்பர் ஹிட். ஆனால் படம் முடித்து ரிலீஸ்க்கு முன்னால் என்ன ஆச்சு தெரியுமா? ‘இதெல்லாம் தேறாது. புது கான்செப்ட்டா இருக்கு. மக்களுக்கு புரியாது’ என்று விநியோகஸ்தர் கம்பெனி ஆட்கள் ரிலீஸ் பண்ண மறுத்துவிட்டார்கள். அந்த கம்பெனி பாஸும் மறுத்துவிட கெஞ்சிக் கூத்தாடி ஹிட்ச்காக் படத்தை வெளியே கொண்டுவந்தார். இந்த விஷயத்தில் மட்டும், உலகம் முழுக்க ஒன்றுபோலத் தான் இருக்கிறார்கள் போலும்!

படத்திற்கான யூடியூப் லின்க் கீழே :

http://www.youtube.com/watch?v=hrxn4A5Nc-M



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

  1. /‘அய்யய்யோ காப்பி..ஹிட்ச்காக்குக்கு ஒன்னுமே தெரியாது. முட்டாள்.’ன்னு யாரும் கத்துடுவாங்களோன்னு நினைச்சேன். அப்புறம்தான் ஞாபகம் வந்தது, அவர் தமிழன் இல்லை. ஹாலிவுட்காரர்னு!///

    "நாம் தமிழர்"ல எல்லாம் அப்புடித்தான்..

    ReplyDelete
  2. ஹிட்சாக்கின் மேற்சொன்ன திரைகதை உத்திகள் வாழையடி வாழையாய் இன்னும் இருப்பது அவரின் திறமைக்கு சான்று... btw இப்போ வர்ற தமிழ்படங்கள்ல அவற்றை உபயோகிக்கும் இயக்குனர்கள் "இவை ஹிட்சாக்கின் உத்திகள்"ன்னு தெரிஞ்சுதான் செய்றாங்களா என்பது சந்தேகமே!

    ReplyDelete
  3. அண்ணே, இந்த வருட ஆரம்பத்தில் இருந்து உங்க 98%மான பதிவுகள் சினிமா மட்டுமே.. உங்களின் பல்சுவை பதிவுகளையும் இந்த சமூகம் எதிர்பார்க்குது!

    ReplyDelete
  4. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    btw இப்போ வர்ற தமிழ்படங்கள்ல அவற்றை உபயோகிக்கும் இயக்குனர்கள் "இவை ஹிட்சாக்கின் உத்திகள்"ன்னு தெரிஞ்சுதான் செய்றாங்களா என்பது சந்தேகமே!//

    தெரிஞ்சிருக்காது. உண்மையில் ஹிட்ச்காக்கு முன்னாடியே யாராவது பண்ணி இருக்கலாம், அது நமக்குத் தெரியாது!

    ReplyDelete
  5. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    அண்ணே, இந்த வருட ஆரம்பத்தில் இருந்து உங்க 98%மான பதிவுகள் சினிமா மட்டுமே.. உங்களின் பல்சுவை பதிவுகளையும் இந்த சமூகம் எதிர்பார்க்குது!//

    ஓகே..ஏப்ரல்ல இருந்து ஆரம்பிப்போம்.

    ReplyDelete
  6. ஓகே..ஏப்ரல்ல இருந்து ஆரம்பிப்போம்.

    தேர்தல் ஸ்பெஷல் எழுதுங்கண்ணே.

    ReplyDelete
  7. இனித்தான் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம்! ///'Blonde' பெண்கள்.......அதாவது, 'ப்ளாண்ட்' என்பது ஃப்ரெஞ்ச் பாஷையில் பெண் பால்.ஆண் பால் Blanc.

    ReplyDelete
  9. //வானரம் . said... [Reply]
    ஓகே..ஏப்ரல்ல இருந்து ஆரம்பிப்போம்.

    தேர்தல் ஸ்பெஷல் எழுதுங்கண்ணே.//

    போன தடவை எழுதுனதே இப்பவும் அப்ளிகபிள்!

    ReplyDelete
  10. // தனிமரம் said...
    இனித்தான் பார்க்க வேண்டும்!//

    பாருங்க, நேசரே.

    ReplyDelete
  11. //Subramaniam Yogarasa said...
    நல்ல விமர்சனம்! ///'Blonde' பெண்கள்.......அதாவது, 'ப்ளாண்ட்' என்பது ஃப்ரெஞ்ச் பாஷையில் பெண் பால்.ஆண் பால் Blanc.//

    ஓ..நாஞ்சொன்னது அமெரிக்கன் இங்கிலீஸ்..ஹிஹி!

    ReplyDelete
  12. செங்கோவி said...ஓ..நாஞ்சொன்னது அமெரிக்கன் இங்கிலீஸ்..ஹிஹி!///அடடா.......எனக்கு இங்க்லீஷ்,இங்கிலீஷ் தான் கொஞ்சம் தெரியும்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.