Wednesday, April 9, 2014

உங்கள் ஓட்டு யாருக்கு? (தேர்தல் ஸ்பெஷல்)

ஈழப்போர் உச்சத்தில் இருந்த 2009ல் டெல்லியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஈழத்தில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து கொண்டிருந்த நேரம், முத்துக்குமார் தீக்குளித்திருந்த நேரம் அது. டெல்லியில் அது பற்றிச் சிறு சலனம்கூட இல்லை. நாடாளுமன்றமும் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருந்தது. தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத, இந்திய தேசியம் எனும் கருத்தின்மீதே வெறுப்பு வந்திருந்த நேரம் அது. 

தேசியம் பேசியே தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்று என் வட இந்திய மேனேஜரிடம் புலம்பியபோது, அவர் நிதானமாக ’இந்திய தேசியம் உங்களை ஏமாற்றவில்லை. உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்’ என்றார். புரியாமல் விழித்தபோது, கூகுளிட்டு அப்போதைய மத்திய அமைச்சர்கள் லிஸ்ட்டை எடுத்தார். ‘மத்திய அரசில் வலுவான மாநிலம் எது தெரியுமா? உங்க தமிழ்நாடு தான் பாரு’ என்று லிஸ்ட்டைக் காட்டினார் ஏழு கேபினெட் அமைச்சர்கள் தமிழகத்தில் இருந்து! அதற்கு இணையாக மகாராஷ்டிராவுக்கும் ஏழு கேபினட் அமைச்சர்கள். ‘இன்னைக்கு நிலைமைக்கு மகாராஷ்ட்ரா மற்றும் தமிழகத்தின் கோரிக்கையை இந்த மத்திய அரசு ஈஸீயா புறக்கணிக்க முடியாது’ என்றார் அவர்.
  ‘அப்புறம் ஏன் காங்கிரஸ் அரசு எம்மைக் கண்டுகொள்ளவில்லை’ என்று நான் கேட்கவில்லை. எனக்குப் புரிந்த அதையே அவரும் சொன்னார். ‘40 எம்.பிக்கள் என்பது எவ்வளவு பெரிய பலம். உங்க குரலை யாரும் மதிக்காம இருக்க முடியாது. ஆனால் ஈழப்பிரச்சினையிலோ, வேறு பொதுப்பிரச்சினையிலோ மத்திய அரசுக்கு எதிராக கேபினட் அமைச்சர்களோ, எம்.பிக்களோ உரத்து குரல் கொடுக்கவே இல்லியே? கேட்டால்தானே தம்பி கிடைக்கும்?’ என்றார். தொடர்ந்து விவாதித்ததில் கிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதன் உண்மையான காரணம், அங்கே குறைவான எம்.பிக்கள் இருப்பது தான்..ஆனால் அதிக எம்.பிக்களைக் கொண்ட தமிழகமும் புறக்கணிக்கக் காரணம் என்ன என்பது விளங்கியது.

2ஜி ஊழல் காரணமாக திமுக காங்கிரஸை எதிர்க்க முடியாமல், கனிமொழியைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்தது. அதிமுகவோ காங்கிரஸ் ஆதரவில் அமைந்திருந்த சிறுபான்மை திமுக அரசைக் கலைக்க முடியுமா என்று முயன்றுகொண்டிருந்தது. ஒருவேளை அதிமுக, திமுக இடத்தில் இருந்திருந்தால் தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுபட போராடிக்கொண்டு இருந்திருக்கும். இது தான் யதார்த்தம். 

எனவே யார் நமக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி டெல்லிக்கு அனுப்பினோமோ, அவர்கள் கட்சித் தலைமையின் நலனுக்கு மட்டுமே குரல் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். மத்திய அரசை எதிர்க்க முதுகெலும்பு இல்லாதவர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள். நாம் இரு பெரும் கட்சிகளாக ஆக்கி வைத்திருக்கும் அதிமுகவும், திமுகவும் நமக்காக குரல் கொடுக்கும் நிலையில் இல்லை என்பதே தற்போதைய நிலை. ஊழல் வழக்குகளில் இருந்து விடுபடுவதைத் தவிர, வேறு லட்சியம் ஏதும் அவர்களுக்கு தற்பொழுது இல்லை. அதற்கு ஆதாரம் தான் மோடியைப் பற்றி திமுக, அதிமுக இரண்டுமே விமர்சிக்காமல் அடக்கி வாசிப்பதும், ‘ஹி..ஹி..மோடி என் நண்பர் தான்’ என்று இருதரப்புமே கூச்சமில்லாமல் காட்டிக்கொள்வதும்!
ஊழல் வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, வெளிவராதவரை (அல்லது உள்ளே போகாதவரை!) அதிமுகவையும் திமுகவையும் டெல்லி விஷயத்தில் நம்புவது வீண். இருகட்சிகளின் நோக்கமும், அதிக எம்.பிக்களைப் பெற்று, அதன்மூலம் அடுத்து அமைய இருக்கும் மத்திய அரசின் காலில் விழுவது தான். அது மீண்டும் 2009 சூழலுக்கே நம்மை தள்ளும். எனவே சுதந்திரமாகச் செயல்படக்கூடிய, தமிழ் உணர்வுள்ள வேட்பாளர்களை டெல்லிக்கு நாம் அனுப்ப வேண்டியது அவசியம்.

அந்தவகையில் எனது முன்னாள் தொகுதியான விருதுநகரில்(சிவகாசி) நிற்கும் வைகோ அவர்களையும், இந்நாள் தொகுதியான தூத்துக்குடியில் நிற்கும் ஜோயல் அவர்களையும் வெற்றி பெற வைப்பது, தமிழர் நலனுக்கு நல்லது என்று நம்புகிறேன். இவர்களை மட்டுமல்ல, மதிமுக சார்பில் போட்டியிடும் கீழ்க்கண்ட அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெறச்செய்வது நமக்கு நல்லது :

விருதுநகர் - வைகோ

காஞ்சிபுரம் - மல்லை சத்யா

ஈரோடு - கணேசன் மூர்த்தி

தேனி - அழகு சுந்தரம்

ஸ்ரீபெரும்புதூர் - மாசிலாமணி

தூத்துக்குடி - ஜோயல்

தென்காசி - சதன் திருமலைக்குமார்

இவர்களை நான் ஆதரிப்பதற்கு மற்றுமொரு காரணம், அவர்கள் மக்களுக்காகப் போராடும் நபர்களாக, நாகரீகமான மனிதர்களாக இருப்பது தான். தூத்துக்குடியில் போட்டியிடும் ஜோயல் மீது மக்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அதே போன்றே எனது மாமனார் இருக்கும் தொகுதியான தென்காசியில் போட்டியிடும் சதன் திருமலைக்குமார் பற்றியும் மிக உயர்வாகச் சொல்கிறார்கள். (வைகோ பற்றிச் சொல்லணுமா?) இத்தகைய நல்ல மனிதர்களை ஆதரிக்காமல், ஜாதி பார்த்து, கட்சி பார்த்து ஓட்டுப் போட்டு இன்னும் எத்தனை காலத்திற்கு நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளப் போகிறோம்? 

மற்ற தொகுதிகளில் யாருக்கும் ஓட்டுப்போட்டு நாசமாகப் போங்கள், எனக்குக் கவலையில்லை. மதிமுக போட்டியிடும் தொகுதியைச் சேர்ந்தவராக இருந்தால், தயவு செய்து பம்பரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள். முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையானாலும் ஸ்டெர்லைட் பிரச்சினையானாலும் தன்னலம் பற்றி யோசிக்காமல், மக்களுக்காகப் போராடும் இந்த இயக்கத்தை வெற்றியடைய வைப்பது அவசியம். 

மற்ற கட்சிகளைப் பற்றி ’நடுநிலையாக’ எழுதுவதற்கு முன், யாருக்கு நான் ஓட்டுப் போடப்போகிறேன் என்று தெளிவுபடுத்துவது நல்லது என்பதாலேயே இந்தப் பதிவு. நடுநிலைவாதி என்று பேசி படிப்போரை ஏமாற்றுவதைவிட, இது பெட்டர் என்று நம்புகிறேன். நமக்கு முன்னே இருப்பது இரண்டே சாய்ஸ் தான்.

மத்திய அரசிடம் மண்டியிடப் போகும் ஊழல் அடிமைகளா? 

மக்களுக்காகப் போராடும் மதிமுகவா?

யாரைத் தேர்வு செய்யப் போகிறீர்கள். கட்சி அபிமானத்தைத் தாண்டி, ஜாதி/மத வெறியைத் தாண்டி மனசாட்சியுடன் யோசித்துச் சொல்லுங்கள். உங்கள் ஓட்டு யாருக்கு?

ஊழல் அடிமைகளுக்கா?  சுதந்திரமான போராளிகளுக்கா?


டிஸ்கி-1: அரசியல் ஆராய்ச்சியாளர்கள் கவனத்திற்கு : நான் மதிமுக உறுப்பினன் அல்ல. தேர்தல் நேரத்தில் யாருக்கு ஓட்டு என முடிவெடுக்கும் சாமானியன். எனது குடும்பம், தீவிர திமுக குடும்பம்..தங்கமணி குடும்பம் தீவிர அதிமுக குடும்பம்!

டிஸ்கி-2: ”விந்தணு” ஆராய்ச்சியாளர்கள் கவனத்திற்கு : எனக்கு தெலுகு தெலுசலேது!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

  1. ஈழம் இவர்களுக்கு ஒரு பொழுது போக்கு சினிமா போல அதிமுக/திமுகவுக்கு. !

    ReplyDelete
  2. Malayali's and Sterlite have pumped in lot of money to defeat Vaiko and his colleagues. Sometime back, Vaiko used to go to Kerala for ayurvedic treatment. However, that hospital has been threatened by the Malayali's. These are all indications of Vaiko's tireless fight and commitment for the welfare of the Tamils. Tamils must remember this and vote for MDMK.

    ReplyDelete
  3. உண்மைதான்! திமுக அதிமுகவிற்கு மாற்றாக ஒன்றை சிந்திக்க வேண்டும்! நானும் நோட்டா அல்லது புதியவர்களுக்கு போடலாம் என்று இருக்கிறேன்! பார்ப்போம்!

    ReplyDelete
  4. யோவ். கடேசில சிரிக்க வச்சிட்டியேயா!

    ReplyDelete
  5. முன் குறிப்பு : நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை.

    தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அஞ்சா நெஞ்சனிடம் சென்று கை ஏந்தினாரே அந்த வைகோவை சொல்கிறீர்களா ?

    வைகோ மேல இருந்த நம்பிக்கை எல்லாம் வீணா போயிடிச்சு செங்கோவி, ஜனநாயகத்தின் மேல் இருந்த நம்பிக்கையை போல .

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு/முடிவு.உண்மையில் ஈழப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது முதல் (வெற்றியோ,தோல்வியோ) ஈழத் தமிழருக்காக உணர்வு பூர்வமாக இன்று வரையும்&இனிமேலும் குரல் கொடுக்கப் போவது அண்ணன் வை.கோ மட்டுமே!

    ReplyDelete
  8. மிகச் சிறப்பான பகிர்வு...
    யாருக்கு ஓட்டு என்பது நமது முடிவாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணமும்....

    ஆனால் தேர்தலுக்குப் பிறகுதான் ஊருக்கு வருகிறேன்,...

    ReplyDelete
  9. நல்ல கட்டுரை !!! வைகோ வெற்றி பெற வேண்டும்!!

    ReplyDelete
  10. நல்ல கட்டுரை !!! வைகோ வெற்றி பெற வேண்டும்!!

    ReplyDelete
  11. நல்ல கட்டுரை !!! வைகோ வெற்றி பெற வேண்டும்!!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.