Friday, July 4, 2014

அரிமா நம்பி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
ரம்ஜான் மாதம் என்றால் பொதுவாக இங்கே தியேட்டரைப் பூட்டிவிடுவார்கள். இந்த வருடம் இரவு மட்டும் ஓப்பன் செய்திருக்கிறார்கள். எனவே.......விக்ரம் பிரபுவின் நடிப்பில் தாணுவின் வி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம், அரிமா நம்பி பற்றி அறிவோம், வாருங்கள்.
ஒரு ஊர்ல..:
ஹீரோ விக்ரம் பிரபுவுக்கு ஹீரோயின் ப்ரியா ஆனந்த்தின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் சந்திக்கும் இரண்டாவது நாளிலேயே ப்ரியா ஆனந்த் கடத்தப்படுகிறார். அவரை மீட்பதற்காக விக்ரம் பிரபு சந்திக்கும் சவால்களும் சாகசங்களுமே கதை.

உரிச்சா....:
விக்ரம் பிரபு ஒரு பப்பில் ப்ரியாவை சந்திப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது. அங்கே கிடைக்கும் அறிமுகத்தை வைத்து அடுத்த நாள் இரவு ஒரு ஹோட்டலில் மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள். எதற்கா? மீண்டும் தண்ணியடிக்கத்தான். மப்பு பத்தாது என்று ப்ரியா, தன் வீட்டில் இருக்கும் ஓட்காவைக் குடிக்க விக்ரம் பிரபுவை கூட்டிப்போகிறார். அங்கே மீண்டும் இருவரும் உட்காந்து தண்ணியடிக்கிறார்கள். என்னடா இது என்று நாம் டரியல் ஆனாலும், இது கலிகாலம் மட்டுமல்ல மம்மியின் டாஸ்மாக் காலம் என்பதும் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.
அப்போது ப்ரியா கடத்தப்படுகிறார். அதன்பின் படம், செம ஸ்பீடு. விக்ரம் பிரபு போலீஸ்க்குப் போக, அவர்களும் நம்ப மறுக்க, திரும்ப அப்பார்ட்மெண்ட் வந்தால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான அறிகுறியே இல்லாமல் இருக்க, தொடர்ந்து வரும் சுவாரஸ்யமான ட்விஸ்ட்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன. எம்.எஸ்.பாஸ்கர் நல்ல போலீஸாக வந்து ஹீரோவுக்கு ஹெல்ப் பண்ணி உயிர்விடுகிறார். அதுவரை சாமானியனாக அடிவாங்கிக் கொண்டிருக்கும் ஹீரோ, அதன்பின் மட்டும் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுப்பதின் காரணம் தான் நமக்குப் புரியவில்லை. ப்ரியா கடத்தப்படும்போதே, இந்த வீரத்தைக் காட்டியிருக்கலாம்.

சென்ற காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி தற்கொலை(?) செய்துகொண்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அதை புத்திசாலித்தனமாக கொஞ்சம் மாற்றியமைத்து, சுவாரஸ்யமாக திரைக்கதையைக் கொண்டுசென்றிருக்கிறார்கள். ப்ரியா ஆனந்த் கடத்தப்படுவதன் பிண்ணனியில் மத்திய அமைச்சர் சக்கரவர்த்தியும், அந்த கொலையும் இருப்பதாக அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

முதல் பத்துநிமிடங்களில் ஆரம்பிக்கும் ஓட்டம், கிளைமாக்ஸில் தான் முடிகிறது. அதிகாரவர்க்கமும் அரசியல்வாதிகளும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, எப்படியெல்லாம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார்கள் என்று தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். செண்டிமெண்ட், காதல், தனி காமெடி டிராக், பஞ்ச் டயலாக் என்று இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் த்ரில்லராக படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தின் பலமும் அது தான், பலவீனமும் அது தான்.

விக்ரம் பிரபு:
தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விக்ரம் பிரபு, இதிலும் ஒரு நல்ல கதையில் நடித்திருக்கிறார். பப் கலாச்சாரத்திற்கும் ரொமான்ஸுக்கும் இவர் முகம் பொருந்தவேயில்லை. ஆனால் ஆக்சன் காட்சிகளுக்கு அட்டகாசமாகப் பொருந்துகிறார். ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் துப்பை வைத்து, அடுத்த கட்டத்திற்கு நகர்வது, அந்த பேங்க் கொள்ளை சீன், போலீஸை சுத்தலில் விடுவது என செமயான கேரக்டர். நன்றாகவே செய்திருக்கிறார். விக்ரம் பிரபுவின் கண்களும் குரலும் நடிப்பை வெளிப்படுத்த பெரிதும் கைகொடுக்கின்றன

ப்ரியா ஆனந்த்:
மப்பு பார்ட்டியாக, ஹைடெக் பெண்ணாக அறிமுகம் ஆகிறார். காணாமல் போனபின் இவர் இல்லாமலே முதல்பாதி நகர்கிறது. ஏறக்குறைய இண்டர்வெல்லுக்கு கொஞ்சம் முன்புதான் திரும்ப வருகிறார். பெரும்பாலும் ஹீரோவுடன் ஓடிக்கொண்டே இருக்கும் வேலை தான். இடையில் ஒரு சீனில் அப்பாவை நினைத்து கொஞ்சம் நடிக்கிறார். அவ்வளவே. இந்தப் படத்தில் முடிந்தவரை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- தேவையற்ற பப், தண்ணி சீன்கள், ஹீரோயின் தண்ணியடிப்பதாகக் காட்டுவது பி&சி செண்டரில் எடுபடாது
- செண்ட்ரல் ஐ.டி.மினிஸ்டர் கமிசனர் ஆபீசையே தன் கண்ட்ரோலில் கொண்டு வந்து எல்லாரையும் விரட்டி வேலைவாங்குவது. போலீஸ் அமைச்சரான முதல்வர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. அப்படி ஒரு கேரக்டரே இல்லை. அட்லீஸ்ட் கொடநாடு போயிருக்கிறார் என்றாவது சொல்லியிருக்கலாம்!!!
- வில்லன்கள் எப்படிச் சுட்டாலும் ஒரு குண்டுகூட ஹீரோவைத் தொடுவதில்லை. மொத்த போலீஸே களத்தில் இறங்கியும் வடபழனி ஏரியாவில் மட்டுமே சுற்றும் ஹீரோ-ஹீரோயினை பிடிக்கமுடிவதில்லை என வரும் சில உட்டாலக்கடிகள்!
- ஹாலிவுட் பாணியில் முழுக்க முழுக்க ஆக்சன் த்ரில்லராகவே கொண்டு சென்றிருப்பது. மசாலா இல்லாமல் இருப்பது பலம் தான் என்றாலும், தொடர்ந்து ஓடுவது கொஞ்சம் சலிப்பைக் கொடுக்கிறது
- வேகத்தைக் குறைக்கும் பாடல்கள்
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

-  விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் இயக்கம். அறிமுக இயக்குநர் ஆனந்த் சங்கர் கலக்கிவிட்டார்
-  டிரம்ஸ் மணியின் பிண்ணனி இசை, படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது
- R. D. ராஜசேகரின் ஒளிப்பதிவும் புவன் ஸ்ரீனிவாசின் எடிட்டிங்கும் படத்தின் வேகம் குறையாமல் பார்த்துக்கொள்கின்றன. 
- டெக்னாலஜியை முடிந்தவரை சிறப்பாக கதையில் உபயோகித்திருப்பது. எஸ்.எம்.எஸில் ஆரம்பித்து யூடியூப், ஃபேஸ்புக் என இணையதளங்களை ஹீரோ யூஸ் பண்ணுவதாகக் காட்டுவது அருமை. பொதுவாக நம் சினிமாக்கள் இணையத்தை கண்டுகொள்ளமாட்டார்கள். 

பார்க்கலாமா? :
ஆக்சன் த்ரில்லர் விரும்பிகளுக்கு நல்ல விருந்து...பார்க்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

19 comments:

 1. சூப்பர் ஃபிகர் என்றும் சொல்ல முடியாமல், சப்பை என்றும் சொல்லமுடியாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் ஃபிகர் இவர். ஆனாலும் இந்தப் படத்தில் முடிந்தவரை அழகாக காட்டியிருக்கிறார்கள்.//

  கோழி குருடா இருந்தா நமக்கென்னய்யா குழம்பு ருசியா இருக்கா ? அப்புறம் விக்ரம் பிரபு நடிப்பு பரம்பரை பரம்பரையா வரும்தானே !

  இங்கே தியேட்டர்ல ஓடுதான்னு இனிதான் பார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. //கோழி குருடா இருந்தா நமக்கென்னய்யா குழம்பு ருசியா இருக்கா ? // சூப்பர்ணே..சூப்பர்ணே,,கண்ணு கலங்குது.

   Delete
  2. //கண்ணு கலங்குது//
   கோழி கொழம்பு அம்புட்டு காரமாவா இருக்கு?
   மொளகா பச்சையா இருந்தா என்ன செவப்பா இருந்தா என்ன காரமா இருந்தா சரிதான்.

   Delete
 2. அதாவது, மிஸ்டர் அமலா பால் படத்த பார்க்கிறதில்லன்னு சபதம் எடுத்துருக்கேன்னு வெளிபடையா சொல்ல வேண்டியதுதானே...அதுகெதுக்கு ரம்சம் தியேட்டர் க்ளோஸ்ன்னு கத விடுறீங்க...
  இ.வே.மா செகண்ட் ஹாப் கூட கடத்தப்பட்ட காதலியை தேடுறதுதானே.. ஒரே மாதிரி இருக்குமே...

  ReplyDelete
  Replies
  1. //மிஸ்டர் அமலா பால் படத்த பார்க்கிறதில்லன்னு சபதம் எடுத்துருக்கேன்னு வெளிபடையா சொல்ல வேண்டியதுதானே// அவர் நமக்கு எவ்வளவு பெரிய நல்ல காசியம் செய்திருக்கிறார், அவரை வெறுப்பேனா?

   Delete
 3. நல்ல விமர்சனம்...
  படம் பாக்கலாம்ன்னு சொல்லிட்டீங்க...

  ReplyDelete
 4. //மம்மியின் டாஸ்மாக் காலம் என்பதும் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது//
  குஜராத் தவிர இந்தியாவின் எந்த மாநிலத்தில் குடிக்கடை இல்லையென்ற கேள்வி எழுப்பப் படுகிறது?

  ReplyDelete
  Replies
  1. கதை தமிழ்நாட்டில்தான் நடக்கிறது!

   Delete
 5. //அட்லீஸ்ட் கொடநாடு போயிருக்கிறார்//
  ஏதாவது வழக்கு தொடுக்க முடியுமா?வலைப்பக்கத்தை முடக்க முடியுமா? என்ற கோணங்களில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. அவங்களே சும்மா இருந்தாலும், நீங்க விடமாட்டீங்க போல!

   Delete
 6. சூப்பர் படம்

  ReplyDelete
 7. வணக்கம்,நலமா?///கொஞ்சம் வேலை.இன்று முதல் ஓரிரு மாதங்கள் ஓய்வு.///விமர்சனம் நன்று!என் தியேட்டரில்(!?)ரிலீஸ் ஆகியதா தெரியவில்லை,பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வேலை தான் முக்கியம்..நாங்க காத்திருப்போம்!

   Delete
 8. - வில்லன்கள் எப்படிச் சுட்டாலும் ஒரு குண்டுகூட ஹீரோவைத் தொடுவதில்லை.//இது தமிழ் சினிமா ஆரம்ப காலத்திலேருந்தே நடக்கிறது தானே?ஹி!ஹி!!ஹீ!!!

  ReplyDelete
 9. பொதுவாக நம் சினிமாக்கள் இணையத்தை கண்டுகொள்ளமாட்டார்கள்.///பின்ன?அவங்களுக்கு,இணையம் தானே பொது எதிரி?(எங்க சுட்டதுன்னு காட்டிக் குடுத்துடுதே?ஹ!ஹ!!ஹா!!!)

  ReplyDelete
  Replies
  1. அதுவும் சரிதான்..இணையம் பற்றிய காட்சிகள் வைத்தால், மக்களுக்குப் புரியாது என்றும் நினைப்பார்கள்.

   Delete
 10. அருமையான,விறு,விறுப்பான படம்.நடிப்புக்கு,வேலை இல்லை என்றாலும்.............நன்று!

  ReplyDelete
 11. ஐய்யய்யோ............எத்தனை தடவ,எத்தன விதமான துப்பாக்கியால சுட்டாங்க?ஹூம்........யாருகிட்ட?குண்டெல்லாம் தெறிச்சு ஓடிடுச்சே,ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.