Wednesday, July 23, 2014

Casablanca-ம் நெஞ்சில் ஓர் ஆலயமும்

இன்ஸ்பிரேசனும் காப்பியும் :

ஆங்கிலத்தில் வந்த சிறந்த படங்கள் என்று ஒரு லிஸ்ட் போடும்போது, இந்த மூன்று படங்கள் தவறாமல் இடம்பிடிக்கும் : தலைவர்  ஹிட்ச்காக்கின் Vertogo(1958), Citizen Cane(1941), Casablanca(1942).

Casablanca ஒரு சிறந்த காதல் கதை என கொண்டாடப்படுகிறது. பல திரைக்கதை புத்தகங்களிலும் சினிமா இணைய தளங்களிலும் இந்தப் பெயர் வந்துகொண்டே இருக்கும். முதல் இரு படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டாலும், Casablanca பார்க்க இன்று தான் நேரம் கிடைத்தது. உண்மையில் அசத்தலான கதை தான்.
இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மானியப் பிடியில் இருந்த ஐரோப்பிய நகரம், Casablanca. பெரும்பாலும் பணக்கார அகதிகளால் நிரம்பிய ஊர். எனவே விசா மற்றும் திருட்டு விசா விற்பனை கனஜோராக நடக்கும் இடம். அங்கே நைட் கிளப் நடத்திவரும் ஹீரோ கையில் இரண்டு விசாவுக்கான பேப்பர் கிடைக்கிறது. யார் பெயரை வேண்டுமானாலும் அதில் எழுதி, இருவர் பயணிக்கலாம். ஜெர்மனிக்கு எதிரான போராளிக்குழுவினருக்குச் சொந்தமானது அந்த விசா. அந்த குழுவின் தலைவன் அல்லது முக்கியப்புள்ளி தப்பிப்பதற்கு உதவும் டாகுமெண்ட், அந்த விசா. ஹீரோ யாருக்கும் இரக்கம் காட்டாத, ரஃபான ஆள். அந்த விசாவைத் தேடி, அந்த தலைவன் தன் மனவியுடன் அந்த க்ளப்பிற்கு வருகிறான். அந்த மனைவி தான் ஹீரோயின், ஹீரோவின் முன்னாள் காதலி.

 ‘வருவாள் என நான் தனிமையில் இருந்தேன்..வந்தது வந்தாள், துணையுடன் வந்தாள்’ என ஹீரோ கலங்கிப் போகிறார். இறுதியில் கணவனின் உயிரைக் காப்பாற்ற ஹீரோ உதவினாரா? விசாவுடன் இறுதியில் பயணிப்பது கணவன் - மனைவியா? அல்லது காதலன் - காதலியா? எனும் சஸ்பென்ஸை மையப்படுத்தியே படம் நகர்கிறது.

தமிழில் சிறந்த படங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டால், ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம்(1962) படம் கண்டிப்பாக இடம்பெறும். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியடைந்த படம். ஹீரோ ஒரு டாக்டர். அங்கே ஒரு பேசண்ட் தன் மனைவியுடன் வருகிறார். மனைவி தான் ஹீரோயின், டாக்டரின் முன்னாள் காதலி. காதலா? தொழில் தர்மமா? எனும் கேள்வியை மையப்படுத்தி படம் நகர்ந்தது. 

Casablanca மற்றும் நெஞ்சில் ஓர் ஆலயம் படங்களின் கதைக்கரு ஒன்று தான், அதாவது, கணவனின் உயிர் காதலனின் கையில். Casablanca படத்தில் இன்ஸ்பையர் ஆகித்தான் ஸ்ரீதர், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை எடுத்தாரா என்று தகவல் இல்லை. இருப்பினும்...
டிவிடியைப் பார்த்து அப்படியே சுட்டு மானத்தை வாங்கும் மகான்கள், இன்ஸ்பிரேசன் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள இந்த இரு படங்களையும் பார்க்கலாம். கேரக்டர், சூழ்நிலை, காட்சிகள் என எல்லாமே தமிழில் புதியவையாக இருக்கின்றன. ஒரே ஒற்றுமை, உணர்ச்சி. மிகப்பெரிய வேற்றுமை, Casablanca-ல் ஹீரோயின் ஹீரோவுடன் இருக்கவே விரும்புகிறாள். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நம் கலாச்சாரப்படி, ஹீரோயின் கணவனுக்கு உண்மையாக இருக்கிறாள்.

காப்பி - இன்ஸ்பிரேசனுக்கு நான் ஒரு வேடிக்கையான டெஃபனிசன் கொடுப்பதுண்டு : நமக்குப் பிடிச்சவன் சுட்டா, இன்ஸ்பிரேசன்; பிடிக்காதவன் சுட்டா காப்பி. இந்த இரு படங்களைப் பார்த்ததும், எனக்குத் தோன்றியது : இரண்டாவதாக வந்த படத்தைப் பார்த்ததும் கடுப்பானால், அது காப்பி. என்ன ஒரு புத்திசாலித்தனம் என்று இம்ப்ரஸ் ஆனால், அது இன்ஸ்பிரேசன்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

 1. இன்ஸ்பிரேசன்!..............ஹி!ஹி!!ஹீ!!!

  ReplyDelete
  Replies
  1. பெஸ்ட் யார்?....தேவிகா-வா? அந்த இங்கிலீஷ் புள்ளையா?-ன்னு தான் ஒரு முடிவுக்கு வரமுடியலை!

   Delete
 2. மேலிடத்துல கேட்டுத் தெரிஞ்சுக்கலாமே?(செம ஐடியா!)

  ReplyDelete
 3. //நமக்குப் பிடிச்சவன் சுட்டா, இன்ஸ்பிரேசன்; பிடிக்காதவன் சுட்டா காப்பி.//இத நா வழிமொழியுறேன் ணா

  ReplyDelete
 4. இன்ஸ்பிரேஷ்ன்னா" பழைய கள்ளு புதிய மொந்தை", காப்பின்னா "பழையகள்ளு பழைய மொந்தை"

  ReplyDelete
 5. very good explanation abt the difference between inspiration and copy.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.