Thursday, January 15, 2015

ஐ - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் படம், கூடவே அந்நியனுக்குப் பிறகு விக்ரமுடன் இணைகிற படம் என்பதால், படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. சென்ற வருடம் இப்படி அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் பலவும் பப்படம் ஆன நிலையில், ஐ படம் நம்பிக்கையைக் காப்பாற்றியிருப்பது பெரும் ஆறுதல்.


ஒரு ஊர்ல..:
எதிரிகளால் உருக்குலைக்கப்பட்ட ஹீரோ, அவர்களைப் பழி வாங்குகிறார்....அம்புட்டுத்தேன்! 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் காதலையும் பழிவாங்கலையும் விட்டு புதிதாக யோசிக்க மாட்டோம் என்று நம் ஆட்கள் அடம்பிடிப்பது ஏனென்று புரியவில்லை. நல்ல ஒரு சைன்ஸ் ஃபிக்சன் கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்தோருக்கு, படத்தின் கதை ஏமாற்றத்தையே தருகிறது. ஹீரோ-ஹீரோயிடன் காதல்-வில்லனுடன் மோதல் என்பதையும் தாண்டி ஷங்கர் போன்ற ஜாம்பவான்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது.

உரிச்சா....:
இந்த சராசரிக் கதையை சூப்பர் கதையாக ஆக்குவது ஷங்கர்+ பி.சி.ஸ்ரீராமின் பிரம்மாண்டமான காட்சியமைப்பும் விக்ரமின் நடிப்பும் தான். ‘Think Big2' கேட்டகிரி ஆளான ஷங்கர், இதிலும் அதையே செய்திருக்கிறார். ஹீரோ வடசென்னை சேரிப்பையனாக இருந்தாலும், காட்சிகளில் ரிச்னெஸ்ஸைக் கொண்டுவந்துவிடுகிறார்.

மணப்பெண் கோலத்தில் இருக்கும் ஹீரோயினை, அகோர விக்ரம் கடத்துவதுடன் படம் ஆரம்பிக்கிறது. கூடவே ஃப்ளாஷ்பேக்கும் ஓப்பன் ஆகிறது. ஷங்கரின் முந்தைய படங்களைப் போல் ஃப்ளாஷ்பேக் இரண்டாம்பாதியில் வருவதில்லை. நிகழ்காலம் கொஞ்சநேரம், அதிலிருந்து ஃப்ளாஷ்பேக் கொஞ்ச நேரம் என்று படம் நகர்கிறது. சில இடங்களில் இந்த ஃப்ளாஷ்பேக், யாருடைய பாயிண்ட் ஆஃப் வியூவில் நகர்கிறது என்று நமக்கே குழப்பமும் வந்துவிடுகிறது.
ஆனால் படத்தினை மிகவும் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறார்கள். மிஸ்டர்.இந்தியா ஆகும் கனவோடு இருக்கும் விக்ரம், ஜிம் நடத்துகிறார். அங்கே சந்தானமும் பவர் ஸ்டாரும் நடத்தும் காமெடி ஒரு பக்கம், மாடலாக இருக்கும் ‘மாடர்ன் கண்ணகி’ எமி ஜாக்சனுக்கு பிரபல மாடலாக இருக்கும் வில்லன் தரும் தொல்லைகள் ஒரு பக்கம் என கதை நகர்கிறது. எமிக்கு எனிமி தொல்லை ஜாஸ்தி ஆவதால், விக்ரமை போட்டிக்கு மாடலாக களமிறக்குகிறார்.(லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது.) நடிப்பு ராட்சஷான விக்ரமுக்கு படத்தில் நடிப்பு வராமல் போக, எமி விக்ரமைக் காதலிப்பதாகச் சொல்லி கெமிஸ்ட்ரியை உண்டாக்குகிறார். அதில் நடிப்பு வந்து(!) விக்ரம் பிச்சு உதற, பிரபல மாடலாகிறார். கூடவே எதிரிகளும் உருவாகிறார்கள்.

ஒவ்வொரு எதிரியாக விக்ரம் தண்டிப்பதும், ஃப்ளாஷ்பேக்கும் ஒன்றாக நகர்வதால் ஃப்ரெஷ்ஷான படம் பார்த்த ஃபீலிங் கிடைக்கிறது. லீனியராக கதை சொல்லியிருந்தால், படம் சப்பையாகப் போயிருக்கும். அதே நேரத்தில் இது ஒரு பெர்ஃபெக்ட்டான நான் - லீனியர் படமாகவும் உருவாகவில்லை. திடீர், திடீரென ஃப்ளாஷ்பேக் ஓப்பன் ஆவதும், மாடல் வில்லனைத் தண்டித்தபின்னும் படம் நகர்வதும் நம்மைக் கொஞ்சம் கிர்ரென்று ஆக்குகிறது.

ஆவென்று வாய் பிளந்து பார்க்க வைக்கும்படியான பிரம்மாண்ட காட்சியமைப்பு, அதில் ஜொள் வரவைக்கும் எமியின் தாராள தரிசனம், விக்ரமின் அட்டகாசமான நடிப்பு, சுவாரஸ்யமான சீன்கள் என்று கலந்துகட்டி அடித்திருப்பதால், ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி நமக்கு வந்துவிடுகிறது. அது தான் ஷங்கரின் ஸ்டைல். அது இப்போதும் வெற்றியைத் தேடித்தருகிறது.

விக்ரம் :
என்ன மனுசன்யா இந்த ஆளு...அந்த கேரக்டருக்காக அப்படியே உடம்பை உருக்கி, ஏற்றி என்னன்னெமோ செய்திருக்கிறார். அவரது கடின உழைப்புக்கு முதலில் ஒரு சல்யூட். முகத்தில் முதுமை எட்டிப்பார்த்தாலும், கொஞ்ச நேரத்திலேயே நம் மனதில் இடம்பிடித்துவிடுகிறார். சென்னைத் தமிழும், பாடி பில்டர் உடம்புமாக அட்டகாசமாக அறிமுகம் ஆகிறார். அடுத்து ஸ்டைலிஷான மாடலாக வரும்போதும், உறுத்தாமல் பொருந்திப்போகிறார். அகோர உருவத்திற்காக அவர் போட்டிருக்கும் மேக்கப்பையும் மீறி, அவர் நடிப்பு தெரிவது தான் அவருக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத்தருகிறது. இப்போதெல்லாம் கெட்டப் சேஞ்ச் என்றால், ரப்பர் முகமூடியை மாட்டிக்கொண்டு கண்ணை மட்டும் உருட்டுவது என்று ஆகிவிட்ட சூழ்நிலையில், விக்ரம் நடிப்பில் புதிய பரிணாமத்தைக் காட்டியிருக்கிறார். இதை ஷங்கர் படம் என்று சொல்வதைவிட, விக்ரம் படம் என்றே சொல்லலாம்.

எமி ஜாக்ஸன்:
தாண்டவத்தில் தண்டமாக வந்த பொண்ணா இது? ஹாலிவுட் பட ரேஞ்சில் ’காவர்ச்சி’யை அள்ளி விட்டிருக்கிறார். கண்டிப்பான குவைத் சென்ஸார், பல காட்சிகளை கொத்திக் குதறியிருக்கிறார்கள். அதையும் மீறி வந்த காட்சிகளிலேயே, இப்படி. இடைவேளைக்குப் பின் நடிப்பதற்கும் வாய்ப்பு. அவர் நடித்தாலும், அவர் நாக்கில் தமிழ் ததிங்கிணத்தோம் போடுவது க்ளோசப்பில் தெரிகிறது. டப்பிங் மட்டும் இல்லையென்றால், கஷ்டம் தான். ஆளே மெழுகுபொம்மை போல் இருப்பார் என்பதால், மாடல் கேரக்டருக்கு கன கச்சிதம்.


சந்தானம் :
எமிக்கு அடுத்து நம்மை ரிலாக்ஸ் செய்யும் ஒரே ஆள். அதுவும் இண்டர்வெல்லுக்குப் பின் சந்தானம் மட்டும் தான் ஒரே ரிலாக்ஸ்..தண்டிக்கப்பட்ட எதிரிகளிடம் பேட்டி எடுப்பதும், வழக்கம்போல் ஒன்லைன்களால் போட்டுத்தாக்குவதுமாக, அமர்க்களம் செய்திருக்கிறார். எந்திரனில் வேஸ்ட்டாக வந்தாலும், இதில் பட்டையைக் கிளப்பிவிட்டார். கூடவே பவர் ஸ்டாரும் இணைய, செம ரகளை.

சொந்த பந்தங்கள்:
வில்லனாக ராம்குமார்(சிவாஜி) வருகிறார். பிரபுவையும் சிவாஜியையும் மிக்ஸ் செய்து உருவாக்கிய உண்டக்கட்டி போல் இருக்கிறார். சில காட்சிகளில் சிவாஜியை நினைவுபடுத்தும் குரல்..அது தான் வில்லனாக அவரை ஏற்கவைக்க இடைஞ்சலாக இருக்கிறது. மாடலாக வரும் வில்லனும் நல்ல நடிப்பு. அதுக்கும் மேல நடித்திருப்பது சுரேஷ் கோபி.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- ’ஹீரோவை அகோரமான ஆளாக ஆக்கிவிடுகிறார்கள். பதிலுக்கு ஹீரோவும் அவர்களை அப்படியே ஆக்குகிறார்’ என்பது தான் கதை என்பதால், ஹீரோவும் வில்லன்களும் பல காட்சிகளிலும் கோரமாக வருகிறார்கள். இதனால் குழந்தைகள் இந்தப் படத்தைப் பார்ப்பது கஷ்டம். நமக்கே சில குளோசப் ஷாட்களைப் பார்க்கும்போது, அருவருப்பாக இருக்கிறது. ஷங்கருக்கு கிராபிக்ஸ் மேல் அலாதிப் பிரியம் உண்டு. அதை படத்தை அழகுபடுத்துவதற்காகப் பயன்படுத்தும்வரை பிரச்சினை இல்லை. இதில் கொஞ்சம் டூ மச் தான்.
- அரதப்பழசான கதை.
- மெர்சலாயிட்டேன் பாடலின் விஷுவல் கான்செப்ட், வக்கிரத்திலும் வக்கிரம். பாய்ஸ் ஷங்கர் இன்னுமா இருக்கிறார்?
- மசாலாப் படம் தான் என்றாலும், பல இடங்களில் லாஜிக் பற்றிக் கவலையில்லாமல் படத்தை எடுத்திருக்கிறார்கள். மாடல் வில்லன் தண்டிக்கப்படும் சீன், ஹீரோவின் ப்ளானாக இருக்க வாய்ப்பேயில்லை. எத்தனை அடிபட்டாலும் ஏற்கனவே டேமேஜ் ஆகியிருக்கும் ஹீரோ, தொடர்ந்து வீறுகொண்டு எழுவது ஆக்சன் காமெடி!
- மெர்சலாயிட்டேன், பூக்களே தவிர மற்ற பாடல்கள் செம போர். அதிலும் படம் விறுவிறுப்பாக நகரும்போது, பாடல்கள் வரும்போது கடுப்பாகிறது.
- படத்தின் நீளம். அந்த ட்ரெய்ன் சண்டைக்காட்சியிலேயே கிளைமாக்ஸ் ஃபீல் வந்துவிடுகிறது. அப்புறமும் இழுத்திருக்கிறார்கள். சில காட்சிகளே மிகவும் நீளமாக இருக்கின்றன. உதாரணம், நான்கு வில்லன்களும் விக்ரமை என்ன செய்தோம் என்று சொல்லும் காட்சி.
பாசிடிவ் பாயிண்ட்ஸ்:

- விக்ரம்..........மட்டும் இல்லேன்னா, படம் பப்படம் தான்.
- பிரம்மாண்டம்
- பி.சி.ஸ்ரீராமின் கேமிரா
- ஏ.ஆர்.ரஹ்மானின் இரண்டு பாடல்களும், பிண்ணனி இசையும்
- ரசிக்க வைக்கும் வசனங்கள்..’சைடு வகிடு எடுத்து சாஃப்ட்டாப் பேசினால் சரத்பாபுன்னு நினைச்சிட்டயா?’ ஒரு உதாரணம்.
- காதல், கவர்ச்சி, காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன் என எல்லா மசாலா ஐட்டங்களையும் சரியான விகிதத்தில் பரிமாறியிருப்பது.
- டெக்னிகலாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருப்பது. ‘100 கோடியில் எடுத்தோம்’ என்று உதார் விட்டுத் திரியும் பார்ட்டிகளுக்கு மத்தியில், உண்மையிலேயே காசைச் செலவளித்து எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு நன்றி.

பார்க்கலாமா?

தாராளமாகப் பார்க்கலாம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

 1. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 2. நன்றி அண்ணே ! தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் , உறவினர்கள்ள , நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் ணா

  ReplyDelete
 3. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நன்றி செங்கோவி இன்னும் படம் பார்க்கவில்லை திரைகதையில் இன்னும் மெனக்கெட்டு இருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்

  ReplyDelete
 5. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்,உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகட்டும்!///நல்ல நடுநிலை விமர்சனம்.பேச்சுப் புத்தகத்தில் கழுவிக்,கழுவி ஊற்றினார்கள்.உங்கள் விமர்சனம் பார்த்ததில் நம்பிக்கை துளிர் விட்டது.பார்ப்போம்.

  ReplyDelete
 6. //பிரபுவையும் சிவாஜியையும் மிக்ஸ் செய்து உருவாக்கிய உண்டக்கட்டி போல் இருக்கிறார்.// ஹா..ஹா.. எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

  ReplyDelete

 7. //கண்டிப்பான குவைத் சென்ஸார், பல காட்சிகளை கொத்திக் குதறியிருக்கிறார்கள் // .. பாஸ் அந்த டாப்லஸ் சீன் ஒன்னு இருக்குமே . அப்போ நீங்க அத பாக்கலையா..?

  ReplyDelete
  Replies
  1. ஏன்யா வயித்தெறிச்சலைக் கிளப்புறீங்க..இங்க டாப்பையே காட்டலை, இதுல டாப்லெஸ் வேறயா!!

   Delete
 8. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. நல்லா இருக்கா ? ஓகே பார்த்துருவோம்.

  ReplyDelete
 10. பார்க்கலாம்!விக்ரமின் உழைப்பு,ஷங்கரின் உழைப்பு,ஸ்ரீராமின் உழைப்பு.....ஏன் நம்ம எமியோட ஒத்துழைப் புன்னு ஏகப்பட்ட உழைப்பு இருக்கு!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.