Thursday, January 22, 2015

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் - சினிமா அறிமுகம்

விநியோகஸ்தர்-சீரியல் ஆக்டர்-வசனகர்த்தா-திரைக்கதை ஆலோசகர் என்று பல முகங்கள் இருந்தாலும், கேபிள் சங்கருக்கு அடையாளம் ‘பதிவர்-சினிமா விமர்சகர்’ என்பது தான். காரணம், மற்றவற்றை விட இதில் அவர் அடைந்த புகழ் அதிகம். சினிமாவில் இருந்துகொண்டே நேர்மையான விமர்சனங்கள் எழுதுவது எளிதல்ல. அதனால் அவருக்கு வந்த சில மிரட்டல்களையும் நானறிவேன். இருந்தாலும் இப்போதுவரை நேர்மையைக் கைவிடாத மனிதர் அவர்.
அகிரா குரோசோவாவில் ஆரம்பித்து பல உலக சினிமாக்கள் பற்றிய அறிவு இருந்தாலும், அதையெல்லாம் எழுதி படம் காட்டாமல் ‘கமர்சியல் சினிமா’ தான் நமக்கு நல்லது எனும் தெளிவு கொண்டவர். தமிழ் சினிமாவைப் புரட்டிப்போடப் போகிறேன் என்றெல்லாம் சொல்லி நம்மை பீதியூட்டாமல் ‘இது ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும்’ என்று அறிவித்துவிட்டே ‘தொட்டால் தொடரும்’ படத்தைத் தொடங்கினார். இதோ, இந்த வாரம் வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ்.

ஏற்கனவே பாடல்கள் நம் மனதைக் கொள்ளை கொண்டுள்ளன. அதே போன்று படமும் நம்மைக் கவரும் என்று நம்புகிறேன். சினிமா வியாபாரத்தை கரைத்துக் குடித்தவர் என்பதாலும், அவருக்கு இருக்கும் திரைக்கதை அறிவினாலும் நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான படமாக இதை உருவாக்கியிருப்பார்.

இது ஒரு லவ் & ஆக்சன் த்ரில்லராக உருவாகியிருக்கிறது. தமன் சூட்டிங்கில் பட்ட கஷ்டங்களும், அவரது சின்சியாரிட்டியும் இன்னொரு நல்ல ஹீரோ தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துவிட்டார் என்றே பறைசாற்றுகின்றன. திருத்தமான முகம் இருந்தும், பொங்கி வரும் அழகிருந்தும் போக்கற்ற படங்களில் நடித்து வந்த அருந்ததிக்கு, இந்தப் படம் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். 
ஃபேஸ்புக்கில் ஆயிரம் பேர் ஃப்ரெண்ட்டாகச் சேர்ந்தாலே கெத்து காட்டும் ஆட்களுக்கு மத்தியில், யாரையும் மதித்துப் பேசும் பண்பான மனிதர் நம் கேபிள் சங்கர். அவரது நல்ல குணத்திற்கே, வெற்றி அவரைத் தேடி வரும். அவரைப் போன்ற மனிதர்கள் ஜெயிக்க வேண்டும்.

எனவே நண்பர்கள் அனைவருக்கும் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் படத்தினைப் பரிந்துரைக்கிறேன். இப்போதுவரை குவைத்தில் படம் ரிலீஸ் ஆவது கன்ஃபார்ம் ஆகவில்லை. எனவே படத்தின் விமர்சனத்தை பார்க்காமலேயே, இப்போதே எழுதிவிடுகிறேன். :)

பார்க்கலாமா?:
கண்டிப்பாகப் பார்க்கலாம்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

 1. படம்,வெற்றி பெற வாழ்த்துக்கள்!///சொல்லிட்டீங்க இல்ல?பாத்துட்டு இருக்கு கச்சேரி,ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
 2. //பார்க்கலாமா?:
  கண்டிப்பாகப் பார்க்கலாம்!// ஹா ஹா ஹா செம.. அல்ரெடி புக் பண்ணியாச்சு :-)

  ReplyDelete
 3. கடைசியா ஒரு சிக்சர் அடிச்சீங்க பாருங்க ... அங்க நிக்கிறீங்க ... கண்டிப்பாக பார்ப்போம் .

  ReplyDelete
 4. இன்னும் சேலத்துல எந்த தியேட்டர்னு தெரியலைங்ணா ! இன்னைக்கு ஈவ்னிங்தான் தெரியும் . புக் பண்ணிடவேண்டியதுதான்

  ReplyDelete
 5. நாளைக்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்கலாம் என்றால் துணைக்கு ஆள் தேடி கொண்டிருக்கிறேன்.இரண்டு பேர் கிட்ட கேட்டு இருக்கேன்.ஒருத்தர் (தி)வந்தால் போயிடுவேன்!!!!

  ReplyDelete
 6. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! எங்க ஊருல வரும்போது பார்த்துடறேன்!

  ReplyDelete
 7. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
 8. வணக்கம்!

  "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
  ஜெய் ஹிந்த்!

  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

  ReplyDelete
 9. நைசாக விமர்சனம் எழுதாம தப்பிச்சிட்டிங்க. படம் பார்த்ததுக்கு அப்புறமும் எழுத மாட்டிங்க அப்படிங்கறது தான் உண்மை. வலைபூக்களில் திரைப்படங்களை பிரிச்சி மேய்ஞ்ச பலரும் தொட்டால் தொடரும் படத்தை மட்டும் விமர்சனம் எழுதாம விட்டுட்டப்பவே விமர்சகர்களோட நேர்மை கேள்விக்கு உரியதாகிடுச்சி.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.