Wednesday, April 29, 2015

வாஞ்சிநாதன் I.T.Guy - with Interview Panel


டெக்கி: ஹலோ மிஸ்டர் வாஞ்சிநாதன். நான் டெக்கி...பி.எல்லா இருக்கேன். இவர் ஹெச்.ஆர்..நாம இண்டர்வியூவை ஸ்டார்ட் பண்ணலாமா?

வாஞ்சி: பண்ணுங்க சார்..அதுக்குத் தானே வந்திருக்கேன்.

டெக்கி: ஓகே..டெல் அபவுட் யுவர்செல்ஃப்.

வாஞ்சி: சார்..என்ன சார் இது..100 ரெசியூம் வாங்கி சலிச்சு, அதில என்னைக் கூப்பிட்டிருக்கீங்க. ரெசியூம் படிச்சிட்டுத்தானே கூப்பிட்டிருக்கீங்க? அப்புறம் டெல் அபவுட் யுவர் செல்ஃபான்னா எப்படி சார்?

ஹெச்.ஆர்: ஐ லைக் இட்.

வாஞ்சி: பார்த்தீங்களா...சார் லைக் போட்டுட்டாரு..நான் மனசுல பட்டதைத் தான் பேசுவேன் சார்.

டெக்கி: ஓகே..இதுக்கு முன்னாடி எங்கே, என்னவா ஒர்க் பண்ணீங்க?

வாஞ்சி: கொடுங்க..ரெசியூமைக் கொடுங்க..படிச்சிட்டுச் சொல்றேன்..என்னா சார் நீங்க..ரெசியூமையும் வாங்கி வச்சுக்கிட்டு எங்கே வேலை பார்த்தேன்னா...? படிச்சிட்டுத்தானே சார் சொல்ல முடியும்?

ஹெச்.ஆர்: அவர் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க.

வாஞ்சி: சொல்றேன் சார்..அதுக்குத்தானே வந்திருக்கோம்.

டெக்கி: ஜாவா படிச்சிருக்கிறதா போட்டிருக்கீங்க...அதுல..

வாஞ்சி: சார்..ஜாவா, ஆரக்கிள், சி++ன்னு பலது படிச்சிருக்கோம்..அதானே போட்டிருக்கோம்.

டெக்கி: இல்லை, ஜாவால..

வாஞ்சி: சார்..ஜாவால என்ன சார்?...ரெசுயூம்ல போட்டிருக்கேன்ல..அப்புறம் அதையே நோண்டி நோண்டிக் கேட்டா எப்படி சார்?

ஹெச்.ஆர்: பதில் சொல்லுங்க வாஞ்சி..

வாஞ்சி: சொல்றேன் சார்..அதுக்குத்தானே வந்திருக்கோம்..நீங்க கேட்கிறதுக்கு வந்திருக்கீங்க..நான் பதில் சொல்ல வந்திருக்கேன்..கேளுங்க..கேட்டாத்தானே சார் சொல்ல முடியும்?

டெக்கி: உஸ்ஸ்....!

ஹெச்.ஆர்: மிஸ்டர் வாஞ்சி, டெக்னிகலா நீங்க ஸ்ட்ராங்கான்னு தெரிஞ்சுக்கத்தான் இந்த இண்டர்வியூ.

வாஞ்சி: என்னா சார் நீங்க..ஆளைப் பார்த்தா தெரியலியா? இப்படியே ஓடி, சுவத்துல ஏறித் திரும்பி...அது ஒரு காலம் சார்.

ஹெச்.ஆர்: நான் சொன்னது டெக்னிகலா...

வாஞ்சி: உங்க பேச்சே சரியில்லையே...எந்த டிபார்ட்மெண்ட் நீங்க?

ஹெச்.ஆர்: ஹெச்.ஆர்!

வாஞ்சி: ஹெச்.ஆருக்கு இங்க என்ன சார் வேலை? டெக்கி சார் ஒரு டெக்னிகல் பெர்சன்..நான் ஒரு டெக்னிகல் பெர்சன்..நாங்க டெக்னிகலாப் பேசிக்கிட்டு இருக்கோம்..நீங்க எதுக்கு இங்கே?

ஹெச்.ஆர்: நான் ஒன்னும் சும்மா இல்லை..அட்டிடியூட் பார்க்க உட்கார்ந்திருக்கேன்.

வாஞ்சி: ஆட்டிக்கிட்டே பார்க்க உட்கார்ந்திருக்கிறயா? சார்..நான் எவ்ளோ டீசண்டாப் பேசிக்கிட்டு இருக்கேன்..இந்தாளு எப்படிப் பேசுறான் பாருங்க சார்..அப்படியே ஃபைலைத் தூக்கி அடிச்சிடுவேன்..ஓடிப்போயிடு...சார், நீங்க கேளுங்க சார்.

டெக்கி: ஙே...சே...சே..

வாஞ்சி: என்ன சார்..கேளுங்க சார்..கேட்கத்தான் நீங்க வந்திருக்கீங்க..பதில் சொல்லத்தான் நான் வந்திருக்கேன்.

டெக்கி: (மறுபடியும் முதல்ல இருந்தா..ம்ஹூம்).....சேலரி என்ன எதிர்பார்க்கிறீங்க?

வாஞ்சி: சார்...என்னா சார் கேட்கிறீங்க...மாசம் பத்து லட்சம் கேட்டா, கொடுப்பீங்களா?

டெக்கி: ம்ஹூம்..கம்பெனி பாலிசி ஒத்துக்காது.

வாஞ்சி: கம்பெனி பாலிசி என்ன சார்..கம்பெனி பாலிசி..உங்க ஓனரு ஒத்துக்க மாட்டான்..அதானே..சும்மா சொல்லுங்க சார்..ஏன், ஓனர்னா பயமா? உங்க ஓனர் என்ன கையை வெட்டிடுவானா?

டெக்கி: வாஞ்சீ, போதும்...ஐ ரிசைன் மை ஜாப்.

வாஞ்சி: என்னா சார் நீங்க..இங்கிலீஸ்கூடத் தெரியலை உங்களுக்கு. அதை அப்படிச் சொல்லக்கூடாது...யூ ஆர் செலக்டேட்ன்னு சொல்லணும். எங்க சொல்லுங்க!

டெக்கி: அய்யோ....ராமா!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

  1. ஏன்யா குப்புற கவிழ்ந்த நாட்ட நட்டுக்கா வெக்க நாலு 'நல்லவங்களோடு' சேர்ந்து முட்டு கொடுக்கலாமுன்னு டில்லி போன புர்ர்ர்ர்ர்ச்சி கலிங்கர பார்த்து " பையனோட படத்துக்கு லோகேசன் பாக்க வந்திங்களா ?" கேக்குறானுங்க .

    கேப்டன ரொம்பத்தான் கடுப்பேத்துறாங்க மை லார்ட் .

    ReplyDelete
  2. சகாப்தம் படத்துக்கு விமர்சனம் எழுதாத உனக்கு விமோசனமே கிடைக்காதையா.

    கொலைவெறியுடன் வானரம் .

    ReplyDelete
    Replies
    1. சகாப்தம் படத்தை ஒரிஜினல் டிவிடியில்தான் பார்க்க வேண்டும் என்று வெயிட்டிங்!!!

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.