Wednesday, August 29, 2012

திமுக / அதிமுக ஆட்சியில் பதிவு எழுதுவது எப்படி?

ப்போதெல்லாம் முன்பு போல் அதிக அரசியல் பதிவுகள் வருவதில்லை..பல பதிவர்களுக்கு அதிமுக ஆட்சிக்கு ஏற்றாற்போல் பதிவு எழுதுவது எப்படி என்ற குழப்பம் வந்திருப்பது போல் தெரிகிறது. எனவே சில செய்திகளை வைத்து, எப்படி ஆட்சிக்கு ஏற்றாற்போல் பதிவு எழுதுவது என்று பார்ப்போம். 
திமுக ஆட்சியில் செய்தி : 2ஜி வழக்கில் அரசுக்கு பல கோடி நஷ்டம். திமுக அமைச்சர் ராசா - கனிமொழி மேல் குற்றச்சாட்டு! வழக்கு - குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இழுத்தடிப்பு

பதிவு எழுதும் முறை : என்ன ஒரு அநியாயம்? யார் அப்பன் வீட்டுக் காசு? இவங்களையெல்லாம் நடுரோட்ல வச்சுச் சுடணும்..கோர்ட்டு-கேஸ்னு இழுத்தடிக்கிறதே தப்பு..எப்படி இவ்ளோ பெரிய ஊழல் பண்ணிட்டு, கூச்சமில்லாம மக்கள்கிட்ட ஓட்டும் கேட்டு வர்றாங்க? சே..சே..கேவலம்!

அதிமுக ஆட்சியில் செய்தி : ஜெ-சசிகலா அதிக சொத்துக்குவித்த வழக்கில் பெங்களூர் அரசு வழக்கறிஞர் ராஜினாமா..வழக்கு பல வருடங்களாக இழுத்தடிப்பு

பதிவு எழுதும் முறை : போன வாரம் குரு பகவான் மீன ராசில இருந்து ஜம்ப் ஆகி ஸ்ட்ரெய்ட்டா சிம்ம ராசில இறங்கிட்டாரு. அதை ராகு பார்த்துட்டாரு..பார்த்ததை சுக்கிரன்கிட்ட வேற சொல்லிட்டாரு..இனிமே அவ்ளோ தான்..அம்மாவை ஒன்னும் செய்ய முடியாது..எல்லா வக்கீலும் ஓட வேண்டியது தான்..இந்த வழக்கே பிசுபிசுத்துப் போகும்..ஹா..ஹா!

திமுக ஆட்சியில் செய்தி : அழகிரி குரூப்புக்கு எதிராக, ஆ.ராசாவிற்கு எதிராக எழுதிய பத்திரிக்கை மேல் வழக்குப் பதிவு

பதிவு எழுதும் முறை : இந்த திமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படித் தாம்யா..கலிஞரு நானும் பத்திரிக்கையாளன்தான்னு சொல்லிக்கிட்டே, மீடியாவை நசுக்கிடுவாரு..இது சுதந்திர நாடு தானே? இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, ஊடக சுதந்திரம் என்பது நம் பிறப்புரிமை. பத்திரிக்கை என்பது ஜனநாயகத்தின் நான்காவது தூண். (மீதி மூன்று தூண்கள்...குஷ்பூ, நமீதா, ஹன்சிகா!)

அதிமுக ஆட்சியில் செய்தி : ஜெ பற்றி அவதூறுச் செய்தி வெளியிட்ட விகடன் மேல் வழக்குப் பதிவு. விகடன் ஆசிரியர் கோர்ட்டில் ஆஜர்.

பதிவு எழுதும் முறை : என்ன இருந்தாலும் விகடன் இப்படி எழுதியிருக்கக்கூடாதுய்யா..ஒரு நாட்டோட சி.எம்-அவரோட உடன்பிறவா சகோதரிங்கிற மரியாதை கொஞ்சமும் இல்லாம, அவங்களைப் பத்தி குறைசொல்லி எழுதலாமா? சசிகலா வெளியேற்ற நாடகத்தை உண்மைன்னு நம்பி, குதியாட்டம் போட விகடனுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்யா!

திமுக ஆட்சியில் செய்தி : பள்ளிகளில் சமச்சீர்க் கல்வி

பதிவு எழுதும் முறை : ஆஹோ..அய்யாஹோ...எப்படி இதைக் கொண்டு வரலாம்? இதனால படிப்பின் தரமே பாழாப் போயிடும். இதுல சி.எம் பற்றியெல்லாம் பாடம் இருக்கு..அதை மட்டும் நீக்கினால் போதாது..மொத்தமா எல்லாத்தையுமே தூக்கி குப்பையில போடணும்..இது வந்தா அவ்ளோ தான்..நாடே கெட்டுக் குட்டிச் சுவராப் போயிடும்..அரசுப் பள்ளியிலயும் மெட்ரிக்குலேசன் ஸ்கூல்லயும் ஒரே பாடத்திட்டமா? என்ன அநியாயம்?

அதிமுக ஆட்சியில் செய்தி : பள்ளிகளில் சமச்சீர்க் கல்வி

பதிவு எழுதும் முறை : இந்தத் திட்டம் மாணவர்களின் செயல்திறனை ஊக்குவிப்பதாக உள்ளது. அவர்களை வெறுமனே மனப்பாடக் கருவிகளாக ஆக்காமல், சுயமாக சிந்திப்பவர்களாக ஆக்குகிறது. சமத்துவம் என்பது மானுடத்தின் மாபெரும் கனவு. அது பள்ளிப்பாடத்திட்டத்தில் இருந்து ஆரம்பிப்பது மிகமிக அவசியமாகும். இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் தமிழக அரசுக்கு பாராட்டுகள்!
திமுக ஆட்சியில் செய்தி : நகைக்கடையில் கொள்ளை..வாக்கிங் போன பிரபல புள்ளி கொலை!

பதிவு எழுதும் முறை : திமுக ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தாம்யா..சட்டம் ஒழுங்கு கெட்டுக் குட்டிச்சுவராப் போயிடும்..ஒரு கேஸ்லயும் குற்றவாளிகளைப் பிடிக்கவே மாட்டாங்க..இப்படி பகல்லயே கொலை-கொள்ளைன்னு நடக்குதே..இது தான் ஆட்சி நடத்தற லட்சணமா?

அதிமுக ஆட்சியில் செய்தி : நகைக்கடையில் கொள்ளை..வாக்கிங் போன பிரபல புள்ளி கொலை!

பதிவு எழுதும் முறை : முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு கட்டுக்குள் இருந்தது என்பது நீங்கள் அறிந்ததே..ஆனால் சென்ற திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கு அதிக செல்லம் கொடுக்கப்பட்ட காரணத்தாலேயே, இப்போதும் அவர்கள் திருந்த முடியாமல் அவதிப்படுகிறார்கள். மாற்றம் என்பது உடனே வருவதில்லை. இப்போது தானே அம்மா ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்..எப்படியும் இன்னும் நான்கு ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் வந்துவிடும்!


ஃபேஸ் புக்/ட்விட்டர் பயனாளர்களுக்கு :

அதிமுக ஆட்சியில் செய்தி : எதிர்க்கட்சித் தலைவர் ஃபேஸ் புக்கில் கணக்கு துவங்கினார்.

கமெண்ட் போடும் முறை : டாய் மவனே..வர்றியா? ஒண்டிக்கு ஒண்டி வர்றியா? சோமாறி..பேமானி..உனுக்குல்லாம் இன்னாத்துக்கு ஒரு ஃபேஸு..அதுக்கு ஒரு புக்கு?

திமுக ஆட்சியில் செய்தி : எதிர்க்கட்சித் தலைவர் ஃபேஸ் புக்கில் கணக்கு துவங்கினார்.

கமெண்ட் போடும் முறை : என்னை ஃபாலோயராகச் சேர்த்துக்கொள்ளும்படி, எங்களையெல்லாம் வாழ வைக்கும் தாயுள்ளம் கொண்ட, அகிலமெல்லாம் வணங்கும் அங்காள பரமேஸ்வரி-புரட்சித் தலைவி அம்மா அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

 1. கருத்து சொல்ல விரும்பவில்லை

  #DMDK அனுதாபி

  ReplyDelete
 2. ரொம்ப நாளா எனக்கு புரியாத விஷயங்களில் இதுவும் ஒன்னு.

  ஒருவேளை சிவப்பா இருக்குறவன்(ள்) பொய் சொல்ல மாட்டானோ?

  ReplyDelete
 3. நானும் கூட கருத்துச் சொல்ல விரும்பவில்லை!D.M.K.அனுதாபி!

  ReplyDelete
 4. எல்லாம் சரிதான்..ஆனா ஜனநாயகத்தின் மீதி மூன்று தூண்கள்...குஷ்பூ, நமீதா, ஹன்சிகா ன்னு சொல்றத தான் ஏத்துக்க முடியல. இதுல உங்க பக்க சார்பு அரசியல் குள்ளநரித்தனம் வெளிபடையா தெரியுது.... பின்ன அந்த மூன்று தூண்கள்:குஷ்பூ, நமீதா அப்புறம் கலா க்கா தானே..இதுல எங்க அந்த ஹன்ஷிகா வந்தாங்க? கலா மாஸ்டர எழுதாதது, ஒரு திட்டமிட்ட புறக்கணிப்பு

  ReplyDelete
 5. நீங்கள் எழுதியது அப்பட்டமான சத்தியம், எங்கே போனது இவர்களின் எதிர்ப்புத்தன்மை, ஆமாம் இந்த ஆண்டிகள் ஆட்சிகளே இப்படிதானா.

  கலைஞர் பொருத்துக்கொன்டதால் "இவன் ரொம்ப நல்லவன்டா எவ்வளவு அடிச்சாலும் தாங்கிகிராண்டா" என்று மொத்தினார்கள், இன்றைய ஆட்சியைபற்றி வாய் திறக்கவே பயப்படுகிறார்கள்.

  ReplyDelete
 6. வித்தியாசமான சிந்தனை...

  அதுவும் திமுக ஆட்சியில்... - கருத்துக்கள் உண்மை...

  நன்றி...

  ReplyDelete
 7. எனிக்கு நெஞ்சுக்குள்ள குத்துது அண்ணே!!!!

  ஜெயாவை தாக்கி ஒரு பதிவு கூட எழுதலியே!!!!!


  #சரி விடுண்ணே..... இதெல்லாம் பாத்தா, உசுரோட இருக்க முடியுமா? வான்னே, ஹன்சிகா போட்டோவப் பாப்போம்....
  :-)

  ReplyDelete
 8. வெளங்காதவன்™ said... [Reply]

  எனிக்கு நெஞ்சுக்குள்ள குத்துது அண்ணே!!!!////!!!!!!!!!!?????????HOSPITAL!

  ReplyDelete
 9. வித்தியாசமான பதிவு! நல்ல கருத்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

  ReplyDelete
 10. சூப்பர் சிந்தனையைச் சொன்னேன்!ம்ம் எல்லாம் குட்டையில் ஊறிய மட்டைகள் தான்!ம்ம் மாற்றம் வரனும் மக்கள் மனதில்!ம்ம்

  ReplyDelete
 11. ஹா..ஹா.ஹா..அருமை.சான்சே இல்லை.அதிலும் அந்த ராசிபலன் சூப்பர்யா

  ReplyDelete
 12. உண்மை தான் கலைஞரின் ஆட்சியில் புல் கூட போராடும் கேட்டது கிடைக்கும் என்பதால் /....

  ReplyDelete
 13. எல்லாம் அருமை , ஈழ தமிழர் செய்திகளையும் போட்ருக்கலாம் நட்டநடு செண்டர் பயிற்சிகளுக்கு

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.