Friday, October 5, 2012

முருக வேட்டை _ முடிவுரை

எனது பல பதிவுகள், சிறுகதை அல்லது நாவலுக்கான கருவினைக் கொண்டவையே. அவற்றில் ஒன்று தான் எனது முதல் பதிவான ‘உலகக் கடவுள் முருகன்’. அதை கதையாக மாற்றி, சுவாரஸ்யமாகச் சொல்வது எப்படி? என்று நான் கடந்த ஒரு வருடமாகவே யோசித்துக்கொண்டிருந்தேன்.

எனது நண்பர் ஒருவர் கருப்பசாமியை குலதெய்வமாக வழிபடும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பமே வம்சவம்சமாக சாமியாடுவது வழக்கம். கருப்பசாமியின் வீச்சரிவாளை தனியாக வீட்டில் வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள். (அந்த வீடு, படைவீடு என்று அழைக்கப்படுகிறது.) கருப்பசாமி ’கேட்கும்போது’ மட்டுமே கோவில் திருவிழா நடத்தப்படும். அப்போது மட்டுமே அந்த வீச்சரிவாள் வெளியே வரும்.

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றில் இருந்து தங்க வேல் ஒன்று பலவருடங்களுக்கு முன் காணாமல் போனதாக ஒரு செய்தி உண்டு. அது உண்மையா, பொய்யா என்பதை முருகனே அறிவான். அது பொதுக்கோவிலாக இல்லாமல் நண்பரின் கருப்பசாமி கோவில் போன்று சில குடும்பங்களின் சொத்தாக இருந்திருந்தால், தங்கவேலாக இல்லாமல் வீச்சரிவாளாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற சிந்தித்தபோது, ஒரு அருமையான பழி வாங்கும் கதைக்கான தளம் கிடைத்தது.

எனது முதல்பதிவை மையக்கருவாக எடுத்துக்கொண்டு, தங்கவேல் - வீச்சரிவாள் மேட்டரை மிக்ஸ் பண்ணியபோது, கிடைத்ததே இந்த முருக வேட்டை.

பதிவுலகில் எனது முந்தைய தொடரான மன்மதன் லீலைகளுக்குக் கிடைத்த வரவேற்பு மிகமிக அதிகம். இப்போதும் அந்தத் தொடரை புதிதாகப் படிக்கும் நண்பர்களிடம் இருந்து மெயில்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் லீலைக்கு வந்த கூட்டத்தில் பாதிகூட இந்தத் தொடருக்கு வரவில்லை என்பதே உண்மை. இது எல்லாரும் விரும்பிப் படிக்கும் டாபிக் அல்ல என்று தெரிந்தே ஆரம்பித்ததால், தொடர்ந்து உற்சாகமாக எழுத முடிந்தது.

பொழுதுபோக்கு-கிளுகிளுப்பு என்பதையும் தாண்டி, என் எழுத்து பயணிக்க வேண்டும் என்ற என் ஆசையின் வெளிப்பாடு தான் இந்தத் தொடர். நினைத்தபடியே காப்ரமைஸ் செய்துகொள்ளாமல், முருகன் அருளால் எழுதி முடித்த திருப்தி, அதிக சந்தோசத்தைத் தருகிறது.

இந்தத் தொடருக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு, உற்சாகப்படுத்திய யோகா ஐயா, பன்னிக்குட்டியார், தனிமரம் நேசன், தம்பி ஜீ, மொக்கைராசா, கங்காராம், தளிர் சுரேஷ், சே.குமார் மற்றும் பிற நண்பருக்கும், பொதுவில் பின்னூட்டமிட விரும்பாமல் தனிப்பட்ட மின்னஞ்சலில் தொடரின் குறை-நிறைகளைப் பகிர்ந்து கொண்ட நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

லீலைகள் தொடர் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டது என்பதால், அதிகமாக கஷ்டப்படாமல் எழுத முடிந்தது. ஆனால் இது முழுக்க கற்பனை என்பதால், அதிகம் படிக்க வேண்டியிருந்தது. தெரிந்த பல விஷயங்களையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு உதவிய கீழ்க்கண்டவற்றிற்கும், அதன் உரிமையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :

1. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் (நூல்) - ஜெயமோகன்
2. புரட்டு! இமாலயப் புரட்டு (நூல்) - தந்தை பெரியார்
3. தங்கவேல் திருட்டும், கலைஞரும்..
4. கென்யா பற்றிய அமல்ராஜின் பதிவு
5. கென்யா பற்றிய பரணியின் பதிவு
6. கென்யா பற்றிய சுந்தர ராமனின் பதிவு
7. கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோவின் பேட்டி
8. கலையரசனின் தொடர் : நாம் கறுப்பர், நமது மொழி தமிழ், நம் தாயகம் ஆப்பிரிக்கா
9. ஆப்பிரிக்காவில் சாதிமுறை - ப்ரவாஹனின் காலச்சுவடு கட்டுரை
10. How did a Vel worship evolve into an anthropomorphic worship? (Langanewspaper Article)
11. Skanda - The Alexandar Romance in India : By N.Gopala Pillai
12. கௌமாரம் - இணைய தளம்
13. The constant Gardener - Movie
14. கென்யா - விக்கிபீடியா


அன்புடன்
செங்கோவி

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

15 comments:

  1. நீண்ட நாட்களாக மனதில் ஆழப்பதிந்துகொண்டே வந்த முருகவேட்டை அழகான கவிதையாய் இருந்தது... ரசித்தேன்... நன்றி நண்பா...

    மணிகண்டவேல்

    ReplyDelete
  2. ஒரு சிம்பிள் கதைக்கரு.. அதைவைத்து பிரம்மாண்ட உணர்வை கொண்டு வந்துட்டீங்க. லிங்ஸ் எல்லாம் பொறுமையா படிச்சுப்பார்க்கனும்.....

    ReplyDelete
  3. /////பொழுதுபோக்கு-கிளுகிளுப்பு என்பதையும் தாண்டி, என் எழுத்து பயணிக்க வேண்டும் என்ற என் ஆசையின் வெளிப்பாடு தான் இந்தத் தொடர். நினைத்தபடியே காப்ரமைஸ் செய்துகொள்ளாமல், முருகன் அருளால் எழுதி முடித்த திருப்தி, அதிக சந்தோசத்தைத் தருகிறது./////

    ஒருகட்டத்திற்கு மேல் இதுதான் நிறைவு தருது செங்கோவி..... எழுத்தில் இன்னும் பல பரிமாணங்களைத் தொட வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. கதையை ஒவ்வொரு அத்தியாயத்திலும் நகர்த்திச்சென்ற விதம் மிகவும் அருமையாக இருந்தது செங்கோவி. நான் அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று தினமும் உங்கள் ப்ளாக் ஐ திறந்து பார்த்துக்கொண்டு இருப்பேன் செங்கோவி. உங்களின் அடுத்த தொடரக்கு எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

    ReplyDelete
  5. தொடர் பலவிடயத்தை அலசியதுடன் ஆச்சரியமான விடயங்களை பதிந்து சென்றது கென்னியா நாட்டின் கதை எல்லாம் எனக்கு புதுமையாக இருந்திச்சு .உண்மையில் இந்த தொடர் என்னை அதிகம் ஆவலோடு அடுத்த அங்கம் எப்ப வரும் என்று காத்திருக்க வைத்தது பல நேரங்களில் சிறப்பான ஒரு தொடரை மீண்டும் தந்ததுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் செங்கோவி ஐயா!

    ReplyDelete
  6. /////பொழுதுபோக்கு-கிளுகிளுப்பு என்பதையும் தாண்டி, என் எழுத்து பயணிக்க வேண்டும் என்ற என் ஆசையின் வெளிப்பாடு தான் இந்தத் தொடர். நினைத்தபடியே காப்ரமைஸ் செய்துகொள்ளாமல், முருகன் அருளால் எழுதி முடித்த திருப்தி, அதிக சந்தோசத்தைத் தருகிறது./////

    ஒருகட்டத்திற்கு மேல் இதுதான் நிறைவு தருது செங்கோவி..... எழுத்தில் இன்னும் பல பரிமாணங்களைத் தொட வாழ்த்துகள்!

    October 5, 2012 6:41 PM
    // பன்னியாரின் கூற்றை நானும் மீளவும் ஆமோதிக்கின்றேன். செங்கோவி ஐயா!
    இந்தத்தொடரில் மொக்கைராசு மாமா ,பன்னியார்,தமிழ்வாசி என உறவுகளை நலம் கேட்கும் தளமாக இருந்ததும் மனதுக்கு இதமான ஒன்று. நன்றி இப்படியான தொடரை இன்னும் படைக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  7. அடடா.. முடிஞ்சிருச்சா...

    கடைசி அஞ்சாறு பாகங்கள் படிக்காம விட்டுட்டேனே. டைம் கிடைக்கறப்போ தொடர்கிறேன் மாம்ஸ்....

    ReplyDelete
  8. Blogger தனிமரம் said...

    /////பொழுதுபோக்கு-கிளுகிளுப்பு என்பதையும் தாண்டி, என் எழுத்து பயணிக்க வேண்டும் என்ற என் ஆசையின் வெளிப்பாடு தான் இந்தத் தொடர். நினைத்தபடியே காப்ரமைஸ் செய்துகொள்ளாமல், முருகன் அருளால் எழுதி முடித்த திருப்தி, அதிக சந்தோசத்தைத் தருகிறது./////

    ஒருகட்டத்திற்கு மேல் இதுதான் நிறைவு தருது செங்கோவி..... எழுத்தில் இன்னும் பல பரிமாணங்களைத் தொட வாழ்த்துகள்!

    October 5, 2012 6:41 PM
    // பன்னியாரின் கூற்றை நானும் மீளவும் ஆமோதிக்கின்றேன். செங்கோவி ஐயா!
    இந்தத்தொடரில் மொக்கைராசு மாமா ,பன்னியார்,தமிழ்வாசி என உறவுகளை நலம் கேட்கும் தளமாக இருந்ததும் மனதுக்கு இதமான ஒன்று. நன்றி இப்படியான தொடரை இன்னும் படைக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா!/////

    SAME TO SENGOVI........

    ReplyDelete
  9. உங்கள் இந்த தொடரை ஒரு சில பகுதிகள் தவிர முழுமையாக வாசிக்கவில்லை.ஆனாலும் உங்களிடம் இருந்து மேலும் தரமான படைப்புக்கள் வெளிவரவேண்டும் பாஸ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாத்துக்கள் ஹன்சிகா புகழ் செங்கோவி அவர்களே!

    இனி தாங்கள், ஹன்ஷிகா புராணத்தை படம் போட்டு விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...

    நன்னி....

    ReplyDelete
  11. ரொம்ப நல்லா இருந்தது . மன்மதன் லீலை ஒரு சுகம் என்றால் , இது ஒரு சுகம். தொடர என் வாழ்த்துக்கள்.

    மோகன் பாபு .

    ReplyDelete
  12. மாலை வணக்கம்,செங்கோவி!கற்பனையும் சேர்ந்து உண்மைகள்,பலருக்குத் தெரியாத(நான் உட்பட)விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியதே?வாழ்த்துக்கள்,மீண்டும்,மீண்டும்!!(எனக்கு எதற்கு நன்றி எல்லாம்?)

    ReplyDelete
  13. nalla thodar...rombave menakettu iruppathu kadhai kalathil therindhathu...Adutha thodar yeppothu...

    ReplyDelete
  14. Visit : http://blogintamil.blogspot.in/2014/04/blog-post_23.html

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.