சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகும் அம்சங்களை கதையிலோ மேக்கிங்கிலோ கொண்டிருக்கும். ஆனாலும் வெற்றி என்பது ஜஸ்ட் மிஸ் ஆகிவிடும். அந்த வகையில் இந்த வருடம் வெளியாகி, வெற்றியை கோட்டை விட்ட டாப் 5 படங்கள் பற்றிப் பார்ப்போம்.
மிஸ் # 5: குட்டிப்புலி
தென்மாவட்ட குலதெய்வங்களைப் பற்றிச் சொல்ல வந்த படம். சில குலதெய்வங்களுக்கு வித்தியாசமான ஒரு கதை இருக்கும். அவர்கள் அந்த குலத்திற்கோ, குடும்பத்திற்கோ நன்மை செய்வதற்காக தன் உயிரை மாய்த்திருப்பார்கள், சிலநேரங்களில் மானம் காக்க உயிரை விட்டிருப்பார்கள். அந்த மாதிரி குலதெய்வம் ஆன இரு பெண்களைப் பற்றிப் பேச வந்த படம்.
ஆனால் சசிகுமாரை மையப்படுத்தியே படம் நகர்ந்ததால், சசிகுமாரை பி&சி செண்டரில் நிலைநிறுத்த சில டகால்ட்டி வேலைகளைச் செய்ததால், எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனது. சசிக்குமாரிடம் எப்போதும் இயல்பான நடிப்புத்திறமை உண்டு. ஆனால் இதில் அவர் கிராமத்து ஹீரோயிசத்தில் இறங்கியதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. கும்கியில் நம் மனம் கவர்ந்த லட்சுமி மேனன், மூன்றாவது படமான இதிலேயே சாதாரண ஃபிகராக மாறிப்போன சோகமும் அரங்கேறியது. அதீத வன்முறை, ஓவர் பில்டப் ஹீரோயிசம், மெயின் கேரக்டர்களான அம்மாமாரை ஓரம் கட்டியது போன்ற காரணங்களால் நமக்கு முழு திருப்தி இல்லாமல் போனது. ஆனாலும் சசிக்குமாருக்கு இருந்த ஓப்பனிங்கால் நஷ்டமின்றி படம் தப்பித்தது. இதே பாதையில் போனால் சசிக்குமாரை அவரது குலதெய்வத்தால்கூட காப்பாற்ற முடியாது என்பது நிச்சயம்.
மிஸ் # 4: சேட்டை
Real Miss # 1 |
ஹிந்தியில் வெற்றி பெற்ற டெல்லி பெல்லியின் தமிழாக்கம். தமிழுக்கு ஏற்றாற்போல் மாற்றி எடுப்பதாக இயக்குநர் ஷூட்டிங்கின்போது சொல்லியிருந்தார். ஹிந்தி ஒரிஜினலைப் பார்த்தவன் என்பதால், நல்ல செக்ஸுவல் காமெடிப்படமாக, நியூ போன்று வரும் என்று நம்பியிருந்தேன். டூ பீஸ் ட்ரெஸ்ஸே சாதாரணமாகிவிட்ட பாலிவுட்டுக்கும் நம் கோலிவுட்டுக்கும் ரசனையில் நிறையவே வித்தியாசம் உண்டு. நம் மக்களுக்கு பப்பரப்பா என்று வந்தால் புஸ்ஸ் ஆகிவிடும். இலைமறை காயாக இருப்பதில் தான் கிக் அதிகம் என்று நம்பும் அப்பாவிகள் நம் மக்கள்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அணுகுண்டு ரேஞ்சுக்கு அப்படியே ஹிந்தியில் இருந்து ரீமேக்கியிருந்தார்கள். நம் மக்களுக்கு அது ஓவரோ ஓவர் டோஸ். நம்மை மாதிரி யோக்கியர்களே ‘அடப்பாவிகளா..இப்படியாடா பப்ளிக்கா எடுப்பீங்க’ என்று பதறும் அளவுக்கு காட்சிகள் இருந்தது தான் படத்தை காலி செய்தது. ஆனாலும் நாசர் துணியை விரித்து, தூசு இல்லாமல் ஊதிவிட்டு, அதை ஊற்றும் காட்சியில் சிரித்து வயிறு வலித்துவிட்டது. தொடர்ந்து சந்தானம் படம் முழுக்க, கக்கா போனதில் தான் நம் ஆட்கள் டர்ர் ஆகிப்போனார்கள். ஹோட்டல் அறையில் அஞ்சலி செய்த அந்த ஆக்டிங்கை ரசிக்க, நம் தமிழ்ச்சமூகத்திற்கு இன்னும் ஐம்பது வருசம் தேவைப்படலாம். கொஞ்சம் ஆபாசத்தையும் நாற்றத்தையும் கண்ட்ரோல் செய்திருந்தால், படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். எல்லாம் வேஸ்ட் ஆகிவிட்டது.
மிஸ் # 3: வத்திக்குச்சி
ஒரு ஹீரோ..அவனைக் கொல்ல முயலும் மூன்று வில்லன் கும்பல் என பரபரவென ஆரம்பித்த படம். செம ஸ்டைலான மேக்கிங்கில் புது இயக்குநர் கின்ஸ்லின் அசத்தியிருந்தார். அஞ்சலியின் இங்கிலீஸ் ஸ்பீக்கிங் கிளாஸ் காமெடியும் அலட்டலான நடிப்பும் நம் மனதைக் கவர்ந்தன. ஒரு நல்ல ஆக்சன் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம். ஆனால்..
படத்தின் முதல் குறை ஹீரோவாக நடித்த மனிதர் தான். ஹீரோவுக்கான முகவெட்டு இல்லாததுகூடப் பர்வாயில்லை, நடிப்பு என்பதே சுத்தமாக் வரவில்லை. முருகதாஸ் தம்பி என்று அறிமுகப்படுத்தினார்கள். பாவம் இயக்குநர் கின்ஸ்லின்..மனதிற்குள் எப்படியெல்லாம் திட்டினாரோ! படத்தில் இருந்த லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும், ஹீரோ பெரிதாக ஏதோ செய்கிறார் என்று நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் நன்றாக தூங்கி ரெஸ்ட் எடுத்துவிட்டு, இட்லி சாப்பிட்டு ஹீரோ ஃபைட் செய்யும் கிளைமாக்ஸ் தான் படத்தை பப்படம் ஆக்கியது. ஒரு நல்ல கதை இப்படி வீணாகிவிட்டதே என்று படம் பார்த்து பலநாட்களுக்கு வருத்தமாக இருந்தது. கின்ஸ்லின் அடுத்த படம் செய்கிறாரா என்று தெரியவில்லை. நல்ல நடிகர் அமைந்தால், தன்னை அதில் நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.
மிஸ் # 2: சமர்
தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்த விஷாலின் படம் தானே என்று சுவாரஸ்யம் இல்லாமல் பார்த்த படம். ஆனால் காட்சிக்குக் காட்சி சஸ்பென்ஸை ஏற்றி, மிரட்டினார்கள். இயக்குநர் ஆங்கிலப்படங்களை அதிகம் பார்ப்பவர் போலிருக்கிறது. நல்ல ஸ்டைலிஷான மேக்கிங். ஆங்கிலப்பட ஸ்டைலில் காட்சிகள், ஹீரோவைப் போலவே நமக்கும் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ். அடடா..சூப்பர் படம் என்று நாம் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போன நேரத்தில், சப்பையாக ஒரு கிளைமேக்ஸ்.
முடிச்சு மேல் முடிச்சாக போட்டு சுவாரஸ்யத்தை ஏற்றியவர்கள், எப்படி முடிச்சை அவிழ்ப்பது என்று தெரியாமல் ஏனோதானோவென்று சஸ்பென்சை உடைத்திருப்பார்கள். (அதற்குத் தான் முடிச்சை அவிழ்க்க, ஆங்கிலப்படங்களை மட்டும் பார்த்தால் போதாது, நம் மல்லுப்படங்களையும் பார்க்க வேண்டும் என்று சொல்வது!). படத்தில் இன்னொரு அதிசயம், கமலா காமேஸின் பெர்ஃபார்மன்ஸ். தனக்கு நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்திருந்தார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில்கூட இப்படி ஒரு நடிப்பை நாம் பார்க்கவில்லை. ஏற்கனவே விஷாலின் முந்தைய தோல்விப்படங்களின் எஃபக்ட்டும் சேர்ந்து, இந்தப் படத்தை சூப்பர் ஹிட் ஆகாமல் தடுத்துவிட்டது தான் சோகம்.
மிஸ் # 1: 555
தமிழ் சினிமாவில் வந்த நல்ல த்ரில்லர்களில் ஒன்று 555. ஏற்கனவே பூ போன்ற தரமான படங்களைக் கொடுத்து, நம் மனதில் இடம்பிடித்த இயக்குநர் சசியின் இயக்கத்தில் வந்த படம் இது. நம் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் திரைக்கதையில் கலக்கியிருந்தார். சந்தானம் குணச்சித்திர வேடத்திற்கும் பொருந்திப்போவார் என்று நமக்கு உணர்த்திய படம். ஹீரோ-ஹீரோயினின் காதல் காட்சிகள், செம ஜாலியாக இருந்தது. பரத் இந்த படத்திற்காக தன் உடலையே உருமாற்றி 6 பேக்குடன் வந்தார்.
எல்லாம் சரியாக இருந்தும் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. முந்தைய பரத் படங்களைப் போன்றே இதுவும் இருக்கும் என்று மக்கள் நினைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. மற்ற இயக்குநர்கள் அளவிற்கு தடால் புடால் என்று பேசி, மீடியா வெளிச்சத்திலேயே வலம் வரும் நபரல்ல சசி. சில இயக்குநர்கள் கட்டி எழுப்பியிருக்கும் பிம்பத்தைப் பார்த்தால், அவர்களது குப்பைப் படத்தைக்கூட குறை சொல்ல பயமாயிருக்கிறது. அறிவுக்கொழுந்துகள் பாய்ந்து வந்து பிராண்டுகிறார்கள். ஆனால் தமிழில் உள்ள நல்ல இயக்குநர்களில் ஒருவரான சசியைக் காப்பாற்ற இங்கே ஆளில்லை. ‘தமிழன் ஒரு மடையன்..இங்கே எவனுக்கும் படம் பார்க்கத் தெரியாது..என்னை ஜப்பான்ல கூப்ட்டாங்கோ’ ரேஞ்சில் அள்ளி விட்டால்தான் இங்கே பிழைக்க முடியும்போல் உள்ளது.
சசி எடுத்த ஐந்து படங்களுமே வெவ்வேறு ஜெனர்களைச் சேர்ந்தவை. ஆனால் அத்தனை படங்களையும் மனிதர் பெர்ஃபெக்ட்டாக கொடுத்திருப்பார். அவரது இந்த நல்ல படமும் பெரிய வெற்றியை அடையமுடியாமல் போனது, தமிழ் சினிமாவிற்குத் தான் இழப்பு.
ReplyDeleteஇறுதிவரை கொஞ்சம் பரபரப்பு இருக்கும் வகையில் வத்திக்குச்சியும், சமரும் நல்ல படங்கள் தான்....
இந்தப் படமெல்லாம்,பார்த்து முடித்ததுமே மறந்தே போய் விட்டது!(வயசும் காரணமோ?)நினைவுறுத்தி விமர்சித்த உங்களுக்கு நன்றி!
ReplyDeleteஎனக்கு சேட்டை சமர் இரண்டுமே பிடித்து இருந்தன
ReplyDeleteமிஸ் # 1
ReplyDeleteகுட்டிப்புலி பார்த்துவிட்டு தாங்க முடியாமல் நான் எழுதிய பதிவு...
http://schoolpaiyan2012.blogspot.com/2013/06/blog-post_24.html
மிஸ் # 2
//ஆனாலும் நாசர் துணியை விரித்து, தூசு இல்லாமல் ஊதிவிட்டு, அதை ஊற்றும் காட்சியில் சிரித்து வயிறு வலித்துவிட்டது. //
டின் கோக் வாங்கி வாயில் ஊற்றும்போது இந்தக் காட்சி வந்தது.. படம் பார்த்த எனக்கு எப்படி இருந்திருக்கும்?
மிஸ் # 3
influence இருந்தால் யார் வேண்டுமானாலும் நடிக்க வரலாம் என்பதற்கு உதாரணமாக இருந்தது. இந்தப்படம் பற்றிய என்னுடைய பதிவு...
http://schoolpaiyan2012.blogspot.com/2013/03/blog-post_16.html
மிஸ் # 4 மற்றும் மிஸ் # 5 பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை...
ஹிந்தி டெல்லி பெல்லிய பார்த்தப்புறம் வந்த பீல், சேட்டைல வரல.. அதீத எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக இருந்துருக்கலாம்...
ReplyDeleteசேட்டைன்னு சொன்னப்புறம்தான் சமீபத்துல வாசிச்ச ஒரு மேட்டர் ஞாபகம் வருதுண்ணே, அந்த படத்தின் எக்ஸ்க்டிவ் ப்ரொட்யூசர் நம்ம ஆரண்யகாண்டம் தியாகராஜா குமாரஜனை இந்த ரீமேக்கை எடுத்து தருமாறு கேட்டாராம், அதுவும், எனக்கு ஆரண்யகாண்டம் மேகிங் ஒன்னும் எங்களுக்கு பெருசா புடிக்கல, ஆனாலும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தர்றோம்னு சொன்னாராம்.. தியாகராஜா ஒத்துகலயாம்..
அட.. 555.. சந்தானம் ரசிகர்கள்ன்னு சொல்லிக்கிற நாமலே இந்த படத்த பார்க்கலியே.. சமீபத்துல சந்தானத்தின் 2013 கெரியர பத்தி எழுதுன பதிவின் போதுகூட இந்த படம் ஞாபகம் வரல!
ReplyDeleteஇன்னும் இந்த லிஸ்ட் பார்க்கவில்லை எப்படி வாத்தியாரே இப்படி படம் பார்க்க நேரம் ஒதுக்க முடியுது? ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி??!;))))))
ReplyDelete//தமிழ்வாசி பிரகாஷ்said...
ReplyDeleteஇறுதிவரை கொஞ்சம் பரபரப்பு இருக்கும் வகையில் வத்திக்குச்சியும், சமரும் நல்ல படங்கள் தான்....//
ஆமாம்யா..சமர் படம் எதிர்பார்க்காத ஆச்சரியம் தான்.
ReplyDelete//Subramaniam Yogarasa said...
இந்தப் படமெல்லாம்,பார்த்து முடித்ததுமே மறந்தே போய் விட்டது!(வயசும் காரணமோ?)நினைவுறுத்தி விமர்சித்த உங்களுக்கு நன்றி! //
படத்தை விடுங்க..அந்த மிஸ்களை மறக்கலை இல்லியா?
//சக்கர கட்டிsaid...
ReplyDeleteஎனக்கு சேட்டை சமர் இரண்டுமே பிடித்து இருந்தன //
ஒரிஜினல் பார்த்துட்டு தமிழ்ல பார்த்ததாலயோ என்னவோ சேட்டை முழு திருப்தி தரலை.
ஸ்கூல் பையன்said...
ReplyDelete//குட்டிப்புலி பார்த்துவிட்டு தாங்க முடியாமல் நான் எழுதிய பதிவு...//
அவ்ளோ வலிச்சதாய்யா?
//டின் கோக் வாங்கி வாயில் ஊற்றும்போது இந்தக் காட்சி வந்தது.. படம் பார்த்த எனக்கு எப்படி இருந்திருக்கும்?//
ஹா..ஹா..எதிர இருந்தவன் தலை எப்படி ஆகியிருக்கும்னு யோசிக்கிறேன் ஸ்பை.
//மிஸ் # 4 மற்றும் மிஸ் # 5 பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை...//
நம்பரை தலைகீழா போட்டு வச்சிருக்கீரு...சமர் ஒரு தடவை பார்க்கலாம்.
//மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
ReplyDeleteஅந்த படத்தின் எக்ஸ்க்டிவ் ப்ரொட்யூசர் நம்ம ஆரண்யகாண்டம் தியாகராஜா குமாரஜனை இந்த ரீமேக்கை எடுத்து தருமாறு கேட்டாராம், அதுவும், எனக்கு ஆரண்யகாண்டம் மேகிங் ஒன்னும் எங்களுக்கு பெருசா புடிக்கல, ஆனாலும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தர்றோம்னு சொன்னாராம்.. தியாகராஜா ஒத்துகலயாம்..//
இந்த படத்தை எடுத்திருந்தா அவர் பேரு கெட்டிருக்கும்.. அந்த புரட்யூசருக்கு ஆரண்ய கான்டத்துல கெட்ட வார்த்தை மட்டும் தான் புரிஞ்சதுன்னு நினைக்கிறென்!
//தனிமரம்said...
ReplyDeleteஇன்னும் இந்த லிஸ்ட் பார்க்கவில்லை எப்படி வாத்தியாரே இப்படி படம் பார்க்க நேரம் ஒதுக்க முடியுது? ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி?//
இங்க வேற பொழுதுபோக்கு இல்லை சாமி.
இவன் வேற மாதிரியும் இந்த லிஸ்ட் படம் தான் ஜி.
ReplyDeleteஉங்கள நம்பி பர்ஸ் பஞ்சர் ஆகிருச்சு :(
செங்கோவி said...படத்தை விடுங்க..அந்த மிஸ் களை மறக்கலை இல்லியா?///'மிஸ்' சிங் இருந்திச்சா?அப்போ நான் சரியாப் ப(பி)டிக்கலப் போல?
ReplyDelete// கேரளாக்காரன் said...
ReplyDeleteஇவன் வேற மாதிரியும் இந்த லிஸ்ட் படம் தான் ஜி.
உங்கள நம்பி பர்ஸ் பஞ்சர் ஆகிருச்சு//
என் விமர்சனத்தைப் பார்த்து ரொம்ப எதிர்பார்த்து போயிருப்பீங்க..நீங்க என்னா செய்றீங்கன்னா, என் விமர்சனத்தை டோட்டலா மறந்துட்டு இன்னொரு தரம் பாருங்க, பிடிக்கும்!
//Subramaniam Yogarasa said...
ReplyDeleteசெங்கோவி said...படத்தை விடுங்க..அந்த மிஸ் களை மறக்கலை இல்லியா?///'மிஸ்' சிங் இருந்திச்சா?அப்போ நான் சரியாப் ப(பி)டிக்கலப் போல?//
ரைட்டு.
சமர் எனக்கு பிடித்தது.. ஏன் ஒடலைன்னு தெரியல..
ReplyDelete