Friday, December 20, 2013

பிரியாணி- திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
'பிரியாணியை விட ஆல் இன் ஆல் அழகுராஜா நன்றாக வந்திருப்பதால், அதை முதலில்விட முடிவு செய்திருக்கிறார்கள்’ என்று ஒரு செய்தி அழகுராஜா ரிலீஸ் ஆகும் முன்பு மீடியாவில் வந்தது. அதைப் படித்த பின்னும், பிரியாணியை முதல் ஷோ பார்க்க நெஞ்சுரத்துடன் போனேன் என்றால் அது ஹன்சிகாவுக்காகவா? நோ..! உங்களுக்காக மக்களே, உங்களுக்காக!

ஒரு ஊர்ல..:
பெரிய பிசினஸ்மேன் நாசர் காணாமல் போகிறார். (உண்மையில் கொலை செய்யப்படுறார்.) கடத்துன பழி கார்த்தி & பிரேம்ஜி மேல விழுகிறது. அதில் இருந்து எப்படி மீண்டார்கள் என்பதே கதை.

உரிச்சா....:

படத்தோட ஆரம்பக்காட்சிகள் வெங்கட் பிரபுவின் மத்த படங்கள் மாதிரியே குடி-கூத்திகளோட போகிறது. பார்க்கிற பெண்களை எல்லாம் ரூட் விடும் பிளேபாயாக கார்த்தியும் இன்னும் கன்னிப் பையனாகவே இருக்கும் பிரேம்ஜியும் செய்யும் சில கூத்துகளோடு முதல் அரைமணி நேரம் நகர்கிறது. நாசர் வந்த பிறகு தான் கதை ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் முதல் அரைமணியிலேயே கதைக்குத் தேவையான முக்கியமான சம்பவங்கள் நடந்திருப்பதை இரண்டாம்பாதியில் சஸ்பென்ஸ் உடையும்போதுதான் புரிந்து கொள்கிறோம். 

பிளே பாய் ஹீரோ என்று செய்திகளில் படித்தபோது ‘இது எங்க உருப்படப்போகுது’ என்று தான் நம் மனதில் தோன்றியது. ஆனால் ஏற்கனவே காதலியாக இருக்கும் ஹன்சிகாவிடம் நல்லபிள்ளை இமேஜை மெயிண்டெய்ன் செய்துகொண்டே கார்த்தி ஜொள்ளுவதும், மாட்டிக்கொண்டால் பிரேம்ஜி மேல் பழியைப் போடுவதுமாக ஜாலியாகவே சொல்லியிருக்கிறார்கள். மேலும் கதைக்கு அந்த பிளே பாய் கேரக்டர் தேவை என்பதால், நோ ஸ்டொமக் பர்னிங்!
இரண்டாம்பாதியில் போலீஸ் துரத்த, அக்காவையும் வில்லன் குரூப் கடத்திக்கொண்டு போய்விட, நாசரின் பிணத்துடன் கார்த்தி ஓடுவதால் படம் வேகமாகவே நகர்கிறது. எதிர்பாராத அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அருமை. அதை இடையில் சம்பத் வசனத்தில் சொல்வதை தவிர்த்திருக்கலாம். முதல்பாதியில் சகஜமாக வந்த அந்த கடத்தல் காட்சியே போதுமானது.

மங்காத்தா பாணியில் முதல்பாதி முழுக்க நமக்குத் தெரிந்தும், தெரியாமலும் முடிச்சுகள் விழுந்துகொண்டே இருப்பதால், கொஞ்சம் ஸ்லோவாகவே நகர்கிறது. போலீஸ் துரத்த ஆரம்பித்த பின்பே, படம் வேகம் எடுக்கிறது. அடுத்து உமா ரியாஸ் கேரக்டர் வந்ததும், செம ஸ்பீடு.  பே கில்லர் வேடத்தில் ஆண்களையே பார்த்துச் சலித்த நமக்கு, உமா ரியாஸ் கேரக்டரும், கார்த்தியுடன் அவர் போடும் ஃபைட்டும் பெரிய மாறுதல். மௌன குரு படத்திற்குப் பிறகு இதில் உமா ரியாஸ்க்கு நல்ல ரோல். பின்னி இருக்கிறார்.

நாசரின் மருமகனாக ராம்கி வருகிறார். ரொம்ப நாளைக்கு அப்புறம் மனிதரின் ரீ-எண்ட்ரி. நன்றாகவே நடித்திருக்கிறார். கார்த்தியுடன் ஃபைட் பண்ணும்போது, பழைய ராம்கியை பார்க்க முடிந்தது. ஜெயப்பிரகாஷ் ஒரு அற்புதமான நடிகர். இதில் அல்லக்கையாக வேஸ்ட் செய்துவிட்டார்கள். சம்பத் நிலைமையும் அப்படியே!

ஸ்லோவான முதல்பாதி + மெதுவாக சூடு பிடிக்கும் இரண்டாம்பாது + விறுவிறுப்பான கடைசி அரைமணி நேரம் என்று படம் போவதால், மொக்கை என்றோ சூப்பர் என்றோ ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாத நிலை.

கார்த்தி:
ஒரு படத்தின் வெற்றிக்கு ஹீரோவின் வரலாறும் ஒரு காரணமாகவே இருக்கிறது. சகுனிக்கு முன்புவரை கார்த்திக்கு நல்ல பெயர் இருந்தது. சகுனியின் ஆரம்பித்த சரிவு, அலெக்ஸ் பாண்டியனில் ஆழமாகி, ஆல் இன் ஆல் அழகுராவில் அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. இப்போது கார்த்தியின் படங்களை சந்தேகக்கண்ணோட்டத்துடனே எல்லோரும் பார்க்கும் அவலநிலை. கார்த்தி இஸ் அண்டர் டெஸ்ட் நவ்! 

தொடர்ந்து ஹிட் கொடுத்த நேரத்தில் வந்திருந்தால், இந்தப் படம்  தப்பியிருக்கலாம். விஷால் மாதிரியே கார்த்திக்கும் வந்திருப்பது பெரும் வீழ்ச்சி. பாண்டிய நாடு மூலம் விஷால் உஷார் ஆனது போல், கார்த்தியும் ஆக வேண்டியது கட்டாயம். வழக்கம்போல் நடிப்பிலும், காமெடியிலும், ஆக்சனிலும் கார்த்தி இந்தப் படத்தில் கலக்கியிருக்கிறார். இந்த டான்ஸ் தான் வர மாட்டேங்குது. 

ஹன்சிகா:
கதைப்படியே இது ஒரு துணைக் கேரக்டர் தான்.  பாடல்களுக்கு ஆடுவது, ஹீரோவுடன் ஊடல் கொள்வது, பின்பாதியில் ஹீரோவைக் காப்பாற்ற தன் மீடியா பவரை யூஸ் பண்ணுவது என கொடுத்த வேலையை நிறைவாகவே செய்திருக்கிறார். சோக சீன், கண்ணீரைப் பிதுக்கி விடுவது போன்ற வேலைகள் எல்லாம் இல்லாதது நமக்கு ஆறுதல். இன்னொரு ஹீரோயினும் படத்தில் இருக்கிறது. கார்த்தியை கொலைக்கேஸில் மாட்டி விடுவது அந்த ஹீரோயின் தான். பெயர் மாண்டி தாக்கர்..பிடிங்க ஸ்டில்லை...

பிரேம்ஜி:
இவரை காமெடியன் என்று வெங்கட் பிரபு எதை வைத்து கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. முதல் படத்தில் இருந்து ஒரே மாதிரி டயலாக்ஸ் பேசிக்கொண்டு இவர் காலம் போகிறது. ஆனால் கதைப்படி அல்லது இயக்குநரின் விருப்பப்படி ஹீரோவுடன் படம் முழுக்க வரும் கேரக்டர். ஏதாவது ஃபிகரை தேத்த இவர் நினைப்பதும், கார்த்திக்கே அது செட்டாவதும் சுமார் காமெடி தான். 

அதைவிட கார்த்தி தான் செய்த தப்பையெல்லாம் பிரேம்ஜி செய்வதாக மாட்டிவிடுவதும், ஹன்சிகா பிரேம்ஜியை பின்னி எடுப்பதும் அருமை. பாத்ரூமில் ஒரு ஃபிகருடன் இருக்கும் கார்த்தியைக் காப்பாற்ற, அதே பாத்ரூமுக்குள் போக நினைக்கும் ஹன்சிகாவைத் தடுக்க இவர் பேசும் டயலாக்ஸ் அட்டகாசம். 

யுவன் ஷங்கர் ராஜா:

யுவனிற்கு இது நூறாவது படமாம். வாழ்த்துகள். வெங்கட் பிரபு படம் என்றாலே ஸ்பெஷல் மியூசிக் தான். இதிலும் அப்படியே. வழக்கமான பல்லவி-சரணம் என்று போகாமல், சரணத்தில் புதிதாக சில விஷயங்களை ட்ரை பண்ணி இருக்கிறார். முதல் தடவை கேட்கும்போது ஒரு மாதிரி இருந்தாலும், படத்தில் பார்க்க நன்றாகவே இருக்கிறது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- கார்த்தியின் முந்தைய மொக்கைப்படங்கள்.
- ஸ்லோவான முதல்பாதி திரைக்கதை. முதல் பாயிண்ட்டின் காரணமாக, அய்யய்யோ சிக்கிட்டமா எனும் ஃபீல் வருவதை தடுக்க முடியவில்லை.
- நாசர் வேடத்தில் பிரேம்ஜி வரும் அரதப்பழசான ஐடியா. (அதில் நாசர் பிரேம்ஜியின் பாடி லாங்குவேஜுடன் நடித்திருப்பது சூப்பர்.)\
- சப்பையான சிபிஐ கேரக்டரைசேசன்....சம்பத் ’அந்த’ லவ் மேட்டரை விசாரிக்காமல் இருப்பதில் லாஜிக் இல்லை. (இன்னொரு விஷயம்..படத்தில் கமிசனராக வரும் ஜெயப்பிரகாஷின் பெயர் சம்பத்..சிபிஐ ஆபீசராக வருபவரின் உண்மைப்பெயரும் சம்பத்..இது படம் பார்க்கும்போதே டிஸ்டர்ப் செய்தது. இதை அவாய்ட் பண்ணுங்க பாஸ்!)
- தேவையில்லாத சீனிலும் குடித்துக் கொண்டே திரிவது. படத்திற்கு யூ/ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்தது சரி தான்.
- மொக்கையான டான்ஸ்
- அந்த குஜிலியின் கில்மா பாட்டை கட் செய்தது.(இது குவைத் சோகக்கதை பாஸ்..நீங்க எஞ்சாய் பண்ணுங்க!)

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- சஸ்பென்ஸை மெயிண்டெய்ன் செய்த திரைக்கதை. 
- உமா ரியாஸ் கேரக்டர்
- ஃபைட் சீன்ஸ்
- பரபரப்பான கிளைமாக்ஸ்.
- ஹி..ஹி..ஹன்சிகா 

பார்க்கலாமா? :
இது வெங்கட் பிரபுவின் மங்காத்தா அல்ல..சரோஜா. உங்களுக்கு சரோஜா பிடிக்கும்னா.................சாமான் நிக்காலோ!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

 1. இன்னைக்கு நைட் நாங்க போறோம் பாஸ்....வெங்கட் பிரபு படம் பிடிக்கும்...உங்க ரிவியூ கூட பாசிடிவ்வாக தான் இருக்கு...பார்த்திட்டு சொல்றேன்... :-)

  ReplyDelete
 2. உம விமர்சனம் எங்களுக்கு ஆறுதலா இருக்கோ இல்லையோ? நடிகர் கார்த்திக்கு ஆறுதலா இருக்கும்...

  ReplyDelete
 3. தல இன்னொரு சரோஜாவா? கண்டிப்பா பாத்துட வேண்டியதுதான்

  ReplyDelete
 4. மனோ சாமான் நிக்காலோ, படம் பார்த்துருவோம், பிரியாணி சாப்பிட்டுருவோம்.

  ReplyDelete
 5. ஓரளவுக்கு தேறுவது மாதிரி தெரியுது...

  பார்ப்போம்

  ReplyDelete
 6. அப்ப பார்த்துர வேண்டியது தான்

  ReplyDelete
 7. வணக்கமுங்க!நல்ல விமர்சனமுங்க!///என்ன தான் நீங்க 'மலையாளி' ன்னாலும்,இவ்ளோ பற்று கூடாதுங்கோ,ஹ!ஹ!!ஹா!!!

  ReplyDelete
 8. அருமையான விமர்சனம். பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 9. நல்ல விமர்சனம், அதென்ன கில்மா பாட்டு கட்?

  ReplyDelete
 10. //ராஜ் said...
  இன்னைக்கு நைட் நாங்க போறோம் பாஸ்....வெங்கட் பிரபு படம் பிடிக்கும்...உங்க ரிவியூ கூட பாசிடிவ்வாக தான் இருக்கு...பார்த்திட்டு சொல்றேன்... :-)// ஒரு முறை பார்க்கலாம்..இதை நிறுத்திவிட்டு அழகுராஜாவை ஏன் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.

  ReplyDelete
 11. //தமிழ்வாசி பிரகாஷ் said...
  உம விமர்சனம் எங்களுக்கு ஆறுதலா இருக்கோ இல்லையோ? நடிகர் கார்த்திக்கு ஆறுதலா இருக்கும்...// உமக்கு எப்படி இருக்குன்னு எனக்குத் தெரியும்யா!

  ReplyDelete
 12. // Manimaran said...
  தல இன்னொரு சரோஜாவா? கண்டிப்பா பாத்துட வேண்டியதுதான்// பார்த்துட்டுச் சொல்லுங்க.

  ReplyDelete
 13. /MANO நாஞ்சில் மனோ said...
  மனோ சாமான் நிக்காலோ, படம் பார்த்துருவோம், பிரியாணி சாப்பிட்டுருவோம்.//

  நிக்கல் ஜாவோ!

  ReplyDelete
 14. //கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ஓரளவுக்கு தேறுவது மாதிரி தெரியுது...பார்ப்போம்//

  ஓரளவுக்குத் தான் பாஸ்..

  ReplyDelete
 15. //சக்கர கட்டி said...
  அப்ப பார்த்துர வேண்டியது தான்// ‘பார்க்க’க்கூடிய படம் தான் சக்கரை.

  ReplyDelete
 16. //கேரளாக்காரன் said...
  This week quota Dhoom ³// அந்த படத்தை மிஸ் பண்ணதுல எனக்கும் வருத்தம் தான்..நீங்களாவது பாருங்க.

  ReplyDelete
 17. //Subramaniam Yogarasa said...
  வணக்கமுங்க!நல்ல விமர்சனமுங்க!///என்ன தான் நீங்க 'மலையாளி' ன்னாலும்,இவ்ளோ பற்று கூடாதுங்கோ,ஹ!ஹ!!ஹா!//

  நானும் கும்பிட்டுக்கிறேனுங்கோ..நான் மலையாளின்னு கிளப்பி விடாதீங்கோ.

  ReplyDelete
 18. // N.H.பிரசாத் said...
  அருமையான விமர்சனம். பகிர்ந்தமைக்கு நன்றி.// ஓகே பாஸ்..வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 19. //Pratheep said...
  நல்ல விமர்சனம், அதென்ன கில்மா பாட்டு கட்?// குஜிலி மாண்டியா தாக்கருடன் கார்த்தி ஆடும் மிசிசிப்பி பாடல்..இங்கே குவைத்தில் சென்சாரில் தூக்கிட்டாங்க.

  ReplyDelete
 20. டிவில போடும்போது பார்த்துக்குறேனுங்க

  ReplyDelete
 21. கார்த்தியையும் சந்தானத்தையும் கொஞ்ச நாள் பிரிச்சு வச்சாலே, ரெண்டு பேர் படமும் ஓடும் போல இருக்கே! என்றென்றும் புன்னகையும் நல்ல இருக்காம்லண்ணே

  ReplyDelete
 22. //ராஜிsaid...
  டிவில போடும்போது பார்த்துக்குறேனுங்க//

  உங்களுக்குப் பிடிக்காதுக்கா!

  ReplyDelete
 23. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  கார்த்தியையும் சந்தானத்தையும் கொஞ்ச நாள் பிரிச்சு வச்சாலே, ரெண்டு பேர் படமும் ஓடும் போல இருக்கே! என்றென்றும் புன்னகையும் நல்ல இருக்காம்லண்ணே
  //

  ஆமாம் மொக்கை..ரெண்டுபேருமே ஓவர் கான்ஃபிடன்ஸ்ல கவுந்துட்டாங்க. இனிமே முழிச்சுப்பாங்க.

  ReplyDelete
 24. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  கார்த்தியையும் சந்தானத்தையும் கொஞ்ச நாள் பிரிச்சு வச்சாலே, ரெண்டு பேர் படமும் ஓடும் போல இருக்கே! என்றென்றும் புன்னகையும் நல்ல இருக்காம்லண்ணே
  //

  ஆமாம் மொக்கை..ரெண்டுபேருமே ஓவர் கான்ஃபிடன்ஸ்ல கவுந்துட்டாங்க. இனிமே முழிச்சுப்பாங்க.

  ReplyDelete
 25. நல்ல படம் குஜிலிக்காகா தான் படம் பார்த்தேன் .. பட் படம் எதிர்பார்த்த அளவு இல்லை

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.