அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
2013ம் ஆண்டு வெளியான படங்கள் பற்றிய அலசலில் கடைசிப்பதிவை, ஆண்டின் கடைசிநாளான இன்று பார்த்துவிடுவோம். ராஜா ராணி, எதிர்நீச்சல், இவன் வேற மாதிரி என்று சில படங்கள் ஹிட் அடித்திருந்தாலும், எல்லா சென்டர்களிலும் சூப்பர் ஹிட் ஆன படங்களின் லிஸ்ட் கீழே:
சூப்பர் ஹிட்#5: பாண்டிய நாடு:
தீபாவளி ரேஸில் மூன்றாவது அணியாய் களமிறங்கிய படம். ஒரு நல்ல தரமான ஆக்சன் மூவியாக இருந்ததால், விஷாலுக்கு உண்மையான ஹிட்டாக அமைந்தது. படம் வெளிவரும் முன்பே கலாய்ச்சிஃபை பாடல் ஹிட்டாகி, படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.
ஓவர் பில்டப் இல்லாத ஹீரோயிசம், பழிவாங்க முயலும் அப்பா கேரக்டர், அதில் பாரதிராஜாவின் நடிப்பு, பவர்ஃபுல்லான வில்லன் கேரக்டர் என எல்லா விஷயங்களுமே அருமையாக அமைந்த படம். சுசீந்திரனின் 'நான் மகான் அல்ல' சாயல் இருந்தாலும், உதவியாளர் கதையை சுட்டுவிட்டதாக புகார் கிளம்பினாலும், விஷால் ஹாப்பி அண்ணாச்சி!
சூப்பர் ஹிட்#4: சிங்கம்-2:
தமிழ்சினிமாவில் பார்ட்-1, பார்ட்-2 என சீரீஸ் படங்கள் வெற்றி பெறாது எனும் சென்ட்டிமென்ட்டை அடித்து நொறுக்கிய படம். முதல் பாகத்தைவிட, அதிக விறுவிறுப்பான படம். ஹரியின் மசாலா ட் ரீட் என்பதால், எல்லா ஏரியாக்களிலும் பட்டையைக் கிளப்பியது சிங்கம்-2.
முதல் பாகத்தை புத்திசாலித்தனமாக, உறுத்தாமல் இதில் இணைத்தது, அந்த ஆப்பிரிக்க வில்லன் கேரக்டர், சிங்கம் போன்றே சூர்யாவை தாவி ஓட வைத்து புது எஃபக்ட்டைப் பார்ப்போருக்கு கொடுத்தது என ஒரு நல்ல கமர்சியல் படத்திற்கு உரிய அத்தனை அம்சங்களுடன் எடுத்திருந்தார்கள். பாடல்கள்தான் முதல் பாகம் அளவிற்கு இல்லை. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த சூர்யாவை தலை நிமிர வைத்த படம்.
சூப்பர் ஹிட் # 3: ஆரம்பம்
ஆவரேஜாக இருந்தாலே போதும், மாஸ் ஹீரோக்களின் படம் தப்பிவிடும் என்று நிரூபித்த படம். பில்லா-2 இயக்கியிருக்க வேண்டிய விஷ்ணுவர்த்தன், அதிலிருந்து விலகிக்கொண்டு இந்த படத்திற்கான கதையை ரெடி பண்ணினார். ஹேமந்த் கர்கரேவின் கதையை அடிப்படையாக வைத்து எழுதியிருப்பதை அண்ணன் உண்மைத்தமிழன் கண்டுபிடித்துச் சொன்னார். படத்தில் ஸ்ட் ராங்கான அரசியல் இருந்தும், எந்த பிரச்சினையும் இல்லாமல் கமுக்கமாக வெளியான படம். பாம்பாகவே இருந்தாலும், இது மாதிரி பரமசிவன் கழுத்தில் இருக்க வேண்டும்!
ஸ்டைலிஷான மேக்கிங், அஜித்தின் ஹாலிவுட் ஹீரோ லுக், வயதுக்குப் பொருத்தமான கேரக்டர், ஜோடி இல்லாத ஹீரோ கேரக்டர், ஆர்யாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என பல பாசிடிவ் விஷயங்கள் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கின. லாஜிக் பற்றி இயக்குநர் அதிகம் அலட்டிக்கொள்ளாதது தான் படத்தின் குறை. அஜித் எனும் மேஜிக்கினால் அந்த குறையும் பார்வையாளர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
சூப்பர் ஹிட் #2 : விஸ்வரூபம்
தமிழ்நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திய படம். அரசியல் காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தடுக்கப்பட, கமல் சாமர்த்தியமாக அதை மீடியாவிடம் கொண்டு சென்றார். தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை அதன்மூலம் வென்றார். வழக்கமாக கமல் படம் பார்க்காதவர்கூட, இந்தப்படத்தை பார்த்தே தீருவது என்று களமிறங்கினார்கள். விளைவு, படம் சூப்பர் டூப்பர்ஹிட்.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் கமலின் பங்களிப்பை மறுக்க முடியாது. இதிலும் ஹாலிவுட் தரத்தில் காட்சிகளை அமைத்திருந்தார். குறிப்பாக ஆப்கான் காட்சிகளும், விஸ்வரூபம் எடுக்கும் காட்சியும் கமலின் திறமையை பறைசாற்றின. படம் இரு பாகங்களாக பிரிக்கப்பட்டதால், பல கேள்விகளுக்கும் விடை இல்லாமல் படம் முடிந்தது. கிளைமாக்ஸே இல்லாமல் தமிழில் வந்த படம் என்றும் சொல்லலாம். 24 அமைப்புகள் மட்டும் கமலுக்கு "ஆதரவாக" களம் இறங்கியிருக்கவில்லை என்றால், வசூல்ரீதியாக படம் இந்தளவுக்கு வெற்றி அடைந்திருக்காது. அடுத்த பாகத்திற்கும் இதே மாதிரி பொங்கி, கமலுக்கு ஆதரவளிக்க கேட்டுக்கொள்வோம்.
சூப்பர் ஹிட் #1: சூது கவ்வும்
இந்த வருடத்தின் ஆச்சரியங்களில் ஒன்று இந்தப் படம். வித்தியாசமான கான்செப்ட்டில் வெளியாகி, கமர்சியலாகவும் வெற்றி பெற்றது தான் ஆச்சரியத்திற்குக் காரணம். பொதுவாக இத்தகைய படங்கள் இணையத்திலும், ஏ சென்டர்லும் மட்டுமே வெற்றியடையும். தமிழ் சினிமாவில் முதன்முதலாக சூப்பர் ஹிட்டான நுவோ நுஆர் படமாக சூது கவ்வும் அமைந்தது. இறுதியில் தீமையே வெல்லும் என்பதுபோல் காட்டியது ஒன்று தான் படத்தின் குறை.
விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பு, அவர் சொல்லும் கொள்கைகள், மாய ஹீரோயின் கேரக்டர், மந்திரி மகனே கடத்தலுக்கு உதவும் ட்விஸ்ட், அந்த பேசாத இன்ஸ்பெக்டர் கேரக்டர், முக்கியமாக அந்த கிளைமாக்ஸ் டுமீல் என படத்தில் பாராட்ட ஏகப்பட்ட விஷயங்கள். ஒவ்வொரு சீனிலும், கேரக்டர்களிலும் பெர்பெக்சனை மெயின்டெய்ன் செய்திருந்தார்கள். தரத்தையும் பொழுதுபோக்கு அம்சன்களையும் ஒன்றுபோல் மெயின்டெய்ன் செய்துகொண்டு, திரும்பத் திரும்ப பார்க்கக்கூடிய படமாக அமைந்ததால், நம்மைப் பொறுத்தவரை இவ்வாண்டின் நம்பர் ஒன் மூவி சூது கவ்வும் தான்.
பாண்டிய நாட்டிற்கு மட்டும் செல்லவில்லை...!
ReplyDeleteஅருமை...
ReplyDeletewatched all 5 movies in theatre.
ReplyDeleteMy rankings
1. Vishwaroopam
2. Aarambam
3. Paandiyanaadu
4. Soodhukavvum
5. Singham 2
All are very good movies,
ReplyDelete2008-2013 வருடத்தில் அதிக லாபத்தை /நஷ்டத்தை ஏற்படுத்திய பங்குகள்
தேர்வுகள் சரி தான்,விமர்சனமும் கூடவே!!!நன்று!!!!
ReplyDeleteஇன்னும் சிலது முழுமையாக பார்க்கவில்லை பார்ப்போம் விரைவில் . முன்கூட்டிய இனிய் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் குடும்பத்தார்களுக்கும்.
ReplyDeleteவலையை சிறப்பாக வடிவமைத்து இருக்கின்றீர்கள்.வித்தியாச்மான் ர்சனை. ஆமா ஏன் ஹான்சிகா மிஸ்சிங்??ஹீஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ........!
ReplyDeleteஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஉங்கள் பார்வையில் சூப்பர் ஹிட்-5 அருமை.
ReplyDeleteSoodhukavvum padama?
ReplyDeleteSoodhukavvum padama?
ReplyDelete