Sunday, December 29, 2013

2013: டாப் 5 காமெடிப்படங்கள் - ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் திடீரென ஒரு ட்ரென்ட் ஸ்டார்ட் ஆகி, அதே ஜெனரில் படங்களாக வந்து குவியும். அந்தவகையில், இந்த ஆண்டு காமெடிப்படங்கள் வரிசைகட்டி வந்தன. ஜனவரியில் வந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தான் இந்த ட்ரெண்ட்டை ஆரம்பித்து வைத்தது. 'காமெடிப்படம் தான் ஓடுது' என்று நல்ல படைப்பாளிகளே சலித்துக்கொள்ளும் அளவிற்கு நிலைமை போனது. நல்லவேளையாக தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற மொக்கைப் படங்களால், இந்த ட்ரென்ட் ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது இந்த ஆன்ட்டின் டாப் 5 காமெடிப்படங்களைப் பார்ப்போம் வாருங்கள்.

டாப் 5 : கேடி பில்லா கில்லாடி ரங்கா
 பசங்க, வம்சம், மெரீனா போன்ற தரமான படங்களைக் கொடுத்த பாண்டிராஜ், இனி இப்படி இருந்தால் பொழைக்க முடியாது என்று உணர்ந்து இறங்கி அடித்த படம். மிகவும் சுமாரான மேக்கிங்குடன் 'கந்தா கடம்பா கதிர்வேலா' ரேஞ்சில் எடுக்கப்பட்ட படம்.
 
ஆனாலும் பாக்ஸ்  ஆபீஸில் படம் பட்டையைக் கிளப்பியது. சிவ கார்த்திகேயனின் டைமிங் காமெடியும், பிந்து மாதவியும், கிளைமாக்ஸில் வந்த உருக்கமான காட்சியும் படத்தைக் காப்பாற்றியது எனலாம். அதிசயமாக இதில் சூரியின் நகைச்சுவையை ரசிக்க முடிந்தது.
 
டாப் 4 : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
விஜய் சேதுபதி கொடுத்த இரன்டாவது ஹிட் இந்தப் படம். முதல்பாதியில் வந்த அஸ்வின் சமந்தப்பட்ட காட்சிகள் நம் பொறுமையைச் சோதித்தாலும், விஜய் சேதுபதி ப்ளாஷ்பேக் சொல்லும் காட்சிகளும், இரன்டாம்பாதியிலும் கிளைமாக்ஸிலும் வந்த காமெடிக்காட்சிகளால் படம் தப்பித்தது.
 
வெறுமனே காமெடிப்படம் என்று ஒதுக்க முடியாதபடி, மதுவுக்கு எதிராக தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது இந்தப் படம். ரொம்ப நாளைக்குப்பிறகு பசுபதி என்ற மகாநடிகனுக்கு நல்ல தீனி போட்ட படம். நாயே..நாயே போன்ற வித்தியாசமான பாடல்களும் நம் மனதைக் கவர்ந்தன.
 
டாப் 3: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
 
சிவகார்த்திகேயனை ஸ்டார் நடிகராக உயர்த்திய படம்.  'உங்க அக்கா அழகாயிருப்பாளா?'போன்ற சிவகார்த்திகேயனின் டைமிங் பஞ்ச்களுடன் கலக்கிய படம். வடிவேலு சொன்ன 'த்ரிஷா இல்லேன்னா திவ்யா' டயலாக்கை உண்மையாக்குவதுபோல் புதுமுகம் ஸ்ரீதிவ்யா அறிமுகம் ஆனதாக ஒரு பேஸ்புக் நண்பர்(பேர் மறந்துடுச்சு) எழுதியிருந்தார்.
 
பொதுவாக தாவணியே 50% அழகைக் கொடுத்துவிடும். சதா என்ற சாதா நடிகையும் ஜெயம்மில் நம்மை ஏமாற்றியிருக்கிறார். எனவே ஸ்ரீதிவ்யாவின் அடுத்த படத்தில்தான் தெரியும் அம்மணி எப்படியென்று.ஆனாலும் இந்த ஆண்டு ஏக வரவேற்புப் பெற்ற அறிமுகநாயகி என்று ஸ்ரீதிவ்யாவைச் சொல்லலாம்.
 
சத்தியராஜ் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட படம். சூப்பர் ஹிட்டான அட்டகாசமான பாடல்களுடன், ராஜேஷின் காமெடி டயலாக்களும் சேர படம் சூப்பர் ஹிட்.
 
டாப் 2: கண்ணா லட்டு தின்ன ஆசையா?
 
திரைக்கதை மன்னன் பாக்கியராஜின் இன்று போய் நாளை வா-வின் ரீமேக்காக வந்த படம். வருட ஆரம்பத்திலேயே சூப்பர் ஹிட் ஆகி, சந்தானத்தை இந்த ஆண்டின் பிஸியான/பெஸ்ட் காமெடியனாக ஆக்கியது. ஆல் இன் ஆல் புண்ணியத்தில் இந்த ஆண்டின் ஒர்ஸ்ட் காமெடியனாகவும் அவர் ஆனது துரதிர்ஷ்டமே.
 
இயல்பிலேயே காமெடியான முகபாவம் கொண்ட பவர் ஸ்டாருக்கு ஒரு ரியல் ஹிட் இந்தப் படம். ஆனாலும் மனிதர்க்கு நடிப்பு தான் வரவில்லை. எனவே அடுத்து அவர் நடித்த எந்த படத்திலும்,அவரது நகைச்சுவை எடுபடவிம் இல்லை. ஒரிஜினலை சீன் பை சீன் அப்படியே எடுக்காமல்,  கதைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு காமெடியில் விளையாடியிருந்தார்கள். எனவே ஒரிஜினலில் இருந்த டச்சிங் மிஸ் ஆனாலும், படம் ஹிட் ஆனது.
 
டாப்1: தீயா வேலை செய்யணும் குமாரு!
கடந்த 18 வருடங்களாகவே காமெடிப்படம் எடுப்பதில் கிங்காக இருந்துவரும் சுந்தர்.சி, தனது 25வது படமான கலகலப்பு எனும் சூப்பர் ஹிட் படத்தை அடுத்து கொடுத்த படம். கவுண்டமணிக்கு உள்ளத்தை அள்ளித்தாவையும், வடிவேலுவுக்கு வின்னரையும் கொடுத்தவர், சந்தானத்திற்கு கொடுத்த ஹிட் 'தீயா வேலைசெய்யணும் குமாரு'. இடையில் நடிக்கப்போய் வழிதவறினாலும், காலத்திற்கு ஏற்றாற்போன்று தன்னை புதுப்பித்துக்கொண்டு இந்தப் படத்தில் கலக்கினார் சுந்தர்.சி
 
படத்தின் ஹீரோ என்றால் அது சந்தானம் தான். 'சம்பந்தி தான் அந்த அட்டு பிகரா?' என்று கேட்குமிடத்தில் சிரித்து வயிறு வலித்துவிட்டது. படம் முழுக்கவே செமயான பெர்ஃபார்மன்ஸ். ஆச்சரியமாக ஹன்சிகாவிற்கு நடிக்கத் தெரியும் என்று நிரூபித்த படம். வழக்கமான இஹி..இஹித்தனமில்லாமல், ஹன்சி நன்றாகவே நடித்திருந்தார்.
 
காமெடிப்படம் என்றாலும் மேக்கிங்கிலும் தரத்திலும் நம்மை அசத்தியதால், நம்பர் ஒன் இடம் இந்தப் படத்திற்கே! (சூது கவ்வும் இதைவிட பெட்டர்..ஆனால் அது அடுத்த பதிவான சூப்பர் ஹிட் பட வரிசையில் வரும்..அடுத்த பதிவோட2013க்கு கும்பிடு போட்டுடலாம்..டோன்ட் ஒர்ரி!)
 
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

 1. கண்ணா லட்டு திங்க ஆசையா மட்டும்தான் நான் பார்த்தேன், நல்ல காமெடி...

  ஒரு படம் ஹிட் ஆச்சுன்னா நம்மாளுங்க அதை சுற்றி சுற்றித்தானே வாறாங்க.

  ReplyDelete
 2. அது பிஸினஸ் தந்திரம்ணே!

  ReplyDelete
 3. //முதல்பாதியில் வந்த அஸ்வின் சமந்தப்பட்ட காட்சிகள் நம் பொறுமையைச் சோதித்தாலும்,//
  ஆனா எனக்கு அதுவும் பிடிச்சிருந்தது சுவாதி இருந்ததாலோ தெரியல... ஹி ஹி!

  ReplyDelete
 4. //சிவகார்த்திகேயனை ஸ்டார் நடிகராக உயர்த்திய படம். 'உங்க அக்கா அழகாயிருப்பாளா?'போன்ற சிவகார்த்திகேயனின் டைமிங் பஞ்ச்களுடன் கலக்கிய படம்.//
  செமையான சீன் அது.. :-)

  ReplyDelete
 5. // பாண்டிராஜ், இறங்கி அடித்த படம்///
  இது செம காமெடிண்ணே...

  ReplyDelete
 6. //விஜய் சேதுபதி கொடுத்த இரன்டாவது ஹிட் இந்தப் படம்./// "இந்த வருடத்தில்"

  ReplyDelete
 7. ////வருட ஆரம்பத்திலேயே சூப்பர் ஹிட் ஆகி, சந்தானத்தை இந்த ஆண்டின் பிஸியான/பெஸ்ட் காமெடியனாக ஆக்கியது. ஆல் இன் ஆல் புண்ணியத்தில் இந்த ஆண்டின் ஒர்ஸ்ட் காமெடியனாகவும் அவர் ஆனது துரதிர்ஷ்டமே.///

  வை பிளட்? சேம் பிளட்!

  ReplyDelete
 8. ///இயல்பிலேயே காமெடியான முகபாவம் கொண்ட பவர் ஸ்டாருக்கு///

  அவரு ஒரு நிஜ காமெடி பீஸ்ங்குறத நாசூக்கா சொல்றாகளாம்

  ReplyDelete
 9. தீயா வேலை செய்யணும் குமாரு! நம்பர் 1ன்னுட்டு சந்தானம், சுந்தர் சி,ன்னுல்லாம் கதை விடுறாருப்புல ! நெசமாவே காரணம் ஹன்ஷிகாக்காதேன்!

  ReplyDelete
 10. //சூது கவ்வும் இதைவிட பெட்டர்.///
  எஸ் எஸ்.. ஆனாலுமே, நீங்க டாப் 5 லிஸ்ட் பண்ண அத்தன கேட்டகரிலயும் இந்த படம் டாப்பில் இருந்துருக்கனும்

  ReplyDelete
 11. டாப் எல்லாம் முடிஞ்சதா? இன்னும் பாக்கி இருக்கா?

  ReplyDelete
 12. //ஜீ... said...
  //முதல்பாதியில் வந்த அஸ்வின் சமந்தப்பட்ட காட்சிகள் நம் பொறுமையைச் சோதித்தாலும்,//
  ஆனா எனக்கு அதுவும் பிடிச்சிருந்தது சுவாதி இருந்ததாலோ தெரியல... ஹி ஹி!//

  வயசுக்கோளாறா..பார்வைக்கோளாறாய்யா?

  ReplyDelete
 13. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  // பாண்டிராஜ், இறங்கி அடித்த படம்///
  இது செம காமெடிண்ணே...//

  அவரும் எவ்ளோ நாள்தான் நல்லவராவே நடிப்பாரு?

  ReplyDelete
 14. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  தீயா வேலை செய்யணும் குமாரு! நம்பர் 1ன்னுட்டு சந்தானம், சுந்தர் சி,ன்னுல்லாம் கதை விடுறாருப்புல ! நெசமாவே காரணம் ஹன்ஷிகாக்காதேன்!//

  இதெல்லாம் வெளில சொல்ல முடியுமாய்யா?

  ReplyDelete
 15. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  //சூது கவ்வும் இதைவிட பெட்டர்.///
  எஸ் எஸ்.. ஆனாலுமே, நீங்க டாப் 5 லிஸ்ட் பண்ண அத்தன கேட்டகரிலயும் இந்த படம் டாப்பில் இருந்துருக்கனும்//
  நானே பிளான் பண்ணி ஒரு மாசத்துக்கு பதிவைத் தேத்தியிருக்கேன்..அப்படிலாம் பண்ணா எனக்கே குழப்பிடாது?

  ReplyDelete
 16. //கோவை ஆவி said...
  டாப் எல்லாம் முடிஞ்சதா? இன்னும் பாக்கி இருக்கா?//

  இன்னும் ஒன்னே ஒன்னு போட்டுக்கிறேன்யா..பொறுத்தது பொறுத்தாச்சு..இன்னும் ஒன்னுல என்ன ஆகிடப்போகுது உமக்கு?

  ReplyDelete
 17. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  தீயா வேலை செய்யணும் குமாரு! நம்பர் 1ன்னுட்டு சந்தானம், சுந்தர் சி,ன்னுல்லாம் கதை விடுறாருப்புல ! நெசமாவே காரணம் ஹன்ஷிகாக்காதேன்!//

  அதெல்லாம் இருக்கட்டும்...முன்னாடி ஒரு பதிவுல சுந்தர்.சி தான் காமெடிப்பட டைரக்டர்களில் பெஸ்ட்டுன்னு சொன்னப்போ, நீங்க அல்லது புட்டிப்பால் சண்டைக்கு வந்தீங்க..ராஜேஸ் தான் பெஸ்ட்டுன்னு சொன்னீங்க..இப்போ என்னய்யா சொல்றீங்க????

  ReplyDelete
 18. உங்கள் பார்வையில் (என் பார்வையிலும்)வரிசைப்படுத்துகை நன்று!இ.ஆ.பா மட்டும் பார்க்கவில்லை,நேரம் கிடைக்கும் போது பார்த்து விடலாம்.நன்றி,விமர்சனங்களுக்கு!!!

  ReplyDelete
 19. பவர்ஸ்டார் படத்த தவிர வேற எதுவும் பாக்கல, இனி பாத்துடுவோம்!

  ReplyDelete
 20. நல்ல அலசல்...
  நல்ல படங்கள் பற்றிய தொகுப்பு...

  ReplyDelete
 21. ///
  செங்கோவி said...

  அதெல்லாம் இருக்கட்டும்...முன்னாடி ஒரு பதிவுல சுந்தர்.சி தான் காமெடிப்பட டைரக்டர்களில் பெஸ்ட்டுன்னு சொன்னப்போ, நீங்க அல்லது புட்டிப்பால் சண்டைக்கு வந்தீங்க..ராஜேஸ் தான் பெஸ்ட்டுன்னு சொன்னீங்க..இப்போ என்னய்யா சொல்றீங்க????
  /////

  ஹீ ஹீ.. நாமளும் ராஜேஷ் மாறித்தாண்ணே
  .. சின்ன பசங்க, அனுபவம் கம்மி..இனிமேலாச்சும் காம்ப்ளான் சாப்ட்டு பெரியவங்க பேச்சை கேட்டு நடந்துக்குறோம்.. அஆங்!

  ReplyDelete
 22. //Subramaniam Yogarasa said...
  உங்கள் பார்வையில் (என் பார்வையிலும்)வரிசைப்படுத்துகை நன்று!இ.ஆ.பா மட்டும் பார்க்கவில்லை,நேரம் கிடைக்கும் போது பார்த்து விடலாம்.நன்றி,விமர்சனங்களுக்கு!!!//

  நன்றி ஐயா.

  ReplyDelete
 23. //பன்னிக்குட்டி ராம்சாமிsaid...
  பவர்ஸ்டார் படத்த தவிர வேற எதுவும் பாக்கல, இனி பாத்துடுவோம்! //

  இனிமே பார்த்தா என்ன..பார்க்காட்டி என்ன!

  ReplyDelete
 24. //சே. குமார்said...
  நல்ல அலசல்.நல்ல படங்கள் பற்றிய தொகுப்பு...//

  நன்றி குமார்.

  ReplyDelete
 25. //மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
  ஹீ ஹீ.. நாமளும் ராஜேஷ் மாறித்தாண்ணே
  .. சின்ன பசங்க, அனுபவம் கம்மி..//

  நல்லவேளை, சுந்தர்.சி குஷ்பூ வீட்டுக்காரர்ங்கிறதால தான் சப்போர்ட் பண்றேன்னு சொல்லலை!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.