Friday, December 13, 2013

இவன் வேற மாதிரி- திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
முதல் படமே வெற்றிப்படமாகக் கொடுத்த ’எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் எம்.சரவணனும் ’கும்கி’ விக்ரம் பிரபுவும் இணையும் ஆக்சன் படம் என்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு. இரண்டாவது படத்தையும் ஹிட் கொடுத்து தன்னை நிலைநிறுத்தும் கட்டாயத்தில் இருந்த இருவரும் யூ டிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கொடுத்திருக்கும் படம் இவன் வேற மாதிரி.

ஒரு ஊர்ல..:
சென்னை சட்டக்கல்லூரி கலவரம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அதே (போன்ற) சம்பவம் படத்திலும் நடக்கிறது. அதை நியூஸில் பார்க்கும் சாமானியனான ஹீரோ, அந்த கலவரத்திற்குக் காரணமான சட்ட அமைச்சரை பழி வாங்க நினைக்கிறார். எப்படி பழி வாங்கினார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே கதை.

உரிச்சா....:
படத்தின் முதல் காட்சியே சட்டக்கல்லூரி கலவரம் தான். போலீஸ் வேடிக்கை பார்த்தது முதற்கொண்டு அப்படியே தத்ரூபமாக நடந்ததை மீண்டும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் முதல் காட்சியிலேயே கதைக்குள் படம் நுழைவதே நமக்கு ஆச்சரியமாக இருக்க்கிறது. தொடர்ந்து அமைச்சருக்கு ஒரு ரவுடி தம்பி, ஜெயிலில் இருந்து 15 நாள் பரோலில் வந்திருப்பவன். அவனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டிருப்பது அமைச்சர். எனவே அமைச்சரின் தம்பியை கடத்தி, மீதமிருக்கும் ஆறுநாள் உள்ளே வைத்தால், சட்ட அமைச்சர் உள்ளே போவார். பதவியும் பறிபோகும் என்று பிளான் பண்ணித் தூக்குகிறார் விக்ரம் பிரபு. 

கொஞ்சம் அசந்தாலும் ஷங்கர் படம் மாதிரி ஆகிவிடும் அபாயம் உள்ள கதை. ஆனால் வித்தியாசமான திரைக்கதை மற்றும் சம்பவங்களால் முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கிறார் எம்.சரவணன். ஒரு பக்கம் ஆக்சன் காட்சிகள் நகர, இன்னொரு பக்கம் ஹீரோயின் உடனான காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. அவர்கள் முதல் சந்திப்பில் ஆரம்பித்து, தற்செயலாக மீண்டும் பஸ்ஸில் சந்திப்பது, பஸ்ஸில் விக்ரம் பிரபு தரும் மீன்களை ஹீரோயின் வளப்பது என ‘எங்கேயும் எப்போதும்’ அனன்யா போர்சன் மாதிரியே இதிலேயும் இளமை துள்ளும் ஒரு காதல் கதை. இதுவரை வராத காதல் காட்சிகளாக இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனாலும் எங்கேயும் எப்போதும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

இண்டர்வெல்லில் அமைச்சருக்கு பதவி போக, அமைச்சரின் தம்பி திரும்பி வருகிறார். இரண்டாம்பாதியில் வில்லன் கோஷ்டியின் திருப்பி அடிக்கும் படலம் ஆரம்பமாகிறது. கூடவே நம்மை சீட்டின் நுனிக்குத்தள்ளும் ஆக்சன் காட்சிகளும். எப்பா...ரொம்ப நாளாகிவிட்டது, இப்படி ஒரு பரபர கிளைமாக்ஸ் பார்த்து. பிரித்து மேய்ந்துவிட்டார்கள். பஞ்ச் டயலாக், வெட்டி சவால் என்றெல்லாம் இல்லாமல், உணர்வுப்பூர்வமாகவே த்ரில்லைக் கூட்டியிருக்கிறார்கள். ஒரு பில்டிங்கில் ஹீரோயினை ஒளித்து வைக்கும் அந்த டெக்னிக்கிற்கு ஒரு சல்யூட். சஸ்பென்ஸ் வைப்பது எப்படி என்பதற்கு அந்த டெக்னிக்கும் அதைத் தொடரும் காட்சிகளும் நல்ல உதாரணம்.

இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கிறது. ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் முதல் ஃபைட்டில் வரும் ஸ்டெப் எல்லாமே புதிதாக இருந்தது. கிளைமாக்ஸ் வரை அது தொடர்ந்தது. மாஸ்டர் ராஜசேகருக்கு பாராட்டுகள். கொஞ்சம் பழைய கதைக்கரு தான் என்றாலும், பாத்திரப் படைப்பிலும் திரைக்கதை உத்தியிலும் ஒரு தரமான ஆக்சன் த்ரில்லராக ஆக்கிவிட்டார்கள்.

விக்ரம் பிரபு:

கும்கி பட வாய்ப்பை வலியக்கேட்டு நடித்தவர் என்பதால், இவரது கதைத்தேர்வில் நம்பிக்கை இருந்தது. இதிலும் நம் நம்பிக்கையை காப்பாற்றி விட்டார். ஆஜானுபாகுவான உயரமும் இறுக்கமான முகமும் ஆக்சன் காட்சிகளுக்கு பொருந்திப்போகிறது. அந்த உயரத்தாலேயே அவர் உயிர் தப்பிக்கும் ‘கம்பி’ காட்சி அட்டகாசம். காதல் காட்சிகளில் அவரது குறும்பான நடிப்பும் ரசிக்க வைக்கிறது. இப்படியே நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால், அன்னை இல்லம் பெயரைக் காப்பாற்றி விடலாம். ஒரு நல்ல ஆக்சன் ஹீரோவாக இந்தப் படம் மூலம் தன்னை நிலைநிறுத்தி விட்டார். அடுத்து பஞ்ச் டயலாக்கில் இறங்கி நம்மை பஞ்சராக்காமல் இருக்க, தாத்தா அருள் புரியட்டும்.

வம்சி கிருஷ்ணா:
ஒரு ஆக்சன் படத்திற்கு முதல் தேவை ஒரு பவர்ஃபுல் வில்லன். விக்ரம் பிரபுவுக்கு ஈழுவலான வேடம், அமைச்சரின் தம்பியாக வரும் வம்சி கிருஷ்ணாவிற்கு. பல நேரங்களில் இரண்டு ஹீரோக்கள் மோதுவது போன்றே தோன்றிவிடுகிறது. மனிதர் பின்னியிருக்கிறார். நய்யாண்டி படத்தில் இவரை வேஸ்ட் செய்திருந்தார்கள். முதல் பாதி முழுக்க, ஒரே ரூமில் அடைபட்டுக்கிடந்தாலும், தொடர்ந்து தப்பிக்க முயலும்போதும், கடைசிவரை ஹீரோவை பழி வாங்கியே தீருவேன் என்று திரியும்போதும் மிரட்டுகிறார். செம கேரக்டடைசேசன் மற்றும் நடிப்பு.

சுரபி:

ஹீரோயின் சுரபி கொஞ்சம் சுரத்தே இல்லாமல் தான் இருக்கிறார். ஆனாலும் ரகளையான கேரக்டர். 19 அரியர்ஸ் வைத்துக்கொண்டு, ஹீரோ தந்த மீன்களை திருப்பித் தர வார் எடுக்கும் முயற்சிகளில் அசத்துகிறார். ஆனாலும் ஹீரோயினாக ஏற்றுக்கொள்ள ஏதோவொன்று குறைகிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க்கினாலும், அவரை மையப்படுத்தியே காட்சிகள் நகர்வதாலும் நம் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். எப்படித் தான் பயப்படாமல் அப்படி நின்றாரோ..ஹேட்ஸ் ஆஃப்.

சொந்த பந்தங்கள்:

‘செல்வராகவன் பட இரண்டாம் ஹீரோ’ போல் இருப்பதாக சந்தானத்தால் பாராட்டப்பட்ட கணேஷ் வெங்கட்ராமனுக்கு இதில் போலீஸ் ஆபீசர் வேடம். பாதிப்படத்திற்கு மேல் தான் வருகிறார். கிளைமாக்ஸில் மட்டும் விறுவிறுப்பான நடிப்பு. மற்ற காட்சிகளில் அவர் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அமைச்சராக நடித்திருப்பவரும் ரியல் அரசியல்வதி மாதிரியே இருக்கிறார்.


நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- பெரிதாக ஒன்றும் இல்லை. (நான் புத்திசாலின்னு காட்ட தத்துப்பித்துன்னு எதையாவது சொல்லி பல்பு வாங்க, நான் ரெடி இல்லை பாஸ்!)

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- திரைக்கதை, திரைக்கதை, செம நீட்டான திரைக்கதை. 
- நல்ல பாடல்கள், அதை தனி டூயட்டாக ஆக்காமல் கதையோட்டத்தோடே கொடுத்தது. (லவ்வுல விழுந்துட்டேன்னைத் தவிர்த்து.)
- சத்யாவின் பிண்ணனி இசை
- வம்சி மற்றும் ஹீரோயின் கேரக்டர்
- சண்டைக் காட்சிகள்
- பரபரப்பான கிளைமாக்ஸ்.

பார்க்கலாமா? :

கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆக்சன்+த்ரில்லர் படம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

35 comments:

  1. முதல் முறையா உங்க வீட்டுக்கு வந்திருக்கேன் ...யாருமே இல்லை ...கிடைச்சதா எல்லாம் சுருட்டிட்டு எஸ்கேப் ஆகிடலமே ...விமர்சனம் எதோ நல்லத் தான் எழுதி இருக்கீங்க ( வீட்டுக்கு வந்த முத நாளே பொய் சொல்ல கூடாது கலை )

    ReplyDelete
  2. முதல் வருகைக்கு நன்றி.

    //..விமர்சனம் எதோ நல்லத் தான் எழுதி இருக்கீங்க//

    ஏதோ.....ஏதோ என்னால முடிஞ்சது!

    ReplyDelete
  3. இந்த படம் சூப்பரா இரூக்கும்ன்னு
    நான் நினச்சதை அப்பிடியே
    எழுதியிருக்கீங்க சூப்பர்..

    ReplyDelete
  4. //நான் வேற மாதிரி.. said...
    இந்த படம் சூப்பரா இரூக்கும்ன்னு
    நான் நினச்சதை அப்பிடியே
    எழுதியிருக்கீங்க சூப்பர்..//

    உங்க ஞானதிருஷ்டி வாழ்க.

    ReplyDelete
  5. படத்தைப் 'பார்த்து' விமர்சனம் எழுதியிருக்கீங்க!///ஹீரோயினாக ஏற்றுக் கொள்ள ஏதோ ஒன்று குறைகிறது!///என்னமோ,போடா மாதவா!நான் நெட் ல வர வரைக்கும் காத்திருக்கணும்!

    ReplyDelete
  6. 'கல்யாண சமையல் சாதம்' கூட இன்னும் பார்த்து முடிக்கல!

    ReplyDelete
  7. //Subramaniam Yogarasa said...
    'கல்யாண சமையல் சாதம்' கூட இன்னும் பார்த்து முடிக்கல!// சாதம் நல்லா வெந்திருக்கா? பார்க்கலாமா?

    ReplyDelete
  8. அருமையாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் நண்பரே.
    படம் பார்த்துவிட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிறது விமர்சனம்.

    ReplyDelete
  9. நான் புத்திசாலின்னு காட்ட தத்துப்பித்துன்னு எதையாவது சொல்லி பல்பு வாங்க, நான் ரெடி இல்லை பாஸ்!//அட்ராசக்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. செம்ம ஸ்பீடு பா!

    ReplyDelete

  12. போன வாரம் ஆக்சன் படம் என நினைத்து ஒரு படத்திற்கு போயி பல்பு வாங்கினேன்.. ஆனா இது செம போல... இன்னிக்கு நைட்டு பட்டரைய போட்டுட வேண்டியதுதான்...

    ReplyDelete

  13. ஆனா நைட்டோட நைட்டா படம் பார்த்துவிட்டு , பிழையில்லாம இவ்வளவு தெளிவா எப்படி விமர்சனம் எழுதுறீங்க என்கிற சூட்சமத்த தான் புரிஞ்சிக்க முடியல...

    ReplyDelete
  14. //மகேந்திரன் said...
    அருமையாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் நண்பரே.
    படம் பார்த்துவிட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிறது விமர்சனம்.//

    நன்றி பாஸ்..பாருங்க.

    ReplyDelete
  15. //நல்ல நேரம் சதீஷ்குமார் said...
    நான் புத்திசாலின்னு காட்ட தத்துப்பித்துன்னு எதையாவது சொல்லி பல்பு வாங்க, நான் ரெடி இல்லை பாஸ்!//அட்ராசக்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

    எங்கயாவது என்னை கோர்த்துவிடுறதே உங்களுக்கு வேலையாப் போச்சு.

    ReplyDelete
  16. //கோவை ஆவி said...
    செம்ம ஸ்பீடு பா!//

    ஆமாம் ஆவி, படமும் செம ஸ்பீடு தான்.

    ReplyDelete
  17. //Manimaran said...

    போன வாரம் ஆக்சன் படம் என நினைத்து ஒரு படத்திற்கு போயி பல்பு வாங்கினேன்//

    பதிவர்னா அப்படித்தான்..!

    ReplyDelete
  18. // Manimaran said...

    ஆனா நைட்டோட நைட்டா படம் பார்த்துவிட்டு , பிழையில்லாம இவ்வளவு தெளிவா எப்படி விமர்சனம் எழுதுறீங்க என்கிற சூட்சமத்த தான் புரிஞ்சிக்க முடியல...//

    உங்களாலயும் முடியும் பாஸ்...வேற வேலை வெட்டி இல்லாம, தலையில பூரிக்கட்டையால அடிக்க ஆள் இல்லாம இருந்தால்!

    ReplyDelete
  19. செங்கோவி said...சாதம் நல்லா வெந்திருக்கா? பார்க்கலாமா?///'பிரச்சினையே'சாதம்' வேகலைங்கிறது தான்!

    ReplyDelete
  20. அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  21. இப்போதைய மனசுல நிற்கும் நடிகர் விக்ரம் பிரபு. பார்க்கலாம் தாத்தா பேரை காப்பாத்துவாரா?!ன்னு. விமர்சனம் நச்சுன்னு இருக்கு.

    ReplyDelete
  22. விறுவிறுப்பான படத்திற்கு விறுவிறுப்பான விமர்சனம்! அருமை! நன்றி!

    ReplyDelete
  23. //(நான் புத்திசாலின்னு காட்ட//என்னாதிது.தப்பு தப்பு யோசிச்சுகிட்டு

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. செங்கோவி அண்ணனுக்கு படம் புடிச்சிருக்கு, ஓகே, ஆனா, மிக்ஸ்ட் ரீவிவ்ஸ் வருதே.. தெய்வ திருமகள் ஹிஸ்டரி ரிட்டர்ன் ஆகிருமோ! பார்க்கலாம்!

    ReplyDelete
  26. //N.H.பிரசாத் said...
    அருமையான விமர்சனம்.// நன்றி பாஸ்.

    ReplyDelete
  27. //ராஜி said...
    இப்போதைய மனசுல நிற்கும் நடிகர் விக்ரம் பிரபு. பார்க்கலாம் தாத்தா பேரை காப்பாத்துவாரா?!ன்னு.//

    தாத்தா அளவுக்கு நடிச்சுக்க மாட்டார்..ஆனா கதையை செலக்ட் பண்றதுல மெச்சூரிட்டி இருக்கு.

    ReplyDelete
  28. // s suresh said...
    விறுவிறுப்பான படத்திற்கு விறுவிறுப்பான விமர்சனம்! அருமை! நன்றி!//

    நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  29. // சேக்காளி said...
    //(நான் புத்திசாலின்னு காட்ட//என்னாதிது.தப்பு தப்பு யோசிச்சுகிட்டு//

    அதனால தான் பின் வாங்கிட்டேன்யா.

    ReplyDelete
  30. // மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    செங்கோவி அண்ணனுக்கு படம் புடிச்சிருக்கு, ஓகே, ஆனா, மிக்ஸ்ட் ரீவிவ்ஸ் வருதே.. தெய்வ திருமகள் ஹிஸ்டரி ரிட்டர்ன் ஆகிருமோ! பார்க்கலாம்!//

    இப்போ வந்திருக்கிற ரிவ்யூ பாசிடிவ்வா இருக்கு..நீங்களே பார்த்துட்டுச் சொல்லுங்க. (தெய்வ மகள் நல்ல படம் தானே?..சுட்டது தான் தப்பு. படம் ஓகே தான்!)

    ReplyDelete
  31. எல்லாம் சேர்த்து வெச்சு பார்ப்போம் ஓசியில் கிடைத்தால் !:)))

    ReplyDelete
  32. பாஸிடிவ் விமர்சனம்

    ReplyDelete
  33. சரிய சொன்னீங்க அண்ணே எனக்கும் படம் பிடித்து இருந்தது

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.