Sunday, January 12, 2014

வீரம் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
 ஆரம்பம் வெற்றிக்குப்பின் அஜித்தும் சிறுத்தை வெற்றிக்குப்பின் இயக்குநர் சிவாவும் இணைந்து தந்திருக்கும் படம் வீரம். விஜய்யின் ஜில்லாவும் ஒரே நாளில் வெளியாகிவிட, வீரமா ஜில்லாவா எனும் எதிர்பார்ப்பு வேறு எகிறிவிட்டது. அஜித் - விஜய் படங்கள் தனித்தனியே வருவதைவிட, இப்படி ஒன்றாக வருவதில் த்ரில் இருக்கவே செய்கிறது. இப்போ வீரம் எப்படின்னு பார்ப்போம், வாருங்கள்.
ஒரு ஊர்ல..:
ஒட்டன்சத்திரத்தில் வாழும் விநாயகம் & பிரதர்ஸ் எதற்கெடுத்தாகும் அடிதடியில் இறங்கும் வகையறா. அஹிம்சையை ஃபாலோ பண்ணும் நாசர் குடும்பத்துப் பெண்ணான தமன்னா மீது விநாயகத்திற்கு லவ் வருகிறது. அதில் எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.
உரிச்சா....:
ஒரு துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய, அரதப்பழசான கதை தான். காதலில் ஜெயிக்க, காதலியின் வீட்டார் மனதில் இடம்பிடிப்பது எனும் கான்செப்ட்டில் பல படங்களும் வந்தாகிவிட்டன. ஆனாலும் அஜித்+கிராமப் பிண்ணனி+காமெடி என திரைக்கதையில் சிவா செய்திருக்கும் மேஜிக் தான் புதுக்கதை போல் தோற்றத்தைக் கொடுக்க்கிறது.
முதல்பாதி முழுக்கவே காமெடி தான். கல்யாணமே வேண்டாம் என அஜித் இருப்பதும், தமன்னாவிடம் கோர்த்துவிட சந்தானமும் பிரதர்ஸும் செய்யும் காமெடி முயற்சிகளும் முதல் பாதியை செம ஜாலியாக கொண்டு செல்கின்றன. காமெடி சீனில் நடிப்பது என்றாலே அஜித் முகத்தில் ஒரு அவஸ்தை எப்போதும் தெரியும். இங்கே கதைப்படி அது சரியாக செட்டாவதால்,  மனிதர் அசால்ட்டாக காமெடியை கடந்து செல்கிறார்.
 
இரன்டாம்பாதியில் தான் ஆந்திர மசாலா மழை ஆரம்பம் ஆகிறது. ஆனாலும் நாசரின் கலகலப்பான குடும்பச்சூழலும், கலர்ஃபுல் திருவிழாவும் பார்த்துக்கொண்டிருப்பது தெலுங்குப்படம் அல்ல என்று உறுதி செய்கின்றன. வில்லன்கள் வரும் எல்லாக்காட்சிகளும்,சண்டைக்காட்சிகளும் அக்மார்க் தெலுங்கு மசாலா. இயக்குநர் சிவா இன்னும் மனதளவில் ஆந்திராவிலேயே குடிகொண்டு இருக்கிறார் போலும். நல்லா இருக்கறயா என்பதைக்கூட 'நல்ல்ல்ல்லாஆஆஆஆஆஆ இர்ர்ர்ருக்க்க்க்க்க்க்கியாஆஆஆஆஆஆஆஆஆஆஆடாஆஆஆஆஆ?" என்ற ரேஞ்சில் தான் கேட்பார்கள் போல.  படத்தில் பெரிய குறை என்றால் அது மட்டும் தான்.
இரண்டாம்பாதியில் வில்லன்கள் தங்கள் 'நோக்கத்தை' நிறைவேற்ற வருவதும், அஜித் அடிப்பதும் மறுபடி வில்லன்கள் தங்கள் 'நோக்கத்தை' நிறைவேற்ற வருவதும், அஜித் அடிப்பதும் என ஒரே டெம்ப்ளெட்டில் படம் நகர்வது கொஞ்சம் சலிப்பூட்டுகிறது. ஆனாலும் இடையிடையே காமெடியை இரண்டாம்பாதியிலும் நுழைத்திருப்பதால், தப்பிக்கிறோம்.
பெரிய ஹீரோக்கள் யாரும் சமீபத்தில் கிராமப்படம் செய்யாத நிலையில், அஜித்தே வில்லேஜ் ஆளாக நடித்திருக்காத காரணத்தால் படம் பளிச்சென்று தெரிகிறது. ஆபாச வசனங்களோ, காட்சிகளோ இல்லாமல் எடுத்திருப்பது, ஃபேமிலி ஆடியன்ஸை கவர் பண்ணும்.
சமீபத்தில் அஜித் படங்களில் வராத ஃபேமிலி ஸ்டோரி+வில்லேஜ்+விரசமற்ற காமெடி என பக்கா ஃபேமிலி என்டெர்டெயினராக உருவாக்கி இருப்பதால், படமே ஃப்ரெஷாகத் தெரிகிறது.
அஜித்:
அஜித் நடிக்கும் வீரம் என்றுகூட டைட்டில் போடுவதில்லை. வீரம்..அஜித்குமார்..தமன்னா என்று தான் போடுகிறார்கள். அஜித்தின் அடக்கத்திற்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. வேட்டி சட்டையில் கம்பீரமாக வருகிறார் அஜித். கிராமத்து ஆளாக செட்டாக மாட்டார் என்பதை மாற்றிக்காட்டி இருக்கிறார். தம்பிக்கு ஏதாவது என்றால் துடிப்பதும், தமன்னாவிட கொஞ்சம் கொஞ்சமாக மனதைப் பறிகொடுப்பதுமாக ரொம்ப நாளைக்கு அப்புறம் சாஃப்ட்டான ஏரியாக்களில் நடித்திருக்கிறார். வில்லத்தனமான ரோலிலேயே பார்த்துவிட்டு நல்லவர்+கிராமத்து ஆள் என்று பார்க்கும்போது, ரொம்ப வித்தியாசமாக, அதாவது நன்றாக இருக்கிறது.

ஆக்சன் காட்சிகளில் பட்டையைக் கிளப்புகிறார். ஆந்திரா மசாலாவை வேறு கண்ணில் தூவி விட்டதால், சன்டைக்காட்சிகளில் பொறி பறக்கிறது. அதகளம் புரிந்திடும் என பேக்ரவுண்ட் பிஜிஎம்மில் ஒலிக்க, வதம் செய்கிறார். ஓரளவு காதல் மன்னன் காலத்து அஜித்தை இந்த படத்தில் பார்க்க முடிகிறது.
இருப்பினும், இந்த டூயட்லாம் இனிமே நமக்கு தேவையான்னு கொஞ்சம் யோசிங்க பாஸ்..பாட்டு சீன் வந்தா, ரசிகர்களே பதறிப்போய் கப்-சிப்னு உட்கார்ந்திருக்காங்க. எவ்வளவோ செஞ்சுட்டீங்க, இந்த டூயட்டையும் ஒழிச்சுட்டா புண்ணியமாப் போகும்..முடியலை.

தமன்னா:
 மூணு டூயட், நாலு சீனில் முடிகிற கேரக்டர் இல்லை. கதைப்படியே முக்கிய கேரக்டர் என்பதால், நடிக்க நல்ல ஸ்கோப். அஜித்தை காதலிக்கவில்லை என்று சொல்ல முயன்று தோற்பது, காதலை சொல்லும் காட்சி, அஜித்தின் ஆக்சன் அவதாரத்தைப் பார்த்து மிரளும் ட்ரெய்ன் சீன் என பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக அஜித் தேடி ஊருக்கு வரும் காட்சியில், அவரை மேலே இருந்து பார்த்ததும் காட்டும் ரியாக்சனிலேயே காதல் தெரிகிறது. டூயட் காட்சிகளில் பெரியப்பாவுடன் ஆடுவது போல் தெரிந்தாலும், மற்ற காட்சிகளில் கலக்கிவிடுகிறார்.
சந்தானம்:
  என்றென்றும் புன்னகைக்கு அப்புறம் சந்தானத்தின் இன்னொரு ஹிட். ஆல் இன் ஆல் படம் பார்த்தபோது, இனி சந்தானம் அவ்வளவு தானா என்று தோன்றியது. இதில் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். அதே நக்கலான ஒன்லைனர்கள் தான் என்றாலும், எதிர்பாராத நேரத்தில் விழும் பஞ்ச்களால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. முதல்பகுதியே சந்தானத்தைச் சுற்றித்தான் நகர்கிறது. இரன்டாம்பகுதியில் தம்பிராமையா அந்த பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்.
சொந்த பந்தங்கள்:
தம்பிகளாக நான்கு பேர் வந்தாலும் பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. வருகின்ற வில்லன்களை எல்லாம் அஜித்தே ஒற்றை ஆளாய் அடித்து நொறுக்குகிறார். அதுல் குல்கர்னி என்ற அற்புதமான நடிகர், இதில் உச்சஸ்தாயியில் கத்தும் வில்லனாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். நாசர் வழக்கம்போல் பாந்தமான நடிப்பு. ஆனாலும் கம்பீரத்தில் நாசரை அஜித் முந்துகிறார் என்றே சொல்ல வேண்டும். அந்த குழந்தையும் சோ க்யூட். அஜித்தும் குழந்தையும் 'ஆடும்' கண்ணாமூச்சி அதகளம்.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- காதைக் கிழிக்கும் கூக்குரலுடன் தூவப்பட்ட ஆந்திரா மசாலா

- டூயட் 'நாட்டியம்'

- (வேறு வழியே இல்லாமல்) திரும்பத் திரும்ப வந்து அடிவாங்கும் வில்லன்கூட்டம்
 



பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- 'எஜமான்' அஜித்

- படம் முழுக்க மெயின்டெய்ன் செய்த காமெடி

- ஃபேமிலி சப்ஜெட் கதை



- கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒளிப்பதிவு


- சூப்பர்ஹிட் பாடல்கள்

பார்க்கலாமா? :

தாராளமாகப் பார்க்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

37 comments:

  1. ஹஹஹா.. பாஸ் அதான் அந்த பெரியப்பா லுக்குக்கு ஒரு காரணம் சொல்லியிருக்காங்க இல்லே?

    ReplyDelete
  2. எவ்வளவோ செஞ்சுட்டீங்க, இந்த டூயட்டையும் ஒழிச்சுட்டா புண்ணியமாப் போகும்..முடியலை.//

    அது..

    ReplyDelete
  3. Boss.. as per story he did duet songs. .
    You can remember what happened in mangatha and billa... no duet songs. .
    No love also

    ReplyDelete
  4. //இருப்பினும், இந்த டூயட்லாம் இனிமே நமக்கு தேவையான்னு கொஞ்சம் யோசிங்க பாஸ்..பாட்டு சீன் வந்தா, ரசிகர்களே பதறிப்போய் கப்-சிப்னு உட்கார்ந்திருக்காங்க.//

    உண்மைதான் பாஸ்.. அதுவரை விசிலடிச்சி என்ஜாய் பன்றவுங்க..பாட்டு வந்ததும் டாய்லட் எழுந்து போயிடுறாங்க..

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  7. பாஸ்..இப்பத்தான் பார்க்கிறேன்... மிஸ்கினோட மிர்ரர் இமேஜாக நீங்கள்.. ! செம போங்க ..! இதில் ஏதாவது குறியீடு இருக்கா..?

    ReplyDelete
  8. // கோவை ஆவிsaid...
    ஹஹஹா.. பாஸ் அதான் அந்த பெரியப்பா லுக்குக்கு ஒரு காரணம் சொல்லியிருக்காங்க இல்லே? //

    படத்துல ஏன் அவர் அப்படி இருக்காருன்னு கேட்கலை ஆவி..டூயட்ல கிராமத்தான் கோட் போடும்போது, டை அடிக்கக்கூடாதா?

    ReplyDelete
  9. //KANA VARO said...
    எவ்வளவோ செஞ்சுட்டீங்க, இந்த டூயட்டையும் ஒழிச்சுட்டா புண்ணியமாப் போகும்..முடியலை.//

    அது..//

    அது எப்படிய்யா, பதிவுல இருக்கிற கெட்டது மட்டும் கண்ணுக்குத் தெரியுது?

    ReplyDelete
  10. //vivek kayamozhi said...
    Boss.. as per story he did duet songs. .You can remember what happened in mangatha and billa... no duet songs. .No love also//

    ஆரம்பம் விமர்சனத்தில் அதைப் பாராட்டி எழுதி இருக்கேன் பாஸ்..டூயட் என்பது தேவையில்லாத ஒரு சங்கதி..பாடல்களை கதையை நகர்த்தும் மாண்டேஜ் காட்சிகளுக்கு மட்டும் யூஸ் பண்ணா நல்லா இருக்கும். அதைச் செய்ய மத்த ஹீரோக்கள் முன்வர மாட்டாங்க.அஜித்தால செய்யமுடியும்னு நான் நினைக்கிறேன். மேலும், உண்மையிலேயே அவர் டூயட் ஆடுறது நல்லவா பாஸ் இருக்கு?

    ReplyDelete
  11. //Manimaran said...
    பாட்டு வந்ததும் டாய்லட் எழுந்து போயிடுறாங்க..//

    பாட்டு பார்த்ததும் டாய்லட் வந்து, போயிடறாங்க!!

    ReplyDelete
  12. //N.H.பிரசாத்said...
    விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி பாஸ்.//

    வருகைக்கும் நன்றி பாஸ்.

    ReplyDelete
  13. //Manimaran said...
    பாஸ்..இப்பத்தான் பார்க்கிறேன்... மிஸ்கினோட மிர்ரர் இமேஜாக நீங்கள்.. ! செம போங்க ..! இதில் ஏதாவது குறியீடு இருக்கா..?//

    அதெல்லாம் ஒன்னும் இல்லைய்யா..தற்செயலா அந்த போட்டோ மாட்டுச்சு..மிஷ்கின் மாட்டிக்கிட்டாரு!

    ReplyDelete
  14. நல்ல விமர்சனம் செங்கோவி அண்ணா :-)

    ReplyDelete
  15. நல்ல விமர்சனம் ...... ஒவ்வொரு காட்சியும் தல -க்கு ஏற்றது போல எடுத்துள்ளார்கள்.. ..

    //அதகளம் புரிந்திடும் என பேக்ரவுண்ட் பிஜிஎம்மில் ""ஒழிக்க""

    திருத்தவும் ப்ளீஸ்....

    ReplyDelete
  16. ஜில்லா பார்த்து ஷாக்காகி இன்னும் தெளியாம இருக்கேன், இந்த படத்தையாவது பார்த்து கொஞ்சம் தெளியனும், பார்த்துருவோம்.

    ReplyDelete
  17. //சீனு said...
    நல்ல விமர்சனம் செங்கோவி அண்ணா :-)//

    நன்றி சீனு..நீங்களும் இதே தானே சொல்லி இருந்தீங்க!

    ReplyDelete
  18. //சீனு said...
    நல்ல விமர்சனம் செங்கோவி அண்ணா :-)//

    நன்றி சீனு..நீங்களும் இதே தானே சொல்லி இருந்தீங்க!

    ReplyDelete
  19. //விமல் ராஜ் said...
    அதகளம் புரிந்திடும் என பேக்ரவுண்ட் பிஜிஎம்மில் ""ஒழிக்க""

    திருத்தவும் ப்ளீஸ்..//

    சாரி பாஸ்..எப்படியோ மிஸ் ஆகிடுச்சு. திருத்திட்டேன்.

    ReplyDelete
  20. // MANO நாஞ்சில் மனோ said...
    ஜில்லா பார்த்து ஷாக்காகி இன்னும் தெளியாம இருக்கேன், இந்த படத்தையாவது பார்த்து கொஞ்சம் தெளியனும், பார்த்துருவோம்.//

    பார்க்கலாம்ணே..பார்த்துட்டுச் சொல்லுங்க.

    ReplyDelete
  21. இருப்பினும், இந்த டூயட்லாம் இனிமே நமக்கு தேவையான்னு கொஞ்சம் யோசிங்க பாஸ்..பாட்டு சீன் வந்தா, ரசிகர்களே பதறிப்போய் கப்-சிப்னு உட்கார்ந்திருக்காங்க.//விசில் அடிப்பதே பாட்டுக்குத்தான் அங்கேயே கைவைக்கச்சொல்லுவதுக்கு ஆயிரம் சுறா சீடி அனுப்புவன் கூரியரில்!ஹீ

    ReplyDelete
  22. இன்னும் பார்க்கும் நிலை வரவில்லை பார்ப்போம் தலப்பொங்கல் நீண்டகாலத்தின் பின்!

    ReplyDelete
  23. டூயட் காட்சிகளில் பெரியப்பாவுடன் ஆடுவது போல் தெரிந்தாலும்,// ரஜனியோடே பேர்த்திமார்கள் வயதில் இருக்கும் நடிகைகள் ஆடும்போது இது எல்லாம் சகிக்கலாம் விசில் ஊதி!ஹீ .

    ReplyDelete
  24. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. இன்னும் பார்க்கல..........பாத்தப்புறம் தான் நல்லது /கெட்டது சொல்ல முடியுமாக்கும்.............க்குங்கும்.....

    ReplyDelete
  27. இந்தப்படத்தில் மட்டுமல்ல , வரவர எந்தப்படத்திலுமே டூயட்களை சகிக்க முடியவில்லை......கொஞ்சம் திருந்துங்கப்பா......

    ReplyDelete
  28. //சே. குமார்said...
    அருமையான விமரசனம்...
    // Thanks Kumar.

    ReplyDelete
  29. //தனிமரம்said...
    விசில் அடிப்பதே பாட்டுக்குத்தான் அங்கேயே கைவைக்கச்சொல்லுவதுக்கு ஆயிரம் சுறா சீடி அனுப்புவன் கூரியரில்!ஹீ //

    அடப்பாவிகளா...!

    ReplyDelete
  30. //Subramaniam Yogarasa said...
    இன்னும் பார்க்கல..........பாத்தப்புறம் தான் நல்லது /கெட்டது சொல்ல முடியுமாக்கும்.............க்குங்கும்.....
    //

    அஜித் படம்னா நல்லதை மட்டும் தானே சொல்வீங்க!

    ReplyDelete
  31. //சிவ.சரவணக்குமார்said...
    இந்தப்படத்தில் மட்டுமல்ல , வரவர எந்தப்படத்திலுமே டூயட்களை சகிக்க முடியவில்லை......கொஞ்சம் திருந்துங்கப்பா......//

    ஆமா பாஸ்..கதை நல்லா போகும்போது ஃப்ரீஸ் பண்ணிட்டு, ஃபாரின் போய் ஆடறது நல்லாவா இருக்கு?

    ReplyDelete
  32. பேமிலி சப்ஜெக்ட், செங்கோவி அண்ணாச்சி ஹாப்பி!

    ஏதோ படம் பார்க்க போன காமெடி இருக்குன்னீங்களே, அத சொல்லுங்க பாஸ்!

    இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  33. நல்லா இருக்கறயா என்பதைக்கூட 'நல்ல்ல்ல்லாஆஆஆஆஆஆ இர்ர்ர்ருக்க்க்க்க்க்க்கியாஆஆஆஆஆஆஆஆஆஆஆடாஆஆஆஆஆ?" என்ற ரேஞ்சில் தான் கேட்பார்கள்

    உங்கள் எழுத்து நடை எனக்கு பிடித்தது காரணமே இந்த ஹாஸ்யம் கலந்தது தான் .

    ஆமா பாஸ்..கதை நல்லா போகும்போது ஃப்ரீஸ் பண்ணிட்டு, ஃபாரின் போய் ஆடறது நல்லாவா இருக்கு?

    ஹா ஹா

    நான் நலம் நண்பரே .நீங்கள் நலமா

    படம் பற்றிய தங்கள் கருத்துக்கு நன்றி ,நான் இன்னும் படம் பார்க்க வில்லை .

    ReplyDelete
  34. பொங்கல் நல்வாழ்த்துகள் செங்கோவி

    ReplyDelete
  35. கொஞ்சம் தாமதம்தான் :-)

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.