Friday, August 15, 2014

அஞ்சான் - இது விமர்சனம் இல்லை.......!

படம் பார்க்கக் கிளம்பும்போதே ஒரு தம்பி அன்பாக ‘ஏன்ணே சுதந்திர தினம் அன்னிக்கு ஜெயிலுக்குப் போறீங்க?’ன்னு கேட்டார். அப்பவே சகுனம் சரியில்லையேன்னு உஷார் ஆகியிருக்கணும்..ஆனேனா? இல்லியே...இல்லியே!

மன்னிச்சிருங்க மக்களே..இன்னிக்கு விமர்சனம் எழுதறதா இல்லை. படத்துக்கு விமர்சனம் எழுதலாம். ஆனால் காவியத்துக்கு?

எதை எழுதன்னு எனக்கு நிஜமாவே புரியலை. கதைன்னு ஏதாவது இருந்தால், அதை விளக்கலாம். திரைக்கதைன்னு ஏதாவது இருந்தால், உரிக்கலாம். ஆனால்....என்னத்தைச் சொல்ல?

வசனங்கள் பிரமாதம். உதாரணத்துக்கு...

டேய்..

ஏண்டா இப்படி...

ஹா..ஹா..சூப்பரு..சூப்பரு.(இது செண்டிமெண்ட் சீன்ல!)

யம்மா..

அய்யய்யோ.

கொல்றாங்களே.
ஓடிடலாமா? (இண்டர்வெல் டயலாக்)

உஸ்ஸ். (இது தான் அதிகத் தடவை)

தெரியாம வந்துட்டோம்டி!

- இதெல்லாம் படத்துல வந்த வசனம் இல்லை மக்கா...படம் பார்க்கும்போது தியேட்டர்ல வந்த வசனம். ஸ்க்ரீனைப் பார்த்து, அப்படித் திட்டுறாங்க..பச்சை பச்சையா திட்டறாங்க...அதை இங்கே எழுத முடியாது..கட்டுப்பாடான குவைத் தியேட்டர்லயே இப்படின்னா, ஊர்ல என்ன ஆகப் போகுதோ?

ராஜூ பாயைத் தேடி அவர் தம்பி கிருஷ்ணா பாய் வர்றார்.

பாய் வீட்ல பர்தா போட்டு ஒரு பொண்ணு, ராஜு பாயை உத்து, உத்துப் பார்க்குது.

- இந்த ரெண்டுலயும் பயங்கர ட்விஸ்ட் ஒளிஞ்சிருக்குதாம்...எவனாலயும் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு. கிருஷ்ணா வந்த கொஞ்ச நேரத்துலயே, அவர் யாருன்னு தியேட்டர்ல கத்திச் சொல்லிட்டாங்க. பர்தா பொண்ணையும் ‘அவ தானே நீ..சஸ்பென்ஸாம்!”-ன்னு நக்கல் விடறாங்க.

மும்பைல சில பேரை ராஜூ பாய் கொல்றாரு.

வில்லன் ராஜூ பாயோட ஃப்ரெண்டை கொல்றாரு.

ராஜூ பாய், துரோகி-1-ஐக் கொல்றாரு.

ராஜூ பாய், துரோகி-2-ஐக் கொல்றாரு.


ராஜூ பாய், துரோகி-3-ஐக் கொல்றாரு.

ராஜூ பாய் வில்லனோட (மினிமம் 100) அடியாட்களைக் கொல்றாரு.

ராஜூ பாய் வில்லனைக் கொல்றாரு.

மறுபடியும் ராஜூ பாய் துரோகிகளைக் கொல்றாரு.

கொல்றாருய்யா...கொல்றாரு...மிச்சம் இருக்கிற நம்மையும் கொல்றாரு...உஸ்ஸ்..ராஜ்ஜூ ப்பாய்...ராஜ்ஜூ ப்பாய்..அய்யோ, இப்படித் தனியா புலம்ப விட்டுட்டாங்களே!

பிள்ளையார் கோயில்ல சுண்டல் வாங்க ஓடற மாதிரியே, புதுப்படம் வந்தால் பார்க்கிறதுக்கு ஓடறது....ஏதோ விமர்சனமாம்...எழுதியே ஆகணுமாம்..இப்போ, அய்யோ-அம்மா வலிக்குதேன்னா...வலிக்கத் தான் செய்யும்..பின்னே, சினிமா விமர்சகர்ன்னா சும்மாவா?

ஒரு சீனைக் கூட எவனும் ரசிச்சிடக்கூடாதுன்னு கங்கணம் கட்டி வேலை பார்த்திருப்பாங்க போல..நல்லா இருங்கய்யா..எத்தனை பேரு உழைப்பு..எத்தனை கோடி காசு...இதை எடுக்கவா இம்புட்டு அலப்பறை?

ஏற்கனவே பீமா படத்துலேயே லிங்குசாமி அண்ணனுக்கு டான் கதை வரலியே..அப்புறம் வராத கழுதையை வா, வான்னா எப்படி வரும்?

தியேட்டருக்கு பாட்டு சீனுக்கு எந்திரிச்சுப் போறதைப் பார்த்திருக்கேன்..பாதிப் படம் ஓடும்போதே, வெளியே பத்து நிமிசம் காலாற நடந்துட்டு வர்றதை இன்னுக்குத் தான்யா பார்க்கிறேன். திரும்பி வந்து பக்கத்து சீட் ஆள்கிட்ட ‘என்ன மாப்ளை...ராஜூ பாய் என்ன சொல்றாரு?’ன்னு நக்கலா கேள்வி வேற கேட்குறாங்க..எவ்ளோ அவமானம் இது.

ஃபேஸ்புக்ல இதுவரை வடிவேலுவின் ‘போறியா..இல்லை வாய்க்குள்ள கத்தியை விட்டு ஆட்டவா?’ ஸ்டில்லு தான் ஃபேமஸ். இனிமே ‘போறியா..ராஜ்ஜூ பாய்கிட்ட பிடிச்சுக்கொடுக்கவா?’ன்னு ஒரு ஸ்டில் தான் ஃபேமஸ் ஆகப்போது!


நான் விமர்சனம் எழுதலியேன்னு வருத்தப்படாதீங்கய்யா...வருவான்...எவனாவது ஒருத்தன் வருவான். வந்து, ‘இது ஒரு ஒழக சினிமா...இந்தப் படத்தை இப்படிப் பார்க்கக்கூடாது..சீட்ல ரைட் சைடு சாய்ஞ்சுக்கிட்டு, லெஃப்ட் டிக்கியை தூக்கிட்டுப் பார்க்கணும்..இங்க யாருக்கும் அறிவில்லை’-ன்னு சொல்ல ஒருத்தன் வருவான்..அப்படிப்பட்ட புண்ணியவானுக்காகத் தான் நான் வெயிட்டிங்...நீங்களும் வெயிட் பண்ணுங்க.

ராஜ்ஜூ ப்பாய்...ராஜ்ஜூ ப்பாய்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

33 comments:

  1. .வருவான்...எவனாவது ஒருத்தன் வருவான//

    அய்யய்யோ அய்யய்யோ சிபி அண்ணனை கைய பிடிச்சு இழுத்துட்டாயிங்க ஓடியாங்க ஓடியாங்க....

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே பஞ்சர் ஆகிக் கிடக்கிறேன்..அவர்கிட்ட வேற கோர்த்து விடறீங்களா?

      Delete
    2. "அங்க" போய் பாருங்க மனோ,41 மார்க் கு போட்டிருக்காரு!

      Delete
  2. தியேட்டருக்கு பாட்டு சீனுக்கு எந்திரிச்சுப் போறதைப் பார்த்திருக்கேன்..பாதிப் படம் ஓடும்போதே, வெளியே பத்து நிமிசம் காலாற நடந்துட்டு வர்றதை இன்னுக்குத் தான்யா பார்க்கிறேன். திரும்பி வந்து பக்கத்து சீட் ஆள்கிட்ட ‘என்ன மாப்ளை...ராஜூ பாய் என்ன சொல்றாரு?’ன்னு நக்கலா கேள்வி வேற கேட்குறாங்க..எவ்ளோ அவமானம் இது.//

    semma..

    ReplyDelete
  3. ஐயோ பாவம்... ஏங்க இங்க செங்கோவின்னு ஒருபயபுள்ள சுத்திட்டிரூந்துச்சே... பாத்தீங்களா....? நல்லாத்தானங்க இருந்தாரு... மவராசனுங்க ஒரே ஒரு சினிமா பாக்க வெச்சு இப்படி தனியாப் புலம்பற அளவுக்கு ஆக்கிட்டாய்ங்களே.... (இன்னிக்கு நைட் ரிசர்வ் பண்ணிருக்கற ஆவி என்ன கதியில திரும்பி வரப் போகுதோ...? நெனச்சாலே கதிகலங்குது)

    ReplyDelete
    Replies
    1. அத்தானே வாத்தியரே... எத்தனையோ பேய், த்ரில்லர், சைகோ, திகில் படம் எல்லாம் பார்த்தாலும் சும்மா "கன்னு" மாத்ரி சுத்திகிட்டு இருந்தாரு.. இப்புடி ஒரே படத்துல சாய்ச்சுபுட்டாங்களே...

      Delete
    2. இது 100 பேய்ப்படத்துக்குச் சமம் மக்களே!

      Delete
  4. டிரைலர் பார்க்கும்போதே இந்தப்படம் நல்லா இருக்கும்னு தோணலை. அதனால நான் க.தி.வ.இ.க்கு புக் பண்ணியிருக்கேன்.... நீங்க தெய்வம்ணே...

    ReplyDelete
    Replies
    1. க.தி.வ.இ-பார்த்துட்டுச் சொல்லுங்க.

      Delete
  5. அண்ணே!! பாத்து பத்திரமா இருங்க ! எங்களுக்கெல்லாம் ராஜ்ஜூபாய் பத்தின உண்மைய சொன்னதால, உங்களையும் துரோகி லிஸ்ட் சேத்தி , மறுபடியும் படத்த போட்டு கொன்னுடப்போறாரு ,ராஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜூ ப்ப்ப்பாய்

    ReplyDelete
  6. லிங்கு சாதிச்சுட்டாருயா... தலைக்கு ஜி, விக்ரம்க்கு பீமா, இப்போ சூர்யாக்கு அஞ்சானா.. இன்னும் விஜய் மட்டும்தான் பாக்கி...

    ReplyDelete
    Replies
    1. விஜய் கைவசம் அதுக்கு நிறைய டைரக்டர்கள் இருக்கிறாங்கய்யா.

      Delete
  7. //எத்தனை பேரு உழைப்பு..எத்தனை கோடி காசு...இதை எடுக்கவா இம்புட்டு அலப்பறை?//

    எல்லாம் ஏழு கோடி இளிச்சவாயன்கள நம்பிதான்.

    ReplyDelete
  8. இந்தப் படத்தை இப்படிப் பார்க்கக்கூடாது..சீட்ல ரைட் சைடு சாய்ஞ்சுக்கிட்டு, லெஃப்ட் டிக்கியை தூக்கிட்டுப் பார்க்கணும்..இங்க யாருக்கும் அறிவில்லை.////அப்புடீன்னா "அது" வா?ஐய்யோ...........!

    ReplyDelete
  9. line by line.... awesome..... raj bhai sathinaala... keyboard la tamil kooda varalai...

    ReplyDelete
  10. sema... sirichu sirichu vaguru valikudhu.,.... endra panam 200dhs kaapaadhiya theivam yaa neer...

    ReplyDelete
  11. சொந்தங்கள் அனைவருக்கும்,சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அப்போ வேலு பாய் பாஷா பாய் கிட்ட நெருங்க ஒருத்தனுக்கும் தகுதி இல்லன்னு சொலுங்க

    ReplyDelete
    Replies
    1. அந்த பேரைச் சொல்லக்கூட இவங்களுக்குத் தகுதி இல்லை!

      Delete
  13. காலையில் 8 மணி ஷோக்கு போயிட்டு வந்த என் மகன் நகுல் இன்னும் அடிச்சு போட்ட மாதிரி தூங்கிட்டு இருக்கான்.செம பல்பு போல.

    ReplyDelete
  14. உங்களைப்போல ஆட்களால் நமக்கு நேரமும் பணமும் மிச்சம்..!!!

    ReplyDelete
  15. நான் படித்தா விமர்சனங்களில் மிக சிறந்தது இது தான்.. Chanceless.. :)

    ReplyDelete
  16. தனுஷை வேலை வெட்டி இல்லாத தண்டச்சோறா, அப்பாவிடம் திட்டு வாங்குபவரா, ஆதரிக்கும் அம்மா, உருப்படியான அண்ணன் -இப்படி நூறாவது தடைவையா காமிச்சாலும் சளைக்காம விமர்சனம் எழுதிய செங்கோவியையே சாச்சிட்டீங்களேடா.............

    ReplyDelete
  17. இந்த சலசலப்புக்கெல்லாம் 'அஞ்சான்'...

    ReplyDelete
  18. விமர்சனத்தை சிரிச்சி சிரிச்சு படிச்சு முடிச்சேன்! இன்னிக்கு உங்க சுதந்திரத்தை பறிச்சுபுட்டானுங்க போல! ஹாஹாஹா!

    ReplyDelete
  19. //வராத கழுதையை வா, வான்னா எப்படி வரும்?/



    ஓஞ்சி போன கழுதைய ஒதச்சி சிங்கம்னு ஒத்துக்க சொன்னா அது என்ன செய்யும். பாவம். லிங்குசாமியும் சண்டக்கோழிக்கு அப்பறம் ஒரு சண்ட படம் எடுக்க தலைகீழ தண்ணி குடிக்கறாரு. அஞ்சான் - 2 வில் கண்டிப்பா ஜெயிப்பாருன்னு நம்புவோம்.

    ReplyDelete
  20. அப்போ லிங்குக்கு சங்கா சாமி....
    ஓலக சினிமா பத்தி பேச ஒருத்தர் வருவாருன்னு கண்டிப்பா காத்திருப்போம்...

    ReplyDelete
  21. செங்கு பாய் செங்கு பாய் ராஜூ பாயும் லிங்கூ பாயும் எப்படியும் போகட்டும், ஆனா இந்த சமந்தா ஒரு டவுசர போட்டு இப்படி ஏமாத்திடுச்சே.... அத கண்டிக்க வேணாமாய்யா....?

    ReplyDelete
    Replies
    1. ஏன், அந்த டவுசர்கூட இல்லாமல் வரும்ன்னு நினைச்சீரா?

      மனுசனே, உயிரைக் கையில பிடிச்சுட்டு ஓடி வந்திருக்கான்....!

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.