Friday, August 15, 2014

அஞ்சான் - என்ன தான்யா பிரச்சினை?


--------SPOILER ALERT---------படமே அலர்ட் தான் ------------------

ஏறக்குறைய 24 மணி நேரம் யோசித்து, அஞ்சான் படத்தின் கதை என்ன என்று ஒருவாறு யூகித்துவிட்டேன் :

சந்த்ரு பாய் & ராஜூ பாய் ஆகிய இரண்டு பாய்ஸும் வளரும் தாதாக்கள். மெயின் வில்லனான ஒரு பெரிய தாதா அது பொறுக்காமல், சந்த்ரு பாயை போட்டுத் தள்ளிவிடுகிறார். ராஜூ பாய் கொலைமுயற்சியில் தப்பித்துவிடுகிறார். பிறகு அதற்குத் துணைபோன ‘ஃபேக் ஐடி’ நண்பர்களையும் மெயின் வில்லனையும் ராஜூ பாய் பழி வாங்குகிறார்.

இதைத் தான் லிங்கு பாய் சுத்திச் சுத்தி அடிச்சு சொல்ல முயற்சித்திருக்கிறார். படம், பப்படம் ஆனதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக நான் நினைப்பவை :

மரண மாஸ்:

சூர்யா ஒரு மாஸ் ஹீரோ கிடையாது. சூர்யா ஒரு நல்ல நடிகர். அவர் கமல் கேட்டகிரி. அஜித்-விஜய் போல், மாஸ் ஹீரோ ஃபீலிங்கை இவரால் உண்டாக்க முடியவில்லை என்பதே யதார்த்தம். எனவே ராஜூ பாயை பெரிய அப்பாடக்கராக ஏற்றுக்கொள்ள, வலுவான காட்சிகள் தேவை. வெறும் சூர்யா எனும் இமேஜ் போதாது. 

சிங்கம் இன்ஸ்பெக்டர் எதற்கும் துணிந்த பரபர ஆசாமி எனும் கேரக்டரைசேசன் தான், அந்த மசாலா படத்தை ஓட வைத்தது. இதில் வெறும் பிண்ணனி இசையை வைத்தே, மாஸ் காட்ட முடியும் என்று நம்பியது முதல் பிழை. 'ராஜூ பாய் அப்படி...ராஜூ பாய் இப்படி’ என்று வசனங்களில் தான் சொல்கிறார்களே தவிர, காட்சிகளில் ராஜூ பாய் ஒரு  boy மாதிரி கெக்கேபிக்கே ஆசாமியாகத் தான் வருகிறார்.

வில்லன்:

வில்லன் பாய்களை கொல்ல முயற்சிக்கும்போது, நமக்கு பாய்ஸ் மேல் பரிதாபம் வரணும். ஆனால் அது வரவில்லை. காரணம், அதைச் சொல்லியிருக்கும் விதம்.

வில்லன் ஒரு பெரிய தாதா. இந்த சின்னப் பையன்கள் தன் இடத்திற்கு வந்துவிடக்கூடாது, எனவே மிரட்டி வைப்போம் என்று முடிவு செய்கிறார். ஒரு பார்ட்டிக்குக் கூப்பிட்டு, ‘தம்பிகளா..இந்த வளர்ச்சி போதும். இதுக்கு மேல ஒரு அடி எடுத்து வச்சாலும், பன்னியைச் சுடற மாதிரி சுட்டுடுவேன்’ என்று மிரட்டுகிறார்.

இதில் எந்தத் தவறும் இல்லையே..நாளைக்கே ராஜூ பாய் அந்த இடத்திற்கு வந்தாலும், இதைத் தானே வேறு பொடியன்களுக்குச் சொல்வார்?

இதை கொஞ்சம் புத்தியுள்ளவன் எப்படி எதிர்கொள்வான்? மூன்று வழிகள் உண்டு.

1. ஓகே பாஸ்-ன்னு காலில் விழுந்திடலாம்.
2. அண்ணாமலை மாதிரி பதினெட்டு வருசம் டைம் எடுத்துக்கிட்டு, வில்லனை விட பெரிய ஆளாக ஆகிக் காட்டலாம்.
3. வில்லனை போட்டுத் தள்ளிடலாம்.

நம் பாய்ஸ் என்ன செய்கிறார்கள் என்றால், வில்லனை கடத்திக்கொண்டு வருகிறார்கள். ஒருநாள் இரவு முழுக்க அண்டர்வேயருடன் கட்டி வைத்து இம்சிக்கிறார்கள். மறுநாள் ‘இப்போப் புரியுதா..போ..போ’ என்று அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

இப்படிச் செய்தால் யாராக இருந்தாலும், என்ன செய்வார்கள்? திருப்பி ஆப்பு வைப்பார்கள். அதைத் தான் வில்லனும் செய்கிறான். இவர்களை மாதிரி வில்லன் கூமுட்டை இல்லை என்பது ஒரு ஆறுதல். எனவே இவர்களின் அடிப்பொடிகளை வைத்தே, இவர்களைப் போட்டுத் தள்ளுகிறான். (ராஜூ பாய் ஒரு ஹீரோ என்பதாலும், நமக்கு கெட்ட நேரம் என்பதாலும் தப்பிக்கிறார்).

‘என் நண்பனைக் கொன்னுட்டியா? உன்னை...’ என்று ராஜூ பாய் வீறு கொண்டு எழும்போது நமக்கு ’நீங்க தானடா அவனைச் சொறிஞ்சு விட்டீங்க..வீதியில போற மாரியாத்தா, எம்மேல வந்து ஏறு ஆத்தான்னு வலிய வம்பிழுத்தது நீங்க தானே?’ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

வில்லன் ஹீரோவுக்கு வலிய கெடுதல் செய்கிறான், வேறு வழியே இல்லாமல் ஹீரோ திருப்பி அடிக்கிறார் என்று இருப்பது தான் ரசிக்க வைக்கும். இங்கே முட்டாள்தனமாக, அரைகுறையாக ஒரு காரியத்தைச் செய்துவிட்டு அதற்கு அனுபவிக்கிறார்கள். நமக்கு கொஞ்சம்கூட அவர்கள் மேல் பரிதாபம் வருவதில்லை. நண்பன் இறந்துகிடப்பதைப் பார்த்து சூர்யா அழும்போது, ‘தம்பி..இதெல்லாம் பாட்ஷா-தளபதிலெயே பார்த்துட்டோம்..வேற..வேற ட்ரை பண்ணுங்க’ என்று தான் தோன்றுகிறது. 

படத்தின் அடிநாதமே, வில்லனுக்கும் ஹீரோவுக்கும் இடையே எழும் பிரச்சினை தான். அதில் வில்லன் பக்கமே அதிக நியாயம் இருப்பது போல் காட்சிகள். அப்புறம் எப்படி....

டப்பிங்:

ஒரு ஹிந்தி டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு படம் முழுக்க வருகிறது. சந்த்ரு பாய்(வித்யுத்) மற்றும் பலர் பேசும் காட்சிகளில் வாயசைப்பும், பிண்ணனிக்குரலும் ஒட்டவே இல்லை. இது ஒரு தரமான படம் என்று நினைப்பே வராமல் இது தடுக்கிறது. 

திரைக்கதை:

ரன் படத்தில் திரைக்கதை அவ்வளவு க்ரிப்பாக இருக்கும். பரபரவென்று காட்சிகள் நகரும். அப்படி ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநரின் திரைக்கதையா இது?

- அண்ணன் ராஜூ பாயைத் தேடி தம்பி கிருஷ்ணா பாய் மும்பை வருகிறார்.
- ராஜூ பாயும் சந்த்ரு பாயும் தாதாக்களாக இருந்ததையும், வில்லனுடன் மோதியதை(?)யும் தெரிந்து கொள்கிறார். வில்லன் இருவரையும் கொன்றுவிட்டான் என்றும் சொல்கிறார்கள்.

- ஆனால் ராஜூ பாய்-ன் பாடி(டெட் பாடி தான்யா!) மட்டும் கிடைக்கவில்லை.

- சந்த்ரு பாய் இறந்தபோது, அவருடன் இருந்தது தனது மூன்று நண்பர்கள் தான் என்று தெரிந்துகொள்கிறார் கிருஷ்ணா. அதில் ஒருவன் கிருஷ்ணாவைக் கொல்ல முயலும்போது, அந்த அதிபயங்கர உண்மை தெரிய வருகிறது. ஆம், தம்பி கிருஷ்ணா தான் ராஜு பாய். (ஆமாம்.தம்பின்னா ராஜூக்கு பாய் தானே என்று வெறுப்பேற்றக்கூடாது..கிருஷ்ணா தான் ராஜூ..இரண்டும் ஒரே ஆள்.)

- இண்டர்வெல்லில் இந்த ட்விஸ்ட். வில்லன் தான் நண்பர்கள் துணையுடன் கொன்றான் என்று கண்டுபிடித்தாகிவிட்டது. இடையில் கமிசனரின் லூசுப் பெண்ணுடன் காதலும் செய்தாகிவிட்டது. இதுவரை வந்ததே அரதப்பழசான காட்சிகள் தான். இனி மிச்சம் இருப்பது, வில்லன்&கோவை பழி வாங்குவது தான். லிங்கு பாய் ஏதாவது மேட்டர் வைத்திருப்பார் என்று போய் உட்கார்ந்தால்...

- ஒரு நண்பனை அதாவது துரோகியைப் பிடித்து ‘சொல்லு..என்ன நடந்துச்சு? என்கிறான். அவன் சொல்லிவிட்டு, மீதியை துரோகி -2 கிட்டப் போய்க் கேளு என்கிறான். டுமீல்..துரோகி-1 அவுட்.

- துரோகி-2வைப் பிடித்து அதே கேள்வி.துரோகி-3கிட்டப் போ என்று பதில்..அதே டுமீல். அடுத்த துரோகி..அதே கேள்வி..மெயின் வில்லன் கிட்டப் போ என்று பதில்..டுமீல்..மெயின் வில்லன்..டுமீல்!

- இதையே இண்டர்வெல்லுக்கு அப்புறம் படம் முழுக்கச் செய்கிறார் ராஜூ பாய். உண்மையில் இண்டர்வெல் சீன் தான் ப்ரி-கிளைமாக்ஸ். அடுத்து மேக்ஸிமம், இருபது நிமிடம் படத்தை இழுக்கலாம். ஆனால் பாதிப்படத்தை அதை வைத்தே நிரப்பி, கொலையாகக் கொன்றுவிட்டார்கள்.

சமந்தா:
ஒருவருக்கு எது பொருந்துமோ, அதற்கு மட்டுமே அவர்களை உபயோகப்படுத்துவது நல்லது. சூர்யாவை மாஸ் ஹீரோவாக ஆக்குவதே ரிஸ்க், அது போதாதென்று சமந்தாவை கவர்ச்சிக்கன்னியாக ஆக்கியிருக்கிறார்கள். சமந்தாவிற்கு கவர்சி ட்ரெஸ் பொருந்தவே இல்லை. அதிலும் ஏக் தோ தீன் பாட்டில், அவருக்கு வயிறு மட்டுமே(!) இருப்பது போல் தெரிகிறது. ஹாரிபிள்!

நன்றி:

ஆனால் ஒரு விஷயத்திற்கு, அஞ்சான் டீமிற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நம் மக்களின் ரசனை எந்தளவிற்கு மேம்பட்டிருக்கிறது என்று நேற்று தியேட்டரில் தெரிந்தது. கேரக்டர்கள் பேசப்போகும் வசனம், அடுத்து வரும் காட்சி என எல்லாவற்றையும் ஆடியன்ஸே சொல்கிறார்கள். ’இனிமே எங்களை ஏமாற்ற முடியாது’ என்று பெரிய பட்ஜெட் ஆசாமிகளுக்கு ஆடியன்ஸ் கொடுத்திருக்கும் எச்சரிக்கை தான், இந்தப் படத்தின் ரிசல்ட்.

100 கோடி...200 கோடின்னு எவ்வளவு செலவழிச்சாலும், கதையும் திரைக்கதையும் சரியில்லை என்றால், தூக்கிக் கடாசிவிடுவோம் என்று ரசிகர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இதை அஜித், விஜய் போன்ற சக ஹீரோக்களும் கவனத்தில் கொள்வது நலம்.

டிஸ்கி: கதை, திரைக்கதை பெரிதாக இல்லாவிட்டாலும் நகைச்சுவை இருந்தால் போதும் என்று நிரூபித்ததும் இதே ரசிகர்கள் தான். #விஐபி.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

  1. //// ரன் படத்தில் திரைக்கதை அவ்வளவு க்ரிப்பாக இருக்கும். பரபரவென்று காட்சிகள் நகரும். அப்படி ஒரு படத்தின் மூலம் திரைக்கு வந்த இயக்குநரின் திரைக்கதையா இது?/// ரன் படத்தின் மூலம் லிங்கு பாய் திரையுலகிற்கு வரவில்லை அவரின் முதல் படம் மம்முட்டி,முரளி,அப்பாஸ்,தேவயாணி,ரம்பா நடித்த ஆனந்தம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ல...மாற்றி விட்டேன்..நன்றி கிஸ்ராஜா.

      Delete
  2. கவர்ச்சியில் சமந்தா கன்றாவியாக இருக்கா அய்யகோ படம் பார்க இருந்த ஒரு காரணமும் போச்சே

    ReplyDelete
  3. விமர்சனத்தில கதையை படிச்சாலே தெளிவா குழம்புது.......... படம் .....ஐயோ நினைக்கவே பயமா இருக்கு. படத்தை பார்த்த இம்சையை அனுபவித்து மற்றவர்களைக் காப்பாற்றும் செங்கோவி வாழ்க.

    ReplyDelete
  4. //வில்லன்&கோவை பழி வாங்குவது தான். /// வில்லனை பழிவாங்குவது ஒக்கே.. கோவையை எதுக்கு பழி வாங்கறார்?? #டவுட்டு.. ஹிஹிஹி..

    ReplyDelete
    Replies
    1. கோவையை மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலகத்தையே பழி வாங்குறாங்கய்யா.

      Delete
  5. Replies
    1. காசை விடுங்க..நேரமும் மனநலமும் காப்பாற்றப்பட்டதே!

      Delete
  6. முதல்நாளே விமர்சனமும் ரெண்டாவது நாளே அலசலும் எழுதிய ஒரே ஆள் நீங்க தாண்ணே... பேசாம இந்தப் படத்தை நீங்களே எடுத்திருக்கலாம்....

    ReplyDelete
    Replies
    1. என்னய்யா செய்ய...படுத்தால், கனவுல கூட ராஜூ பாய் வர்றார்..முடியல!

      Delete
  7. அண்ணே!! அதெல்லாம் சரி!! அடிச்சிக்கேட்பாய்ங்க, அப்பவும் சொல்லிடாத னு லிங்குசாமி ஏதோ ட்விஸ்டு ட்விஸ்டுனாரே!! அது என்ன ட்விஸ்ட்டு?

    ReplyDelete
    Replies
    1. உஷ்..அதான் அண்ணன் சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்காருல்ல!!!

      Delete
  8. padam marana mokkai thaan.. :)

    appo azith & vizai periya mazzzzz hero??

    ama ama... billa 2-la azith periya mazzzz hero

    sura.. thalaiva-la vizai mazzz heroo...

    baba-la rajini mazzzz herooo...

    OPENING-ai vachu masss hero-na... sex movies-la initial-la nadicha dhanush-kku kuda VIP-la grand opening irukke..

    SCREEN PLAYY or else edhavadhu speciality irundha thaan odum..

    adhukkaga vizai azith periya mazzzz-nu solradhu comedy-a irukku bossss

    ReplyDelete
  9. அடச்சீ...............இருந்தது ஒரேயொரு டவுட்டு.அதையும் இந்தக் 'கோவை' ஆ.வி.கேட்டுப்புட்டாரு.

    ReplyDelete
  10. ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதுவதால் படத்தின் வியாபாரம் பாதிக்கிறது என ஷேர் ஹோல்டர்கள் போல பதறுபவர்கள் பலர் உள்ளனர். அஞ்சான் படத்தைப்பற்றி எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவு படம் பார்த்தவர்கள் நேற்றிலிருந்து பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    ஆனாலும் நான் படத்தைப் பார்க்கத்தான் போகிறேன். என்னைப்போலவே பலரும் பார்க்கத்தான் போகிறார்க்ள். நாளை வரை மல்டிஃப்ளெக்ஸ்களில் ஃபுல். திங்கட்கிழமையும் கிட்டத்தட்ட அதே நிலைதான்.
    என்னதான் காரித் துப்பினாலும் இந்த படம் ஒரு வாரம் ஃபுல்லாக போகும் என்றே தெரிகிறது. அதுதான் ஸ்டார் பவர் + குட்டி ஜட்டி பவர்.
    கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் படத்தின் போஸ்டர் மூலமே கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியவரக்ள் படக்குழுவினர்தான்.
    ஃபேஸ்புக் விமர்சனத்தால் லோ பட்ஜட் படங்களை ஓரளவு ஓட வைக்க முடியுமே தவிர ஹை பட்ஜட் படங்களை குப்புற அடிக்க வைக்க முடியாது !

    ஓலம் வேண்டாம் ! ஓலம் வேண்டாம் ! ஓலம் வேண்டாம் ! ஓலம் வேண்டாம் !

    ReplyDelete
  11. நண்பா பதிவை படிச்சிட்டு சிரிச்சிட்டேன்

    ReplyDelete
  12. சமந்தாவிற்கு கவர்சி ட்ரெஸ் பொருந்தவே இல்லை////...
    .
    அது ஒண்ணுமில்ல ஏட்டய்யா உமக்கு திருமணமாகி புள்ள பொறந்து அதுக்கும் வரன் பாக்குற வயசு.அதனால் எரிச்சலாத்தான் இருக்கும்.நீ என்ன பண்ற பழங்கால அதாவது உன் காலத்து படங்களான பாலும் பழமும் பார்த்தாலே பசி தீரும்,படம் பாத்து விமர்சனம் எழுதி கொல்வோர் போன்ற படங்களை மட்டும் பாத்துட்டு ஈசி சேரில் படு.

    ReplyDelete
  13. //வில்லனுக்கும் ஹீரோவுக்கும் இடையே எழும் பிரச்சினை தான். அதில் வில்லன் பக்கமே அதிக நியாயம் இருப்பது போல் காட்சிகள். அப்புறம் எப்படி//
    ஹீரோ "சூர்யா" ன்னு நெனச்சா படம் பாத்தீங்க?. இந்தப் படத்துல அவரு நெகடிவ் கேரக்டருல நடிச்சுருக்காருய்யா. ஐய்யோ !ஐய்யோ!

    ReplyDelete
  14. எதிர் பார்ப்பின்றிப் போனால்/ பார்த்தால் "சும்மா" பார்க்கலாம்,ஹி!ஹி!!ஹீ!!!(நான் "சும்மா" தான் பார்த்தேன்!)

    ReplyDelete
    Replies
    1. //நான் "சும்மா" தான் பார்த்தேன்!//
      என்னது! அதுங்காட்டியும் தொலைக்காட்சி வரலாறா?.

      Delete
  15. சமந்தாவும் அவுட்டா...
    அப்ப அஞ்சான் பாயை பாக்காமலே விட்டுடலாம்...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.