Saturday, August 30, 2014

சலீம்- திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
நான் என்றொரு ஆவரேஜ் வெற்றிப்படம் கொடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, மீண்டும் ஹீரோவாகக் களமிறங்கியிருக்கும் படம், சலீம். இங்கே ஒரு நாள் தாமதமாக ரிலீஸ்.
ஒரு ஊர்ல..:
நீதி, நியாயப்படி வாழும் அப்பாவி டாக்டர் விஜய் ஆண்டனி. அப்படி வாழ்வதால் தனியார் ஹாஸ்பிடல் நிர்வாகமும், ஹீரோயினும் அவரைத் தூக்கி எறிகிறார்கள். அதற்குப் பொங்கி எழும் வேளையில், ஒரு மினிஸ்டர் பையனைப் பழி வாங்கும் கடமையும் வந்து சேர, அப்பாவியின் விஸ்வரூபமே சலீம்.

உரிச்சா....:
ஹீரோ ஒரு நீதிமான், அடிதடிக்குப் போகாதவர், மருத்துவத் தொழிலை தொண்டு மாதிரி நினைக்கும் டாக்டர் என்பதை சுவையான காட்சிகளால் காட்டுகிறார்கள்.

விஜய் ஆண்டனிக்கு நடிப்பு இன்னும் தகராறு செய்தாலும், அப்பாவி சாமானியன் எனும் இமேஜுக்கு அந்த முகம் பொருந்திப்போகிறது. அடுத்து ஹீரோயினுடன் நிச்சயமும் ஆகிறது. ஹீரோயின் ஒரு தடாலடிப் பார்ட்டி. எல்லாவிதத்திலும் ஹீரோவுக்கு நேரெதிரானவராக இருக்கிறார். நம்மாலேயே அந்த கேரக்டரை கொஞ்சநேரம்கூட தாங்க முடிவதில்லை.

ஹீரோ இண்டர்வெல்வரை ஹீரோயினின் இம்சையைத் தாங்குகிறார். ஹீரோயினுக்கு கொடுக்கும் கமிட்மெண்ட் எதையும் ஹீரோவால் நிறைவேற்ற முடிவதில்லை என்பதையே அரைமணி நேரத்திற்கும் மேலாக திரும்பத் திரும்பக் காட்டுவது கொஞ்சம் போரடிக்கிறது.

ஒரு மினிஸ்டர் பையனை ஹீரோ தண்டிப்பதே மெயின் கதை. அதற்கு முன் அப்பாவி எப்படி ஆக்சன் ஹீரோ ஆகிறார் என்று விளக்க, முதல்பாதி முழுக்க இழுத்திருக்கத் தேவையில்லை.

இரண்டாம்பாதியில் அந்த ஹோட்டல் ரூமில் ஹீரோ நுழைவதில் இருந்து, படம் நல்ல ஸ்பீடு. கிளைமாக்ஸ்வரை அந்த வேகத்தை மெயிண்டெய்ன் செய்திருக்கிறார்கள்.

ஹீரோ அந்த பசங்களை ஹோட்டல் ரூமில் சிறை பிடிப்பது ஏன் என்பதை ஆடியன்ஸுக்கு முதலிலேயே சொல்லியிருக்கலாம். அது தெரிந்தபிறகு தான் படத்துடன் ஒன்ற முடிகிறது. இரண்டாம்பாதி முழுக்க ஹோட்டல் ரூம், போலீஸுடன் ஃபோன் பேச்சு என்று நகர்ந்தாலும், போரடிக்கவில்லை. 

விஜய் ஆண்டனி:
எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவரது இசையில் எப்பொழுதும் ஒரு துள்ளல் இருக்கும். ஒரு நடிகராக, தனக்கு ஏற்ற கதைகளாகத் தேர்ந்தெடுப்பதில் ஜெயிக்கிறார். இதில் கொஞ்சம் துணிந்து ஒரு டூயட், ஃபைட் என முழு ஆக்சன் ஹீரோ ஆவதற்கான ட்ரெய்லரை நடத்திப் பார்த்திருக்கிறார். ஆனாலும் அடக்கி வாசிப்பதே அண்ணாச்சிக்கு நல்லது.

அக்சா:
நம் கமலா காமேஷையும் காஜலையும் மிக்ஸ் பண்ணி செய்யப்பட்ட ஆண்ட்டி போன்று இருக்கிறார். ஸ்டில்களில் மொக்கையாகத் தெரிந்தாலும், படத்தில் பார்க்கும்படியாகவே இருக்கிறார். அந்த கேரக்டர் மேல் எரிச்சல் வரும் அளவுக்கு, நல்ல நடிப்பு. ஆடியன்ஸின் வெறுப்பைச் சம்பாதிக்கும் கேரக்டர்+விஜய் ஆண்டனிக்கு ஜோடி என்றாலும், முதல் வாய்ப்புக்காக ஏற்றுக்கொண்டிருப்பார் போலும். (விஜய் ஆண்டனியும் வேறு யாரும் கிடைக்காமல் தான் இவரை ஏற்றுக்கொண்டாரோ, என்னவோ!)


நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- கதைக்கு சீக்கிரம் வராமல், முதல்பாதியை இழுத்தது
- இரண்டாம்பாதியில் லாஜிக் பற்றி பெரிதாக யோசிக்காதது
- படத்தில் வரும் இளைஞிகள் எல்லாருமே ஆண்டிகளாக இருப்பது
- விஜய் ஆண்டனி இன்னும் நடிக்க முயற்சித்துக்கொண்டே இருப்பது
- முதல் பாதியில் காமெடிக்கு வாய்ப்பு இருந்தும், தவற விட்டது
- அவ்வளவு போலீஸையும் மீறி விஜய் ஆண்டனி வெளியே வருவதாகக் காட்டுவது, பூச்சுற்றல்

பாசிடிவ் பாயிண்ட்கள்:
- பாடல்களும் இசையும். (படம் முழுக்க வரும் அந்த தீம் மியூசிக்கை எங்கோ கேட்டது போல் ஞாபகம்.)
- பெட்டரான இரண்டாம்பாதி (லாஜிக் இடித்தாலும்!)
- நேராகச் சொன்னால் சுமாராத் தெரியும் விஷயங்களை, ஃப்ளாஷ்பேக் உத்தியில் காட்டி சுவாரஸ்யப்படுத்துவது
- அந்த மினிஸ்டரும், படத்தின் ஒரே காமெடி ஆறுதலான அவரது பி.ஏவும் 

பார்க்கலாமா? :
ஆவரேஜ் படம் தான்…வேறு படம் இல்லையென்றால், பார்க்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

  1. வேறு படம் இல்லைத்தான்!அஞ்ச வச்ச படத்த விட நல்லாருக்குப் போல?

    ReplyDelete
    Replies
    1. அஞ்ச வச்ச படம் காவியம்..அதை வேறு படத்துடன் ஒப்பிடக்கூடாது!!!!

      Delete
  2. //படம் முழுக்க வரும் அந்த தீம் மியூசிக்கை எங்கோ கேட்டது போல் ஞாபகம்./// "நான்" படத்தின் தீம் ம்யுசிக் அது..! :)

    நாயகி முத்தல் வெண்டைக்காய் போல் இருந்ததால் படத்தை ஞாயிறு பார்த்துக் கொள்ளலாம் என ஒத்தி வைத்து விட்டேன்..! ;)

    ReplyDelete
    Replies
    1. //நான்" படத்தின் தீம் ம்யுசிக் அது..! :)//

      ஓ...நான் பல ஹிந்திப் படங்களை யோசித்துக்கொண்டிருந்தேன்..அவ்வ்!

      Delete
  3. முத்தல் வெண்டைக்காய்.........அப்புடீன்னா?ஓ..........சந்தைக்கு('மார்க்கட்') வந்துடுச்சா?ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  4. சரியான விமர்சனம்.///நன்றாக இருந்தது.விறு,விறுப்புக்குக் குறைவின்றி!

    ReplyDelete
  5. படம் பார்த்துடறேன்

    ReplyDelete
  6. அந்த தீம் ஒரு மியூசிக் லூப், தப்பெல்லாம் தப்பேயில்லை மற்றும் சில தமிழ்பாடல்களிலும் வேற்று மாழி பாடல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.