Saturday, July 2, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன் - 30

எழுத்தைப் போன்றே திரைப்படமும் ஒரு இலக்கியம் தான். ஆனால் ஒரு சினிமா இலக்கியம் ஆவது, வெகுஅரிதாகவே நடக்கும். அப்படி ஒரு தருணத்தை Amores perros படத்தில் தரிசித்தேன். நாய்ச்சண்டைக்கு பழக்கப்படுத்தப்பட்ட, அதற்காகவே வெறியூட்டி வளர்க்கப்பட்ட நாய் ஒன்று, ஹீரோவிடம் வந்து சேர்கிறது.

அந்த ஹீரோ வயதானவர், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களே அவருக்குத் துணை. (இருப்பினும், அவர் ஒரு பே-கில்லர்). ரோட்டில் கிடைத்த நாயை, வீட்டில் இருக்கும் மற்ற நாய்களுடன் விட்டுவிட்டு வெளியே போய்விடுவார்.
திரும்பி வந்து பார்த்தால், அது அத்தனை நாய்களையும் குதறிக் கொன்றிருக்கும். வாழ்நாள் முழுக்க வெறுப்பையும், வெறியையும் மட்டுமே ஊட்டி வளர்க்கப்பட்ட அது, வேறென்ன செய்யும்?

நேற்று விஜய் சேதுபதிக்கு நேர்ந்த அவலத்தைப் பார்த்தபோது, அந்த Amores perros காட்சி தான் ஞாபகம் வந்தது

சீமான் ஒரு நல்ல பிஸினஸ்மேன். அவர் சினிமா ஹீரோக்களை பகைத்துக்கொள்ள மாட்டார். விஜய் ராகுல்காந்தியைச் சந்தித்து எம்.பி சீட் கேட்டபோதே, கண்டுகொள்ளாதவர் அவர். எனவே விஜய் சேதுபதியை எதிர்க்க மாட்டார்.

ஆனால் தொடர்ந்து வெறுப்பை மட்டுமே ஊட்டி வளர்க்கப்பட்ட தம்பிமார்கள் அப்படி இருப்பார்கள் என்று சொல்லமுடியுமா? எப்போதும்போல் பாய்ந்துவிட்டார்கள்

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?

----------
வழுக்கை என்றால் பல ஆண்களும் பதறுகிறார்கள். ஆனால் எனக்கு எப்போதும் ஒரு விபரீத ஆசை உண்டு. கண்ணாடி+ தொப்பை+வழுக்கை கெட்டப்புடன் கெத்தாக வாழ வேண்டும்!

குவைத் வந்த புதிதில் வெயிலில் வேலை செய்து கண் அவிந்த மாதிரி ஆகி, எழுத்துக்கள் எல்லாம் ரெண்டு, ரெண்டாக தெரிய ஆரம்பித்தன. ‘ஹையா..நான் கண்ணாடி போடப் போறேன்என்று டாக்டரிடம் போனால்அதெல்லாம் ஒன்னுமில்லை..போய் நல்லாத் தூங்குஎன்று திருப்பி அனுப்பிவிட்டார்.

தொப்பையை வளர்த்தால், உட்கார்ந்து எந்திரிக்க கஷ்டமாக இருக்கிறது. சரி, ரிட்டயர்டு ஆனபிறகு, அதற்கு ஆவன செய்வோம் என்று விட்டுவிட்டேன்.

வழுக்கைக்கு இப்போது தான் லேசான அறிகுறி தெரிகிறது. சீக்கிரம் ஆசை நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

திருமணமான புதிதில் தங்கமணியிடம் இந்த மூன்று ஆசையையும் சொன்னேன். முதல் இரண்டிற்கு சிரித்தவர், மூன்றாவதைச் சொன்னதும் கண்கலங்கி ஒருவிதி வலியதுஃப்ளாஷ்பேக்கை ஓப்பன் செய்தார்:

ஒருநாள் காலேஜில் இருந்து ஊருக்கு போக, பஸ் ஏறி அமர்ந்தாரம். டிரைவர் யாரென்று பார்த்தால் ஒரு சொட்டைத்தலை.

அருகில் இருந்த பெண்மணியிடம்போச்சு...இன்னைக்கு இந்த சொட்டைத்தலை டிரைவர் வந்திருக்கிறாரா!..மாட்டிவண்டி மாதிரி பஸ்ஸை ஓட்டுவாரே!’ என்றாராம்.

அதற்கு அந்தப் பெண்மணிஅப்படி சொட்டைத்தலைன்னு சொல்லாதம்மா’.

ஏன்?’

ஏன்னா, அவர் என் புருசன்

------
டைம்லைனில் ஒரே நேரத்தில் இந்த இரு பதிவுகளும் பட்டன...ரெண்டுமே அல்டிமேட்..சிரிச்சு முடியல!


-----------
என்னை மிரட்டிய ஷார்ட் ஃபிலிம், Next Floor.
ஒரு ஷார்ட் ஃபிலிமை பலமுறை பார்க்கும் அதிசயம் நடந்தது, இந்த ஷார்ட் ஃபிலிமிற்குத் தான். என்ன ஒரு மேக்கிங், அட்டகாசமான மெசேஜ்..பின்னிட்டாங்க.
எடுத்தால், இப்படி ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கணும்!
லின்க்: https://vimeo.com/75251217
நண்பர்களே, இதே போன்று(!) தமிழில் உங்களுக்குத் தெரிந்த நல்ல ஷார்ட் ஃபிலிம் இருந்தால், சொல்லவும்...சும்மா தான் இருக்கேன்!!
-----------
இறைவா,
நைஜீரியா தோழிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டு ஆண்களிடமிருந்து என்னைக் காப்பாற்று!

‪#‎இன்பாக்ஸ் அலப்பறைகள்
--------------
சில நடிகர்/நடிகைகள் அறிமுகம் ஆகும்போது, பெரிய ஸ்டார் ஆகி கலக்கப்போகிறார் என்று நம்பிக்கை கொடுப்பார்கள். அப்படி நான் எதிர்பார்த்த ஒருவர், பூனம் பாஜ்வா.

இத்தனைக்கும் இவர் நடித்த ஒரு படம்கூட (அப்போது) நான் பார்த்ததில்லை. ஆனாலும்என்ன வளம் இல்லை இந்த பாஜ்வாவிடத்தில்?’ என்று கணித்து வைத்தேன். கேபிள் சங்கர் கூட தன் ப்ளாக்கில் பூனம் குளிக்கும் ஸ்டில்லை கவர் ஃபோட்டோவாக நீண்டநாட்கள் வைத்திருந்தது வரலாறு!

யார் கண் பட்டதோ, அவர் நடித்த படங்கள் எல்லாம் ஊற்றிக்கொள்ள, காணாமல் போனார். சமீபத்தில் ஒருபடத்தில் செகண்ட் ஹீரோயினாக துக்கடா வேடத்தில் அவரைப் பார்த்தபோது, துக்கம் தொண்டையை அடைத்தது.

இப்போது சுந்தர்.சி உடன் ஹீரோயினாக ஒரு படத்தில் நடிப்பதை அறிந்து மகிழ்ந்தேன். ஆனால் பாவிகள் படத்தின் பெயரைமுத்தின கத்தரிக்காஎன்று வைத்து, நம்மை வருத்தம் செய்துவிட்டார்கள்

இருந்தாலும்....படத்தை எப்போ சார் ரிலீஸ் பண்ணுவீங்க?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.