Saturday, July 2, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன் - 29

பப்களில் போய் குடிச்சு ஆடிட்டு, அங்க உள்ள பெண்களை மட்டுமே பார்க்கிற படைப்பாளி, இரண்டு வகையான படங்களைத் தான் எடுக்கிறான்:
1. பிட்டுப் படம்
2. பெண்ணியவாதப் படம்.
உண்மையான உலகமும், பெண்களும் இந்த இரண்டுவகைக்கும் வெளியே இருக்கிறாங்க!

-------------------
நான் படித்த அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்புவரை டவுசர் போடலாம். எனவே ஃப்ரீயாக இருந்துவிட்டு, பதினோராம்வகுப்பு போனால் பேண்ட் போடணும்னு சொல்லிட்டாங்க. சரி, என்.எஸ்.எஸ். சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்வோம்னு போனால், அங்க முதல்நாள் ஷு போட்டு வரணும்னு சொல்லிட்டாங்க. வாழ்க்கையில் முதல் முதலா ஷூ போடறமே, அப்படியே ஷர்ட்-இன் பண்ணுவோம்னு பண்ணினேன். பார்க்கறதுக்கு அப்படியே பாட்ஷா மாதிரியே இருந்துச்சு.

எங்க கிராமத்தை விட்டு சைக்கிள்ல வெளியேறும்போது, எதிரே தண்ணியெடுத்துட்டு அத்தை பொண்ணு வந்துச்சு. என்னைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகி ஒரு முழி முழிச்சது. ‘பயபுள்ள, பாட்ஷாவை பக்கத்துல பார்த்ததும் பயந்திடுச்சு போலன்னு அதை கெத்தா கிராஸ் பண்ணேன்.

கொஞ்சதூரம் போனால், எதிரே ஃப்ரெண்ட் ஒருத்தன் வர்றான். ‘அய்யய்யோ..இவன் கண்ணு வச்சால் நாலுநாளைக்கு பேதி புடுங்குமேன்னு வேகமா சைக்கிளை மிதிக்கிறேன். அவனும் அசந்துபோய்ஏய்..நில்லு..நில்லுங்கிறான். ‘போடா..நாங்கள்லம் ஷூ போட்டப்புறம் ஆம்பிளைங்ககிட்டே பேசறதில்லேன்னு டாட்டா காட்டிட்டு டவுன் ஸ்கூலை நோக்கி சைக்கிள் பறக்குது. வழியில் எதிரே வந்த ஒரு மாட்டுவண்டிக்காரரும், மாடும்கூட மிரண்டதுன்னு பார்த்துக்கோங்க..எல்லாம் பொறாமை பிடிச்சதுங்க.

ஒருவழியா ஸ்கூலுக்குள்ள நுழைஞ்சு, சைக்கிளை நிறுத்திட்டு நடந்துபோறேன். என்னமோ வித்தியாசமாத் தெரிஞ்சது. ஷூ போட்டு நடந்தால் இப்படித்தால் இருக்குமோன்னு யோசிச்சுக்கிட்டே ஸ்கூல்ஃப்ரெண்ட் மணி முன்னால் போய் நின்னேன்.

அவன் என் ஷூவைப் பார்த்துட்டுச் சொல்றான், ‘டேய், என்னடா வலதுகால் ஷூவை இடதுகால்லயும் இடது கால் ஷூவை வலது கால்லயும் மாட்டிக்கிட்டு வந்திருக்கிறேன்னு!

ஆஹா..இவ்ளோநேரம் சார்லிசாப்ளின் மாதிரியா வந்தோம்னு ஃபீல் ஆகிடுச்சு. அவன்கிட்டேஅப்பவே அத்தை பொண்ணு ஒருமாதிரியா பார்த்துச்சுடா..ப்ச், கேவலமாப் போச்சே..அதுசரி, நான் சைக்கிள்ல தானே வந்தேன். எப்படி என் காலைப் பார்த்து கரெக்டா கண்டுபிடிச்சா?’ன்னு கேட்டேன்.

அவன் மேலயும் கீழயும் என்னைப் பார்த்துட்டுச் சொன்னான், ‘டேய்..அவன் உன் காலைப் பார்க்கலைடா’.

பின்னே?’

‘(censored)...நீ ஜிப்பே போடலைடா வெண்ணை!’.

----------
இந்த வருடத்தின் சிறந்த வசனமாக இதைச் சொல்லலாம்:
நான் பேசிக்கலா ஒரு வாட்ச் மெக்கானிக்..எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்ங்க!
'24' படம் பார்த்து இரண்டு நாளாச்சு...இன்னும் காதுக்குள்ள ங்ஙொய்ய்ன்னு கேட்குது!
----------
Madhi sutha
ஆரம்பத்தில் மொக்கையாக(!) சில ஷார்ட் ஃபில்ம் எடுத்து நம்மை டரியல் ஆக்கினார்.
அடுத்து கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது..
இனி முழுநீள திரைப்படம் எடுக்கலாம்எனும் நிலைக்கு வந்தார்..
இதோபடம் தயார்என்று வந்து நிற்கிறார்.
எவ்வளவோ கஷ்டங்கள், எதிர்ப்புகளுக்கு இடையிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறிக்கொண்டிருக்கும் மதிசுதா & குழுவினருக்கு வாழ்த்துகள்.
ஈழத்து சினிமாவில் இதுவொரு முக்கியத் தருணமாக ஆகட்டும்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.