Saturday, July 2, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன் - 31

//ஒரு காட்சியைப் பார்த்தவுடன் அது சோகமானதா, சந்தோஷமானதா என்பதை அதன் ஒளியே சொல்ல முடியும், சொல்ல வேண்டும். 

ஒரு ப்ரேமில் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களுக்குள் இருப்பது இணக்கமா, முரண்பாடா என்பதை ஒளியே சொல்லிவிட முடியும்.

ஒளியைப் புரிந்துகொள்வதற்கும், ஒளியைக் கையாள்வதற்கும், ஒளி உருவங்களோடு எப்படி விளையாடி உணர்வுகளை உருவாக்குகிறது என்பதையும் ஒளிப்பதிவாளன் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறான்.
மொத்தத்தில் ஒளியை நான் புரிந்துகொள்வதற்கான முயற்சிதான் எனது திரைப்படங்கள்.//

ஒளிப்பதிவாளர் செழியனின் பேட்டி - தமிழ் ஹிந்துவில்.

----------------
ஊரே அதிமுக ஜெயிக்குமா, திமுக ஜெயிக்குமான்னு பதறிக்கிட்டு இருந்தப்போ, ஆபீஸ் ஆண்ட்டிகிட்டேப் போய் ‘பெரிய கருப்பன் ஜெயிப்பாரா?’ன்னு கேட்டிருக்கே நீ...இதெல்லாம் ஒரு பெரிய மனுசன் செய்யுற காரியமா?
-------------
மகன்:
தாயே
உயிர்
தந்தாய்
சீராட்டி
வளர்த்தாய்
தெய்வம்
தான்
தாய்..இல்லை,
தாய்
தான்
தெய்வம்!
அம்மா: அய்யோ ராமா..உன்னைப் பெத்தது ஒரு குத்தமாடா..வருசா வருசம் கவிதை எழுதி கொல்றியேடா..ஒன்னு ஃபேஸ்புக்கை தடை பண்ணனும், இல்லே அன்னையர் தினத்தை தடை பண்ணனும்!
--------------
நம் நாட்டில்சர்ட்டிஃபிகேட் பெற்ற படங்களைப் பார்க்க, குழந்தைகளையும் அனுமதிப்பது சகஜம். தியேட்டருக்கு வரும் கூட்டமே குறைவு எனும்போது, இதையெல்லாம் கவனிக்க முடியுமா எனும் நியாயத்துடன் வன்முறை நிறைந்த படங்களுக்குக்கூட எல்லா வயதினரும் அனுமதிக்கப்படுகிறார்கள். நாமும் பெருமையுடன் குழந்தைகளை கூட்டிப்போகிறோம்.

ஆனால் வெளிநாடுகளில் பொதுவாக இதை கண்டிப்பாக கடைப்பிடிப்பார்கள். வயது வந்தோருக்கென்ற படமென்றால், குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள்.

எப்படியோ குவைத்தில் இதுவரை இதை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். இப்போது ‘24’ படத்தில் இருந்து பிரச்சினை ஆரம்பம்.

16+ சர்ட்டிஃபிகேட்டுடன் இங்கே 24 வெளியாகியிருக்கிறது. வழக்கம்போல் நம் மக்கள் ஆன்லைனில் புக் செய்துவிட்டு குழந்தைகளுடன் போக, தியேட்டர்காரர்கள் அனுமதி மறுக்க, பிரச்சினையாகி நேற்று ஷோ கேன்சல்.
தியேட்டரில் பாதி சீட்கள் ஃபேமிலிக்கானவை. ஃபேமிலிகளை அழைத்து வருவதே லேடீஸ் தான். குழந்தைகள் இல்லாமல் அவர்கள் வரமாட்டார்கள். தியேட்டருக்கும் நஷ்டம், நமக்கும் கஷ்டம். சீக்கிரம் ஒரு நல்ல முடிவுக்கு வருவார்கள் என்று நினைக்கிறேன்.

சூப்பர் தெலுங்கு மசாலா ஹீரோ ஆக முயற்சித்து சூர்யா, மீண்டும் கஜினி சூர்யாவாக திரும்பி வந்திருப்பதால், 24 அதிகம் எதிர்பார்த்தேன். ரிவ்யூஸ் பாசிடிவ்வாகவே வந்துகொண்டிருக்கின்றன. மகிழ்ச்சி!

--------------------------
//ராஜ் டிவியில் ‘லாரி டிரைவர் ராஜாகண்ணு’ படத்தை ஒளிபரப்பினால் கூட சேனல் மாற்றாமல் பார்க்கும் சிவாஜி ரசிகர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் சிவாஜி ஆதர்ஸம் என்பதற்காக பிரபு நடித்த படம், ராம் குமார் கெளரவத் தோற்றத்தில் நடித்த படம், துஷ்யந்த் நடித்த படம், மச்சி, சிங்கக்குட்டி, சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த படம் என்று ஒன்றையும் விடாமல் பார்க்கும் மனிதரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?//

- என்று Nr Prabhakaran எழுதியிருப்பதைப் பார்த்ததும்,என்னைத் தான் திட்டுகிறாரோ என்று பதறிவிட்டேன். பிறகு தான் அவரின் மாமனார் தான் அந்த சகரசனையாளர் என்று அறிந்து மகிழ்ந்து, நிம்மதியானேன்!

என் அம்மா தீவிர சிவாஜி ரசிகை. ‘எங்க ஐயா’ என்று தான் சிவாஜியைச் சொல்வார். எனவே சிவாஜி எனக்கு தாத்தா ஆகிப்போனார்!

நானும் சிவாஜியின் தீவிர ரசிகன் ஆகிப்போனேன். சிவாஜியின் பெரும்பாலான படங்களைப் பார்த்திருக்கிறேன். அவரின் பாடல்களும் மனப்பாடம். அடுத்த தலைமுறையில் ரஜினியே என் மனம் கவர்ந்த ஹீரோ என்றாலும், பிரபு மீதான பிரியத்தை தவிர்க்க முடிந்ததில்லை.

ஒரு நடிகனின் ரசிகன், அந்த நடிகனை தனது கற்பனை பிம்பமாகவோ அல்லது தனது குடும்பத்தில் ஒருவராகவோ நினைக்கிறான். ‘அவர் மாதிரி எவனும் நடிக்க முடியாதுடா’ எனும் சிவாஜி மீதான நம்பிக்கையை பிரபு காப்பாற்றினாலும்(!), அவர் அளவுக்கு இல்லையே எனும் கோபமும் சேர்ந்தே வந்தது. 

எங்கள் ஊரில் இருந்த சிவாஜி ரசிகர் மன்றம், பிரபு ரசிகர் மன்றம் ஆனது. என்னைப் போன்ற சிலர் விலகி நின்றாலும், பெரும்பாலானோர் மன்றத்தை வெகுசிறப்பாக நடத்தினார்கள்! அவர்கள் என் நண்பர்கள் என்பதால், பிரபு பட முதல்நாள், முதல் காட்சிக்கு என்னையும் தூக்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.
அந்தவகையில், ஏறக்குறைய பிரபுவின் அனைத்துப் படங்களையும் பார்த்த பெருமையும் எனக்கு உண்டு!. விக்ரம் பிரபு நடிக்க வந்தபோதும், ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. பிரபுவையே, சிவாஜி மாதிரி அழகா இல்லையே என்று சொன்னவர்கள் நாங்கள் என்பதால், விக்ரம் பிரபுவைப் பார்த்ததுமே புஸ்ஸ் ஆகிப்போனது.

ஆனாலும் ‘சிவாஜி பேரன்..ஜெயிக்கட்டும்’ எனும் ஆசை கலந்த எதிர்பார்ப்பு வந்தது. ஆனாலும் முதல் மூன்று படங்களுடன் விக்ரம் பிரபு அபிமானத்தில் இருந்து விடுபட முடிந்தது. வெள்ளைக்காரத்துரை, இது என்ன மாயம் எல்லாம் பார்க்கவே இல்லை.

ஆனால் நண்பரின் மாமனார், என்னையும் மிஞ்சிய சிவாஜி ரசிகர் என்று அறியும்போது, துக்கம் தொண்டையை அடைக்கிறது!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.