சக சினிமா மாணவர்களுக்கு...
நமது தலைமுறையின் வரப்பிரசாதம், இண்டர்நெட். சமையலில் ஆரம்பித்து சினிமா வரை, நீங்கள் எதை கற்றுக்கொள்ள நினைத்தாலும் அதற்கு இண்டர்நெட் உங்களுக்கு உதவும்.
நான் அடிக்கடி சொல்வது, எனக்கு நானே சொல்லிக்கொள்வது ‘இண்டர்நெட் போன்ற விஷயங்களை நாம யூஸ் பண்ணனும்..இல்லேன்னா, அது நம்மளை யூஸ் பண்ணிடும்!’. நிறைய வெட்டி அரட்டைகள், பாலியல் தேடல்கள், போராளிச் சீற்றங்கள் என நமது நேரத்தை விழுங்கும் விஷயங்கள் பல இங்கே உண்டு. கொஞ்சம் கவனமாக இருந்தால், இண்டர்நெட் போன்ற வரப்பிரசாதம் வேறில்லை.
அந்தவகையில் சினிமா மாணவர்கள் படிக்க வேண்டிய சில வெப்சைட்கள் இங்கே. தினமும் இந்த வெப்சைட்களை படித்து வருகின்றேன். நண்பர்களுக்கும் இவற்றை பரிந்துரைக்கிறேன்.
1. No Film School :
சினிமா கற்றுக்கொள்ள ஃபிலிம் ஸ்கூல் தேவயில்லை எனும் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்ட தளம், http://nofilmschool.com/. திரைக்கதையில் ஆரம்பித்து சவுண்ட் மிக்ஸிங் வரை
ஆர்டிக்கிள்ஸ் கொட்டிக்கிடக்கும் வெப்சைட் இது. தேடல் பொறியை சரியாக உபயோகித்தால், பல அற்புதமான லின்க்ஸ் கிடைக்கும்.
2. Jamuura:
இதுவொரு இந்திய வெப்சைட் என்பதால், இந்தியாவில் இருக்கும் டெக்னிஷியன்களின் பேட்டி, இந்தியப் படங்கள் என்று லோக்கல் ஃபீல் கொடுக்கும் ஆங்கில தளம்,
http://www.jamuura.com/blog/
மணிரத்னம் படங்கள் முதல் அனுராக் காஷ்யப் வரை அவ்வப்போது அலசுவார்கள். சில நேரங்களில் முத்தான அறிவுரைகள் சிக்கும்.
3. Film Maker IQ:
வெவ்வேறு வெப்சைட்களில் வெளிவரும் நல்ல சினிமா கட்டுரைகளை, பாடங்களை வெளியிடும் தளம், http://filmmakeriq.com/
இங்கேயும் தேடினால், பல நல்ல விஷயங்கள் சிக்கும். ஃபிலிம் நுஆர் பற்றி எழுதியபோது, இந்த வெப்சைட்டின் லின்க்கை ஏற்கனவே நான் கொடுத்திருக்கிறேன்.
4. Rain Dance:
இன்னொரு முத்தான தளம். அவ்வப்போது செம இண்டரஸ்டிங்கான டாபிஸ் சிக்கும். பலரின் ஃபிலிம் மேக்கிங் அனுபவங்கள் நமக்கு உபயோகமாக இருக்கும். லின்க்:
http://www.raindance.org/articles/
5.Cinephilia Beyond: கொஞ்சம் கடினமான, கரடுமுரடான, ஆழமான கட்டுரைகளை விரும்புவோருக்கான தளம், http://www.cinephiliabeyond.org/
பல நல்ல பேட்டிகள், படங்களைப் பற்றிய தீவிர அனலைஸிஸ் என சீரியஸான தளம்.
6. Youtube:
ஆமாம் பாஸ், நம் ரேஷ்மா புகழ் யூடியூப் தான். ஆக்ட்டிங் கோர்ஸில் ஆரம்பித்து எடிட்டிங் வரை புட்டுப்புட்டு வைக்கிறார்கள். தமிழில் BOFTA மாஸ்டர்கிளாஸ் மட்டும் கிடைக்கிறது. ஆனால்
ஆங்கிலேயக் கனவான்கள் நம் ஆட்கள் போல் கஞ்சர்கள் அல்ல, தினமும் தங்கள் அனுபவத்தை, அறிவை பகிர்ந்து தள்ளுகிறார்கள். கூகுள் போன்றே இங்கும் சரியாகத் தேடினால், சரியானது சிக்கும்.
7. தமிழில் :
உலக சினிமா ரசிகன், கீதப்ரியன், கருந்தேள், முரளிக்கண்ணன், சுரேஷ்கண்ணன், செங்கோவி(!) போன்ற வலைப்பதிவர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வப்போது நாங்கள் வனவாசம் போனாலும், மன்னித்து தொடருங்கள்.
ஆனந்த விகடனில் இரண்டு அருமையான தொடர்கள் வருகின்றன. பஞ்சு அருணாச்சலம் மற்றும் வெற்றிமாறன் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். பஞ்சு ஐயாவின் ஆரம்ப காலம், கொடுமையானது. ஆரம்பித்த படங்கள் எல்லாம் பாதியில் நிற்க, ‘பாதிப்பட பஞ்சு’ என்று கேலிசெய்யப்பட்டதில் ஆரம்பித்து இளையராஜாவை கண்டுபிடித்துக் கொண்டுவந்தது வரை பல சுவாரஸ்யமான விஷயங்களை கொடுக்கிறார். தவற விடக்கூடாத தொடர் இது.
தமிழ் ஹிந்துவில் எஸ்.பி.முத்துராமன் ஐயாவின் அனுபவத்தொடர் வருகிறது. நான் எதிர்பார்த்த அளவிற்கு டெக்னிகலாக இல்லையென்றாலும் படிக்க வேண்டிய தொடர். கூடவே, என் பிரியத்திற்கு உரிய பிரபுதேவாவின் கதையும் வருகிறது. ஒரு திறமை எப்படி சுற்றியுள்ளோரால் கண்டுணரப்பட்டு, வளர்க்கப்பட்டது என்று எளிமையாக விவரிக்கிறார்.
இவற்றைத் தவிர நண்பர்கள் கமெண்ட்டில் சொன்ன சில நல்ல வெப்சைட்ஸ்:
நெடுநாட்களாக சில சினிமா சம்பந்தபட்ட வெப்சைட்கள் தேடிக்கொண்டிருக்கிறேன்..தங்களது இந்த பதிவு பெரிய உதவி செய்கிறது..மிக்க நன்றி சகோ.வாழ்த்துக்கள்.
ReplyDeleteBest sad anime | 10 sad anime movies
ReplyDelete