விபரீத கேள்வியுடன் என் பையன் பேச்சை ஆரம்பித்தான்.
’அப்பா, பொண்ணு எங்க கிடைக்கும்?’
‘பொ..பொண்ணா? எந்தப் பொண்ணுடா?’
‘அதாம்ப்பா..கல்யாணம்லாம் பண்றாங்கள்ல..அந்த பொண்ணு’
‘அது... ஊருல இருப்பாங்க’
‘ஓ..ஊருல நிறைய பொண்ணுங்க இருப்பாங்க..நாம போய் ஒன்னை கல்யாணம் பண்ணிக்கலாமோ?’
‘டேய்..இப்போத்தாண்டா ஒண்ணாப்பே போயிருக்கறே..அதுக்குள்ள’ நாம’ங்கிறே?’
‘ப்ச்..சொல்லுங்கப்பா’
‘அப்படி இல்லைப்பா..பொம்பளைப்பிள்ளை இருக்கிற வீட்டில் பொண்ணும், ஆம்பிளைப்பிள்ளை இருக்கிற வீட்டில மாப்பிளையும் இருப்பாங்க. மாப்பிளளை வீட்டுக்காரங்க போய் பொண்ணு வீட்ல கேட்பாங்க’
‘ஓ..கேட்டவுடனே கொடுத்துடுவாங்களோ?’
‘அதெப்படிடா கொடுப்பாங்க. உன் அம்மாவை நிறைய பேர் பொண்ணு கேட்டாங்க. உங்க தாத்தா கொடுக்கலியே..அப்பாக்குத்தானே கொடுத்தார்’
‘ஏன் அப்படி?’
‘ஏன்னா அப்பா படிச்சிருக்கேனா, நல்ல வேலைல, ஃபாரின்ல இருக்கிறேனா? அதனால தான் கொடுத்தார். அதனால நல்லா படிச்சாத்தான் நல்ல பொண்ணு கிடைக்கும்’.
‘ஓ..அப்போச் சரி’
‘என்ன சரி?’
‘சரி..நான் நல்லாப் படிக்கிறேன்னு சொன்னேன்’.
உலகத்திலேயே நல்ல பொண்ணு வேணும்னு படிக்கப்போறது என் புள்ளையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அதுசரி, விதை ஒண்ணு போட்டால் சுரை ஒண்ணா முளைக்கும்!
‘அது... ஊருல இருப்பாங்க’
‘ஓ..ஊருல நிறைய பொண்ணுங்க இருப்பாங்க..நாம போய் ஒன்னை கல்யாணம் பண்ணிக்கலாமோ?’
‘டேய்..இப்போத்தாண்டா ஒண்ணாப்பே போயிருக்கறே..அதுக்குள்ள’ நாம’ங்கிறே?’
‘ப்ச்..சொல்லுங்கப்பா’
‘அப்படி இல்லைப்பா..பொம்பளைப்பிள்ளை இருக்கிற வீட்டில் பொண்ணும், ஆம்பிளைப்பிள்ளை இருக்கிற வீட்டில மாப்பிளையும் இருப்பாங்க. மாப்பிளளை வீட்டுக்காரங்க போய் பொண்ணு வீட்ல கேட்பாங்க’
‘ஓ..கேட்டவுடனே கொடுத்துடுவாங்களோ?’
‘அதெப்படிடா கொடுப்பாங்க. உன் அம்மாவை நிறைய பேர் பொண்ணு கேட்டாங்க. உங்க தாத்தா கொடுக்கலியே..அப்பாக்குத்தானே கொடுத்தார்’
‘ஏன் அப்படி?’
‘ஏன்னா அப்பா படிச்சிருக்கேனா, நல்ல வேலைல, ஃபாரின்ல இருக்கிறேனா? அதனால தான் கொடுத்தார். அதனால நல்லா படிச்சாத்தான் நல்ல பொண்ணு கிடைக்கும்’.
‘ஓ..அப்போச் சரி’
‘என்ன சரி?’
‘சரி..நான் நல்லாப் படிக்கிறேன்னு சொன்னேன்’.
உலகத்திலேயே நல்ல பொண்ணு வேணும்னு படிக்கப்போறது என் புள்ளையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அதுசரி, விதை ஒண்ணு போட்டால் சுரை ஒண்ணா முளைக்கும்!
-------------------
ஒரு படத்தின் ஆயுளே ஒரு வாரம் தான் என்று ஆகிவிட்ட காலம் இது. புதிதாக வரும் ஹிரோயின்களின் பெயரே நம் மனதில் நிற்பதில்லை எனும்போது, கேரக்டர் ஆர்டிஸ்டுகளின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை.
எங்கேயும் எப்போதும் பார்த்தபோது பெரிதாக இவரை நான் கண்டுகொள்ளவில்லை. பிறகு அடிக்கடி படங்களில் தென்பட ஆரம்பித்தார். கொஞ்சம் முதிர்ச்சியான பெர்ஃபார்மன்ஸ் தெரிந்தது. ’அனன்யா சிஸ்டர்’ என்று ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டேன். பிசாசு படத்தில் இன்னும் கவனிக்க வைத்தார்.
அழகு குட்டி செல்லம் பார்த்தபிறகு, கண்டிப்பாக இவர் பெயரைத் தெரிந்துகொள்வோம் என்று தேடினேன். அவர் பெயர், வினோதினி வைத்யநாதன். அழகு குட்டி செல்லத்தில் குழந்தையற்ற தாயாக அவர் கொடுத்திருந்த நடிப்பு, நம்மைக் கலங்க வைத்தது.
சிம்பிளான அழகும் முதிர்ச்சியான, அளவான நடிப்பும் தான், தனித்துவமான குரலும் இவரது ப்ளஸ் பாயிண்ட். இப்படி கலக்குகிறாரே, யார் என்று கூகுள் ஆண்டவரிடம் கேட்டேன்.
பத்து வருடங்களுக்கு மேல் நாடக அனுபவம், கூத்துப்பட்டறையில் மட்டுமே மூன்று வருடங்கள், நாடக திரைக்கதை ஆசிரியர், நடிகை, நாடக இயக்குநர் என்று அவரது புரஃபைல் பார்த்து மிரண்டுவிட்டேன். அப்புறம் ஏன் நல்லா நடிக்க மாட்டாங்க!!
இவருடைய பேட்டி எதையும் ஆங்கில ஹிந்து தவிர்த்து நான் கண்டதில்ல. ஜனனி ஐயரை எல்லாம் பேட்டி காணும் புண்ணியவான்கள்,இவரையும் கொஞ்சம் கவனிக்கலாம்.
----------------------------
கண்ணாம்பாள் : மனோகரா...லக்ஸ் சோப் வாங்க,
நீ
வீறு
கொண்டு
எழுந்து வீர
காவியம் தீட்டும்போதெல்லாம் காசினை
ஒளித்து வைத்து
தடுத்து நின்ற
பாவி
நான்
தான்..தாயின் ஆணையைத் தலைமேல் கொண்ட
என்
தங்கமே..‘லக்ஸ் சோப் வாங்கி
வா’
என்று
நான்
இப்போது உத்தரவிட்டாலும், அசைய
முடியாத நிலை
பெற்றுவிட்டாயே. நாறுகிறது..எல்லாம் நாறுகிறது.
மனோகரன் : இல்லை
தாயே,
லக்ஸ்
சோப்
வாங்கி
வா
என்று
இப்போதாவது கட்டளையிடுங்கள்..கடைசி
நேரம்,
கடைசி
சோப்...வாள் வேண்டாம், வாய்
மொழி
போதும்.
படை
வேண்டாம், தாயின்
தடை
நீங்கினால் போதும்.
எங்கே
தாயே
உத்தரவு? உத்தரவு கொடுங்கள் தாயே.
கண்ணாம்பாள் : என்
அருமைச் செல்வமே..உன்
தந்தையின் நன்மைக்காகத்தான் நான்
லக்ஸ்
சோப்பில் குளித்து வந்தேன். மனோகரா,
பொறுத்தது போதும்,
பொங்கி
எழு.
என்
புதல்வனே, தாயின்
ஆணை
கிடைத்துவிட்டது. புறப்படு.
ஏன்
சிரிக்கிறீர்கள்? செவ்வாழைத் தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளே..கத்ரினா கைஃப்
மட்டும் தான்
லக்ஸ்
போட
வேண்டுமா? இந்த
கண்ணாம்பாள் போடக்
கூடாதா?
லக்ஸ்
சோப்
சாதித்ததை கத்தி
முனையும் சாதித்ததில்லை என்பதை
மறந்துவிட்டுச் சிரிக்காதீர்.
சோழ
மண்டலத்துக் கொழு
மண்டபமே..என்
அழகின்
ரகசியத்தை இன்னும் எவ்வளவு நேரம்
எனக்கு
கிடைக்காமல் செய்யப் போகிறாய்?
பூமிமாதா, நீ
நன்றியுள்ளவள் என்பது
உண்மையானால், மாசில்லாத லக்ஸ்
சோப்புக்கு பெருமை
உண்டு
என்பது
உண்மையானால், இந்த
சங்கிலி பொடிப்பொடியாகட்டும்.
கடை
பூட்டும் முன்,
லக்ஸ்
சோப்
எனக்குக் கிடைக்கட்டும். லக்ஸ்
சோப்
கிடைக்கட்டும்!
தமிழ் சினிமா ஏன் உருப்படாமல்
போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிய வேண்டுமென்றால்,
இந்த ’மாற்றான்’ மேக்கிங் வீடியோவைப் பாருங்கள்:
மாற்றானில் வந்த சூர்யா - காஜல்
லிப்லாக் காட்சி மேக்கிங். க்ரீன்
மேட் பிண்ணனியில் காஜல் தனியாக கிஸ்
பண்ண, சூர்யா தனியாக கிஸ்
பண்ண இரண்டு கண்றாவியையும் இணைத்து
லிப்-லாக் ஆக்கியதை பெருமையுடன்
விவரிக்கிறது இந்த வீடியோ.
காஜல் ஷூட்டிங் ஒருநாள், சூர்யா ஷூட்டிங் ஒருநாள்,
அப்புறம் இரண்டையும் இணைக்கும் சிஜி வேலைகள் என
இந்த கண்றாவிக்காக இவர்கள் குறைந்தது ஐந்து லட்சமாவது செலவளித்திருப்பார்கள்
என்று நினைக்கிறேன்.
நம்மிடம் உள்ள பிரச்சினையே, சிஜியை
எதற்கு யூஸ் பண்ணுவது என்ற
தெளிவு இல்லாதது தான். சிஜிக்காரன் இருக்கிறான்,
இளிச்சவாய் புரடியூசர் இருக்கிறான், அப்போ சிஜி செய்வோம்
என்று தான் நடைமுறை இருக்கிறது.
இந்த சீனை எடுக்க காஜலிடம்
பேசி கன்வின்ஸ் செய்து ஒரிஜினல் கிஸ்ஸிங்
சீனாகவே எடுத்திருக்கலாம். அவர் ஒத்துக்கொள்ளவில்லையென்றால், ஒரு நல்ல இயக்குநர்
இந்த சீன் அவசியம் தேவையா
என்று தான் யோசித்திருக்க வேண்டும்.
இந்த முத்தக் காட்சி, கதையில் முக்கிய திருப்பத்தை உண்டாக்குகிறதா, இது இல்லையென்றால் கதையே
எடுபடாதா என்று யோசித்தால், இதுவொரு
வேண்டாத வெட்டி சீன் என்று
புரியும். தமிழ் இளைஞனுக்கு தவறுதலாக
கன்னத்தில் முத்தமிட்டாலே பெரிய சாதனை தானே!
இந்த மாதிரி காசை கரியாக்கும்
விஷயங்களைக் கண்டால், நமக்கு பற்றிக்கொண்டு வருகிறது.
50 கோடி, 100 கோடி பட்ஜெட்டில் இந்த
வேலையைத் தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த மேக்கிங் வீடியோவை இவர்கள் வெளியில் விட்டிருப்பது தான் என்னை இன்னும்
ஆச்சரியப்படுத்துகிறது.
மேய்க்கிறது எருமை, அதில என்னய்யா
பெருமை?
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.