Monday, January 10, 2011

கனிமொழியும் திமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)

கழுதையைப் பற்றித் தெரிந்த அளவிற்கு எனக்கு கவிதையைப் பற்றித் தெரியாது. எனவே கனிமொழியின் கவிதையைப் பற்றியும் அவர் உண்மையிலேயே கவிஞர் தானா என்பது பற்றியும் ஆராய்வதை விட்டுவிட்டு, தேர்தல் ஸ்பெஷல் தொடரில் கனிமொழியின் அரசியலைப் பற்றி இன்று பார்ப்போம்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் ஜெயித்து ஆட்சியில் அமர்ந்தபோது, எதனாலோ ‘இதுதான் அவரது கடைசித் தேர்தல் & ஆட்சி’ என்ற எண்ணம் திமுகவினரிடம் வந்திருந்தது. கலைஞரின் துணைவியான ராஜாத்தியம்மாளுக்கும் அவரது மகளான கனிமொழிக்கும் அந்த எண்ணம் சற்று வலுவாகவே இருந்திருக்க வேண்டும். எனவே கலைஞரின் காலத்திலேயே பொருளாதார ரீதியிலும் அரசியல்ரீதியாகவும் செட்டில் ஆவது என கனிமொழி & கோ முடிவு செய்தது.மேலும், இந்த முறை கலைஞரின் பிடியும் தளர்ந்திருந்தது கட்சியிலும், குடும்பத்திலும், உடலிலும்.

எனவே அவர் ஆட்சியில் அமர்ந்ததுமே ‘கனிமொழியின் எதிர்காலப் பாதுகாப்பிற்கு ஏதாவது செய்யவேண்டும். குறைந்தபட்சம் ஒரு எம்.பி. சீட்டாவது’ என்ற வேண்டுகோள் ராஜாத்தியம்மாளிடம் இருந்து எழுந்தது. இந்தியத் திருநாட்டில் எம்.பி.யாக இருப்பது தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு என்ற நிலை வந்துவிட்டது துரதிர்ஷ்டம்தான். என்ன செய்வது.. கனிமொழிஎம்.பி.ஆனார்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தல் முடிந்து மந்திரி சீட் பேரம் தொடங்கியது. கலைஞரின் அனைத்து வாரிசுகளுக்கும் பதவி கொடுப்பதென்றால் மன்மோகன்சிங்குக்கே பாராளுமன்றத்தில் இடமிருக்காது என்பதால் கனிமொழிக்கு மந்திரிப் பதவி இல்லை என்று ஆனது. எனவே ஜெயலலிதாவிற்கு ஓ.பன்னீர்செல்வம்போல் தனக்கு ஒரு பொம்மை வேண்டுமெனத் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவர் தான் ஆ.ராசா. ஆனால் அவர்களுக்குத் தெரியாது ‘ஒரே ஒரு சூரியன் தான் ஊருக்கெல்லாம்..ஒரே ஒரு பன்னீர்செல்வம் தான் தமிழ்நாட்டுக்கெல்லாம்’என்று.

ஆரம்பத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக கட்சியால் செய்யப்பட்டதாகவும் மொத்தப் பணமும் கட்சிக்கு வந்து சேர்ந்ததாகவுமே உடன்பிறப்புகள் கூட நினைத்தனர். ஆனால் நீரா ராடியா உபயத்தில் தெரியவந்திருக்கும் உண்மைகள் உடன்பிறப்புகளுக்கே கசப்பானவை. முதலில் தெரியவரும் உண்மை மந்திரி பதவிக்கு ஆசைப்பட்ட கனிமொழி & கோ அரசியலில் பழம் தின்று கொட்டையையும் முழுங்கிய கலைஞரை நம்பவில்லை என. மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடிக்கப்பட்ட பணம் கனிமொழி&கோவினால் முழுதும் அமுக்கப்பட்டுவிட்டன. சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு ராசாவிடமிருந்து வந்த சொற்ப நிதி தவிர பெரிதாக ஏதும் கட்சிக்கு வரவில்லை. இன்று ஸ்டாலின், அழகிரி போன்றோரின் ஆத்திரத்திற்கு அடிப்படைக் காரணமும் அதுவே.

கனிமொழி கவிதை எழுதியபோது ‘ஆஹா..கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவி பாடும் ’ என்பதுபோல கலைஞர் மகளுக்கு கவிதை வருவதில் என்ன ஆச்சரியம் என கொண்டாடப்பட்டார். கலைஞருக்கு மற்றொரு பெருமையும் உண்டு. அது ‘விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிபவர்’. ஆனால் கனிமொழிக்கு அந்தத் திறமை இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்தான். சரி..அதென்ன விஞ்ஞான ரீதியில்?

ஒரு வீட்டில் புகுந்து திருடுவது என முடிவு செய்தபின், உடம்பெல்லாம் எண்ணெய் தடவிக்கொண்டு ஜட்டி அல்லது லங்கோடு மட்டும் அணிந்து, வீட்டுக்குள் புகுந்து, கொண்டுபோன சாக்கு நிறைய திருடுவது. மாட்டினாலும் வழுக்க முடியும்..குறைந்தது சாக்குப் பையைத் தூரப்போட்டாவது நிற்க முடியும். கேட்டால் ‘இன்னைக்கு தீபாவளின்னு நினைச்சு எண்ணெய் தேச்சேன்’ எனலாம். இதுவே கலைஞர் ஸ்டைல் விஞ்ஞான ரீதியிலான ஊழல்!

ஒரு வீட்டிற்கு எண்ணெய் கூட தேய்க்காமல் திருடப்போய், கொஞ்சம் ஆசை அதிகமாகி சாக்கு நிரப்பியது மட்டுமல்லாது பீரோவையும் தூக்கி மாட்டிக்கொள்வது ஜெயலலிதா& சசிகலா க்ரூப்பின் ஸ்டைல்.

’அடடா வீட்டிலுள்ள பொருள் மட்டுமல்லாது வீடே நல்லாயிருக்கே ‘ என பேராசைப்பட்டு வீட்டையே நகர்த்தி தப்பமுடியாமல் மாட்டிக்கொண்டது கனிமொழி & கோ-வின் ஸ்டைல்.

இப்போது கட்சியின் இரு துருவங்களான ஸ்டாலினும் அழகிரியும் ஒருமித்து கேட்பது கனிமொழி & கோ கட்சியிலிருந்து ஒதுக்கப்படவேண்டும் என்பதே. கலைஞர் அதைச் செய்யலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் உண்டு.

கனிமொழி & கோ-வின் வீடு இந்த ஆட்சியின் ஆரம்பித்திலிருந்தே நாடார் ஜாதித் தலைவர்களுக்க்காக அகலத் திறந்துகொண்டது. தாங்கள் நாடார் இனத்தவர் என்பதையும் வலியக் காட்டிக்கொண்டனர். சமீபத்தில் நாடாரின மாநாட்டிலும் கலந்துகொண்டு ‘திமுக உங்களுக்கு துணை நிற்கும்’எனக் கனிமொழி பேசியிருக்கிறார். இது நாடாரின நலத்திற்காக என்றால் பரவாயில்லை. ஆனால் உண்மை வேறு.

கனிமொழி அங்கு கலந்து கொண்டது ஜெயலலிதாவை விட ஸ்டாலினையும் அழகிரியையும் தான் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். ஆம், இப்போது கனிமொழி அவர்களுக்கு ஒரு செக் வைக்கிறார். ’என் மேல் கை வைத்தால் வரும் தேர்தலில் நாடாரின ஓட்டுக்கள் கலையும்’ என்ற செய்தியை ஸ்டாலின் - அழகிரிக்கு பொட்டில் அடித்தாற்போன்று காட்டவே இந்த ஜாதிப் பாசம். உழைத்து முன்னேறிய ஒரு ஜாதியை இவர்கள் ஊழலுக்குக் கேடயமாகப் பயன்படுத்த நினைக்கின்றனர்.

108 அவசர உதவித் திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம் போன்றவை கலைஞர் ஆட்சி பற்றி நல்லதொரு எண்ணத்தையே ஏற்படுத்தியிருந்தன. கலைஞரும் கொஞ்ச நாள் முன்புவரை காங்கிரஸ் இல்லாமல் தனியாக நிற்கவேண்டி வந்தால் தயாராகவே இருந்தார். அப்போதுதான் இடி மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழல் டேப் வடிவில் இறங்கியது. கட்சியின் இமேஜ் பணால் ஆனது.

காங்கிரஸ் இதுவரை இல்லாத வீரத்துடன் நிமிர்ந்ததுக்கு முக்கியக் காரணம் ஸ்பெக்ட்ரம் ஊழல் தான். ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி வருவாய் இழப்பு என்பதை சாமானியர்கள், அத்தனை பணத்தையும் கனிமொழி & கோ ஆட்டையைப் போட்டதாகவே புரிந்துகொண்டுள்ளனர்.அதிமுக சரியான முறையில் இந்த ஊழலை மக்களிடம் கொண்டுசென்றால் வருகின்ற தேர்தலில் திமுக சந்திக்கப்போகும் இரண்டாவது பெரிய எதிரி ‘ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி’ என்ற வார்த்தைகள் தான். (முதல் எதிரி விலைவாசி!)

1991 ஜெ.ஆட்சியில் சசிகலா குரூப் அதிமுகவிற்கு செய்த அதே காரியத்தை கனிமொழி இப்போது திமுகவிற்குச் செய்திருக்கிறார். அரசியல் அடைக்கலம் கொடுத்த தன் வயோதிகத் தந்தைக்கு கனிமொழி செய்த கைமாறு அது.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

50 comments:

  1. பிரசன்ட்(ஓட்டு) மட்டும் இப்போது போட்டுக்கிறேன்.

    ReplyDelete
  2. தேர்ந்த விமர்சகரின் அரசியல் கட்டுரையாக உங்கள் கட்டுரை தெரிகிறது.

    ReplyDelete
  3. @ரஹீம் கஸாலி:அவ்வளவு நீளமாவா இருக்கு..மெதுவாப் படிங்க கஸாலி.

    ReplyDelete
  4. @பாரத்... பாரதி...: பாராட்டிற்கு நன்றி பாரதி.

    ReplyDelete
  5. தேர்தல் பற்றி பரபரப்பு கட்டுரைகள் வெளியிடுவதில், மற்றவர்களை விட செங்கோவி தொடர்ந்து முன்னிலை # வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //இந்தியத் திருநாட்டில் எம்.பி.யாக இருப்பது தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு என்ற நிலை வந்துவிட்டது துரதிர்ஷ்டம்தான்//
    // ‘ஒரே ஒரு சூரியன் தான் ஊருக்கெல்லாம்..ஒரே ஒரு பன்னீர்செல்வம் தான் தமிழ்நாட்டுக்கெல்லா//
    nice..

    ReplyDelete
  7. ??????????? ????. ????????? ?????? ???? ???????? ??????????? ??????? ???????? ??????? ???????? ???????????? ????????????? ????

    ReplyDelete
  8. சபாஷ்
    சரியான போடு. அறிவுசால் நாடார் இனம் காமராஜரை நினைத்தாவது இவர்களை புரிந்து விலக்கி வைத்தால் நாட்டுக்கும் அவர்களுக்கும் நலம்

    ReplyDelete
  9. //’அடடா வீட்டிலுள்ள பொருள் மட்டுமல்லாது வீடே நல்லாயிருக்கே ‘ என பேராசைப்பட்டு வீட்டையே நகர்த்தி தப்பமுடியாமல் மாட்டிக்கொண்டது கனிமொழி & கோ-வின் ஸ்டைல்.//
    நல்லாச்சொன்னீங்க! மிக அருமையான அலசல்!அசத்திட்டீங்க!

    ReplyDelete
  10. விரிவான அலசல்!

    ReplyDelete
  11. @Speed Master://யப்பா//...யப்பா முருகா!

    ReplyDelete
  12. @கிணற்றுத் தவளை: சரியாகச் சொன்னீர்கள் பாஸ்..

    ReplyDelete
  13. @சென்னை பித்தன்: தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி சார்..

    ReplyDelete
  14. @Chitra: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!

    ReplyDelete
  15. எப்படியோ,தி மு க என்ற வெறி நாய்கள் நிறைந்த கட்சி தமிழ் நாட்டிலிருந்து விரட்டி அடிக்கப் பட்டால் நல்லது தானே.அதை கனிமொழி செய்தால் என்ன ,அந்த முண்டம் ராஜா செய்தால் என்ன?

    ReplyDelete
  16. தலைப்பை பார்த்தவுடன் நான் நினைத்தது ஏற்க்கனவே கனிமொழி ஸ்பெக்ட்ரம் என பல பதிவுகள் வந்துவிட்டது எப்படி வித்தியாசப்படுத்தி எழுதி இருப்பிங்க என்றுத்தான். ஆனால் மற்றவர்கள் போல் சொன்னதையே சொல்லி தேய்க்காமல் அருமையா கொண்டு வந்து இருக்கீங்க.



    //ஒரு வீட்டிற்கு எண்ணெய் கூட தேய்க்காமல் திருடப்போய், கொஞ்சம் ஆசை அதிகமாகி சாக்கு நிரப்பியது மட்டுமல்லாது பீரோவையும் தூக்கி மாட்டிக்கொள்வது ஜெயலலிதா& சசிகலா க்ரூப்பின் ஸ்டைல்.//

    நச்

    ReplyDelete
  17. சிறப்பான ஒரு ஆய்வுத்தொகுப்பு நடுநிலையோடு.

    ReplyDelete
  18. //ஒரு வீட்டில் புகுந்து திருடுவது என முடிவு செய்தபின், உடம்பெல்லாம் எண்ணெய் தடவிக்கொண்டு ஜட்டி அல்லது லங்கோடு மட்டும் அணிந்து, வீட்டுக்குள் புகுந்து, கொண்டுபோன சாக்கு நிறைய திருடுவது. மாட்டினாலும் வழுக்க முடியும்..குறைந்தது சாக்குப் பையைத் தூரப்போட்டாவது நிற்க முடியும். கேட்டால் ‘இன்னைக்கு தீபாவளின்னு நினைச்சு எண்ணெய் தேச்சேன்’ எனலாம். இதுவே கலைஞர் ஸ்டைல் விஞ்ஞான ரீதியிலான ஊழல்!

    ஒரு வீட்டிற்கு எண்ணெய் கூட தேய்க்காமல் திருடப்போய், கொஞ்சம் ஆசை அதிகமாகி சாக்கு நிரப்பியது மட்டுமல்லாது பீரோவையும் தூக்கி மாட்டிக்கொள்வது ஜெயலலிதா& சசிகலா க்ரூப்பின் ஸ்டைல்.

    ’அடடா வீட்டிலுள்ள பொருள் மட்டுமல்லாது வீடே நல்லாயிருக்கே ‘ என பேராசைப்பட்டு வீட்டையே நகர்த்தி தப்பமுடியாமல் மாட்டிக்கொண்டது கனிமொழி & கோ-வின் ஸ்டைல்.// நான் இது நாள் வரை வலைப் பதிவுல படிச்சதிலேயே இதுதான்யா டாப்பு. எழுதிய உங்களுக்கு என் சல்யூட். இது என்ன சிரிக்க வச்சாலும் , இது தான் உண்மை என்பது வேதனையான விடயம்.

    ReplyDelete
  19. அசத்தல் பதிவு .அட்டகாசமான அலசல் . நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .

    ReplyDelete
  20. @periyar: ரொம்பக் கடுப்புல இருப்பீங்க போல..நன்றி (தந்தை)பெரியார் அவர்களே..

    ReplyDelete
  21. @பன்னிக்குட்டி ராம்சாமி: பாராட்டிற்கு நன்றி ப.ரா. அவர்களே..

    ReplyDelete
  22. @THOPPITHOPPI: நானும் அதை மனதில் கொண்டே எழுதினேன் நண்பரே.நன்றி.

    ReplyDelete
  23. செம்ம கலக்கல்ஸ் பாஸ்! :-)

    ReplyDelete
  24. @ராஜவம்சம்: நடுநிலைதான் நம்ம பாதை பாஸ்..கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  25. @Jayadev Das: //நான் இது நாள் வரை வலைப் பதிவுல படிச்சதிலேயே இதுதான்யா டாப்பு// நான் இது நாள் வரை என் வலைப் பதிவுல படிச்சதிலேயே என்னை ரொம்ப சந்தோசப்படுத்திய கமெண்ட் இதுதாங்க..நன்றி.

    ReplyDelete
  26. @angelin: வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  27. நல்ல கட்டுரை!

    ReplyDelete
  28. நல்ல அரசியல் ஆய்வு

    ReplyDelete
  29. சிறந்த பதிவு...

    கடந்த மூன்று ஆண்டுகளாக நாடார் அரசியலை கனிமொழி முன்னெடுக்கிறார் என்று என்னுடைய நண்பகளிடம் தெரிவித்தபோது அவர்கள் என்ன கிண்டல் செய்தனர்.

    அதுபோல், இரண்டுமாதங்களுக்கு முன் “விரைவில் டிசம்பர் அல்லது சனவரி மாதம் கனிமொழி அவருடைய கணவருடன் ஏதாவது இசை நிகழ்ச்சி அல்லது ஓவிய கண்காட்சியை பார்வையிடுவது போல் அனைத்து நாளிதழ்களில் போட்டோ வரும்” என்று சொன்னேன் அப்போதும் என்னை கிண்டல் செய்தனர்.

    இவை இரண்டும் கடந்த மாதம் உண்மையாக நடந்த பிறகு என்னுடைய நண்பர்கள் என்னை ஆச்சரியமாக பார்த்தனர்.

    “கருணாநிதிக்குப் பிறகு முதலமைச்சர் பதவிக்கு ஸ்டாலினும், அழகிரியும்தான் போட்டியா? எனக்கு அந்த தகுதி இல்லையா? பெரிய சமூதாயமே என்னக்கு பின்னால் இருக்கிறது” என்று இராசாத்தியம்மாள் சொன்னதாக எங்கேயோ படித்தேன்.

    குறிப்பாக “தினத்தந்தி” நாளேடு குறிப்பாக பத்தாண்டுகளாக நாடார் சமூதாயத்தின் பாதுகாவலராகவே செயல்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெரிய சமூகம் அரசியல் பொருளாதார ரீதியாக முன்னனேறுவதிலும் தனக்கான அரசியலை முன்னெடுப்பதிலும் நமக்கு வருத்தமில்லை... என்றாலும், தினத்தந்தி இராசாத்தியம்மாள் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளையும் செய்தியாக வெளியிட்டு அவரை ஒரு தலைவராக்க முயற்சி செய்வது தமிழ்நாட்டின் சாபக்கேடு...

    தங்களுடைய சாதியில் ஒருவர் அதிகாரம் பெறவேண்டும் என்பற்காக யாரைவேண்டுமானாலும் தலைவராக்க முயற்சி செய்தது தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல, அந்த சமூதாயத்திற்கும் நல்லதல்ல...

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் நண்பரே உங்களின் பணி தொடருட்டும் மக்கள் விழிப்புணர்வு பெறட்டும் !

    ReplyDelete
  31. சிறப்பான கட்டுரை. எழுத்து நடையும் மெருகேறியுள்ளது. வாழ்த்துகள்.!

    //அத்தனை பணத்தையும் கனிமொழி & கோ ஆட்டையைப் போட்டதாகவே புரிந்துகொண்டுள்ளனர்//

    அந்தப் புரிதலை(!) வலுப்படுத்தவே அழகிரியின் ராஜினாமா நாடகம்.

    திமுகவினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் ஏழரையை கொடுக்கும் என்று தெரிந்திருக்கின்றது. அதனால், கனிமொழியை ஒதுக்கி வைக்க அனைவரும் (ஸ்டாலின், அழகிரி, மாறன் சகோதரர்கள்) ஒன்றிணைந்து செயல்படக்கூடும்.

    .

    ReplyDelete
  32. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21439&Itemid=185

    ReplyDelete
  33. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21439&Itemid=185

    ReplyDelete
  34. சும்மா சொல்லக்கூடாது நண்பா மிக அருமையாக எழுதி இருக்கீங்க, அதுவும் திருட்டையும், அரசியல்வாதிகளையும் மிக்ஸ் பண்ணினது டாப்பு :-)

    ReplyDelete
  35. @varshen: @Robin: பாராட்டுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  36. @கும்மி: பாராட்டுக்கு நன்றி நண்பரே..ஒருத்தரை ஒழிக்கணும்னாத்தான் ஒன்னு சேருவாங்க போல..

    ReplyDelete
  37. @இரவு வானம்: //திருட்டையும், அரசியல்வாதிகளையும் மிக்ஸ் பண்ணினது டாப்பு//..நானாங்க மிக்ஸ் பண்ணேன்?..அவங்க ஏற்கனவே மிக்ஸ் ஆகித்தானே இருக்காங்க.

    ReplyDelete
  38. @சூரியாள்: பதிவுலகின் சிறப்பம்சமே பல உள்விவகாரங்கள் வெளிவருவதுதான்..அந்தச் சுட்டியில் உள்ள உங்கள் கட்டுரை நாட்டுநடப்பைத் தெளிவாகச் சொல்கிறது.ஜாதிக்கட்சித் தலைவர்கள் பற்றித் தனியாகத் தான் எழுதவேண்டும்.

    ReplyDelete
  39. நல்ல பதிவு!சாதி ஒழிப்பினைப் பற்றி வாய் கிழியப் பேசும் குடும்பத்தின் சாதி அரசியலை வெளிக்கொண்டு வந்த பாணி நன்றாக உள்ளது.

    கவிஞர் வைரமுத்துவின் கவிதை(கற்பனைதான்)
    ‍‍‍‍‍‍‍‍‍‍=============================================
    "அன்று சர்க்காரியா சொன்னார்.
    நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று.
    ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய்.
    வானில் உள்ள தேவர்களின் எண்ணிக்கை கூட முப்பத்து முக்கோடி தான்.
    நீ ஒரே தவணையில் அடித்ததோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி.
    ஊழல் செய்வதில் நீ ஒரு எட்டமுடியாத சிகரம்.
    ஊழலுக்கே உன் குடும்பம்தான் தலைநகரம்.
    வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைவன் நீ..
    உன் குடும்பம் வழி வந்தாரை வாழ வைக்கும் தலைவன் நீ…
    ஆம் குடும்பத் தலைவன் நீ..
    நான் கட்டியதோ பொன்மணி மாளிகை….
    நீ கட்டியதோ பத்மாவதி, தயாளு மற்றும் ராசாத்தி…
    சர்காரியாவையே சாக்கு மூட்டையில் கட்டியவன் நீ….
    உன்னிடம் சுண்டைக்காய் சிபிஐ எம்மாத்திரம்….."

    கவிஞர் வாலியின் கவிதை(கற்பனைதான்)
    ===========================================
    "கொற்றவனே… கொற்றவனே….
    ஸ்பெக்ட்ரத்தை விற்றவனே…
    தறுதலைகளை பெற்றவனே…
    சூடு சொரணை அற்றவனே…
    கொற்றவனே.. கொற்றவனே..
    உன்னால் அடைய வேண்டியது ஏற்றம்.
    தமிழகத்துக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.
    மக்களுக்கு மிஞ்சியதோ முற்றம்.
    உனக்கு அள்ளித் தந்தது ஸ்பெக்ட்ரம்.
    தமிழ்ல உனக்கு புடிச்ச வார்தை கோடி
    நீ பெத்து வச்சுருக்க புள்ளைங்களோ கேடி
    தள்ளு வண்டில போனாலும் தளராது உன் பாடி..
    உன் புள்ளைங்களுக்கு நீதான் சரியான டாடி
    எக்கச்சக்கமா சேத்துருக்க துட்டு
    நீ கதை வசனம் எழுதுனா சூப்பர் ஹிட்டு
    உன்னால தமிழகம் போனது கெட்டு
    உனக்கு மக்கள் அடிக்கப் போறாங்க ரிவிட்டு"

    ReplyDelete
  40. நீங்கள் ஒரு நல்ல கவிஞர் என்பதை இன்று அறிந்தேன்..கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  41. ???????? ?????? - ?????????? ?????? ?????? ?????????

    ReplyDelete
  42. அப்படியா சங்கதி - பார்ப்போம் மக்கள் முடிவு என்னன்னு?

    ReplyDelete
  43. @ kmr.krishnan

    மிகவும் அருமை.

    .

    ReplyDelete
  44. @மனசாட்சி: வருகைக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  45. சமச்சீரான கண்ணோட்டம். கிருஷ்ணன் ஸாரின் கவிதைகள் சூப்பர்

    ReplyDelete
  46. செங்கோவி யின் அரசியல் விமர்சனம் அருமை ...தேர்தல் வருது , பார்த்து இருந்துகோங்க , தூக்கிடப்போறாங்க !!!!



    http://tamizh-kirukkan.blogspot.com

    ReplyDelete
  47. @Vijay: உங்கள் அக்கறைக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  48. @கோவி.கண்ணன்: மூத்த பதிவரான தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்..சாரி, பதிலிட மறந்துபோனேன்..

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.