திமுக, அதிமுக என்ற இரு ஊழல் கட்சிகளின் ஆட்சியால் நொந்துபோயிருந்த மக்கள் ஏதேனும் ஒரு மாற்று சக்தி வராதா என எதிர்பார்த்திருந்த வேளை. ’ரஜினிகாந்த் வந்து ரட்சிப்பார்’ என்று நான் டவுடசர் போட்ட காலம் முதல் மீடியாக்கள் சொல்லின. ஆனால் காசு விஷயத்தில் புத்திசாலியும் எதற்குமே ரொம்ம்ம்ம்ப யோசிப்பவருமான ரஜினி எஸ்கேப் ஆனதால், அந்த கேப்பில் புகுந்தார் கேப்டன் விஜயகாந்த்.
ஈழத் தமிழர் பிரச்சினை, ஆரிய-திராவிட பிரிவினை போன்ற எந்தவொரு சீரியஸ் விஷயங்களிலும் எவ்விதக் கொள்கையும் இல்லாமல் ‘ஆட்சியைப் பிடிப்பதே’ கொள்கையாகக் களமிறங்கினார் கேப்டன். அவர் மக்களிடம் ஒரே ஒரு டீலிங்கைப் போட்டார் : ‘உங்களுக்கோ ஒரு மாற்று சக்தி வந்து ஆட்சி செய்யணும்னு ஆசை. எனக்கோ நானே ஆட்சி செய்யணும்னு ஆசை. நாம ஏன் ஒருத்தர் ஆசையை இன்னொருத்தர் நிறைவேற்றக் கூடாது?’ ஆனால் மக்களுக்கு இந்த டீலிங் திருப்தி அளிக்கவில்லை. அதற்கான முதல் காரணம் இவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் நினைக்கவில்லை. எனவே இவர் என்ன செய்கிறார் பார்ப்போம் என மக்கள் அவரை சோதனை ஓட்டத்தில் வைத்தனர்.
விருத்தாசலத்தில் விஜயகாந்த் பெற்ற வெற்றி உண்மையில் மிகவும் பாராட்டக்கூடிய விஷயம். தனியாக நின்று, பாமகவின் கோட்டையில் வென்றது சாதாரண விஷயம் அல்ல. அவரை முதல்வர் வேட்பாளராக அந்தத் தொகுதி மக்கள் கருதியதும் ஒரு காரணம். விஜயகாந்தின் ஓட்டு வங்கி அவரது ரசிகர்களும், ‘ஆதாய அரசியலில்’ ஜொலிக்க முடியாமல் போன வைகோவை நம்பியிருந்த நாயக்கர் சமுதாயமும்தான். ஆனால் வன்னியர் நிறைந்த தொகுதியில் நின்று, மக்கள் மத்தியில் ‘நடிகர்’ என்ற அடையாளத்தையே முன்வைத்தார்.
தொடர்ந்து அவர் அடித்த பல்டிகளின் மூலம் அரசியலுக்குத் தான் பொருத்தமானவரே என்று நிரூபித்தார்.டெல்லியில் அமர்ந்துகொண்டு ‘இலங்கைக்கு இந்தியா ஆயுதம் கொடுக்கவைல்லையென்றால் பாகிஸ்தானோ, சீனாவோ கொடுக்கும். அதெல்லாம் வியாபாரம். குறை சொல்லக்கூடாது’ என்றார். பின்னர் சென்னையில் நடந்த நடிகர்களின் உண்ணாவிரததில் போரை நிறுத்த வேண்டும் என முழங்கினார்.
குமுதத்தில் ‘நாடாவை அவிழ்த்துப்பார்’ என கருணாநிதி சட்டசபையில் பேசியதாக பேட்டி கொடுத்தார். பிரச்சினை ஆனதும் ‘அப்படி சொல்லவேயில்லை’ என குமுத்த்தின் மீதே பழி போட்டார். ராமேஸ்வரத்தில் ‘திமுககாரங்களை சுட்டுக் கொல்லணும்’ என்றார். அதையும் பின்னர் மறுத்தார்.
தொடர்ந்த இத்தகைய செயல்பாடுகளால் தானும் ஒரு சராசரி அரசியல்வாதியே என நிரூபித்தார். கடவுளும் மக்களும் கைவிட்டுவிடுவார்கள் எனப் புரிந்துகொண்டு இப்போது கூட்டணிக்கு இறங்கி வந்திருக்கிறார். ஆனால் கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த்தைக் குறை கூற ஒன்றுமில்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் பலரும் பணத்தை பெருமளவு இழந்து நிற்கின்றனர். கூட்டணி வைத்து, அதிமுகவிடமிருந்து பெட்டி வாங்கி கொடுத்தால் மட்டுமே கட்சியினர் ஊக்கத்துடன் தேர்தல் பணி ஆற்றுவர் என்பதே தற்போதைய நிலை.
ஆனால் விஜயகாந்துக்கு இதுவரை கிடைத்த ஓட்டுக்களில் பெரும்பாலானவை அவர் தனித்து நின்ற காரணத்துக்காக விழுந்தவையே. இப்போது கூட்டணி என்று இறங்கினால் அவரது ‘மாற்று சக்தி’ இமேஜ் அடிவாங்கும். அதனால் ஓட்டுக்கள் குறையலாம். அது வெளியில் தெரியாது என்பதே கூட்டணியாகப் போட்டியிடுவதில் உள்ள வசதி.
தனித்து நின்றால் கட்சி காலியாகிவிடும், கூட்டணி என்றால் இமேஜ் காலியாகி விடும். இந்த சூழ்நிலையில் தேர்ந்த அரசியல்வாதியாகிவிட்ட விஜயகாந்த் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையே கூட்டணி. கட்சியைப் பொருத்தவரை அது நல்லதே.
ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பவர்கள் முதலில் இழப்பது சுயமரியாதையைத் தான். கூட்டணித் தலைவர்களை அவமானப்படுத்துவதில், கேவலப்படுத்துவதில் மேலும் என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் படுத்துவதில் கை தேர்ந்தவர் ஜெயலலிதா. அதன்மூலமே வைகோ போன்ற ‘பழைய மாற்று சக்தி’களைக் காலி செய்திருக்கிறார். இப்போது விஜயகாந்தின் இமேஜையும் சீக்கிரமே தயவுதாட்சண்யம் இன்றி காலி செய்வார்.
அதிமுக, திமுகவிற்கு மாற்றாகக் கிளம்பிய ஒரு கட்சி, கடந்த மக்கள் தீர்ப்பினால் பாமக-காங்கிரஸ்-மதிமுகவிற்கு மாற்றாக உருமாறி நிற்கிறது.
விஜயகாந்த்திற்கு இதுவே பெரும் சாதனைதான். அதற்கு முக்கியக் காரணியான ’விஜயகாந்தின் டைரக்டர்’பிரேமலதாவும் பாராட்டுக்கு உரியவரே.
//அதிமுக, திமுகவிற்கு மாற்றாகக் கிளம்பிய ஒரு கட்சி, கடந்த மக்கள் தீர்ப்பினால் பாமக-காங்கிரஸ்-மதிமுகவிற்கு மாற்றாக உருமாறி நிற்கிறது. //
ReplyDeleteபதிவு விரைவில் முடிந்துவிட்டது
ReplyDeleteஆனால் சிறிதாக இருந்தாலும் அருமை
@THOPPITHOPPI: எனக்கு இதுவே நீளமாகத் தோன்றியது...கூட்டணிகள் முடிவானபின் எல்லோரையும் திரும்பக் கவனிக்க வேண்டுமே!
ReplyDelete@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): நன்றி போலீஸ்கார்..
ReplyDeleteநல்ல அலசல்! அப்போ விஜயகாந்துக்கு ஆப்புதானா?
ReplyDeleteஅப்புறம் the prestige பார்த்திட்டு சொல்லுங்க! அதைப்பற்றித்தான் முதலில் எழுத நினைத்தேன். ஆனா எழுதினா முழுக்கதையும் சொல்ல வேண்டிவருமான்னு ஒரே குழப்பம்! நான் நினைக்கிறேன் அது மெமெண்டோவுக்கும் மேல! மெமெண்டோ போல கால வேறுபாட்டுக்கு இடையிடையே black & white எல்லாம் கிடையாது. பாருங்க பாஸ்! :-)
ReplyDelete@ஜீ...: கூட்டணி வைத்தால் கட்சி பிழைக்கும்..வருங்கால முதல்வர் அழிவார்.
ReplyDelete@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): //நல்ல அலசல்// இதை ஏற்கனவே சொல்லீட்டீங்களே..ஏதாவது உள்குத்தா..இல்லே, உங்க ஆட்டத்தை ஆரம்பிக்கிறீங்களா..அய்யா, இதை நான் கொஞ்சம் சீரியஸா எழுதறேன்..நான் பாவம் இல்லையா..
ReplyDelete>>> தொடர்ந்து கருணாநிதியை திட்டுவதும், இவர் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார் என்பதை விளக்காமல் இருப்பதும் சரியா, செங்கோவி?
ReplyDelete@! சிவகுமார் !: 'ஆட்சியைப் பிடிப்பது’ எனபதைத் தவிர வேறெந்தக் கொள்கையோ திட்டமோ இல்லாததுதான் பிரச்சினையே..
ReplyDeleteநல்ல அலசல்... பார்க்கலாம் விஜயகாந்த் எப்படி என்பதை இந்த தேர்தலில்...
ReplyDelete//அவர் தனித்து நின்ற காரணத்துக்காக விழுந்தவையே. இப்போது கூட்டணி என்று இறங்கினால் அவரது ‘மாற்று சக்தி’ இமேஜ் அடிவாங்கும்.////
ReplyDelete//தனித்து நின்றால் கட்சி காலியாகிவிடும், கூட்டணி என்றால் இமேஜ் காலியாகி விடும். //
//அவர் அடித்த பல்டிகளின் மூலம் அரசியலுக்குத் தான் பொருத்தமானவரே என்று நிரூபித்தார்//
சத்தியமான வார்த்தைகள்.. நல்ல தெளிவான அலசல்கள்...
உங்களின் மற்ற பதிவுகளை விட அரசியல் பற்றிய பதிவு மிகவும் நன்றாக இருப்பதாகத்தோன்றுகிறது..
ReplyDeleteஉங்களின் மற்ற பதிவுகளை விட அரசியல் பற்றிய பதிவு மிகவும் நன்றாக இருப்பதாகத்தோன்றுகிறது..
ReplyDeleteஆனால் விஜயகாந்த் இந்த அளவு நிலைத்து நின்றதே ஒரு சாதனை தான்..
ReplyDeleteஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பவர்கள் முதலில் இழப்பது சுயமரியாதையைத் தான். கூட்டணித் தலைவர்களை அவமானப்படுத்துவதில், கேவலப்படுத்துவதில் மேலும் என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் படுத்துவதில் கை தேர்ந்தவர் ஜெயலலிதா. அதன்மூலமே வைகோ போன்ற ‘பழைய மாற்று சக்தி’களைக் காலி செய்திருக்கிறார். இப்போது விஜயகாந்தின் இமேஜையும் சீக்கிரமே தயவுதாட்சண்யம் இன்றி காலி செய்வார்.
ReplyDeleteநூறு சதவீதம் சரியான வார்த்தை செங்கோவி
அப்படியே இவரு ஜெயிச்சு முதல்வராகிட்டாலும், பாலாறும் தேணாறும் ஓடிரும், போங்க நண்பா எல்லாரும் சம்பாதிக்கதான் அரசியலுக்கு வராங்க, இவரு மட்டும் என்ன விதிவிலக்கா, ஜெ கூட சேரட்டும் அப்புறம் இருக்கு ஆப்பு ...
ReplyDelete@சே.குமார்:கூட்டணிதான் என்றால் தப்பிப்பார்..
ReplyDelete@பாரத்... பாரதி...://உங்களின் மற்ற பதிவுகளை விட அரசியல் பற்றிய பதிவு மிகவும் நன்றாக இருப்பதாகத்தோன்றுகிறது.// நன்றி பாரதி.. அரசியல் பதிவுகளுக்காக தகவல் தேடி அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது..அதனால் இருக்கலாம்..(இல்லேன்னா கும்மிடுவாங்களே)..அதுசரி, எனது சினிமாப் பதிவுகளும் கதைகளும் பிடிக்கலையா...அவ்வ்.
ReplyDelete@ரஹீம் கஸாலி என்னமோ தெரியல, மம்மின்னா நான் ஃபார்முக்கு வந்துடுறேன்!
ReplyDelete@இரவு வானம் //எல்லாரும் சம்பாதிக்கதான் அரசியலுக்கு வராங்க// கரெக்ட் நண்பா..அரசியல் ஒரு பிசினஸ் ஆகி ரொம்ப நாளாச்சு..இவர் நல்லாவே கல்லா கட்டுதாரு இல்லையா...
ReplyDeleteஎன்னவோ போங்க....
ReplyDelete@Chitra: போயிடுறேன்க்கா!
ReplyDeleteதொடர்ந்து அலசுங்க... நல்ல தரமான பதிவு
ReplyDelete@அரசன்: நன்றி அரசன்..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
ReplyDelete//
ReplyDeleteஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பவர்கள் முதலில் இழப்பது சுயமரியாதையைத் தான். // 100 % சரி. தலையில் இருந்து விழுந்த முடிக்கு கொடுக்கும் மரியாதை நிச்சயம் அவரிடமிருந்து கிடைக்கும்.
@Jayadev Das: கூட்டணி சேர்ந்தாச்சு..இனிமே தான் ஆரம்பிக்கும்!
ReplyDeleteசிறப்பான அலசல். ஆனாலும் இதனால் இவர் அடுத்த வைகோ ஆகிவிடுவார் என்ற தீர்மானத்திற்கு என்னால் வர இயலவில்லை. காரணம் அரசியலில் ஜெயித்தவர்களும் கூட பல சமயங்களில் கொள்கை, புண்ணாக்கு, வெங்காயம் என்று பார்க்காமல் நெளிவு சுளிவோடே நடந்து தங்களுக்குள் சமரசம் செய்துக்கொண்டிருக்கிறார்கள்
ReplyDeleteபின்னூட்ட தொடர்புக்கு
ReplyDelete@Karikal@ன் - கரிகாலன்: //இவர் அடுத்த வைகோ ஆகிவிடுவார் என்ற தீர்மானத்திற்கு என்னால் வர இயலவில்லை.// உண்மை தான் சார்..இவர் ராமதாஸ் மாதிரி வரவே வாய்ப்பு அதிகம்..
ReplyDelete