Tuesday, April 5, 2011

கடுப்பைக் கிளப்பும் மின்னஞ்சல்கள்!

சில வருடங்களுக்கு முன் எங்கள் ஊரில் நடந்தது இது. என் நண்பன் ஒருவன் ஓடைப்பக்கம் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் ஒரு அடி பம்பு உண்டு. நான் அங்கு தான் நின்று கொண்டிருந்தேன். ஒரு பெண் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தது. அவனைப் பார்த்ததும் ‘என்ன மாமா, வேலைக்குப் போகலையா’ என்று கேட்டது. அவனும் ‘இல்லைம்மா..காய்ச்சல்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
மாலையில் ஊரே பரபரப்பாக இருந்தது. எங்கள் கடையில் தான் வழக்கமாகப் பெண்கள் கூடி, குசும்பு பேசுவார்கள். யாரைப் பற்றியோ தீவிரமாக கதை ஓடுவது மட்டும் தெரிந்தது. ஆனாலும் என்ன விஷயம்னு தெரியவில்லை.பிறகு இரவு ஆண்கள் கூடியபோது விஷயம் வெளியில் வந்தது. ‘அவங்களுக்கு எவ்வளவு தைரியம் பாருப்பா’ என்று அண்ணன் ஒருவர் ஆரம்பித்தார். எல்லோரும் ‘விளக்கமாச் சொல்லுப்பா’ என்று தூபம் போட்டதும், அவர் விஷயத்தை உடைத்தார்.

‘அந்தப் பய இன்னைக்குத் திடீர்னு லீவு போட்டப்பவே எனக்கு டவுட்டுய்யா! இன்னைக்கு மத்தியானம் ஓடைக்கு உள்ளயிருந்து அவனும் அவளும் வந்திருக்காங்க. அதை நம்ம மாமு பாத்துப்புட்டாராம். உடனே ஆளுக்கொரு பக்கமா ஒரே ஓட்டமாம். ஆனாலும் பொட்டபுள்ளைக்கு இவ்வளவு தைரியம் ஆகாதுப்பா’ என்று அவர் சொல்வதைக் கேட்டதும் எனக்குத் தலை சுற்றியது. 

மெதுவாக நான் ’ இல்லைண்ணே, அவன் மட்டும் தான் ஓடைப்பக்கமிருந்து வந்தான். அந்தப் பொண்ணு வீட்ல இருந்து தண்ணிப் பம்புக்குத் தான் வந்துச்சு’ என்றேன். ஆனாலும் யாரும் அதைக் கேட்கத் தயாராக இல்லை. மறுநாள் என் நண்பன் என்னிடம் புலம்பித் தள்ளியது தனிக்கதை. 

நான் பலமுறை அந்த விஷயத்தைப் பற்றிச் சிந்தித்திருக்கிறேன். உண்மையா, பொய்யா என்று கூடக் கவலைப்படாமல், ஏன் இப்படி அந்தச் செய்தி பரப்பப்பட்டது? சரி, படிக்காத பாமர மக்கள். அதனால் தான் இப்படிச் செய்கிறார்கள் என்று மனதைத் தேற்றிக்கொள்வேன். ஆனால் இந்த மின்னஞ்சலில் வருகின்ற சில ஃபார்வர்ட் மெயில்களைப் பார்க்கும்போது, அவர்களே பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது.
ஆபீஸில் வேலை டைட் என்பதால், எனக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதற்கே எனக்கு நேரமில்லை.(பதிவிற்கே நேரம் சரியாக உள்ளது!) வாரம் இருமுறை மின்னஞ்சல் பார்ப்பதே என் வழக்கம். எனது பதிவுகளைப் பாராட்டி வரும் மின்னஞ்சல்களுக்குக் கூட லேட்டாகப் பதில் அளிக்கிறோமே என நான் வருத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. (போட்டான்யா விளம்பரத்தை!). எனது பதிவுலக நண்பர்கள்கூட கடுப்பாகி, இப்போதெல்லாம் எனக்கு மெயிலே அனுப்புவதில்லை.(நான் கஸாலியைச் சொல்லவில்லை!)

எனக்கு வரும் பெரும்பாலான மெயில்கள், ’இந்த மெயிலை நீ 10 பேருக்கு ஃபார்வர்ட் செய்யாவிட்டால், ரத்தம் கக்கிச் சாவாய்’ ரகம் தான். இந்த மாதிரி மெயில்களைப் படித்து விட்டுக் கடுப்பாகி, டெலீட் செய்து விடுவேன். இன்றுவரை நான், மொக்கு மொக்கென்று மொக்கும் பிரியாணியைக் கூட கக்கவில்லை. இருந்தும் ஏன் இப்படிப் பயந்து போய் ஃபார்வர்ட் செய்கிறார்கள்?

மற்றொரு வகை மெயில்கள், ’இதை நீ 10 பேருக்கு அனுப்பினால் அந்த வெப்சைட்/கம்பெனி உனக்கு இவ்வளவு காசை 10 நாட்களில் அனுப்பும்’ என்று வருகின்றன. இதை கர்மசிரத்தையாக பத்துப்பேருக்கு அனுப்பும் என் நண்பர்களிடம், சரியாகப் பத்து நாட்கள் கழித்துக் கேட்டிருக்கிறேன் ’பணம் அக்கவுண்ட்ல ஏறிடுச்சா’ என. ‘ஹி..ஹி..’ என வழிவார்கள். ஆனாலும் திரும்பவும் அதே போன்ற மெயில்கள் ஃபார்வர்ட் செய்கிறார்கள்.

இதே போன்று மிகவும் அக்கறையுடன் சில மெயில்கள் வரும். ’அந்த ஊரில் அவருக்கு இப்படி நடந்து விட்டது. ஆகவே நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கும். யோசித்தால் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். இன்று ஒரு மெயில் வந்திருக்கிறது. கேமிராவில் வரும் ஃப்ளாஷ் லைட் மூலம் கரண்ட் பரவி ஷாக் அடிக்கிறதாம்!

டெல்லியில் ஒரு சிறுமி, கேமிராவுடன் மின்சார ரயிலின் டாப்பில் ஏறி(!) கீழே உள்ள நண்பர்களை ஃபோட்டோ எடுத்தாராம். தலைக்கு மேல் ஓடிய மின்கம்பியில் இருந்து மின்சாரம், ஃப்ளாஷ் லைட் வழியாக சிறுமியின் உடல்மேல் பாய்ந்து விட்டதாம். சிறுமி உடலெல்லாம் எரிந்து, டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாராம். ஆனாலும் இறந்து விட்டாராம். 

சிறுமியின் பெயர், வயது, தாய் தந்தையர் பெயர், மருத்துவமனைப் பெயர் என எல்லா விபரங்களையும் தாங்கி, இந்த மெயில் வந்துள்ளது. நான் ஒரு ப்ப்ப்ப்பதிவ்வ்வ்வ்வர் என்று தெரியாமல் எனக்கு அனுப்பி விட்டார்கள். நான் மருத்துவமனைப் பெயரை கூகுளில் தேடினால் அப்படி ஒரு மருத்துவ மனையே இல்லை. மீடியாக்கள் நாம் சத்தமாக ** விட்டால் கூட ‘அதிசயம் பாரீர்’ எனக் காட்டத் தயாராக உள்ளன. ஆனால் எந்த மீடியாலும் இப்படி ஒரு செய்தி வரவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஒளி எப்படி மின்சாரத்தைக் கடத்தும் என்றே என் சிற்றறிவுக்குப் புரியவில்லை.


இது போக விஜயகாந்த போல் நம்மை ‘மகாராஜா’ ஆக்கும் மெயில்கள் தொல்லை வேறு. அதைப் பற்றி நிறைய பதிவுலக நண்பர்கள் எழுதி உள்ளதை நீங்களே படித்திருப்பீர்கள்.

இன்பாக்ஸில் என்ன வந்தாலும், உடனே அதைப் பார்வர்ட் பண்ணாமல், அதன் நம்பகத்தன்மையைப் பற்றிக் கொஞ்சம் யோசித்தோம் என்றால் நமக்கும் வேலை மிச்சம், அதைப் படிப்போருக்கும் வேலை மிச்சம். யோசிப்போமா?

டிஸ்கி: பதிவில் உள்ள படங்கள் கடுப்பைத் தணிப்பதற்காக! மற்றபடி சிநேகாவோ அஞ்சலிக்குட்டியோ எனக்கு மின்னஞ்சல் அனுப்பி, உங்களைக் கடுப்பேற்றவில்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

56 comments:

 1. @தமிழ்வாசி - Prakashஹலோ, நான் உங்க கடையில வடை கிடைக்குமா-ன்னு முதல் கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன்...நீங்க இங்கே வடை-பஜ்ஜி வித்துக்கிட்டு இருக்கீங்க?

  ReplyDelete
 2. //எனது வலைப்பூவில்: கொடியை இறக்குடா! ஆஃப் கொடுடா!! விஜயகாந்த் அலப்பறை வீடியோ!!// படிச்சு முடிச்சு கமெண்ட்/ஓட்டே போட்டாச்சு..இப்போப் போடுதாரு விளம்பரத்தை!..நாங்கள்லாம் செம ஃபாஸ்ட் மாமு!

  ReplyDelete
 3. நீங்க அங்க வடை எடுத்தா...நான் இங்க வடை எடுப்பேன்...எப்படியோ வந்தோம்ல....


  எனது வலைப்பூவில்: கொடியை இறக்குடா! ஆஃப் கொடுடா!! விஜயகாந்த் அலப்பறை வீடியோ!!!

  ReplyDelete
 4. ///ஒரு பெண் தன்னீர் அடித்துக் கொண்டிருந்தது.///

  செங்கோவி, விஜயகாந்த் தண்ணிய பத்தி பேசுரதுனால எந்த தண்ணின்னு கொழப்புது. தெளிவா போடுங்க.

  ReplyDelete
 5. @தமிழ்வாசி - Prakashஇப்போ தண்னீர்-னு சரியாப் போட்டிருக்கேன்..ஏன்யா அந்தாளை நடுராத்திரில ஞாபகப்படுத்துறீங்க!

  ReplyDelete
 6. @செங்கோவி///இப்போ தண்னீர்-னு சரியாப் போட்டிருக்கேன்..ஏன்யா அந்தாளை நடுராத்திரில ஞாபகப்படுத்துறீங்க!///

  அந்தாளு பத்தி பதிவெழுதினாலே மப்பு ஏறுது.என்ன செய்றது?

  ReplyDelete
 7. // ’இதை நீ 10 பேருக்கு அனுப்பினால் அந்த வெப்சைட்/கம்பெனி உனக்கு இவ்வளவு காசை 10 நாட்களில் அனுப்பும்’ என்று வருகின்றன.//

  இவனுங்கள எல்லாம் மத்யான வெயில்ல மவுண்ட் ரோட்ல மல்லாக்க போட்டு அடிக்கணும்!!

  ReplyDelete
 8. வணக்கம் சகோதரம், முதலாவது பத்தியில் வித்தியாசமான மனித மனங்களையும் கிராமத்தில் இணைய வேகத்தை விட அதி வேகமாகப் பரவும் வதந்திகள், தகவல்களையும் பற்றியும் அலசியிருந்தீர்கள்.

  எம்மவர்களைப் பொறுத்தவரை ஒரு தூசி கிடைத்தாலே போதும், அதனை வைத்து துரும்பினையே பிரட்டி விடுவார்கள்.

  ReplyDelete
 9. இரண்டாவது பத்தியில் மின்னஞ்சல்.. அதுவும் ரொம்ப பிசியாக இருக்கும் போது Spam வைரஸ்களுடன் சேர்ந்து வரும் மின்னஞ்சல்கள். உங்கள் மெயில் முகவரிக்கு லாட்ரி விழுந்திருக்கு. உங்களுக்கு வங்கியில் அதிஸ்டம் இருக்கிறது. உட்பட கசாமுசா வயக்ரா தகவல்களும் மின்னஞ்சல்களில் வருகிறது.

  இவற்றை நிறுத்தலாம். எப்படியென்றால் உங்கள் ஜீமெயிலின் ஸ்பாம் Spam block பகுதியில் சென்று உங்களுக்கு வரும் இத்தகைய மின்னஞ்சல்களை block பண்ணும் ஆப்ஷனைத் தெரிவு செய்தால் இப்படியான் மின்னஞ்சல்கள் உங்களுக்கு வரவே வராது.

  http://www.google.com.au/support/forum/p/Google+Apps/thread?tid=6d686f9dc0550adb&hl=en

  http://www.google.com/support/forum/p/Google%20Apps/thread?tid=13dbbebc43bc7243&hl=en

  ReplyDelete
 10. எங்கே கடைசியில், இந்த பதிவையும் பத்து பேருக்கு forward செய்யச் சொல்லி, அப்படி செய்தால் பத்து நாளில் பணம் deposit ஆகும் என்று டிஸ்கியில் சொல்லி இருப்பீங்களோ என்று பார்த்தேன்....ஹா,ஹா,ஹா,ஹா....

  ReplyDelete
 11. என்னதான் சொல்லு மாப்ள நீ அறிவாளி தான்யா!.......... பாரேன் நீயே உன்ன கும்மிக்கற ஹிஹி!

  ReplyDelete
 12. // ’இதை நீ 10 பேருக்கு அனுப்பினால் அந்த வெப்சைட்/கம்பெனி உனக்கு இவ்வளவு காசை 10 நாட்களில் அனுப்பும்’ என்று வருகின்றன.//

  இவனுங்கள எல்லாம் மத்யான வெயில்ல மவுண்ட் ரோட்ல மல்லாக்க போட்டு அடிக்கணும்!!
  ரிப்பீட்டு..

  ReplyDelete
 13. கலக்கல் பதிவு...
  அதுமாதிரி அனுப்பரவங்களை நாடு கடத்தலாம்..

  ReplyDelete
 14. @! சிவகுமார் !//இவனுங்கள எல்லாம் மத்யான வெயில்ல மவுண்ட் ரோட்ல மல்லாக்க போட்டு அடிக்கணும்!!// ஹா..ஹா..நீங்களும் செமக் கடுப்புல இருப்பீங்க போல!

  ReplyDelete
 15. @நிரூபன்//இத்தகைய மின்னஞ்சல்களை block பண்ணும் ஆப்ஷனைத் தெரிவு செய்தால் இப்படியான் மின்னஞ்சல்கள் உங்களுக்கு வரவே வராது. // தகவலுக்கு நன்றி சகோ, நண்பர்களிடம் இருந்து வரும் மெயிலை என்ன செய்வது...

  ReplyDelete
 16. @Chitra//எங்கே கடைசியில், இந்த பதிவையும் பத்து பேருக்கு forward செய்யச் சொல்லி, // ஆஹா..இந்த ஐடியா நல்லாயிருக்கே!

  ReplyDelete
 17. @விக்கி உலகம்//பாரேன் நீயே உன்ன கும்மிக்கற ஹிஹி!// இதுல ஒரு சந்தோஷமாய்யா உங்களுக்கு!

  ReplyDelete
 18. @!* வேடந்தாங்கல் - கருன் *!//அதுமாதிரி அனுப்பரவங்களை நாடு கடத்தலாம்..// வாத்தியார் சொன்னா சரிதான்!

  ReplyDelete
 19. >>வாரம் இருமுறை மின்னஞ்சல் பார்ப்பதே என் வழக்கம். எனது பதிவுகளைப் பாராட்டி வரும் மின்னஞ்சல்களுக்குக் கூட லேட்டாகப் பதில் அளிக்கிறோமே என நான் வருத்தப்படுவது வழக்கமாகிவிட்டது.

  ஹி ஹி ஹி

  ReplyDelete
 20. >>எனக்கு வரும் பெரும்பாலான மெயில்கள்,

  அண்ணனுக்கு நிறையா ஃபிகர்ஸ் மெயில் வரும்.. அதைப்பத்தி எல்லாம் மூச்சே விட மாட்டாரே...

  ReplyDelete
 21. >>Posted by செங்கோவி at 1:52 AM
  Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
  Labels: அனுபவம், சமூகம்

  அண்ணே... மிட் நைட்ல பதிவு போட்டிருக்கிங்க.. லேபிள்ல அனுபவம்னு இருக்கு.. ஆனா ஒண்ணும் ஸ்பெஷ்லா இல்லையே..? ஹி ஹி

  ReplyDelete
 22. @சி.பி.செந்தில்குமார்யோவ், சும்மா அள்ளி விடாதீரும்!

  ReplyDelete
 23. நீங்களும் எனக்கு 7... நானும் உங்களுக்கு 7 வது.. ஹி ஹி தானிக்கு தீனி சரியா போச்சு..

  ReplyDelete
 24. @சி.பி.செந்தில்குமார்//லேபிள்ல அனுபவம்னு இருக்கு.. ஆனா ஒண்ணும் ஸ்பெஷ்லா இல்லையே..? ஹி ஹி// ச்சே..காலங்காத்தாலயும் இதே நெனப்புத் தானா..விளங்கிரும்!

  ReplyDelete
 25. @சி.பி.செந்தில்குமார்//தானிக்கு தீனி சரியா போச்சு..// ஹா..ஹா..இதை நான் கவனிக்கலையே!

  ReplyDelete
 26. நீங்க வேற நண்பா எனக்கெல்லாம் மெயிலே வரதில்லைன்னு கடுப்புல இருக்கேன் :-)

  ReplyDelete
 27. பதிவெல்லாம் ஓகே சகோ...ஆனால் நீங்க போட்ட நடிகைகள் படத்துக்கு ஒரு காரணம் சொன்னிங்க பாருங்க...அட டா...புல்லரித்து போனேன்..:)

  ReplyDelete
 28. விளம்பரம்

  கனவு பலித்ததே

  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_05.html

  ReplyDelete
 29. நமக்கு இந்த தொல்லையே இல்லையப்பா. நம்முடைய மின்னஞ்சல் முகவரியை கண்ட கண்ட பயல்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் குடுத்தால் இந்த நிலைதான் வரும். அப்படியே வந்தாலும் ஈவு இரக்கம் பார்க்காமல் குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விடுவேன். ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 30. இப்படி கொஞ்சம் கூட மூளையே இல்லாமல் வரும் மின்னஞ்சல்களை ஸ்பாம் பெட்டிக்குள் தள்ளிவிடுவேன். தொடர்ந்து அப்படி வந்தால் அது நண்பனாக இருந்தால் ஸ்பாம் என முத்திரைக் குத்திவிடுவேன்.. பின்னர் அது தானாக்வே ஸ்பாம் பெட்டிக்குள் போய்விடும். நண்பன் அப்புறம் எதாவது முக்கியமான மெயில் அனுப்பினாலும் அதுவும் ஸ்பாம் ஆகிவிடும். போய்டு போவுது இப்படி மூளை இல்லாத நண்பர் பலரை வைத்திருப்பதை விட சும்மா இருக்கலாம்... நீங்களும் அதே பண்ணுங்க....

  ReplyDelete
 31. //ஆபீஸில் வேலை டைட் என்பதால், எனக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதற்கே எனக்கு நேரமில்லை//

  நம்பிட்டோம்!! ஆனாலும் அதுக்காக இவ்வளவு பெரிய புலப்பமா ஹும்..
  :-))

  ReplyDelete
 32. @இரவு வானம் //எனக்கெல்லாம் மெயிலே வரதில்லைன்னு கடுப்புல இருக்கேன்// நண்பா, நான் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பனும்னு ஒரு வாரமா நினைச்சுக்கிட்டே இருக்கேன்..சோம்பேறித்தனத்தால தள்ளிக்கிட்டே போகுது..சீக்கிரம் அனுப்புறேன்!

  ReplyDelete
 33. @ஆனந்தி.. //ஆனால் நீங்க போட்ட நடிகைகள் படத்துக்கு ஒரு காரணம் சொன்னிங்க பாருங்க..// விடுங்கக்கா..விடுங்கக்கா...

  ReplyDelete
 34. @Speed Master //விளம்பரம்// மாஸ்டர், நம்ம கடையில விளம்பரம் போட கட்டணம் உண்டு..சீக்கிரம் என் அக்கவுண்ட்ல பணத்தைப் போடுங்க.

  ReplyDelete
 35. @Jayadev Das //நம்முடைய மின்னஞ்சல் முகவரியை கண்ட கண்ட பயல்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் குடுத்தால் இந்நம்முடைய மின்னஞ்சல் முகவரியை கண்ட கண்ட பயல்களுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் குடுத்தால் இந்த நிலைதான் வரும்.// சார், நண்பர்களே இப்படி அனுப்புறாங்களே..அதுக்கு என்ன செய்ய!

  ReplyDelete
 36. @இக்பால் செல்வன் //போய்டு போவுது இப்படி மூளை இல்லாத நண்பர் பலரை வைத்திருப்பதை விட சும்மா இருக்கலாம்... // இக்பால், கூல்..கூல்..அடெங்கப்பா, சிநேகா-அஞ்சலி படம் போட்டே இந்தக் கொதிப்பா....நம்ம ராஜதந்திரம் கை கொடுக்கவில்லையே!

  ReplyDelete
 37. @எம் அப்துல் காதர் //நம்பிட்டோம்!! ஆனாலும் அதுக்காக இவ்வளவு பெரிய புலப்பமா ஹும்..//நிஜம் தாண்ணே..நான் பெரிய சோம்பேறிங்கிறது தான் உண்மையான காரணம்..நான் எப்படி இப்படி ரெகுலரா பதிவு போடுதேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு..அது என்னமோ தெரியலை, மெயில் செக் பண்றதுன்னா அப்ப்டி ஒரு சலிப்பு..அதுசரி, ரொம்பவா புலம்பிட்டேன்?

  ReplyDelete
 38. செங்கிஸ்கான்'னுக்கே கடுப்பை கிளப்பி இருக்காங்களே.....

  ReplyDelete
 39. (போட்டான்யா விளம்பரத்தை!). எனது பதிவுலக நண்பர்கள்கூட கடுப்பாகி, இப்போதெல்லாம் எனக்கு மெயிலே அனுப்புவதில்லை.(நான் கஸாலியைச் சொல்லவில்லை!)//
  ஹிஹி

  ReplyDelete
 40. , உடனே அதைப் பார்வர்ட் பண்ணாமல், அதன் நம்பகத்தன்மையைப் பற்றிக் கொஞ்சம் யோசித்தோம் என்றால் நமக்கும் வேலை மிச்சம், //
  ஆணியே புடுங்கவேண்டாம்

  ReplyDelete
 41. @MANO நாஞ்சில் மனோ ஆமா பாஸ்...ரொம்பவும் பொருமையைச் சோதிக்கறாங்க!

  ReplyDelete
 42. @ஆர்.கே.சதீஷ்குமார் //ஆணியே புடுங்கவேண்டாம்// இப்படி எல்லாருமே தெளிவான முடிவெடுத்துட்டா, பிரச்சினையே இல்லை!

  ReplyDelete
 43. நான் இப்போது வெளியூரில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....

  --

  ReplyDelete
 44. அனைத்து ப‌ட‌ங்க‌ளும் அருமை. முக்கிய‌மாக‌ அஞ்ச‌லி.

  ReplyDelete
 45. @ரஹீம் கஸாலி நிம்மதியா, டூரை என்ஜாய் பண்ணுங்க கஸாலி!

  ReplyDelete
 46. @jothi//அனைத்து ப‌ட‌ங்க‌ளும் அருமை. முக்கிய‌மாக‌ அஞ்ச‌லி.// இப்படி வெளிப்படையாப் பேசுறதுதான் ஜோ-கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம்!

  ReplyDelete
 47. என்னது நம்பகத் தன்மையை பற்றி யோசிக்கனுமா? யோசிக்கத் தெரிஞ்சா நாங்க ஏன் பாஸ் இன்னும் இளிச்சவாயனுங்களா இருக்கோம்...

  ReplyDelete
 48. @டக்கால்டி//யோசிக்கத் தெரிஞ்சா நாங்க ஏன் பாஸ் இன்னும் இளிச்சவாயனுங்களா இருக்கோம்...// நானுந்தேன்!

  ReplyDelete
 49. வேலையத்தவங்க நிறைய பேரு இருப்பாங்க போல..

  ReplyDelete
 50. இங்கே நீங்க செஞ்ச அதே ( சீரியஃஸ் பதிவில் சில சில்லறைப் புகைபடங்கள்) மேட்டரைத்தான் அரசு, சினிமா துறைகள் செய்கின்றன.

  ஆனால் நாம் அரசையும் , சினிமாவையும் சகட்டுமேனிக்கு திட்டுவொம்

  ReplyDelete
 51. @velumani1 இதை சீரியஸ் பதிவு என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 52. @அமுதா கிருஷ்ணா ஆமாங்க..ரொம்ப நொந்து போக வைக்காங்க!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.