Sunday, April 3, 2011

சி.வி.(Resume) தயாரிப்பது எப்படி?_தொடர்ச்சி

டிஸ்கி: சில கோல்மால் வேலைகள் இங்கு சொல்லப்படுவதால், யோக்கியர்கள் இந்தப் பதிவைத் தவிர்க்கவும்.

டிஸ்கி: என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு) தொடரின் 9வது பகுதி இது. இருப்பினும் எல்லோரும் படிக்கலாம். தப்பில்லை!

இதுவரை இந்தத் தொடரில் நாம், மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் பல்வேறு வகையான டிபார்ட்மெண்ட்ஸ் உள்ளன என்றும், ஒவ்வொன்றின் வேலையும் வெவ்வேறானவை என்றும் பார்த்திருக்கிறோம். ஒரு புரடக்சன் என்சினியருக்குத் தேவைப்படும் விஷயங்கள், ஒரு டிசைன் எஞ்சினியருக்குத் தேவைப்படாது. ஒரு மெயிண்டனன்ஸ் என்சினியருக்குத் தெரிந்த விஷயம், ஒரு குவாலிடி என்சினியருக்குத் தெரியாது. ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட, தனி உலகங்கள்!. நீங்கள் எங்கு வேலை செய்தாலும், சமூகம் உங்களை மெக்கானிகல் என்சினியர் என்றே அழைக்கும். இந்த வித்தியாசத்தை நன்றாக மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.
இப்போது சென்ற பதிவில் பார்த்த சி.வி. தயாரித்தலைத் தொடர்வோம்.  உங்களுக்கு ‘நான் இப்படித்தான், இந்த டிபார்ட்மெண்டில் இந்த வேலைக்குத் தான் செல்வேன்’ என்ற தெளிவும் முடிவும் இருந்தால் சி.வி.தயாரிக்க சென்ற பதிவே போதும். அப்படியல்ல, மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் எந்த டிபார்ட்மெண்ட்டிலும் வேலை பார்க்கத் தயார் என்றால், சென்ற பதிவின்படி தயாரித்த சி.வி. வேலைக்காகாது.

நீங்கள் ஒரு ஃப்ரெஷ் எஞ்சினியர். புதன்கிழமை வரும் ‘தி ஹிந்து -ஆப்பர்சுனிடி’யையோ அல்லது ஞாயிறு வரும் கிலாசிஃபைட்ஸ்-ஐயோ பார்க்கிறீர்கள். அதில் இரு விளம்பரங்கள் வந்துள்ளதாகக் கொள்வோம். ஒன்றின்படி, ஆயில்&கேஸ் செக்டரில் டிசைன் டிபார்ட்மெண்ட்டிற்கு டிசைன் எங்சினியர்/ட்ராஃப்ட்ஸ்மேன் தேவை. இன்னொன்றின்படி, ஒரு ஃபவுண்ட்ரிக்கு புரடக்சன் என்சினியர் தேவை. 

இப்போது மிகவும் நல்ல பிள்ளையாக, சென்ற பதிவின்படி தயாரித்த ’உள்ளது உள்ளபடி’ உங்கள் ஏரியா ஆஃப் இண்டெரெஸ்ட்/எக்ஸ்பீரியன்ஸ் போட்டுத் தயாரித்த சி.வி.-ஐ இரண்டுக்கும் அனுப்பினீர்கள் என்றால் உங்கள் சி.வி. எல்லா இடத்திலும் ரிஜெக்ட் செய்யப்படவே வாய்ப்பு அதிகம். 

ஒரு சி.வி. செலக்ட் செய்யப்பட வேண்டும் என்றால், அது அந்த வேலைக்கும், டிபார்ட்மெண்ட்டிற்கும் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களை அந்தக் கம்பெனியின் நிலையில் வைத்து யோசித்துப் பாருங்கள். உங்கள் முன் நூற்றுக்கணக்கான சி.வி.க்கள் வருகின்றன. அதில் எதை எடுப்பீர்கள்? கொஞ்சமாவது தேவைப்படும் ஸ்கில்ஸ்/நாலெட்ஜ், அந்த சி.வி.யில் இருந்தால்தானே எடுப்பீர்கள். பெரும்பாலான பேர் செய்யும் தவறு இதை யோசிக்காமல், ஒரே சி.வி.யை எல்லாக் கம்பெனிக்கும் அனுப்புவது.

இப்போது முதல் விளம்பரத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு ஆயில்&கேஸ் கம்பெனி, டிசைன் டிபார்ட்மெண்டிற்கு AutoCAD/PDMS தெரிந்த ஆள் தேவை என்று கேட்டுள்ளது. இப்போது இங்கு சி.வி. அனுப்ப, உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒன்று அந்தக் கம்பெனியின் செக்டர் பற்றிக் கொஞ்சமாவது பேசிக் நாலேட்ஜ் இருக்க வேண்டும். அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அந்தக் கம்பெனியின் வெப்சைட்டிற்குப் போனீர்கள் என்றாலே அங்கு கம்பெனி பற்றியும், அதன் செக்டர் பற்றியும் விவரங்கள் இருக்கும். மேலும் விவரங்கள் அறிய Google உதவும். (ஆமாங்க, கூகுள்-ல நல்ல விஷயங்களையும் தேடலாம்!)

அடுத்து, அந்தக் கம்பெனி கேட்டுள்ள சாஃப்ட்வேர்கள் பற்றிய அறிவு. உங்களுக்கு ஆட்டோகேட் தெரிந்திருக்கலாம்.PDMS தெரியாது என்றால், இண்டர்வியூவுக்கு முன் கொஞ்சமாவது கற்றுக் கொள்ள முடியுமா என்று பாருங்கள். முடியாது என்று தோன்றினால் விட்டுவிடுங்கள். (சாஃப்ட்வேர் தெரியும் என பொய் சொல்ல முடியாது, ஏனென்றால் பெரும்பாலும் பிராக்டிகல் டெஸ்ட் இருக்கும். )இந்த இரு விஷயங்களிலும் நீங்கள் தெளிவான பின், நல்ல பிள்ளையாகத் தயாரித்த சி.வி.யை எடுங்கள். இப்போது Objective முதல் ---- வரை இந்தக் கம்பெனிக்கு ஏற்றாற்போல் மாற்றுங்கள். ஏரியா ஆஃப் இண்டெரெஸ்ட்-ஐ முழுக்க முழுக்க டிசைன் சம்பந்தப் பட்டதாக மாற்றுங்கள். நீங்கள் மனிதனாகப் பிறந்ததே ஒரு டிசைன் எஞ்சினியராக வேலை செய்யத்தான் என்பது போல் சி.வி.-ஐ மாற்றுங்கள்.(இண்டர்வியூவிலும் அப்படியே புளுக வேண்டும்!). 

இப்போது பார்த்தால், அவர்கள் கேட்டதும் நீங்கள் அனுப்புவதும் நன்றாகப் பொருந்தும். அப்புறம் என்ன, நிச்சயம் உங்கல் சி.சி. செலக்ட் ஆகும். சி.வி.-யை அனுப்பிய பின், உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் ஏதாவது போட்டிருந்தால் கண்டிப்பாக அதைப் படித்து விடுங்கள். சி.வி.யை அனுப்பும் முன், இதே லைனில் உங்களுக்குத் தெரிந்தவர் யாராவது இருந்தால், அவரிடம் உங்கள் சி.வியைக் காட்டி ஆலோசனை கேளுங்கள். (வேலை கேட்டால்தான் தலை தெறிக்க ஓடுவோம், ஆலோசனை என்றால் அள்ளி வழங்குவோம்!)

இப்போது அடுத்த விளம்பரத்தைப் பாருங்கள். ஒரு ஃபவுண்ட்ரிக்கு புரடக்சன் என்சினியர் தேவை. நீங்களே இப்போது சொல்லுங்கள், நாம் மேலே தயாரித்த டிசைன் எஞ்சினியர் சி.வி.யை ஃபவுண்ட்ரிக்கு அனுப்பினால் என்ன ஆகும்? நேரே குப்பைத் தொட்டிக்குத் தானே போகும். (பின்னால் எப்போதாவது, அவர்களுக்கு டிராஃப்ட்ஸ்மேன் தேவைப்பட்டு, அப்போது அவர்களுக்குத் தெரிந்த பையன் யாரும் இல்லாமல் இருந்து, நீங்களும் அப்போது ஃப்ரீயாக இருந்தால் அவர்கள் உங்களைக் கூப்பிடலாம். அவ்வாறு காத்திருப்பது உங்கள் பொருளாதார நிலைமை/மனதிடத்தைப் பொறுத்தது!)

சரி, இப்போது என்ன செய்ய வேண்டும்? அதே...அந்தக் கம்பெனி பற்றியும் அதன் செக்டர் பற்றியும் நெட்டில் இருந்தோ, எங்காவது விசாரித்தோ தெரிந்து கொள்ளுங்கள். புரடக்சன் இஞ்சினியர் வேலைக்குக் கேட்டுள்ளதால், ஒருமுறை புரடக்சன் டெக்னாலஜியில் படித்த ஃபவுண்ட்ரி பற்றிய பாடத்தை வாசித்துக் கொள்ளுங்கள். இப்போது பழைய சி.வியை எடுங்கள். அந்நியன் மாதிரி டிசைன் எஞ்சினியர் ஸ்டேஜிலிருந்து புரடக்சன் எஞ்சினியராக மாறுங்கள். இப்போது நீங்கள் பிறந்ததே ஒரு ஃபவுண்ட்ரியில் புரடக்சன் வேலை பார்க்கத் தான்..ஓகே.வா?..ஸ்டார்ட்..Objective-Area of Interest என சி.வி.யில் உள்ள எல்லாவற்றையும் புரடக்சனுக்கு ஏற்றால்போல் மாற்றுங்கள். இப்போது அனுப்பினால், நிச்சயம் உங்கள் சி.வி. கவனிக்கப்படும்.

சில கம்பெனியில் கேட்கலாம், எப்படி ஒரு ஃப்ரெஷராக இருந்து கொண்டு, இவ்வளவு மேட்ச்சாக சி.வி.அனுப்புகிறீர்கள் என. மாட்டிக்கொண்டொமே எனப் பயந்துவிடாதீர்கள். அது பொதுவாகக் கேட்கப் படும் கேள்வி தான். எனக்கு சிறுவயதிலிருந்தே டிசைனில் ஆர்வம், ஏதாவது வரைந்து கொண்டே இருப்பேன்..அது..இது என அள்ளிவிட்டால் போதும்!

இந்த மாதிரி சி.வி. தயாரிப்பதில் இரு சிக்கல்கல் உண்டு. ஒரே கம்பெனிக்கு ஒரே நேரத்தில் இரண்டையும் அனுப்பினால் டர் ஆகிவிடும்.அதைத் தவிர்க்கவும். சி.வி.யில் போட்டதை நீங்களே மறந்துவிட்டாலும் டர்ர்ரு தான். எனவே ஒவ்வொரு இண்டர்வியூ போகும் முன், உங்கள் சி.வி. மனப்பாடமாக உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்களால் கற்றுக்கொள்ள முடியாத விஷயத்தை ஒரு நாளும் சி.வி.யில் போடாதீர்கள். சி.வி.யில் உள்ள எந்தவொரு வார்த்தையைப் பிடித்தும், கேள்வி கேட்கப்படலாம். எனவே சி.வி.யில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் தெளிவாக இருங்கள்.

ஃப்ரெஷர் மட்டுமல்லாது, ஒரு சில வருடங்கள் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள, பிடிக்காத/தவறான லைனில் மாட்டிக்கொண்டோரும் செய்ய வேண்டியது இதுவே. கூடுதலாக எக்ஸ்பீரியன்ஸில் Fake போட வேண்டியிருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு கம்பெனியில் மெயிண்டனன்ஸில் உள்ளீர்கள். உங்களுக்கோ டிசைன் போக ஆசை என்றால், முதலில் ஏதாவது ஒரு சாஃப்ட்வேரையாவது காசு கொடுத்தாவது வெளியில் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கம்பெனியில் டிசைன் டிபார்ட்மெண்ட் இருந்தால், அவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களது டெய்லி ஆக்டிவிடீஸ் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். 

முடிந்தால் அவர்கள் தயாரித்த டிராயிங்கைச் சுட்டு, உங்கள் வீட்டில் வைத்து நீங்களே வரைந்து பாருங்கள். பிறகு சி.வி.யில் உங்கள் கம்பெனியில் நீங்கள் டிசைன் எஞ்சினியராக வேலை பார்ப்பதாகப் போடுங்கள். கொஞ்சம் நாளானாலும் பரவாயில்லை. உங்களுக்கே கான்ஃபிடன்ஸ் வரும்வரை வரைந்து/மாடல் செய்து பழகுங்கள். முடிந்தால் உங்கள் டிசைன் ஃப்ரெண்ட்டின் சி.வி.யை வாங்கி, உங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு சி.வியை அதற்கேற்றாற்போல் தயாரித்து அனுப்பினால் சக்ஸஸ்!

டிஸ்கி: பதிவில் ஏதேனும் விடுபட்டிருந்தால், நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லி உதவுங்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

  1. சூப்பரண்ணே! அவசியமான பதிவு! நானும் நல்ல பிள்ளையா CV அனுப்பி கோட்டை விட்டதன் ரகசியத்தை லேட்டாத்தான் புரிந்து கொண்டேன்! அப்புறம் உஷாராகிட்டோம்ல! :-)

    ReplyDelete
  2. இன்ட்லில இணைக்கல?

    ReplyDelete
  3. @ஜீ... இணைக்கும் முன்னே டக்-னு வந்து நின்னுட்டு, கேட்கிறதைப் பாரு..

    ReplyDelete
  4. @ஜீ...//நானும் நல்ல பிள்ளையா CV அனுப்பி கோட்டை விட்டதன் ரகசியத்தை லேட்டாத்தான் புரிந்து கொண்டேன்! // நீங்களுமா ஜீ..ஒய் ப்ளட்?..சேம் ப்ளட்!

    ReplyDelete
  5. நண்பா!

    இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றி மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்தேன்.

    ஜெய் ஹிந்த்...........

    ReplyDelete
  6. //செங்கோவி said...
    @ஜீ... இணைக்கும் முன்னே டக்-னு வந்து நின்னுட்டு, கேட்கிறதைப் பாரு..//
    ஒக்கே! போட்டாச்சு போட்டாச்சு!

    ReplyDelete
  7. @தமிழ் 007//இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றி மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்தேன்// மகிழ்ச்சி தமிழ்..அதுசரி, இப்போ தானே வாத்யார் கருனோட பெரிய்ய்ய்ய பதிவுல வாழ்த்துச் சொன்னோம்...

    ReplyDelete
  8. @ஜீ...//ஒக்கே! போட்டாச்சு போட்டாச்சு!// போலாம் ரைட்!

    ReplyDelete
  9. வாழ்த்து சொல்லறதக்கு பெரிய பதிவாதான் இருக்கனுமா என்ன?

    ReplyDelete
  10. "சி.வி.(Resume) தயாரிப்பதில் இவ்ளோ இருக்கா?

    Nice.,

    ReplyDelete
  11. @!* வேடந்தாங்கல் - கருன் *!//வாழ்த்து சொல்லறதக்கு பெரிய பதிவாதான் இருக்கனுமா என்ன?// ச்சே..ச்சே...கடுகு சிறுத்தாலும் காரம் குறையாம இருந்தாச் சரி தானே..

    ReplyDelete
  12. @!* வேடந்தாங்கல் - கருன் *!//சி.வி.(Resume) தயாரிப்பதில் இவ்ளோ இருக்கா?// ஆமா சார் ஆமா!

    ReplyDelete
  13. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சூப்பர் கமெண்ட் போட்ட சூப்பர் போலீஸ்காருக்கு நன்றி.

    ReplyDelete
  14. உருப்படியான பதிவுகளை போட்டு அசத்திட்டு இருக்கீங்க மக்கா...

    ReplyDelete
  15. @MANO நாஞ்சில் மனோ முந்தின பதிவையும் சேர்த்துத் தானே சொல்றீங்க?

    ReplyDelete
  16. @jothi உங்கள் பொன்னான நேரத்தைச் செலவழித்து, இம்மாம்பெரிய்ய்ய்ய அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி ஜோ!

    ReplyDelete
  17. சூப்பர். கடைசி நேரத்தில் அவசரமாக சி.வி. தயார் செய்வதுதான் பல புதியவர்களின் தோல்விக்கு காரணம்.

    ReplyDelete
  18. @! சிவகுமார் !//கடைசி நேரத்தில் அவசரமாக சி.வி. தயார் செய்வதுதான் பல புதியவர்களின் தோல்விக்கு காரணம்.// கரெக்ட் சிவா!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.