Wednesday, April 20, 2011

செங்கோவி பெயர்க் காரணம் - தொடர்பதிவு

பதிவர்களில் யாரோ ஒரு புண்ணியவான்/புண்ணியவதி, பதிவர்கள் தங்கள் பெயர்க்காரணம் பற்றி ஒரு புராணம் பாட வேண்டும் என்று தொடர்பதிவை ஆரம்பித்து விட்டார். கடைசியாக அந்தத் தொடர் பதிவில் எழுதிய பிரபலப் பதிவர் கொட்டைப்புளி, என்னைத் தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொண்டார். நான் அன்புக்கு அடிமை என்பதால் (ச்சே..ச்சே..தங்கமணி பேரு அன்பு இல்லீங்க!) எழுத ஒப்புக்கொண்டேன். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு..

’ஒவ்வொரு மனிதனும் உடலில் மச்சத்தைச் சுமந்துகொண்டு திரிவது போன்றே, சொந்த ஊரின் நினைவுகளையும் சுமந்து கொண்டே திரிகின்றான்’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் எங்கோ எழுதி இருந்தார். 


அந்த மனிதர்களில் ஒருவன் நான்.நான் முதல் முதலாக என் சொந்த ஊரை விட்டு வெளியேறியது எஞ்சினியரிங் காலேஜில் சேருவதற்காக மதுரை வந்த போது தான். அந்த நேரத்தில் மதுரையே அந்நிய மண் போல் தெரிந்தது. 


அப்போது தான் (1997ல்) இணையம் பிரபலமாகிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒரு மின்னஞ்சல் முகவரி ஆரம்பிப்பது என்று நண்பர்கள் முடிவு செய்தனர். அப்போது தான் என்ன பெயர் வைப்பது என்று குழப்பம் வந்தது.

சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து இருந்த எனக்கு என் ஊரின் பெயரைத் தவிர வேறெதும் நினைவில் இல்லை. நான் பிறந்த ஊர் கோவில்பட்டி. எங்களது பூர்வீக ஊர் கோவில்பட்டி அருகில் உள்ள செண்பகப்பேரி(செண்பகப்பூ ஏரி!) என்ற கிராமம். எனவே மின்னஞ்சலை செண்-கோவி (SHEN-KOVI) என்று வைத்தேன். 


நெருங்கிய நண்பர்கள் செண்கோவி என்று கூப்பிட ஆரம்பித்து, செங்கோவி என்று நிலைத்தது. செங்கோவி என்று நண்பர்கள் அழைக்கும்போதெல்லாம் எங்கள் ஊர் செம்மண் வாசம் ஞாபகம் வரும்.(இதை யாராவது நக்கல் பண்ணீங்க, பிச்சுப்புடுவேன் பிச்சு!)

மரியாதைக்குரிய பதிவர்(!) சிரிப்பு போலீஸ் பிறந்த ஊரும் கோவில்பட்டி தான். அவருக்கு நானும் அவர் ஊர் தான் என்று இப்போது வரை தெரியாது. அது தெரியாமலேயே வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். அதுக்குப் பேரு தான் உள்ளுணர்வோ..இல்லே ஊருணர்வோ? 

மேலும் வினையூக்கி என்ற பெயரில் எழுதி வரும் மூத்த பதிவர் செல்வா, எனது கல்லூரி நண்பர். கல்லூரிக் காலத்தில் என்னுடன் தீவிர இலக்கிய/அரசியல்  விவாதம் புரிபவர். படிப்பு முடிந்த பின் பத்து வருடங்களாக எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை. சில வருடங்களுக்கு முன் ஏதோவொரு பதிவர் சந்திப்புப் புகைப்படத்தில் அவரைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். 


ஆனாலும் என்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தொடர்ந்து அவரது பதிவைப் படிப்பதும் வேறு பெயர்களில் பின்னூட்டம் இடுவதுமாய் இருந்தேன். நேற்று தான் அவருக்கு மின்னஞ்சலில் என் ப்ளாக் அட்ரஸை அனுப்பி வைத்தேன். இன்ப அதிர்ச்சி என்றால் என்ன என்று நேற்று அவர் உணர்ந்திருப்பார். அந்தளவிற்கு கல்லுளிமங்கன் நான்! சும்மா ஜாலிக்குத் தான் இதைச் சொல்லவில்லை. இதிலென்னய்யா ஜாலி-ன்னு கேட்கக்கூடாது!

இது தான் எனது பெயர் உருவான வரலாறு!..இந்த தொடர் பதிவைத் தொடர நான் அழைப்பது:

டிஸ்கி:என்னைத் தொடர் பதிவிற்கு அழைத்த பிரபலப் பதிவர் கொட்டைப்புளி’-ன்னு சும்மா தான் எழுதினேன். அப்படி ஒரு ஆளே கிடையாது. பின்னே என்னங்க, யாருமே என்னை மனுசனா மதிச்சு தொடர்பதிவுக்குக் கூப்பிடலை. அதான் காண்டாயிட்டேன்.

இனிமேலாவது ஏதாவது தொடர்பதிவு போச்சுன்னா, என்னை அம்போன்னு விட்டுடாமக் கூப்பிடுங்க, இல்லே அடிக்கடி பிரபலப் பதிவர் கொட்டைப்புளியை நீங்க சந்திக்க வேண்டியிருக்கும்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

65 comments:

 1. பிரபலப் பதிவர் கொட்டைப்புளி,//

  ஆஹா.........ஆஹா...

  அவர்...குறட்டைப் புலியா இல்ல....

  அவ்,,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. சிரிப்பு போலீஸ் பிறந்த ஊரும் கோவில்பட்டி தான். அவருக்கு நானும் அவர் ஊர் தான் என்று இப்போது வரை தெரியாது. அது தெரியாமலேயே வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். அதுக்குப் பேரு தான் உள்ளுணர்வோ..இல்லே ஊருணர்வோ?//

  அது உங்க ரெண்டு பேர் மனச்சாட்சிக்கும் தான் தெரியும் சகோ;-)))

  ஹி...ஹி...

  ReplyDelete
 4. அந்தளவிற்கு கல்லுளிமங்கன் நான்! சும்மா ஜாலிக்குத் தான் இதைச் சொல்லவில்லை. இதிலென்னய்யா ஜாலி-ன்னு கேட்கக்கூடாது!//

  நீங்க கல்லுள்ளி மங்கனா? இல்லை காமெடி பண்ணி நம்ம பதிவர்களை டவுசர் கிழிச்ச சிங்கமா என்பதை நேற்றைய பதிவைப் பார்த்தாலே புரிஞ்சிருக்குமே....ஹி...

  ReplyDelete
 5. இது தான் எனது பெயர் உருவான வரலாறு!..//

  சுருக்கமாகவும், சுவையாகவும் உங்கள் பெயர் உருவான வரலாற்றினைச் சொல்லியிருக்கிறீர்கள்.

  நன்றிக்ள் சகோ.

  ReplyDelete
 6. இல்லே அடிக்கடி பிரபலப் பதிவர் கொட்டைப்புளியை நீங்க சந்திக்க வேண்டியிருக்கும்!//

  அஃதே...அஃதே.....கொட்டைப்புளி என்ன பண்ணுவாரு சகோ.. சும்மா கலாய்ச்சு பதிவு போடுவாரா?
  இல்ல டெரரா நம்மளை நோகடிப்பாரா...

  ReplyDelete
 7. @நிரூபன்//அது உங்க ரெண்டு பேர் மனச்சாட்சிக்கும் தான் தெரியும் சகோ;-)))// சகோ, இதுல என்ன பொய் சொல்ல்ப் போறேன்..

  ReplyDelete
 8. @நிரூபன்//காமெடி பண்ணி நம்ம பதிவர்களை டவுசர் கிழிச்ச சிங்கமா என்பதை நேற்றைய பதிவைப் பார்த்தாலே புரிஞ்சிருக்குமே...// நான் என்னைப் பத்தித் தானே எழுதி இருந்தேன்..நீங்க எதைச் சொல்றீங்க சகோ?

  ReplyDelete
 9. @நிரூபன்//சும்மா கலாய்ச்சு பதிவு போடுவாரா? இல்ல டெரரா நம்மளை நோகடிப்பாரா// உங்களைக் கலாய்ச்சு டெரரா நோகடிப்பாரு!

  ReplyDelete
 10. கோவில்பட்டி - ஊரு மணம் (குறிப்பாக அந்த வேர்கடலை மிட்டாய் வாசனை) கமழ எழுதி இருக்கீங்க... :-)

  ReplyDelete
 11. @Chitraஆஹா..திர்நெவேலி அக்கா சொன்னா சரியாத் தான் இருக்கும்!

  ReplyDelete
 12. ஓ...உங்க பேர்ல இத்தன ரகசியம் இருக்கா? இப்பவாவது சொன்னிங்களே...

  ReplyDelete
 13. யோவ் மாப்ள சிவந்த மண்ணுக்கு சொந்தக்காரனே........நான் களிமண்ணுக்கு சொந்தக்காரனய்யா ஹிஹி!

  ReplyDelete
 14. செங்கோவி நல்ல மனுசனா இருப்பாருன்னு பார்த்தா.... சிரிப்பு போலிஸ் ஊராம்ல?... வெளங்கிரும்..ஹி ஹி

  ReplyDelete
 15. @தமிழ்வாசி - Prakash//உங்க பேர்ல இத்தன ரகசியம் இருக்கா?// ஆமா பெரிய தங்கமலை ரகசியம்!

  ReplyDelete
 16. @விக்கி உலகம்//நான் களிமண்ணுக்கு சொந்தக்காரனய்யா// அதான் உலகத்துக்கே தெரியுமே!

  ReplyDelete
 17. @வைகை//செங்கோவி நல்ல மனுசனா இருப்பாருன்னு பார்த்தா.... சிரிப்பு போலிஸ் ஊராம்ல?.// எங்க சிரிப்பு போலீஸை சீண்டிப் பார்க்காதீங்க வைகை...

  ReplyDelete
 18. நன்றி நண்பா என்னையும் தொடர்பதிவுக்கு அழைத்ததுக்கு, அதுசரி கடைசிவரை தங்களின் பெயரை சொல்லவே இல்லையே?

  ReplyDelete
 19. நாமும் இந்த மாதிரி ஒரு பதிவை போட்டுட வேண்டியதுதான்

  ReplyDelete
 20. நான் கூட கோபம் வந்தால் கண்கள் சிவந்து எரிமலை ஆகி விடுவீர்கள் என்பதால்தான் செங்கோவி எனும் பெயர் வந்ததென நினைத்தேன்.

  ReplyDelete
 21. சக்சஸ் சக்சஸ்..........
  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
  இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 22. பதிவுல போட்டு இருக்குற உங்க படம் நல்லாவே இல்ல. தெரியாமத்தான் கேக்குறேன், ஊரு பேரையே இவ்வளவு நாள் மறைச்சி வச்சுகிட்டு 'கல்லூளி மங்கனாட்டம்' இருந்த நீங்க ஏன் ஓட்டு போடுறத படம்புடிச்சு காமிச்சீங்க?

  -------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஏப் '2011)

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. அடச்சே மேட்டரே தெரியாம சுவாரஸ்யமா படிச்சுட்டே வந்தா கடைசில என்னை இழுத்து விட்டிருக்கீங்களே பாஸ்! :-)

  ReplyDelete
 25. @ சென்கோவி
  @ கரிசல்காரன்
  @ ஆனந்தி..
  @ கணேஷ்
  @ ரமேஷ்
  @ இம்சை பாபு

  அட அட இவ்ளோ அறிவாளிங்க இருந்த/இருக்கிற ஊர் கோவில்பட்டி.

  ReplyDelete
 26. அட ..எங்க ஊரு மதுரைலயா படிச்சிங்க???..கோவில்பட்டின்னா...அறிவியல் பதிவர் கணேஷ் http://ganeshmoorthyj.blogspot.com/ கூட கோவில்பட்டி தான் செங்கோவி(உண்மையான பெயர் என்னவோ? )

  ReplyDelete
 27. //ஊர் செம்மண் வாசம் ஞாபகம் வரும்.(//

  ஹி ஹி.. செங்கோவி.. மிஸ்டர் செங்கோவி.. வாசனை வந்துச்சா.?

  ஹி ஹி.. அய்யோ.. அய்யய்யோ.!! யாரும் அடிச்சிடாதீங்கப்பா.. ஐ ஆம் ஜாரி..

  ReplyDelete
 28. பெப்பப்பே பெப்பப்பேன்னு நிறைய சொன்னீங்களே.. உங்களுக்கு உண்மையான பெயர்னு ஒண்ணும் கிடையாதா.? ஹி ஹி..

  ReplyDelete
 29. http://akilawrites.blogspot.com/2011/02/blog-post_25.html

  எனக்கு தெரிந்து இவர்கள் தான் இதை ஆரம்பித்தார்கள்..

  ReplyDelete
 30. சரி சரி.. வரட்டா.?? அப்பாலிக்கா உங்க உண்மையான பெயரோட பாக்குறன்..

  ReplyDelete
 31. ”கல்லூரிக் காலத்தில் என்னுடன் தீவிர இலக்கிய/அரசியல் விவாதம்”

  நம்பிட்டோம்.
  திருநெல்வேலி டூ திண்டுக்கல் ஒரு 200 தடவை போயிருப்பேன் கோவில்பட்டி தாண்டி தாண்டி எப்படி உங்களை பார்க்காமல் மிஸ் செய்தேன்.

  ReplyDelete
 32. கோவில்பட்டி V.O.C.போர்ட் உயர்நிலைப் பள்ளியில்தான் நான் 2ஆம் படிவம் முதல் ஐந்தாம் படிவம் வரை(7ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு முடிய) படித்தேன்!

  ReplyDelete
 33. நான் ஹாக்கி ஆடக் கற்றுக் கொண்டதே கோவில்பட்டியில்தான்!

  ReplyDelete
 34. @இரவு வானம்//அதுசரி கடைசிவரை தங்களின் பெயரை சொல்லவே இல்லையே?// அதான் சொன்னேனே செங்கோவி-ன்னு!

  ReplyDelete
 35. @ரஹீம் கஸாலி//நாமும் இந்த மாதிரி ஒரு பதிவை போட்டுட வேண்டியதுதான்// அதான் ஏற்கனவே நான் ரஹீம் இல்லே கஸாலி-ன்னு விளக்கப் பதிவு போட்டீங்களே..போதாதா?

  ReplyDelete
 36. @! சிவகுமார் !//நான் கூட கோபம் வந்தால் கண்கள் சிவந்து எரிமலை ஆகி விடுவீர்கள் என்பதால்தான் // நான் என்ன கேப்டனா?

  ReplyDelete
 37. @MANO நாஞ்சில் மனோ//இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை // டெய்லி ஓட்டுப் போடற நாங்களே சும்மா இருக்கோம்..ஒருநாளைக்கு ஆட்டத்தைப் பாரு!

  ReplyDelete
 38. @tharuthalai//ஊரு பேரையே இவ்வளவு நாள் மறைச்சி வச்சுகிட்டு 'கல்லூளி மங்கனாட்டம்' இருந்த நீங்க ஏன் ஓட்டு போடுறத படம்புடிச்சு காமிச்சீங்க?// அதான் போன பதிவுலயே சொன்னேனே..நாக்கில் சனி-ன்னு!

  ReplyDelete
 39. @ஜீ.../கடைசில என்னை இழுத்து விட்டிருக்கீங்களே பாஸ்! :-)// யாம் பெற்ற இன்பம்..

  ReplyDelete
 40. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)//nalla velai ennai thodar pathivukku kooppidalai...// இதனால எத்தனை பேருக்கு நிம்மதி-ன்னு தெரியுமா?

  ReplyDelete
 41. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)//அட அட இவ்ளோ அறிவாளிங்க இருந்த/இருக்கிற ஊர் கோவில்பட்டி.// ஆஹா, நம்ம ஊர்ப்பெருமை இப்பதான் புரியுது..

  ReplyDelete
 42. @ஆனந்தி..//உண்மையான பெயர் என்னவோ? // அக்கா, நண்பர்கள் என்னை செங்கோவி-ன்னு தான் கூப்பிடுவாங்க...அதனால நீங்களும்....

  ReplyDelete
 43. @தம்பி கூர்மதியன்//செங்கோவி.. மிஸ்டர் செங்கோவி.. வாசனை வந்துச்சா.?// ஆஹா, கமகம-ன்னு மணக்குதே..

  ReplyDelete
 44. @தம்பி கூர்மதியன்//செங்கோவி.. மிஸ்டர் செங்கோவி.. வாசனை வந்துச்சா.?// ஆஹா, கமகம-ன்னு மணக்குதே..

  ReplyDelete
 45. @தம்பி கூர்மதியன்//உங்களுக்கு உண்மையான பெயர்னு ஒண்ணும் கிடையாதா.? // ஏன் பொய்யான பெயர் வேண்டாமா?

  ReplyDelete
 46. @அமுதா கிருஷ்ணா//கல்லூரிக் காலத்தில் என்னுடன் தீவிர இலக்கிய/அரசியல் விவாதம்” நம்பிட்டோம்.// அவர் அம்புட்டு நல்லவர்க்கா..அவர் பதிவுல போய்ப் பாருங்க!

  ReplyDelete
 47. @சென்னை பித்தன்//கோவில்பட்டி V.O.C.போர்ட் உயர்நிலைப் பள்ளியில்தான் // சார், நானும் அங்க தான் படிச்சேன்..சீனியரா நீங்க..ஓ, ரொம்ப சீனியரோ!

  ReplyDelete
 48. @சென்னை பித்தன்//நான் ஹாக்கி ஆடக் கற்றுக் கொண்டதே கோவில்பட்டியில்தான்!// நான் எல்லாமே அங்க தான் கத்துக்கிட்டேன் சார்!

  ReplyDelete
 49. @அமுதா கிருஷ்ணா//கோவில்பட்டி தாண்டி தாண்டி எப்படி உங்களை பார்க்காமல் மிஸ் செய்தேன்.// அடுத்த தடவை க்ராஸ் பண்ணும்போது, பஸ்/ட்ரெய்ன்/கார் டாப்ல ஏறி ‘செங்கோவி’ன்னு கூப்பிடுங்கக்கா..தம்பி ஓடி வருவேன்!

  ReplyDelete
 50. இன்னைக்கு செம டைட்டில்.. அண்ணனைப்போட்டு கும்மிட வேண்டியது தான் ஹி ஹி

  ReplyDelete
 51. >>நான் அன்புக்கு அடிமை என்பதால்

  அண்ணனுக்கு அன்பு என ஒரு சின்ன வீடு இருக்கா? அரிய தகவல் தான்

  ReplyDelete
 52. //அண்ணனுக்கு அன்பு என ஒரு சின்ன வீடு இருக்கா? அரிய தகவல் தான் //

  செம கேள்வி.!! பட்டுனு சிரிப்பு வந்திடுச்சு..

  ReplyDelete
 53. >>>அந்தளவிற்கு கல்லுளிமங்கன் நான்!

  ஓஹோ.. நோட் பண்ணீக்கறேன்

  ReplyDelete
 54. பதிவு செம காமெடியா இருக்கு./, ஆனா வழக்கமான அண்னனோட ஹிட்ஸ்ல பாதி கூட இதுக்கு இல்லையே இன்னா மேட்டரு? ம் ம் பார்ப்போம்..

  ReplyDelete
 55. @சி.பி.செந்தில்குமார்//அண்ணனுக்கு அன்பு என ஒரு சின்ன வீடு இருக்கா? அரிய தகவல் தான்// அடப்பாவிகளா..எப்படிய்யா இப்படி யோசிக்கீங்க?

  ReplyDelete
 56. @சி.பி.செந்தில்குமார்//ஆனா வழக்கமான அண்னனோட ஹிட்ஸ்ல பாதி கூட இதுக்கு இல்லையே இன்னா மேட்டரு?// அதாண்ணே, எனக்கும் புரியலை!

  ReplyDelete
 57. @தம்பி கூர்மதியன்//செம கேள்வி.!! // தம்பி, சிபிகூடச் சேராதீங்க..நாளைக்கு உங்களையும் இப்படித் தான் மாட்டி விடுவாரு!

  ReplyDelete
 58. பெயர் காரணம் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 59. அது கொட்டைப்புளியா... கொட்டைப்புலியா? எதுவா இருந்தா என்ன... ? பேரு பெத்த பேருங்கோ...

  ReplyDelete
 60. @இராஜராஜேஸ்வரிவாழ்த்துக்கு நன்றி சகோதரி! (சாரி, இன்னைக்குத் தான் பார்த்தேன்!)

  ReplyDelete
 61. @பன்னிக்குட்டி ராம்சாமிஉங்களுக்குப் பயந்துக்கிட்டுத் தான், நான் சிரிப்பு போலீஸ் ஊருன்னு சொல்லலைண்ணே!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.