Thursday, April 7, 2011

ஜெயலலிதாவிற்கு தண்ணி காட்டிய கேப்டன்! (கோவைக் கூத்து)

தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர் அணியினர் பலவகையான சவால்களை விடுவது வழக்கம் தான். ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு விடப்பட்ட சவால் போல் உலகில் வேறெங்கும் சவால் விடப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. மிக எளிமையான சவால் தான். ‘உங்கள் கூட்டணித் தலைவர் விஜயகாந்துடன் ஒரே மேடையில் ஏறத் தயாரா’ என்பது தான் அது. சவாலே சமாளி நாயகிக்கு இப்படி ஒரு திரதிர்ஷ்டமான நிலை வந்திருக்கக்கூடாது தான். 
இருப்பினும் ’எதையும் தாங்கும்’ கம்யூனிஸ்ட் தோழர்களின் முயற்சியால் ஒருவாறு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. உலக அதிசயம் ஒன்று நடக்கப்போவதாக வாக்காளப் பெருமக்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனாலும் நம்ம கேப்டன் சாமானியப்பட்டவரா..அந்தப் பொதுக்கூட்டத்திற்கு வராமல் ஜெ. முகத்தில் கரியைப் பூசி விட்டார் கேப்டன்.

தொடர்ந்து எதிர் அணியினரால் குடிகாரன் என்றும் உளறுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்ட விஜயகாந்த், இந்த மேடையில் தன் இமேஜைச் சரி செய்துகொள்ளவும் வாய்ப்பிருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, எப்படியாவது நல்லபடியாக ஒரு மேடைப்பேச்சை நிகழ்த்தி இருந்தால், எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சமாளிக்கவாவது உதவி இருக்கும். பிரகாஷ் காரத், சந்திரபாபு நாயுடு, ஏ.பி.பரதன் போன்ற தலைவர்கள் மத்தியில் விஜயகாந்தும் அமர்ந்திருந்தால், அது அவரது அரசியலுக்கு கொஞ்சமாவது மரியாதை கூட்டுவதாகவும் இருந்திருக்கும். ஆனாலும் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை.

ஏற்கனவே விஜயகாந்த்தை தாறுமாறாகத் தாக்கி வரும் திமுக கூட்டணியினருக்கு இது நல்லதொரு வாய்ப்பையே வழங்கியதாக ஆகும். இருப்பினும் நம்மைப் போன்ற நடுநிலையாளர்கள் நேர்மையுடன் இந்த விஷயத்தை அலசுவது தான் நியாயம். நல்லா அலசுவோம் வாங்க...
கேப்டன் கட்சி சார்பில் கலந்து கொண்ட பண்ட்ருட்டியார் பேசுகையில் கேப்டன் பிரச்சாரத்தில் இருப்பதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருந்ததால் வரமுடியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். என்னமோ, மம்மி வேறு வேலையே இல்லாமல் கொடநாட்டில் இப்பொழுதும் குப்புறப் படுத்திருப்பது போன்றும், இன்று தூக்கம் வராமல் எழுந்து கோவைக்கு வாக்கிங் வந்தது போன்றும் பேசி இருக்கிறாரே..அடங்கொக்க மக்கா!

அவர் பிரச்சாரத்தில் இருப்பதால் வரமுடியவில்லையாம். ஜெ. என்ன கோவையில் மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்தவா வந்தார்? இங்கயும் பிரச்சாரம் தானய்யா நடக்குது..அங்கேயே பண்ட்ருட்டியாரைக் கும்மி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் ‘மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா’  என்று அவர் சொன்ன ஒரே காரனத்திற்காக பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள் போலும்.

சரி, இப்படி கூட்டணிக்கட்சித் தலைவர்கள் நடத்தும் பொதுக்கூட்டத்திற்குக் கூட வராமல் கேப்டன் அப்படி என்ன தான் கிழிக்கார்னு பார்ப்போம். 

ராதாபுரம் தொகுதிக்குப் போன கேப்டன் ‘அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார்’-னு பேசினார். இதைக்கேட்ட அதிமுக தொண்டர்கள் டரியல் ஆகிவிட்டார்கள். பிறகு வேனில் இருந்த யாரோ ஒரு தைரியசாலி (ஹெல்மட் போட்டிருந்தாரா என்று தெரியவில்லை!) ‘அய்யா, அது அதிமுக இல்லை, திமுக ‘ என்று எடுத்துக் கூறினார். உடனே நம்ம கேப்டன் ‘நான் தப்புத் தப்பாக பேசுகிறேன் என்று நினைக்கிறேன். இதற்கு காரணம், இந்தக் கூட்டத்தின் சத்தம்தான்’ என்று கூறியபடி அங்கு கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து நாக்கை துறுத்தி கண்ணை உருட்டி பயமுறுத்தினார்.(அட, உண்மைங்க!)..அட வெண்ணையாண்டி, கூட்டத்தோட சத்தம் பிடிக்கலைன்னா வீட்லயே இருந்திருக்க வேண்டியது தானே? எதுக்கு புள்ளை புடிக்கிறவன் மாதிரி தெருத்தெருவா அலையணும்?
அடுத்து தள்ளாடிய படியே திருத்துறைப்பூண்டி தொகுதிக்குப் போன கேப்டன் ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு அரிவாள், சுத்தி, நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்’-ன்னு ஓட்டுக் கேட்டார். ஒரு மனுசன் ஒன்னு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப் போடலாம். இல்லே அரிவாள், சுத்தி, நட்சத்திரம் சின்னத்திற்கு ஓட்டுப் போடலாம். ஏன்னா அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம். கதிர் அரிவாள் சின்னம் தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம். இப்படி ஒரே நேரத்தில் ரெண்டுக்கும் போட்டா, அதுக்குப் பேரு செல்லாத ஓட்டுய்யா தர்பூஸ் மண்டையா.......இப்போதும் யாரோ ஒரு புன்ணியவான் ‘அய்யா, எங்க சின்னம் கதிர் அரிவாள் சின்னம்’-ன்னு எடுத்துச் சொன்ன பிறகு ‘கதிர் அரிவாளுக்கு வாக்கு அளியுங்கள்’-ன்னு சொல்லிட்டு ஓட்டம் எடுத்திருக்கிறார் கேப்டன்.

வேட்பாளர் பேரும் தெரியாது, கூட கூட்டணி வச்சிருக்கிற கட்சிப்பேரும் தெரியாது, அவங்க சின்னமும் தெரியாது. பொண்டாட்டி பேரையாவது ஒழுங்காச் சொல்லுய்யா..’எம் பொண்டாட்டி பிரேமலதா’ன்னு சொல்றதுக்குப் பதிலா வேறெதாவது ...தா-வைச் சொல்லிடாதீரும். உங்கூடக் கூட்டனி வச்ச பாவத்துக்கு அது ஒன்னு தான்யா பாக்கி! 

வேட்பாளரை அடிச்ச விவகாரத்திலும் இப்போது செம பல்டி! ’நான் எனது உதவியாளரை தலையை பிடித்து உள்ளே தள்ளினேன். ஆனால் வேட்பாளரை அடித்தார் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தனர்’ என்று பேராவூரணி தொகுதியில் சொல்லி இருக்கிறார். அட கூவை, ‘நான் அடிச்சா அவன் மகாராஜா ஆயிடுவான்’னு சொன்னது இந்த வாய் தானே...  ‘நான் என் கட்சிக்காரனைத் தானே அடிச்சேன். உனக்கென்ன’ன்னு பிரச்சாரத்துல பேசுனதும் இதே நாற வாய் தானே... இப்போ ஏன் இப்படிச் சொல்லுது.. சொல்ற இந்தாளு கூமுட்டையா, இல்லே கேட்கிற நாங்க கேணப்பயல்களா? உளறலுக்கும் ஒரு அளவு வேண்டாமா?..

நம்மளையும் ஆஃப் அடிக்க வைக்காம விடமாட்டார் போலிருக்கே சாமீ!

ஒன்னு மட்டும் தெரிஞ்சு போச்சு..இன்னும் மூணு நாளைக்கு செய்திகளைப் படிக்காமல்/பார்க்காமல் இருப்பது தான் நம்ம உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

72 comments:

 1. வடை...வடை...வடை...

  ReplyDelete
 2. இன்னைக்கும் எனக்கு தான் வடை...

  ReplyDelete
 3. //சவாலே சமாளி நாயகிக்கு இப்படி ஒரு திரதிர்ஷ்டமான நிலை வந்திருக்கக்கூடாது தான். //

  கொஞ்சமாவது படிக்க விடுங்களேன்.அதுக்குள்ள கிச்சு கிச்சு மூட்டிறீங்க:)

  ReplyDelete
 4. தமிழ்வாசி!கா கா கா:)

  ReplyDelete
 5. ஊத்தி கொடுத்த ஜே-க்கே தண்ணியா? செம காமெடிப்பா

  ReplyDelete
 6. //பிரகாஷ் காரத், சந்திரபாபு நாயுடு, ஏ.பி.பரதன் போன்ற தலைவர்கள் மத்தியில் விஜயகாந்தும் அமர்ந்திருந்தால், அது அவரது அரசியலுக்கு கொஞ்சமாவது மரியாதை கூட்டுவதாகவும் இருந்திருக்கும்.//

  நிச்சயமாக!விஜயகாந்த் அரசியலுக்கு இனி சங்குதான்...

  ReplyDelete
 7. @தமிழ்வாசி - Prakash//இன்னைக்கும் எனக்கு தான் வடை...// தொடர்ந்து வடை வாங்கும் அண்ணன் தமிழ்வாசி வாழ்க!

  ReplyDelete
 8. @ராஜ நடராஜன் //கொஞ்சமாவது படிக்க விடுங்களேன்.அதுக்குள்ள கிச்சு கிச்சு மூட்டிறீங்க:)// இது காமெடிப் பதிவு தான்..அதனால தப்பில்லை!

  ReplyDelete
 9. @தமிழ்வாசி - Prakash//ஊத்தி கொடுத்த ஜே-க்கே தண்ணியா?// அதனால தான் தலைப்பு இப்படி!

  ReplyDelete
 10. //ஒன்னு மட்டும் தெரிஞ்சு போச்சு..இன்னும் மூணு நாளைக்கு செய்திகளைப் படிக்காமல்/பார்க்காமல் இருப்பது தான் நம்ம உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது!//

  ஆஃப் அடிக்காத காரணத்தால் என்னோட உடல் இன்னும் ஒரு வாரத்துக்கு தாங்குமின்னு நினைக்கிறேன்:)

  அந்தப் பொம்பள என்னன்னா அதுபாட்டுக்கு முடிவு பண்ணி வை.கோ வை கழட்டி விட்டுடுச்சு.அப்படியும் ஜெயிச்சுடுவாங்க போல தெரியுதேன்னு நினைச்சா இந்தாளு பங்குக்கு ஊத்திகிட்டுத் திரியறாரு.

  எப்படியோ தமிழனுக்கு விடிவு மட்டுமில்லை:(

  ReplyDelete
 11. வந்தேன் வந்தேன் வடை வாங்க வந்தேன்...

  ReplyDelete
 12. @ராஜ நடராஜன்//எப்படியோ தமிழனுக்கு விடிவு மட்டுமில்லை:// இப்போதைக்கு இல்லை!

  ReplyDelete
 13. எனக்கென்னமோ இவரு கூட இருந்தே குழி பறிக்க திமுக வில் இருந்து அனுப்பப் பட்டவர் மாதிரி தாங்க தெரியுது...ஹி ஹி..அம்மா ஐயோ அம்மா!!!

  ஐயோ ராம என்ன ஏன் இப்படி கண்ட கழிசடைங்க கூட கூடு சேர வெக்கிறன்னு அம்மா புலம்புவதாக சேதி

  ReplyDelete
 14. @டக்கால்டி//எனக்கென்னமோ இவரு கூட இருந்தே குழி பறிக்க திமுக வில் இருந்து அனுப்பப் பட்டவர் மாதிரி தாங்க தெரியுது...// எனக்கும் அதே டவுட் தான்..அம்மா கொடுத்த பெட்டியை விட, திமுக பெரிய பெட்டியாகக் கொடுத்திருக்குமோ..

  ReplyDelete
 15. ஒன்னு மட்டும் தெரிஞ்சு போச்சு..இன்னும் மூணு நாளைக்கு செய்திகளைப் படிக்காமல்/பார்க்காமல் இருப்பது தான் நம்ம உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது!


  ......அரசியல் பதிவுகளும், இதில் சேர்த்தியா, பாஸ்? :-))))))

  ReplyDelete
 16. "நன்றாக சிந்தித்து பாருங்கள் மக்களே. டேய் கருப்பா, டேய் மாடசாமி. ஓ..ஓன்னு கத்துனா எப்படி பேசுவேன். நீ வேணுன்னா இங்க வந்து பேசு. நான் கீழ நிக்கறேன். கண்ணு கூசுது அதனாலதான் கண்ணாடி போட்டுருக்கேன். அழகரி எனும் அழுதகிரியை இந்த விருதகிரி சும்மா விட மாட்டான். எனக்கு கவலை இல்லை. அப்பா வேஷம், அண்ணன் வேஷம் போட்டு கூட நடிப்பேன். ஆகவே மக்களே..."

  ReplyDelete
 17. ஏன்யா மாப்ள டெய்லி பிராண்டு மாறுது பின்ன பேச்சும் மாறாதா..............கொஞ்ச நேர்மையா பேசணும் ஆங்!

  போதாக்கொறைக்கு அந்தாளு பொண்டாட்டி பேர வேற கேக்குற...........அவரு வடபழனி கிட்ட இருக்குற அவரோட இடத்துகிட்ட கேட்டு இருந்தா இன்னும் தமாசா இருந்திருக்கும் ஹிஹி!(100 அடி ரோட்டில் MMDA அருகில்!)

  ReplyDelete
 18. //சவாலே சமாளி நாயகிக்கு இப்படி ஒரு திரதிர்ஷ்டமான நிலை வந்திருக்கக்கூடாது தான். //

  //உலக அதிசயம் ஒன்று நடக்கப்போவதாக வாக்காளப் பெருமக்களும் எதிர்பார்த்திருந்தனர். //

  //என்னமோ, மம்மி வேறு வேலையே இல்லாமல் கொடநாட்டில் இப்பொழுதும் குப்புறப் படுத்திருப்பது போன்றும், இன்று தூக்கம் வராமல் எழுந்து கோவைக்கு வாக்கிங் வந்தது போன்றும் பேசி இருக்கிறாரே.//

  super...
  i like your commenting style.

  ReplyDelete
 19. ஏன் விஜயகாந்த் வரவில்லை என்பதற்கு சால்ஜாப்பு பதில் கூட சொல்லப்படவில்லை. ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் ஒருசேர காண வேண்டும் என்று ஆசைப்பட்டால், மே 15ஆம் தேதி வரை பொறுத்துக்கொள்ளுங்கள் என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சினை ஜெயலலிதா அப்படி ஒன்றும் ரசித்ததாக தெரியவில்லை.

  குறைந்த பட்சம், ஆளுங்கட்சியின் நையாண்டியிலிருந்து தப்பிக்கவாவது விஜயகாந்த் வந்திருக்கலாம். தன்னால் முடியாவிட்டால் கூட தனது மனைவி பிரேமலதாவை அனுப்பி வைத்தாவது சமாளித்திருக்கலாம்.

  ReplyDelete
 20. நம்மளையும் ஆஃப் அடிக்க வைக்காம விடமாட்டார் போலிருக்கே சாமீ! -------- என்னதிது?

  ReplyDelete
 21. விஜயகாந்த் அரசியலுக்கு இனி சங்குதான்... மக்களிடம் இவரின் நம்பகத் தன்மை போய்விட்டது..

  ReplyDelete
 22. நம்மளையும் ஆஃப் அடிக்க வைக்காம விடமாட்டார் போலிருக்கே சாமீ!//

  machchi oru quater sollen. hehe

  ReplyDelete
 23. @Chitra//அரசியல் பதிவுகளும், இதில் சேர்த்தியா, பாஸ்?// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 24. @! சிவகுமார் !யோவ் சிவா, நாந்தான் பேப்பரே படிக்கப் போறதில்லைன்னு சொன்னேன்ல, பின்னூட்டத்துல அந்தாளு பேசுனதைப் போட்டு இம்சை பண்றீரே..

  ReplyDelete
 25. @விக்கி உலகம்//ஏன்யா மாப்ள டெய்லி பிராண்டு மாறுது பின்ன பேச்சும் மாறாதா..// இதை உங்களை மாதிரி அனுபவஸ்தங்க தான் விளக்கணும்!

  ReplyDelete
 26. @பாரத்... பாரதி...// like your commenting style.// நன்றி..நன்றி!

  ReplyDelete
 27. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)//machchi oru quater sollen. hehe// கேப்டனைக் கும்முறதுன்னா, உங்களுக்கு தனிக் குஷி வந்துடுமே!

  ReplyDelete
 28. ம்ம்ம்ம், ஆனா ஒன்னு எல்லாருமே கேப்டனை கும்மி எடுக்கறத பார்த்து அந்தாளு மேல பரிதாபம் வரதுக்கும் சான்ஸ் இருக்கு நண்பா, அதுவும் இல்லாம நாம முதற்கொண்டு திட்டறது எல்லாமே ஓசி விளம்பரமா கேப்டனுக்கு அமையவும் சான்ஸ் இருக்கு...

  ReplyDelete
 29. //அடங்கொக்க மக்கா!
  வெண்ணையாண்டி
  தர்பூஸ் மண்டையா
  கூவை
  நம்மளையும் ஆஃப் அடிக்க வைக்காம விடமாட்டார் போலிருக்கே சாமீ!//

  எங்கண்ணனையே டரியல் ஆக்கிப்புட்டாரே டாகுடர் கேப்புட்டன்!

  ReplyDelete
 30. அம்மா வந்தா தாத்தா குடும்பத்துக்கு ஆபத்தோ இல்லையோ, கேப்புட்டனுக்கு ஆப்புத்தாண்டி! :-)

  ReplyDelete
 31. வந்தேன் வாக்களித்து சென்றேன்

  நாமே ராஜா, நமக்கே விருது-5

  http://speedsays.blogspot.com/2011/04/5.html

  ReplyDelete
 32. @இரவு வானம் இது விளம்பரம் தான் நைட்..ஹீரோவுக்கான விளம்பரம் இல்லை..காமெடியனுக்கான விளம்பரம்!..பரிதாபம் இவர் மேல வருமா..மக்கள் மேல வருமா..

  ReplyDelete
 33. @ஜீ... //எங்கண்ணனையே டரியல் ஆக்கிப்புட்டாரே டாகுடர் கேப்புட்டன்! // நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது ஜீ!

  ReplyDelete
 34. ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ....................
  நல்லா பொழுது போகுது ................

  ReplyDelete
 35. விஜயகாந்தை நம்பி வைகோவுக்கு ஜெயலலிதா ஆப்பு வைத்தார். இப்ப விஜயகாந்தே கூட்டணிக்கு ஆப்பு வைத்துக்கொண்டு வருகிறார். இன்னும் நடக்கப்போகும் கூத்தை பார்க்க வேணுமே. அடக் கடவுளே.

  நண்பரே உங்கள் எழுத்து நடை நன்றாக (காமெடி வாடையுடன்) உள்ளது. சிரிச்சு சிரிச்சு வயிற்று வலி வந்துவிடும் போல உள்ளது

  ReplyDelete
 36. முப்பதாவது லைக் போட்டாச்சு....

  ReplyDelete
 37. இருங்க டாஸ்மாக் போயி ஒரு ஆ ஃ ப் வாங்கிட்டு வந்துர்றேன்....

  ReplyDelete
 38. அட ஒளறு வாய் பயலே உனக்கு ஒட்டு போட்டா நீ மட்டையாகிருவியே..

  ReplyDelete
 39. @அஞ்சா சிங்கம் //நல்லா பொழுது போகுது .......// ரொம்ப ஸ்ட்ராங்கான ஆளா இருப்பீங்க போல..அதுசரி, அஞ்சா சிங்கம்னா சும்மாவா..

  ReplyDelete
 40. \\இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, எப்படியாவது நல்லபடியாக ஒரு மேடைப்பேச்சை நிகழ்த்தி இருந்தால், எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சமாளிக்கவாவது உதவி இருக்கும். \\அப்படியே நல்லா பேசியிருந்தாலும், "அட இன்னைக்கு போட்டுக் கொள்ளவில்லை போலிருக்கு, ஒரு வேலை மீட்டிங் முடிஞ்சதும் ஊத்திக்குவாறு போல" என்றுதான் நினைப்பார்கள். ஜெ.-விஜயகாந்த் கூட்டணி பா.ம.க. -ஜெ. கூட்டணி போல இப்போதைக்கு ஓட்டைப் பிரிக்க வேண்டாம் என்ற கூட்டணிதான், தேர்தலில் எதிர் பார்த்த முடிவு வரவில்லைஎன்றால் நீ யாரோ, நான் யாரோ என்று [அடுத்த தேர்தல் வரை, ஹி...ஹி...ஹி...] போய் விடுவார்கள்.

  ReplyDelete
 41. @MUTHU //நண்பரே உங்கள் எழுத்து நடை நன்றாக (காமெடி வாடையுடன்) உள்ளது. சிரிச்சு சிரிச்சு வயிற்று வலி வந்துவிடும் போல உள்ளது// ரொம்ப ரொம்ப சந்தோஷம் பாஸ்..உங்கள் பாராட்டுக்கு நன்றி!

  ReplyDelete
 42. @MANO நாஞ்சில் மனோ //உனக்கு ஒட்டு போட்டா நீ மட்டையாகிருவியே.. // ஓஹோ, அப்போ ஓட்டு போடாட்டி மட்டும் மட்டையாக மாட்டாராக்கும்!

  ReplyDelete
 43. சன்னிலும்,கலைஞரிலும் விஜய்காந்த்தை தான் அதிகம் காண்பிக்கிறார்கள். இல்லையெனில் வடிவேலு விஜயகாந்தை திட்டுவதை காண்பிக்கிறார்கள்.கேப்டனில் கூட விஜயகாந்த் இவ்வளவு வரமாட்டார். ஒரு நல்ல சான்ஸை கேப்டன் மிஸ் செய்து விட்டார்.

  ReplyDelete
 44. அண்ணன் கடைல இன்னைக்கு நல்ல கூட்டம் போல.. என்னா மேட்டரு?

  ReplyDelete
 45. அண்ணன் எப்பவும் மிட்நைட்ல தான் பதிவு போடராரு.. இதுல ஏதோ மர்மம் இருக்கு.. ஒரு வேளை ஃபாரீன் பதிவரோ.?

  ReplyDelete
 46. >>வேட்பாளர் பேரும் தெரியாது, கூட கூட்டணி வச்சிருக்கிற கட்சிப்பேரும் தெரியாது, அவங்க சின்னமும் தெரியாது. பொண்டாட்டி பேரையாவது ஒழுங்காச் சொல்லுய்யா..’எம் பொண்டாட்டி பிரேமலதா’ன்னு சொல்றதுக்குப் பதிலா வேறெதாவது ...தா-வைச் சொல்லிடாதீரும். உங்கூடக் கூட்டனி வச்ச பாவத்துக்கு அது ஒன்னு தான்யா பாக்கி!

  ஹி ஹி ஹி

  ReplyDelete
 47. தங்களின் வாதங்களும் எழுத்துநடையும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்
  அன்புடன்,
  அமுதவன்.

  ReplyDelete
 48. @அமுதா கிருஷ்ணா//சன்னிலும்,கலைஞரிலும் விஜய்காந்த்தை தான் அதிகம் காண்பிக்கிறார்கள்.// மீடியாக்களுக்கு நாய் மனுசனைக் கடிப்பது பெரிதில்லை..மனுசன் நாயைக் கடிப்பதே பெரிது..அதையே செய்கிறார்கள்!

  ReplyDelete
 49. @சி.பி.செந்தில்குமார்//அண்ணன் எப்பவும் மிட்நைட்ல தான் பதிவு போடராரு.// உமக்கு மிட் நைட்-ன்னா உலகத்துல எல்லாருக்கும் அப்படியா?

  ReplyDelete
 50. @சி.பி.செந்தில்குமார்//இதுல ஏதோ மர்மம் இருக்கு.// ஆமா, சிபிஐக்கும் தேர்தல் கமிசனுக்கும் தகவல் சொல்லுங்க..வந்து அள்ளிக்கிட்டுப் போகட்டும்!

  ReplyDelete
 51. @சி.பி.செந்தில்குமார்//ஒரு வேளை ஃபாரீன் பதிவரோ.?// நாசமாப் போச்சு..நான் குவைத்-ல இருக்கேன்னு எத்தனை தடவை பதிவுல எழுதி இருக்கேன்..எவ்வளவு கஷ்டப்பட்டு பதிவு எழுதுறோம்..கொஞ்சமாவது படிங்கைய்யா..படிக்காமலேயே பின்னூட்டம் போடற குரூப்பா நீங்க?

  ReplyDelete
 52. @Amudhavan//தங்களின் வாதங்களும் எழுத்துநடையும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்// ரொம்ப நன்றி சார்!

  ReplyDelete
 53. எப்படி வளைச்சாலும் பயபுள்ளைக கண்டுபுடிச்ராங்களே...!!

  ReplyDelete
 54. it was at villupuram for Sonia yesterday and today at Kovai for her...vinai vidhaithaal vinai arukka vendum....vilambi

  ReplyDelete
 55. ஒரு வேளை அம்மாவே வர வேணாம்னு சொல்லி இருப்பாங்க!!! இப்போ எதிர்கட்சி கோவம் எல்லாம் விஜயகாந்த் மேல தான்... அம்மாக்கு விஜயகாந்த் ஓட்டு தேவையில்லை(அப்படி ஏதாச்சும் இருந்தால்).... இப்போ தேவை அதிமுக நிற்கும் இடங்களில் ஓட்டு பிரியக்கூடாதென்பதே !!!

  ReplyDelete
 56. /// நம்மைப் போன்ற நடுநிலையாளர்கள் நேர்மையுடன் இந்த விஷயத்தை அலசுவது தான் நியாயம்.//


  சரிதான். ஆனால் வாயிக்கு வாய் கேப்டன் கேப்டன் என நீங்களும் இந்த மனிதரை ஏன் ?.............வெறும் பெயர் சொல்லியே எழுதலாமே.
  இவர் ஒரு முழ முட்டாள் என்பதை தவிர இந்த நபர் வேறு என்ன இதுவரை சாதித்துவிட்டார்? கூத்தாடிகள் வெறும் கூத்தாடிகள் தான். அவர்கள் நாடாள வருவது நம்மை போன்றவர்களால்தான். நாமும் அதற்க்கு காரணமாய் இருக்கவேண்டாமே!

  ReplyDelete
 57. @manuneedhi வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்.

  ReplyDelete
 58. @குறை ஒன்றும் இல்லை !!! //ஒரு வேளை அம்மாவே வர வேணாம்னு சொல்லி இருப்பாங்க!!! இப்போ எதிர்கட்சி கோவம் எல்லாம் விஜயகாந்த் மேல தான்...// கூட்டத்திற்கு வராவிட்டால் விஜயகாந்த் இமேஜ் அடி வாங்கும் என்பதால்., ஜெ.வே முறையாகக் கூப்பிடாமல் தவிர்த்திருக்கலாம். இப்போதே ஜெ. ஆரம்பித்து விட்டாரோ?

  ReplyDelete
 59. @கக்கு - மாணிக்கம்//ஆனால் வாயிக்கு வாய் கேப்டன் கேப்டன் என நீங்களும் இந்த மனிதரை ஏன் ?.............வெறும் பெயர் சொல்லியே எழுதலாமே. // சார், விஜயகாந்த் 6 எழுத்து, கேப்டன் 4 எழுத்து..இந்த ஆளுக்காக 6 எழுத்தெல்லாம் டைப் பண்ண முடியாது, நாலே அதிகம். அதனால தான் கேப்ப்ப்ப்டன்ன்ன்ன்ன்..ஓ.கே.வா..நாறக் கிழிகிழிச்சிருக்கேன்..போதாதா பாஸ்.

  ReplyDelete
 60. என்னத்தை சொல்ல

  ReplyDelete
 61. .......தா, அந்த தா யாரு? நமீதாவா?

  -------------------

  ஒத்த சிந்தனையுள்ள நம்ம ரெண்டு பேரும் ஏன் ஆளுக்கொரு கட்சி தொடங்கி கூட்டணி அமைக்கக்கூடாது?
  சினேகா ஊத்திக் கொடுத்தா ஆப் அடிக்க நான் ரெடி.
  மக்களுக்கு ஆப்பு அடிக்க நீங்க ரெடியா?

  --------------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஏப் '2011)

  ReplyDelete
 62. @தியாவின் பேனா //என்னத்தை சொல்ல// ஒன்னும் சொல்ல முடியாது..இவங்களை நினைச்சு சுவத்துல தான் முட்டிக்கணும் பாஸ்!

  ReplyDelete
 63. @tharuthalai //அந்த தா யாரு? நமீதாவா?// ஆஹா, நீங்களும் நம்ம மன்றத்துக் கண்மணி தானா?

  ReplyDelete
 64. @tharuthalai //ஒத்த சிந்தனையுள்ள நம்ம ரெண்டு பேரும் ஏன் ஆளுக்கொரு கட்சி தொடங்கி கூட்டணி அமைக்கக்கூடாது?// கூட்டணி வேணா வச்சுக்கலாம் பாஸ்..கட்சி வேணாம், காசெல்லாத்தையும் புடிங்கிட்டு நடுத்தெருவுல விட்ருவானுக!..அப்புறம் நாமளும் மப்புலயே அலையணும்!

  ReplyDelete
 65. @tharuthalai அருமையா எழுதுறீங்க பாஸ்..நீங்க பதிவர் இல்லையா?..நீங்க ஏன் பதிவு எழுதக்கூடாது?

  ReplyDelete
 66. சத்தியமா சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிப் போச்சுய்யா... முடியல.. கேப்டன் காமெடி பீசானதில் பலபேருக்கு வெறும் வாய்க்கு அவள் கிடைச்சா போல இருக்கு... நடக்கட்டும்..

  ReplyDelete
 67. @சாமக்கோடங்கி//பலபேருக்கு வெறும் வாய்க்கு அவள் கிடைச்சா போல இருக்கு..// அண்ணே, அது அவள் இல்லை, அவல்!..கேப்டன் பதிவு படிச்சதுக்கே இந்த எஃபக்ட்டுன்னா...

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.