ரஜினிகாந்த் நடித்த ஆவரேஜ் ஹிட் படமான மாப்பிள்ளை படத்தின் ரீமேக், சூப்பர் ஸ்டார் ரஜினி வேடத்தில் அப்பாடக்கர் தனுஷ், ஸ்ரீவித்யா வேடத்தில் டொச்சுக் கிழவி மனீஷா கொய்ராலா - என நம்மிடம் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத படம் இந்த மாப்பிள்ளை. ‘இருந்தும் செங்கோவி இந்தப் படம் பார்த்ததுக்குக் காரணம் ஹன்சிகா தான்’ என்று பின்னூட்டம் போட்டு, குடும்பத்தில் குழப்பம் விளைவிப்போருக்கு அடுத்த ஜென்மத்தில் கல்யாணமே ஆகாது என்பதைச் சொல்லிவிட்டு....
வீடு, வீடு விட்டால் கோயில் என்று பக்திப்பழமாக இருக்கும் தனுஷ் மீது கோடீஸ்வரி மனீஷாவின் மகள் ஹன்சிகாவிற்கு காதல் வருகிறது. ஏற்கனவே மனீஷாவின் மகனுக்கும் தனுஷின் தங்கைக்கும் காதல்- கர்ப்பம் என்று சைடில் இன்னொரு கதையும் ஓடுகிறது. வெள்ளை சொர்ணக்காவான மனீஷா, இந்தக் கல்யாணத்தை எதிர்ப்பார் என்று பார்த்தால், அவர் தனுஷை வீட்டோடு மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார். காரணம் பக்திப் பழமான தனுஷ், தனக்கு அடங்கி இருப்பார் என்று தான்.
ஆனால் கல்யாண ஏற்பாடுகள் முடிந்து விட்ட நிலையில் தனுஷ் ஒரு பொறுக்கி என்று தெரிய வருகிறது. கடுப்பாகும் மனீஷா, தன்னுடன் ஒரே பிசினஸில் இருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தியின் மகனுக்கு மகளைக் கொடுக்க திட்டமிட, தனுஷ் அதை முறியடித்து ஹன்சிகாவை மணமுடிக்கிறார். கடுப்பாகும் மனீஷா, தனுஷிடம் மகளின் மனதை மாற்றி, இருவரையும் பிரிப்பேன் என்று சவால் விடுகிறார். இடையில் , முடிவில் யார் ஜெயித்தார்கள் என்பதை கொஞ்சம் மொக்கைத்தனமாகச் சொல்லி இருக்கிறார்கள்.
படத்தில் ஒரு ஆறுதல், காட்சிக்குக் காட்சி ரீமேக் என்ற பெயரில் சுடாமல் மெயின் ஸ்டோரியை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்காமல் தனுஷ் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். அவ்வப்போது தன்னையே கிண்டல் செய்யும் வசனங்களால் அந்தக் கேரக்டரை தனக்கு ஏற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
படத்துக்குப் பெரிய மைனஸ் பாயிண்ட் மனீஷா கொய்ராலா தான். கொஞ்ச வருஷத்திற்கு முன் இந்தப் படத்தை எடுத்திருந்தால் ஸ்ரீவித்யாவையே நடிக்க வைத்திருக்க முடியும். ஸ்ரீவித்யாவிடம் இருந்த கம்பீரம், மனீஷாவிடம் மிஸ்ஸிங். அதுவும் க்ளோஸ்-அப் காட்சிகளில் பார்க்கவே சகிக்க முடியவில்லை. பத்து வருடங்களுக்கு முன் வந்த பாபாவிலேயே பாட்டியாகத் தெரிந்தவர் அவர். படத்திற்கு முதுகெலும்பே அந்தக் கேரக்டர் தான். அது அடிவாங்கியதில், படமே உட்கார்ந்து விடுகிறது.
ஒரு பிஸினஸ் டீலிங்கிற்கே சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி தீர விசாரிக்கும் மனீஷா, அக்கா வீட்டில் தங்கி இருக்கும் ‘மாப்பிள்ளை’ தனுஷ் பற்றி, அவரது சொந்த ஊரில் விசாரிக்க மாட்டாரா? ஆரம்பக் காட்சிகளிலேயே கர்ப்பமாகும் தனுஷின் தங்கை, கிளைமாக்ஸ் வரை அப்படியே வருகிறார். கதை குறைந்தது 3 மாதங்களுக்காவது நடக்கிறது. கர்ப்பமான மூன்று மாதத்தில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதும் , அப்போது கூட இருக்கும் அப்பாவிக் கணவனை என்ன பாடுபடுத்துவார்கள் என்பதும் நாம் அறிந்ததே!!! இதில் அந்தப் பெண் ஃப்ரெஷ் பீஸ் மாதிரியே(இப்படிச் சொல்லலாமான்னு தெரியலையே..) கடைசி வரை வருகிறார். இப்படி படம் முழுக்க லாஜிக் ஓட்டைகள் ஏராளம்.
படம் ஜாலியாக இருக்க வேண்டும், அவ்வளவு தான் என்று பூந்து விளையாடி இருக்கிறார்கள். எல்லாக் கேரக்டருமே ’பதிவர் அல்லது தமிழ்ப்படம் சிவா’ மாதிரி மொக்கை போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். மாமியார் கொட்டத்தை மருமகன் எப்படி அடக்கினார் என்பது தான் கதையே. ஆனால் கிளைமாக்ஸில் ஓவர் காமெடி செய்ததில், தனுஷ் கிழித்தது ஒன்றுமில்லை என்று ஆகி விடுகிறது.
இருந்தும் நம்மைத் தியேட்டரில் உட்கார வைப்பவர்கள் இருவர். முதலாமவர் விவேக். படிக்காதவன் மாதிரியே இதிலும் வடிவேலுவைக் காப்பி அடித்தே நடித்துள்ளார். அது உங்களுக்குப் பிடித்திருந்ததென்றால், இந்தப் படத்துக் காமெடியும் பிடிக்கும். விவேக்கும் அவரது நண்பர்கள் குரூப்பும் வசனங்களில் கலக்குகிறார்கள். ஆரம்பக்காட்சியில் ‘நமீதா ரசிகர் மன்றத் தலைவராக (நம்ம சிபிக்குப் போட்டியாக) அறிமுகம் ஆகி ‘உடல் மண்ணுக்கு, உயிர் நமீதாவுக்கு. முடிந்தால் உடலும் நமீதாவிற்கே’ என்று சொல்லும்போது தியேட்டரே அதிர்கிறது. முதல் அரைமணி நேரம் இவர் தான் ஹீரோவோ என்று நினைக்கும் அளவிற்கு தனுஷை பக்திப் பழம் என்று கூறி டம்மி ஆக்கியுள்ளனர். படத்தில் நிறைய இடங்களில் ரசிக்க வைக்கிறார். ஜோசியராக படம் முழுக்க வரும் மனோபாலாவும் சிரிக்க வைக்கிறார்.
அடுத்து இரண்டாமவர்.............நம்ம ’ஹன்சிகா மோத்வானி’( யாருப்பா அது விசில் அடிக்கிறது!). கொஞ்சம் பெரிய, ஆனால் குழந்தைத் தனமான முகம், நல்லா எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கக்கூடிய முக அமைப்பு, வெள்ளாவியில் வெளுத்த கலர், வெள்ளந்திச் சிரிப்பு என்று கலக்கலான அறிமுகம் ஹன்சிகா. தமிழனுக்குப் பிடித்தமாதிரி எல்லா அம்சங்களுடன் ஓரளவு ரவுண்டாக ஹன்சிகா இருப்பதால், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று நம்பலாம். பூமிகாவையும் மாளவிகாவையும் குஷ்பூவையும் தாப்ஸியையும் ஒன்றாக மிக்ஸ் செய்தது போல் இருக்கிறார் ஹன்சிகா. இதற்கு மேல் எப்படி ஜொள்ளுவது என்று தெரியவில்லை. நீங்களே ஃபோட்டோக்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மணி சர்மாவின் இசையில் அறிமுகப் பாடலாக ஒரு முருகர் பாடலைப் போட்டிருக்கிறார். நன்றாக உள்ளது. மற்ற பாடல்களும் ஓ.கே. புதிய பாடல்களை விட ‘என்னோட ராசி’ ரீமிக்ஸ் அருமை. பழைய பாட்டைக் கெடுக்காமல் அடி பின்னியிருக்கிறார். மியூசிக் சேனல்களுக்குக் கொண்ட்டாட்டம் தான். இந்த மாதிரிப் படத்தில் ஒளிப்பதிவாளர் (சதீஷ் குமார்) மட்டும் என்ன செய்துவிட முடியும்..எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் காட்சிகளைக் குறைத்திருக்கலாம். பொறுக்கியாக அறிமுகம் ஆகும் காட்சிகளும், மனீஷா கிராமத்துக் காட்சிகளும் இழுவை!
சுராஜும் சன் டிவியும் காமெடியை மட்டுமே போதும் என்று நம்பிக் களமிறங்கி இருக்கிறார்கள். அது ஓவர் டோஸ் ஆனதில் படத்தின் மெயின் ஸ்டோரி பஞ்சராகி நிற்கிறது!
மாப்பிள்ளை - வீட்டோட மாப்பிள்ளை!
vadai
ReplyDeleteஇன்றும் எனக்கே முதல் வடை...
ReplyDeleteஅண்ணாத்தே நடுநிசி வணக்கம்
ReplyDelete/// பூமிகாவையும் மாளவிகாவையும் குஷ்பூவையும் தாப்ஸியையும் ஒன்றாக மிக்ஸ் செய்தது போல் ///
ReplyDeleteஏன்யா இவுக பெயரையெல்லாம் சொல்லி இவக கிட்டையும் ஜொள்ளு விட வக்கிர?
@தமிழ்வாசி - Prakash வருக..வருக!
ReplyDelete@தமிழ்வாசி - Prakash//ஏன்யா இவுக பெயரையெல்லாம் சொல்லி இவக கிட்டையும் ஜொள்ளு விட வக்கிர?// உண்மையைத் தான சொன்னேன்..
ReplyDeleteSengovi,
ReplyDeleteWhat does அப்பாடக்கர் mean?
@அமர பாரதி அது நண்பர் தமிழ்007 சொன்னது..விபரம் இங்கே : http://crazytamil007.blogspot.com/
ReplyDelete// பூமிகாவையும் மாளவிகாவையும் குஷ்பூவையும் தாப்ஸியையும் ஒன்றாக மிக்ஸ் செய்தது போல் இருக்கிறார் ஹன்சிகா//
ReplyDeleteஎப்படி எல்லாம் யோசிக்கறாங்க...!!
பொன்னர் சங்கர் விமர்சனம் சீக்கிரம் போடுங்க..
@! சிவகுமார் !//பொன்னர் சங்கர் விமர்சனம் சீக்கிரம் போடுங்க..// சிவா, நான் உங்களுக்கு என்ன கெடுதல் செஞ்சேன்?
ReplyDeleteசுட சுட விமர்சனம் வந்து இருக்குதே.
ReplyDeleteமாப்ள பாத்த மாப்பிள்ளை ஹிஹி!
ReplyDeleteவிமர்சனம் சொல்றேன்னு வண்டி ஒட்டுரியா ஹிஹி!
Mokkai Padam Boss...
ReplyDeleteசெங்கோவி இந்தப் படம் பார்த்ததுக்குக் காரணம் ஹன்சிகா தான் --- இது உண்மைதானே..
ReplyDeleteநமீதா ரசிகர் மன்றத் தலைவராக (நம்ம சிபிக்குப் போட்டியாக) அறிமுகம் -------- Ha..ha..ha...
ReplyDelete.நம்ம ’ஹன்சிகா மோத்வானி’( யாருப்பா அது விசில் அடிக்கிறது!). இவரை ஃப்ரெஷ் பீஸ்னு சொல்லலாம். தப்பில்லை. கொஞ்சம் பெரிய, ஆனால் குழந்தைத் தனமான முகம், நல்லா எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கக்கூடிய முக அமைப்பு, வெள்ளாவியில் வெளுத்த கலர், வெள்ளந்திச் சிரிப்பு என்று கலக்கலான அறிமுகம் ஹன்சிகா. தமிழனுக்குப் பிடித்தமாதிரி எல்லா அம்சங்களுடன் ஓரளவு ரவுண்டாக ஹன்சிகா இருப்பதால், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் --- வருங்காலத்தில் ஹன்சிகா ரசிகர் மன்ற தலைவரா?
ReplyDeleteஅண்ணன் ஃபாரீன் பதிவர்னு இன்னைக்கு கன்ஃபர்ம் ஆகிடுச்சு
ReplyDelete>>>ஆரம்பக்காட்சியில் ‘நமீதா ரசிகர் மன்றத் தலைவராக (நம்ம சிபிக்குப் போட்டியாக)
ReplyDeleteராம்சாமிக்குத்தெரிஞ்சா உதைப்பாரே...( என்னை..)
>>எல்லாக் கேரக்டருமே ’பதிவர் அல்லது தமிழ்ப்படம் சிவா’ மாதிரி மொக்கை போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்
ReplyDeleteஅண்ணன் கிட்டே எனக்குப்பிடிச்சதே.. டைரக்ட்டா என்னை தாக்க மாட்டார்.. இண்டைரக்ட்டாத்தான்.. ஹி ஹி
நண்பா படம் இங்க இன்னைக்குதான் ரிலீசாகுது, நீங்க வெளிநாட்டுல இருக்குறீங்களா? ஆனாலும் சிபி சாருக்கு முன்னயே பதிவு போட்டுட்டீங்க சரியான போட்டிதான் :-) விமர்சனம் அருமை, இன்னும் ஒரு மாசத்துக்கு சண்டிவிகாரங்க தூங்க விட மாட்டானுங்க
ReplyDeleteநல்லா ஜொள்ளி இருக்கிறீர்கள்.
ReplyDelete@Chitra //சுட சுட விமர்சனம் வந்து இருக்குதே.// அது நம்ம கடமைக்கா..கடமை!
ReplyDelete@விக்கி உலகம் //விமர்சனம் சொல்றேன்னு வண்டி ஒட்டுரியா ஹிஹி!// ஒரு பாரா மட்டும் தானே அப்படி!
ReplyDelete@டக்கால்டி //Mokkai Padam Boss...// நீங்களும் பார்த்தாச்சா!
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *!//வருங்காலத்தில் ஹன்சிகா ரசிகர் மன்ற தலைவரா?// தலைவர் எப்பவும் சிபி தான்...நமக்கு எப்பவும் பதவி ஆசை கிடையாதே.(வெறென்ன ஆசை இருக்குன்னு கேட்கக் கூடாது!)
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் //அண்ணன் ஃபாரீன் பதிவர்னு இன்னைக்கு கன்ஃபர்ம் ஆகிடுச்சு// ஆத்தீ..கண்டுபிடிச்சுட்டாருய்யா போலீஸ்காரரு!
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்//டைரக்ட்டா என்னை தாக்க மாட்டார்.. இண்டைரக்ட்டாத்தான்// என்னையும் சேர்த்துத் தான் சொன்னேன் தல.
ReplyDelete@இரவு வானம்//சிபி சாருக்கு முன்னயே பதிவு போட்டுட்டீங்க சரியான போட்டிதான் :-) // அவர் மாதிரி பெரியவங்களோட என்னைக் கம்பேர் பண்ணலாமா..
ReplyDelete@அமுதா கிருஷ்ணா //நல்லா ஜொள்ளி இருக்கிறீர்கள்.// அய்யய்யோ..இதுக்கு என்ன பதில் சொறதுன்னு தெரியலியே..ஙே!
ReplyDeleteசெங்கோவி said... [Reply]
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் //அண்ணன் ஃபாரீன் பதிவர்னு இன்னைக்கு கன்ஃபர்ம் ஆகிடுச்சு// ஆத்தீ..கண்டுபிடிச்சுட்டாருய்யா போலீஸ்காரரு!//
நான் இல்லை
நான் இல்லை
நான் இல்லை
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) போலீஸ்கார், இந்தக் குழப்பம் வரக்கூடாதுன்னு தான் போலீஸ்காரர்னு சொன்னேன்..ர-வை விட்டுட்டோம்ல!
ReplyDelete\\வீட்டோட மாப்பிள்ளை//
ReplyDeleteவீட்ட[wheat]வச்சி சன் செம அல்வா கின்ன்டப்போகுது பாருங்க.
\\வீட்டோட மாப்பிள்ளை//
ReplyDeleteவீட்ட[wheat]வச்சி சன் செம அல்வா கின்ன்டப்போகுது பாருங்க.
@B.MURUGAN//வீட்ட[wheat]வச்சி சன் செம அல்வா கின்ன்டப்போகுது பாருங்க.// வீட் இல்லாம வெறும் அண்டாவிலேயே அவங்க கிண்டுவாங்க..இப்போ விடுவாங்களா..
ReplyDeleteமொத்தத்தில் லாஜிக்கே இல்லாத கதைன்னு சொல்றீங்க!
ReplyDelete\\வீடு, வீடு விட்டால் கோயில் என்று பக்திப்பழமாக இருக்கும் தனுஷ் மீது கோடீஸ்வரி மனீஷாவின் மகள் ஹன்சிகாவிற்கு காதல் வருகிறது.\\ இது சினிமாவுலதான் நடக்கும். [அதுவும் தனுஷ் மாதிரி ஆளைப் பாத்து... ம்ம்ம் ...கஷ்டகாலம்...].
ReplyDelete\\அதுவும் க்ளோஸ்-அப் காட்சிகளில் பார்க்கவே சகிக்க முடியவில்லை. பத்து வருடங்களுக்கு முன் வந்த பாபாவிலேயே பாட்டியாகத் தெரிந்தவர் அவர். \\ இதை விடத் தெரிவாக, சுருக்கமாக, துல்லியமாக மநீஷாவைப் பத்தி சொல்லவே முடியாது..சபாஷ்!!
ReplyDelete\\ஒரு பிஸினஸ் டீலிங்கிற்கே சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி தீர விசாரிக்கும் மனீஷா, அக்கா வீட்டில் தங்கி இருக்கும் ‘மாப்பிள்ளை’ தனுஷ் பற்றி, அவரது சொந்த ஊரில் விசாரிக்க மாட்டாரா? \\ நிஜ வாழ்க்கையில் ஒரு கல்யாண மன்னன் முப்பதுக்கும் மேற்ப்பட்ட கோடீஸ்வரப் பெண்களை [அதுவும் படித்த, லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வேலையில் உள்ள] கல்யாணம் பண்ணி எமாத்தியிருக்கிறான், இத்தனைக்கும் அவனும், அவன் நண்பன் ஒருத்தனுமே இத்தனையும் செய்திருக்கிறார்கள், அவனுக்கு படிப்பு அவ்வளவு பெரிதாக எதுவும் இல்லை, வேலையே இல்லாத வெட்டியான்!! ஒரு புடவை எடுக்கவே மூணு நாள் யோசிக்கும் பெண்கள் இவனிடம் எப்படி வீழ்ந்தார்கள்? அப்படியிருக்க கனவுத் தொழிற்சாலை சினிமாவில் லாஜிக் பார்க்கிறீங்களே!!
ReplyDelete\\நம்ம ’ஹன்சிகா மோத்வானி’\\ நைனா, பிகரு செம ஷோக்காகீது நைனா...!!
ReplyDeleteஅப்பிடி இப்பிடின்னு ஒரு பதிவை தேத்தி புட்டீங்க....
ReplyDeleteபழைய அமலா ஸ்டில் போடாததுக்கு எனது வன்மையான கண்டனங்கள்....
@middleclassmadhavi லாஜிக் கிலோ என்ன விலை-ன்னு கேட்காங்கக்கா!
ReplyDelete@Jayadev Das //இதை விடத் தெரிவாக, சுருக்கமாக, துல்லியமாக மநீஷாவைப் பத்தி // அங்க மூஞ்சி ஒரே சுருக்கமா இருக்கறதனால நாமளும் சுருக்கமாத் தான் சொல்ல முடியும்..
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ //அப்பிடி இப்பிடின்னு ஒரு பதிவை தேத்தி புட்டீங்க....// அண்ணே, ஆயிரம் ரூவா செலவழிச்சு பதிவை எழுதி இருக்கேன்..இப்படிச் சொல்லீட்டீங்களே!
ReplyDeletesuperstar maapillai is a super hit not average. summa theriyama sollakoodathu. k...
ReplyDelete@koodalindia//superstar maapillai is a super hit not average. summa theriyama sollakoodathu.// அப்படியா, சரிங்க சார்!
ReplyDelete// ஸ்ரீவித்யாவிடம் இருந்த கம்பீரம், மனீஷாவிடம் மிஸ்ஸிங். அதுவும் க்ளோஸ்-அப் காட்சிகளில் பார்க்கவே சகிக்க முடியவில்லை. பத்து வருடங்களுக்கு முன் வந்த பாபாவிலேயே பாட்டியாகத் தெரிந்தவர் அவர். படத்திற்கு முதுகெலும்பே அந்தக் கேரக்டர் தான். அது அடிவாங்கியதில், படமே உட்கார்ந்து விடுகிறது.//
ReplyDeleteபாபா வை விடுங்க, முதல்வன் படத்திலேயே அந்த மனீஷா அம்மா, பாட்டி மாதிரிதான் இருந்தாங்க. "புயலில் மாட்டிய மரம் போல" என ஆனந்த விகடன் வேறு கிண்டல் அடித்தது. ரொம்ப பேர் அதுக்காகவே ஷங்கரை திட்டிதீர்தார்கள்.
சுவாரஸ்யமான விமர்சனம்.
@கக்கு - மாணிக்கம் உண்மை தான் சார்..மனீஷாவிற்குப் பதில் ரம்யா கிருஷ்ணனைப் போட்டிருக்கலாம்!
ReplyDelete\\மனீஷாவிற்குப் பதில் ரம்யா கிருஷ்ணனைப் போட்டிருக்கலாம்!//
ReplyDeleteஏன்,ஒரிஜினல் மாப்பிள்ளை படத்தில் நடித்த 'அமலா' வையே மனீஷாவிற்குப் பதில் போட்டிருக்கலாம்.
@B.MURUGAN //ஒரிஜினல் மாப்பிள்ளை படத்தில் நடித்த 'அமலா' வையே மனீஷாவிற்குப் பதில் போட்டிருக்கலாம்.// நல்ல சாய்ஸ்..ஆனா அமலா இப்போ நடிக்கலையே சார்..
ReplyDelete@Speed Master நன்றி மாஸ்டர்!
ReplyDelete//அப்பாடக்கர்//
ReplyDeleteஅப்படினா என்னங்க... மெய்யாலுமே தெரியலை...
//விமர்சனம் அருமை, இன்னும் ஒரு மாசத்துக்கு சண்டிவிகாரங்க தூங்க விட மாட்டானுங்க
ReplyDelete//
தேர்தல் விளம்பரங்களை விட இதன் விளம்பரங்கள் தான் அதிகமா போடுறாங்க... கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்...
//அப்பிடி இப்பிடின்னு ஒரு பதிவை தேத்தி புட்டீங்க....//
ReplyDeleteஎன்ன இப்படி சொல்லிட்டாரு... செங்கோவி உசுரு மேல இருக்குற ஆசைய விட்டுட்டு தனுஷ் படத்தை தைரியமா பாத்து, அதுவும் சி.பி.க்கு முன்னாலேயே விமர்சனம் போட்டா...
@பாரத்... பாரதி...//அப்பாடக்கர்//-தன்னுடைய தகுதிக்கு மீறி பெரிய ஆளாகத் தன்னை நினைத்துக்கொள்பவரும், புகழப்படுபவரும் என்று சொல்லலாம்..’பெரிய இவனா’ என்பதன் மற்றொரு வடிவம் என்றும் சொல்லலாம்..தனுஷை விட பெரிய அப்பாடக்கர் சிம்பு!
ReplyDelete@பாரத்... பாரதி...//செங்கோவி உசுரு மேல இருக்குற ஆசைய விட்டுட்டு தனுஷ் படத்தை தைரியமா பாத்து, அதுவும் சி.பி.க்கு முன்னாலேயே விமர்சனம் போட்டா...// அப்படி அவருக்கு விளக்கமா எடுத்துச் சொல்லுங்க சார்!
ReplyDelete////////சூப்பர் ஸ்டார் ரஜினி வேடத்தில் அப்பாடக்கர் தனுஷ்,///////
ReplyDeleteஇன்னும் பல பல திரையுலக அப்பாடக்கர்கள் மக்களை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்க்ள் டவுசரையும் கிழிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!
////////இருந்தும் செங்கோவி இந்தப் படம் பார்த்ததுக்குக் காரணம் ஹன்சிகா தான்’ என்று பின்னூட்டம் போட்டு, குடும்பத்தில் குழப்பம் விளைவிப்போருக்கு /////////
ReplyDeleteஓ அப்படின்னா மனீஷாவுக்காக இந்தப் படம் பாக்க போனீங்களா.... அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க?
//////ஆரம்பக்காட்சியில் ‘நமீதா ரசிகர் மன்றத் தலைவராக (நம்ம சிபிக்குப் போட்டியாக) அறிமுகம் ஆகி ///////
ReplyDeleteஅந்தக் கேரக்டரையே சிபிதான் டெவலப் பண்ணிக் கொடுத்ததா ஒரு பேச்சு இருக்கே?
////////அடுத்து இரண்டாமவர்.............நம்ம ’ஹன்சிகா மோத்வானி’( யாருப்பா அது விசில் அடிக்கிறது!). இவரை ஃப்ரெஷ் பீஸ்னு சொல்லலாம். தப்பில்லை. கொஞ்சம் பெரிய, ஆனால் குழந்தைத் தனமான முகம், நல்லா எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கக்கூடிய முக அமைப்பு, வெள்ளாவியில் வெளுத்த கலர், வெள்ளந்திச் சிரிப்பு என்று கலக்கலான அறிமுகம் ஹன்சிகா. //////
ReplyDeleteஅப்போ சிபி இனி நமீதாவ கைவிட்ருவாருன்னு சொல்லுங்க......
//////இதற்கு மேல் எப்படி ஜொள்ளுவது என்று தெரியவில்லை. நீங்களே ஃபோட்டோக்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.///////
ReplyDeleteஅதுக்கு மேலேயும் ஜொள்ள முடியுங்களா.........?
இதெல்லாம் இருக்கட்டுங்க, டீவில வர்ர இந்தப் படத்தோட வெளம்பரம் தாங்க முடியலீங்க.....!
ReplyDelete/////சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>>ஆரம்பக்காட்சியில் ‘நமீதா ரசிகர் மன்றத் தலைவராக (நம்ம சிபிக்குப் போட்டியாக)
ராம்சாமிக்குத்தெரிஞ்சா உதைப்பாரே...( என்னை..)
///////
பின்ன நமீதா ரசிகர் மன்றத் தலைவரா இருந்துக்கிட்டு ஹன்சிக்காவுக்கு கொடிபிடிச்சா உதைக்காம என்ன பண்ணுவாங்க...?
//பூமிகாவையும் மாளவிகாவையும் குஷ்பூவையும் தாப்ஸியையும் ஒன்றாக மிக்ஸ் செய்தது போல் இருக்கிறார் ஹன்சிகா.//
ReplyDeleteதெளிவான அலசல் என்பது இதிலிருந்தே புரிகிறது.. மிகவும் உன்னிப்பாக கவனித்து உள்ளீர்கள்.. நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை..
இன்னைக்கு நிறைய ப்ளாக் படிச்சு முடிசுடலாம்னு வந்தேன்.. உங்க ஒரு ப்ளாக்லையே அரை நாள் கட்டிப் போட்டு விட்டீர்.. உங்கள் எழுத்தில் நல்ல வசீகரம் உள்ளது..
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி//ஓ அப்படின்னா மனீஷாவுக்காக இந்தப் படம் பாக்க போனீங்களா.// என்னை இவ்வளவு கேவலமா யாருமே பேசுனதில்லை...அவ்வ்வ்!
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி//அப்போ சிபி இனி நமீதாவ கைவிட்ருவாருன்னு சொல்லுங்க...// அண்ணே, அப்போ நமீதா வாழ்க்கை என்னாகுறது?
ReplyDelete@சாமக்கோடங்கி//உங்கள் எழுத்தில் நல்ல வசீகரம் உள்ளது..// பாராட்டுக்கு நன்றி நண்பரே..ரொம்ப சந்தோசம்..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
ReplyDelete