நாம் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் இந்த சமூகத்திற்கு ஏதாவதொரு வகையில் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நான் பதிவெழுதி வருவது நீங்கள் அறிந்ததே. அந்த வகையில் இன்று வெந்நீர் வைப்பது எப்படி என்று சொல்கிறேன். ஆரம்பிப்போமா..
முதல்ல இப்போ என்னாத்துக்கு வெண்ணி-ன்னு சொல்றேன். தேர்தல் பிரச்சாரம்ங்கிற பேர்ல இந்த அரசியல்வியாதிங்க அடிச்ச கூத்துல எல்லாரும் கிர்ரடிச்சுப் போயி இருப்பீங்க. அதனால இப்போ ஒரு எழுமிச்சம்பழத்தைத் தலையில தேச்சுக்கிட்டு, வெண்ணியை ஊத்துனா தெளிவாயிடும். அதனால இந்தப் பதிவை தேர்தல் ஸ்பெஷல்-னு வச்சுக்கோங்களேன்.
வெண்ணி வைக்க முதல்ல தேவை தண்ணி தான். தண்ணி-ன்னா கேப்டன் தண்ணி இல்லை, பச்சத் தண்ணி. அப்புறம் ஒரு பெரிய பாத்திரம் தேவை. பெரிய்ய பாத்திரம்னா ‘குஷி’ல மும்தாஜ் ஏத்துக்கிட்டாங்களே, அது மாதிரி பாத்திரம்னு நினைச்சுக்காதீங்க. நான் சொல்றது ஈயம் பித்தளைப் பாத்திரம்..அதாவது சட்டி! அடுத்துத் தேவை ஒரு அடுப்பு..அடுப்பு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்..
சாரிங்க, அடுப்பு படம் எவ்வளவு தேடியும் கிடைக்கலை..அதனால தான் இந்த இடுப்பு படத்தைப் போட்டிருக்கேன். ஒரு எழுத்து தானே வித்தியாசம்..அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க பாஸ்.
சரி, இப்போ பாத்திரத்துல தண்ணியைப் பிடிச்சிக்கோங்க. இப்போ வெயில் காலம்கிறதால அந்த தண்ணி ஒருவேளை சூடா இருக்கலாம். நமக்குத் தேவை பச்சத்தண்ணி. அதனால அதை முதல்ல ஆற வைக்கணும். அதனால அந்த தண்ணிப் பாத்திரத்தை உங்க வீட்டுல நடு ஹால்ல வச்சுட்டு, ஃபேனை ஹை-ஸ்பீடுல போடுங்க.
இந்த விஷயத்தை ரொம்ப ஜாக்கிரதையாப் பண்ணனும். நடு ஹால்ல அந்தத் தண்ணி கொட்டி, உங்க சொந்தக்காரங்க வழுக்கி விழுந்துட்டா, அவங்க பிட்டாணி நகண்டிடும். அப்படியில்லாம உங்க தங்கமணியோட சொந்தக்காரங்க வழுக்கி விழுந்துட்டா, உங்க பிட்டாணியும் சேர்த்து நகட்டப்படும். அதனால ஜாக்கிரதையா தண்ணியை ஆற வைங்க.
ஓ.கே. இப்போ அடுப்பைப் பத்த வைங்க. அடுத்து அடுப்பு மேல சட்டியைத் தூக்கி வைங்க. கரெக்டாப் படிங்க மக்கா..சட்டியை..ஜட்டியை இல்லை..அடுப்பு மேல ஜட்டியைப் போட்டா எரிஞ்சு போயிடும். (’போனாப் போவுது’ என்பது போன்ற ஆபாசப் பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்!). சரி, ஹீட் ட்ரான்ஸ்ஃபெர்-ங்கிற வெப்பக் கடத்தல் 3 வழில நடக்கும். ஒன்னு, டைரக்ட் காண்டாக்-னால..தீ மேல சட்டி உட்கார்ந்திருக்குல்ல..அது மாதிரி..இதுக்குப் பேரு Conduction!
இப்போ சட்டி, ஹீட்டை தண்ணிக்கு கடத்தும். அதனால அடில இருக்குற தண்ணி சூடாகும். அதனால அதனோட அடர்த்தி(Density) குறைஞ்சுடும். மேல இருக்குற வெயிட்டான தண்ணி, கீழ இறங்கும், கீழ இருக்குற சூடான தண்ணி மேல ஏறும். இப்படியே தொடர்ந்து, தண்ணியோட டெம்பரேச்சர் 100 டிகிரி செல்சியஸ் ஆனதும் தண்ணி ஆவியாக ஆரம்பிக்கும். இந்த மொத்த பிராசஸ்க்குப் பேரு Convection! இன்னொரு டைப் ரேடியேசன், சூரிய ஒளி மாதிரி..அது எதுக்கு நமக்கு..வெண்ணி வைக்க முத ரெண்டும் போதும்!
இப்போ தொட்டுப் பாருங்க..யாரையா?..தண்ணியைத் தாங்க..இப்போ சூடு போதுமான அளவுக்கு இருக்கான்னு பாருங்க. ஓகே-ன்னா அடுப்பை அணைங்க..ஆமாங்க, அடுப்பைத் தாங்க! இப்போ நீங்க என்ன செய்யணும்னா ’ஏய்’ நமீதா மாதிரி, ’மேரா நாம் ஜோக்கர்’ பத்மினி மாதிரி, ’அந்த ஏழு நாட்கள்’ அம்பிகா மாதிரி, ’துரோணா’ ப்ரியாமணி மாதிரி, ’பூவிலங்கு’ குயிலி மாதிரி ’பாத்ரூம்’ த்ரிஷா மாதிரி குளிக்கணும்.
என்ன மக்கா, இப்போ எப்படி வெந்நீர் வைக்கணும்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா..ஏதாவது சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில் தயங்காமல் கேட்கவும்.
குளித்து வாழ வேண்டும் - பிறர்
பார்க்கக் குளித்திடாதே!
வடை.....வ்வ்வ்வ்வடை
ReplyDeleteநாளைக்கு டீ, காபி எப்படி வைக்ரதுன்னு சொல்லிக் கொடுங்க...ரொம்ப ஆர்வமா இருக்கோம்.
ReplyDelete@தமிழ்வாசி - Prakashவாங்கய்யா..வாங்க..காபி, டீ எதுக்கு?..அதெல்லாம் தெரியாம இருக்குறது தான் குடும்பஸ்தனுக்கு நல்லது..
ReplyDeleteநீங்க இன்னும் தமிழ்மணத்தில் ஓட்டு போடல..மொத ஓட்டு என்னோடது...
ReplyDeleteவீட்ல எப்பிடி பீரு காச்சுறதுன்னு பதிவு போடுங்கப்பா... கடைய மூடுனா கூட கவலையில்லாம இருக்கலாம்ல?
ReplyDeleteஅனுபவம் பேசுதுய்யா...
ReplyDeleteஎப்படி இப்படியெல்லாம்...
ReplyDeleteமாப்ள நல்ல தத்துவம்யா உன் தத்துவம்!
ReplyDelete>>>அடுத்துத் தேவை ஒரு அடுப்பு..அடுப்பு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்..
ReplyDeleteசின்னப்பசங்க படிக்கறது எப்படி? இந்த மாதிரி எல்லாம் ஆபாசமா எழுதுனா? ஹி ஹி
>>இந்த மொத்த பிராசஸ்க்குப் பேரு Convection!
ReplyDeleteஅண்ணன் பிளஸ்டூ ல பிசிக்ஸ் ல நல்ல மார்க் போல.. அலப்பறை ஜாஸ்தியா இருக்கு?
>>
ReplyDeleteகுளித்து வாழ வேண்டும் - பிறர்
பார்க்கக் குளித்திடாதே!
இது செமயா இருக்கே.. எங்காவது ஜோக்கா யூஸ் பண்ணீக்கறேன்
நான் கெமிஸ்ட்ரில யூஜி பண்ணும் போதே யாராச்சும் இப்படி சொல்லி கொடுத்திருந்தாங்கன்னா விளங்கிருக்கும், ம்ம்ம் இப்போ என்ன பண்றது?
ReplyDeleteஅருமை!
ReplyDeleteபயனுள்ள பதிவு!
நல்ல சமுதாய அக்கறையுள்ள பதிவு!
வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!
குளிக்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்!
@தமிழ்வாசி - Prakash//மொத ஓட்டு என்னோடது...// மொத வடையும் வாங்கி, மொத ஓட்டும் போட்ட அண்ணன் பிரகாஷ் வால்க!
ReplyDelete@வைகை//வீட்ல எப்பிடி பீரு காச்சுறதுன்னு பதிவு போடுங்கப்பா..// வீட்லயா?...வெளங்கிரும்!
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *!//அனுபவம் பேசுதுய்யா...// ஆமா வாத்யாரே, குளிச்ச அனுபவம்!..நீங்க சொல்றதைப் பாத்தா உங்களுக்கு அந்த அனுபவமே இல்லை போலிருக்கே..
ReplyDelete@விக்கி உலகம்//நல்ல தத்துவம்யா உன் தத்துவம்!// நன்றி விக்கி!
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்//சின்னப்பசங்க படிக்கறது எப்படி? // அவங்களும் ஜீ.கே-வை இம்ப்ரூவ் பண்ண வேண்டாமா..
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்//அண்ணன் பிளஸ்டூ ல பிசிக்ஸ் ல நல்ல மார்க் போல.. அலப்பறை ஜாஸ்தியா இருக்கு?// மார்க் ஜாஸ்தியா இல்லாட்டி, அலப்பறை பண்ணக்கூடாதா..
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்//எங்காவது ஜோக்கா யூஸ் பண்ணீக்கறேன்// எங்காவதுன்னா..புரியுது..புரியுது!
ReplyDelete@இரவு வானம்//நான் கெமிஸ்ட்ரில யூஜி பண்ணும் போதே..// மக்களே, நல்லாக் கேட்டுக்கோங்க..அண்ணன் யூஜீ..யூஜீ..யூஜீ!
ReplyDelete@ஜீ...//அருமை!
ReplyDeleteபயனுள்ள பதிவு!
நல்ல சமுதாய அக்கறையுள்ள பதிவு!
வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!// ரொம்பப் புகழாதீங்க ஜீ..வெக்க வெக்கமா வருதில்ல..
@ஜீ...//குளிக்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்!// நிறையப்பேரு இதுமாதிரி குளிக்காம அலைஞ்சிருப்பாங்க போலிருக்கே..அதான் ஆவலைத் தூண்டியாச்சுல்ல, குளிங்கைய்யா!
ReplyDelete\\நாம் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் இந்த சமூகத்திற்கு ஏதாவதொரு வகையில் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நான் பதிவெழுதி வருவது நீங்கள் அறிந்ததே.\\ அடடா... இந்த மேட்டர் இத்தனை நாள் எனக்குத் தெரியாமலே போச்சே!!
ReplyDelete\\அந்த வகையில் இன்று வெந்நீர் வைப்பது எப்படி என்று சொல்கிறேன். \\ அடிக்கிற வெய்யிலுக்கு இது வேறயா?
\\உங்க தங்கமணியோட சொந்தக்காரங்க வழுக்கி விழுந்துட்டா....\\ தங்கமணி-ன்னா பொஞ்சாதின்னு அர்த்தாமா!! புதுசா இருக்கே!!
\\அடில இருக்குற தண்ணி சூடாகும். அதனால அதனோட மாலிக்குலர் வெயிட் குறைஞ்சுடும்.\\ மாலிக்குலர் வெயிட் என்ன பண்ணினாலும் மாறது, சூடாகும் போது தண்ணீரோட அடர்த்தி [Density] கம்மியாயிடும்.
\\இப்படியே தொடர்ந்து, தண்ணியோட டெம்பரேச்சர் 100 டிகிரி செல்சியஸ் ஆனதும் தண்ணி ஆவியாக ஆரம்பிக்கும்.\\ தண்ணீர் எந்த வெப்பநிலையிலும் ஆவியாகும் , பனிக்கட்டியிலிருந்தும் கூட ஆவியாகும். என்ன ஒரு வேறுபாடு, 100 deg C யில் கொடுக்கப் படும் வெப்பம் அனைத்தும் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறப் பயன்படுத்திக் கொள்ளும். [இயற்பியல் பாடம் நடத்தி எங்களைக் கொல்லலாம்ன்னா பாக்கிறீங்க, நாங்க மட்டும் என்ன சும்மா விட்டு விடுவோமா, பதிலுக்கு நீங்களும் கஷ்டப் படுங்க!]
\\இப்போ ஒரு எழுமிச்சம்பழத்தைத் தலையில தேச்சுக்கிட்டு, வெண்ணியை ஊத்துனா தெளிவாயிடும். \\ இப்போ எனக்கு இதுதான் அவசியம் தேவை. [உங்க பதிவைப் படிச்சிட்டேன்ல!!]
எத்தனையே பேரு வந்தாயிங்க, போனாயிங்க,, யாருமே இப்புடி வெந்நீர் வைக்க சொல்லி தரல.. தொடரட்டும் உங்கள் சேவை..
ReplyDelete@Jayadev Das//தங்கமணி-ன்னா பொஞ்சாதின்னு அர்த்தாமா!! //ஆமா சார், பதிவுலகத்தில் தங்கமணி-ன்னா பொஞ்சாதின்னு தான் அர்த்தம்!
ReplyDelete@Jayadev Das//மாலிக்குலர் வெயிட் என்ன பண்ணினாலும் மாறது, சூடாகும் போது தண்ணீரோட அடர்த்தி [Density] கம்மியாயிடும்.// டென்சிடி என்பது மாஸ்/வேல்யூம் தானே..மாஸ் குறையும் என்பது தான் சரியான சொல்..நான் எளிமைப்படுத்த வெயிட் என்று சொன்னேன்..வெயிட்=மாஸ்*g தானே..அப்போ வெயிட்டும் குறையத் தானே செய்யும்...
ReplyDelete@Jayadev Das//இப்போ எனக்கு இதுதான் அவசியம் தேவை. [உங்க பதிவைப் படிச்சிட்டேன்ல!// அப்போ டெய்லில தேவைப்படும்!
ReplyDelete@படித்துறை பாண்டி//யாருமே இப்புடி வெந்நீர் வைக்க சொல்லி தரல.// உங்களை மாதிரி நிறையப்பேரு கவலையைத் தீர்த்ததுல மகிழ்ச்சி பாஸ்..நான் பதிவுலகத்துக்கு வந்த நோக்கம் நிறைவேறிடுச்சு..//தொடரட்டும் சேவை//-ன்னு சொன்னதால தொடரும் என் சேவை!
ReplyDeleteகொழுப்பு
ReplyDeleteநீங்க Molecular weight குறையும்னு சொல்லியிருக்கீங்க. Molecular weight அப்படின்னா [இதை தெரிஞ்சுதான் எழுதுநீங்கலான்னு தெரியலை!!] இரண்டு ஹைட்ரஜனும், ஒரு ஆக்சிஜனும் சேர்ந்த மூலக்கூறு [Molecule] -இன் எடை என்று அர்த்தம். வெப்பப் படுத்துவதால் இந்த எடை குறையாது அப்படியேதான் இருக்கும். வெப்பப் படுத்தும் போது Molecules-களுக்கிடையான சராசரி இடைவெளி அதிகமாவதால், Mass/Volume=Density குறையும். பாத்திரத்தின் மேலேயுள்ள குறைந்த வெப்பநிலையுள்ள நீரின் அடர்த்தி, பாத்திரத்தின் அடிபகுதியுள்ள வெப்பமான நீரை விட அதிகமாக இருக்குமென்பதால் அடர்த்தி குறைந்த நீர் மேலே செல்லும், நீங்கள் சொன்ன convection நடக்கும். இதே காரணத்தால்தான் நீங்கள் எத்தனை கிலோ வெண்ணெயை தண்ணிக்குள் போட்டாலும் அது மிதக்கிறது. [என்ன செங்கோவி, இந்தக் கொடுமை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா!! ஹா..ஹா..ஹா..].
ReplyDelete@Speed Master//கொழுப்பு// நன்றி மாஸ்டர்!
ReplyDelete@Jayadev Das ஆமா சார், மாலிகுலர் வெயிட் ஆக்ஸிஜனுக்கும் ஹைட்ரஜனுக்கும் நிலையானது இல்லையா..சாரி, கொஞ்சம் குழம்பிட்டேன்..இதுக்கு ஒழுங்கா டென்சிட்டி-ன்னே போட்டிருக்கலாம்..மாத்திட்டேன் சார்...நன்றி!
ReplyDeleteஅடகொன்னியா.....இப்பிடியும் ஒரு பதிவை தேத்திபுட்டியே...
ReplyDeleteசுடுதண்ணி காச்ச கத்து தந்தமைக்கு நன்னி....
ReplyDeleteஎட்றா அந்த கல்லை....
ReplyDeleteசூப்பர் செஃப் செங்கோவியிடம் வென்னீர் வைப்பது என்று கற்றுக் கொண்ட அனைவரும் அவருக்கு ஒரு வாளி வென்னீர் அனுப்புங்கள்!
ReplyDeleteபாத்ரூம்’ த்ரிஷா மாதிரி குளிக்கணும்.////
ReplyDeleteஎன்னது பாத்ரூம்ல த்ரிஷா குளிச்சாங்களா? அய்யய்யோ நான் பாக்காம போயிட்டேனே?
@MANO நாஞ்சில் மனோ//இப்பிடியும் ஒரு பதிவை தேத்திபுட்டியே..// எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டது தாண்ணே!
ReplyDelete@சென்னை பித்தன்//அவருக்கு ஒரு வாளி வென்னீர் அனுப்புங்கள்!// அய்யா நீங்களுமா..அவ்வ்வ்வ்வ்!
ReplyDelete@ரஹீம் கஸாலி//அய்யய்யோ நான் பாக்காம போயிட்டேனே?// நம்பிட்டோம்யா..நம்பிட்டோம்!
ReplyDeleteபோர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html
அருமை!
ReplyDeleteபயனுள்ள பதிவு!
நல்ல சமுதாய அக்கறையுள்ள பதிவு!
வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!
குளிக்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்!
@போளூர் தயாநிதி//குளிக்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்!// ஆஹா..இது மாதிரி நிறையப்பேரு குளிக்காம திரிஞ்சிருப்பாங்க போலிருக்கே..உண்மையிலேயே சமுதாயதுக்குப் பயனுள்ள பதிவுதானோ?
ReplyDeleteஉங்களை பதிவெழுத தூண்டிய ஆதங்கம் புரிகிறது.
ReplyDelete//எத்தனையே பேரு வந்தாயிங்க, போனாயிங்க,, யாருமே இப்புடி வெந்நீர் வைக்க சொல்லி தரல.. தொடரட்டும் உங்கள் சேவை..///
ReplyDeletecorrect...