ஒவ்வொரு வருடமும் எங்களுக்கு சித்திரை ஒன்றாம் தேதி விஷேசமானது. எங்களுக்கு என்றால், எங்கள் வம்சத்தைச் சேர்ந்த நூறு குடும்பங்களுக்கு! காலம் காலமாக, எங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்தே சித்திரை ஒன்றாம் தேதியன்று எங்கள் குலதெய்வம் அய்யனார் சாமியைத் தரிசித்து புத்தாண்டை ஆரம்பிப்பது எங்கள் குல வழக்கம்.
எங்கள் குல தெய்வம் அய்யனார், ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் வீற்றிருக்கிறார். இந்தப் பகுதி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாலாறும் நீராறும் ஒன்றாகச் சேரும் இடத்தில், அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
வருடத்தின் மற்ற வாரங்களில் புதன் மற்றும் சனிக்கிழமை மட்டுமே இந்தக் கோவில் திறந்திருக்கும். அந்த நேரங்களில் சென்றால், ஏகாந்தச் சூழலில் அய்யனார் ஆற்றில் குளித்துவிட்டு, அமைதியாக அய்யனாரைத் தரிசித்து மகிழ முடியும். புத்தாண்டு அன்று கூட்ட்ம் நெரியும். பொதுவாக நான் அதிகாலை ஐந்து மணிக்கே அங்கு சென்றுவிடுவது வழக்கம். அப்போது தான் மனதார அய்யனாரைத் தரிசிக்க முடியும்.
அய்யனார் சாமி இங்கு வலப்பக்கம் பூர்ணாவும் இடப்பக்கம் புஷ்கலாவும் வீற்றிருக்க, தம்பதி சமேதராகக் காட்சி தருகிறார். அவர்கள் மட்டுமல்லாது, இங்கு வனகாளி,வனலிங்கம், தலைமலைசுவாமி, பெருமாள்-லட்சுமி, மாடன்-மாடத்தி, ரக்காச்சி அம்மன், வனப்பேச்சியம்மன், கருப்பசாமி, தர்மராஜர், சப்தகன்னிமார் ஆகியோரும் காவல் தெய்வமான அய்யனாருக்கே காவல் தெய்வமாக சின்ன ஓட்டக்காரனும் பெரிய ஓட்டக்காரனும் அருள்பாலிக்கிறார்கள்.
இந்தியாவில் எங்கு இருந்தாலும் புத்தாண்டு அன்று அனைவரும் குடும்பத்துடன் இங்கு வந்து சேர்வர். பெரும்பாலும் அனைத்துக் குடும்பங்களும் முதல் நாள் இரவில் எங்கள் கிராமத்தில் கூடும். பிறகு அதிகாலையில் அனைவரும் ஒன்றாக வேன், பஸ், லாரி போன்றவற்றில் கிளம்புவோம். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, இருவேளை கட்டுச் சோற்று உணவையும் முடித்து விட்டு, மாலை தான் அங்கிருந்து திரும்புவோம்.
ஒருவருக்கொருவர் சண்டையிட்ட குடும்பங்கள் கூட, அந்த ஒருநாளில் ஒரே இடத்தில் கூடி இருப்பதால் பகை மறந்து சமாதானம் ஆவர். ஒருவேளை அதற்காகவும், சொந்தம் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவும் தான் புத்தாண்டு அன்று இங்கு கூடும் வழக்கத்தை ஏற்படுத்தினர் போலும். இந்த வழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் தாத்தாவின் தாத்தாவும் இதே போன்று இங்கு வந்து குலதெய்வத்தை வழிபட்டு விட்டே, புத்தாண்டைத் துவங்கியதாய் அறிகிறோம்.
காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்
- என்று கந்த புராணத்தில் சாத்தா படலத்தில் சிறப்பித்துப் பாடப்பெற்ற கடவுள், இந்த தம்பதி சமேத அய்யனார். நீங்கள் ராஜபாளையம் அருகில் இருந்தால் ஒருமுறை இயற்கை வனப்பு மிகுந்த அய்யனார் கோவிலுக்குச் சென்று அய்யனைத் தரிசித்துவிட்டு வாருங்கள்.
இந்தப் புத்தாண்டில் அய்யனாரப்பனும் முருகனும் உங்களுக்கு எல்லா வளங்களையும் தர அருள்புரியட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
தண்டாமரை முகமும் மலர்க்கண்களும் தன் கரத்தே
செண்டாயுதமும் தரித்து எமையாளும் சிவக்கொழுந்தைக்
கண்டேன் இரண்டு கரங்கூப்பினேன் வினைக் கட்டறுத்துக்
கொண்டேன் அழியாப் பெருவாழ்வு தான்வந்து கூடியதே!
செண்டாயுதமும் தரித்து எமையாளும் சிவக்கொழுந்தைக்
கண்டேன் இரண்டு கரங்கூப்பினேன் வினைக் கட்டறுத்துக்
கொண்டேன் அழியாப் பெருவாழ்வு தான்வந்து கூடியதே!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நன்றி: பதிவில் உள்ள புகைப்படங்கள் நந்தகுமார் எனும் அன்பரின் பிகாசா தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!
ஒருவருக்கொருவர் சண்டையிட்ட குடும்பங்கள் கூட, அந்த ஒருநாளில் ஒரே இடத்தில் கூடி இருப்பதால் பகை மறந்து சமாதானம் ஆவர். ஒருவேளை அதற்காகவும், சொந்தம் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவும் தான் புத்தாண்டு அன்று இங்கு கூடும் வழக்கத்தை ஏற்படுத்தினர் போலும்.
ReplyDelete.....படங்கள் எல்லாமே அருமை. இந்த ரம்மியமான சூழ்நிலையில் , அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பி வருமே.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@Chitra புத்தாண்டு முதல் பின்னூட்டமே ‘பின்னூட்டப் புயல்’ சித்ராக்கா உடையதா..நல்லது. அக்காவிற்கும் மச்சானுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஅனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDelete@சிநேகிதி வாழ்த்துக்கு நன்றி சகோதரி. தங்களுக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDelete@தமிழ்வாசி - Prakash நன்றி பிரகாஷ்..உங்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteAda ponga sir
ReplyDeleteதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இன்னைக்கு இதான் கமென்ட்..
ReplyDeleteஎங்கண்ணன் வீட்ல எப்பவெல்லாம் சண்டையோ அப்பவெல்லாம் ஆன்மீகப்பதிவு போடுவார்.. ஹி ஹி
ReplyDelete"ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர"
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஎங்கண்ணன் வீட்ல எப்பவெல்லாம் சண்டையோ அப்பவெல்லாம் ஆன்மீகப்பதிவு போடுவார்.. ஹி ஹி//
ஒரு மனுசன நல்லவனா மாற விடுங்கையா...( ஆமா..எப்ப கெட்டவனா இருந்தாரு?)
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ReplyDelete@டக்கால்டி புத்தாண்டும் அதுவுமா ரொம்ப சலிச்சுக்கிறீங்களே..
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் கருன்.
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்/எங்கண்ணன் வீட்ல எப்பவெல்லாம் சண்டையோ அப்பவெல்லாம் ஆன்மீகப்பதிவு போடுவார்..// அனுபவம் பேசுதோ..
ReplyDelete@விக்கி உலகம் தக்காளியை விட இந்த கமெண்ட் நல்லாயிருக்கு விக்கி.
ReplyDelete@வைகை//ஒரு மனுசன நல்லவனா மாற விடுங்கையா...( ஆமா..எப்ப கெட்டவனா இருந்தாரு?)// கேள்வியும் பதிலும் நீங்களே சொல்லீட்டா, நான் என்ன சொல்ல..
ReplyDelete@Sankar Gurusamyநன்றி சார், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடங்கள் அமைதியாக இருக்கின்றதே...
ReplyDeleteசச்சின் மகுடம் : www.tamiltel.in
நம்ம சொந்த ஊரும் ராஜபாளையம்தான். குலதெய்வ கோவில் கழுகுமலைக்கு செல்ல காத்திருக்கிறேன். அய்யனார் அருவியில் குளிக்கவும் ஆசை. என்று ஆசை நிறைவேறும் என்று தெரியவில்லை.
ReplyDeleteபடங்கள் சூப்பர்......
ReplyDeleteஇனிய புது வருஷ வாழ்த்துகள் நண்பா....
எங்கள் குலதெய்வமும், அய்யனார்தான் - மன்னார்குடி அருகில் ,ரங்கநாதபுரம் என்னும் கிராமம்.விக்கிரகம் கிடையாது மூன்று கல்தான்,பூர்ண புஷ்கலாம்பா சமேத அய்யனார்.முன்னால் காவல் வீரப்பன்.தைப் பூசத்தன்று விமரிசையாக விழா நடைபெறும்!
ReplyDelete@ரஹீம் கஸாலி நன்றி கஸாலி!
ReplyDelete@Uma நன்றி சகோதரி..உங்களுக்கும் அஃதே!
ReplyDelete@மனோவி புத்தான்ண்டு இல்லையா, அதனால படங்கள் அமைதியாகத் தான் இருக்கும்!
ReplyDelete@! சிவகுமார் ! சிவா, ராஜபாளையத்துக்காரரா இருந்துக்கிட்டு, இன்னும் அங்க போனய்ஜில்லையா..
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ புது வருஷ வாழ்த்துக்கு நன்றிண்ணே!
ReplyDelete@சென்னை பித்தன்//எங்கள் குலதெய்வமும், அய்யனார்தான் // ஆஹா, ரொம்ப சந்தோசம் சார்!
ReplyDeleteகருணாநிதி பொங்கலைத் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்து இருந்தாலும், இங்கு வந்துள்ள பலரும் அந்த அறிவிப்பைப் புறம் தள்ளி சித்திரையையே புத்தாண்டாக எடுத்துக் கொண்டுள்ளது வியப்பே.பழக்க வழக்கங்கள் அவ்வளவு சுலபமாகப் போவதில்லை.தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபெரும்பாலும் அய்யனாரே பலருக்கும் குலதெய்வம்.பூர்ண புஷ்கலாவுடன் இருந்தால் அவரை அய்யப்பன் என்பதுதான் முறை. தனியாகக் கையில் கத்தியுடன் பிரம்மாண்டமான சுதைச்சிற்பமாக இருந்தால் அவர் அய்யனார்.
புதன் சனிதான் எல்லா இடத்திலும் அய்யனாருக்கு பூஜை. அப்போ அது விஷ்ணு அம்சம் என்பது புலனாகிறது.
என் கட்டுரை "வேர்களைத் தேடி ஒரு பயணம்" வகுப்பறையில் வெளியாகி உள்ளது.வாசித்தீர்களா? அதுவும் குலதெய்வ வழிபாடே...!
chieftain தலைவன் வழிபாடே அய்யனார் வழிபாடாக வந்து இருக்கலாம்.
@kmr.krishnan தலைமுறை தலைமுறையாக இதைச் செய்துவருகிறோம்..யாரோ சொன்னார்கள் என்பதற்காக இதை மாற்றமுடியாது இல்லையா..
ReplyDeleteஉண்மை தான் அய்யா, தலைவன் வழிபாடே இவ்வாறு நிலைத்திருக்கலாம்..பூர்ணா-புஷ்கலாவுடன் இருப்பவர் சாத்தன் என்று சொல்வது தானே இன்னும் சரியாக இருக்கும்?..அய்யப்பன் பிரமச்சாரி அவதாரம் இல்லையா?..வேர்களைத் தேடி இன்னும் படிக்கவில்லை..வகுப்பறையை மொத்தமாக ஒருநாள் உட்கார்ந்து படிப்பது வழக்கம்..படித்துவிட்டு கமெண்ட் போடுகிறேன்.
ஆம்!செங்கோவி! சாஸ்தா அல்லது சாத்தன் என்பதே பூர்ணா புஷ்கலையுடன்
ReplyDeleteஇருக்கும் அய்யனாருக்குப் பெயர்.வடக்கே பிள்ளையார் திருமணம் ஆனவர்.
கார்திகேயன் பிரம்மச்சாரி. தெற்கே பிள்ளையார் பிரமச்சாரி. முருகன் திருமணம் ஆனவர்.எல்லாம் பல வேரியஷன்ஸ்!
@kmr.krishnan விளக்கத்திற்கு நன்றி ஐயா!
ReplyDeletenaanum enathu siru vayathil antha kovilukku kudumathudan sendrullen.
ReplyDeletevazhthukkal
Dear Sir,
ReplyDeleteWe are From Tuticorin Dt, Our Temple is "SREE iLLANGUDI SASTHA"..
Now Temple Renovation ongoing.
We want Small Dtls about Sastha,
We need "ALL Ayyanar's Names and Photos" . If u Have Please Help me...
@anandh ganesh
ReplyDeleteமின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் நண்பரே.