Thursday, March 31, 2011

ஜெயமோகனின் இன்றைய காந்தி - நூல் விமர்சனம்

’ஒரு தலைவர் பெரும்பான்மையான மக்களால் புகழப்படுகிறார் என்றால், அவர் ஒரு அயோக்கியனாகத் தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணும் மனநிலைக்கு நம்மை தற்காலத் தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிலை, உலகில் வேறெங்கும் நிலவுகிறதா எனத் தெரியவில்லை. 

அப்படி நம்மால் மிகத் தவறாகப் பார்க்கப்படும் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியைப் பற்றி, தெளிவான பார்வையைக் கொடுக்கும் புத்தகமே ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’.

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பழுப்பேறிய கிழிந்த ’சத்திய சோதனை’ புத்தகம் எனக்குக் கிடைத்தது.  அதில் இருந்த சம்பவங்களும் கருத்துக்களும் நான் வளர்ந்த சூழ்நிலைக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. சத்தியத்தைப் பற்றியும் அஹிம்சையைப் பற்றியும் ஆழமான புரிதலைக் கொடுத்தது அந்தப் புத்தகம். அதன்பிறகான எனது அத்தனை சிந்தனைகளும் காந்தியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டவையே.

நான் காந்தியின் ரசிகன் ஆனேன். அவர் மேல் மிகப்பெரிய மரியாதையை அடைந்தேன். ஆனால் அதை என் பள்ளி நண்பர்களிடமும் கல்லூரி நண்பர்களிடமும் வெளிப்படுத்தியபோது, எனக்குக் கிடைத்தது கேலியும் கிண்டலுமே. காந்தியைப் பற்றி பலவாறான அவதூறுகள் சகஜமாக அவர்களால் பேசப்பட்டன. 

காந்தியைப் பற்றி பழித்துப் பேசுபவர்களே புத்திசாலிகளாகவும், காந்தியவாதிகள் அசமந்தமாகவும் இச்சமூகத்தால் பார்க்கப்படுவதை உணர்ந்தேன். எத்தனை எத்தனை அவதூறுகள்..

காந்தி ஒரு மோசமான அப்பா..அவர் பிள்ளைகள் எதுவும் உருப்படவில்லை..

தாழ்த்தப்பட்டோரின் விரோதி காந்தி..

வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடித்தவர் காந்தி..

முஸ்லிம்களின் விரோதி காந்தி..

இந்துக்களின் துரோகி..

ஏமாற்றுக்காரர்..

முஸ்லிகளுக்கு அதிக சலுகை காட்டி, போலி மதச்சார்பின்மையை அன்றே ஆரம்பித்து வைத்தவர்..

பகத்சிங் தூக்கிலப்படுவதை தடுக்காதவர்..

நேதாஜியின் மறைவுக்கு காரணமானவர்..

இவ்வாறு பல அவதூறுகள்..விவாதித்து, விவாதித்து அலுத்துப்போன விஷயங்கள்..அதன்பிறகு நான் காந்தியைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டேன்..

சென்ற வருடம் தன் இணைய தளத்தில் ஜெயமோகன் காந்தி பற்றிப் பேச ஆரம்பித்தார். வலுவான ஆதாரங்களுடன் காந்தியின் தரப்பை முன் வைத்தார். நீண்ட விவாதமாக சென்றது அது. அந்த விவாதங்களின் தொகுப்பே ‘இன்றைய காந்தி ‘என்ற நூல்.

காந்தியைப் பற்றி பலவித அவதூறுகள் எப்படித் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன, அவை எந்த அளவிற்கு பொய்யானவை என பொட்டில் அடித்தாற்போன்று எழுதியுள்ளார். நான் இழந்து விட்ட காந்தியை மீண்டும் நமக்கு மீட்டுத் தந்தார் ஜெயமோகன். மானுடம் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கான வழி காந்தியமே..அதுவே இனி உலகை வழி நடத்தும் என அறைகூவல் விடுகிறார் ஜெயமோகன்.

’காந்தியின் மகனே சொன்னார், அவர் ஒரு மோசமான தந்தை என்று’. -இதுவே காந்தியைப் பற்றிய முக்கிய அவதூறு. காந்தியின் மகன் ஹரிலால் அப்படித் தான் சொன்னார், மேடை மேடையாகப் பேசினார். மதுவுக்கும் பெண்ணாசைக்கும் அடிமையான ஹரிலால் தொடர்ந்து காந்தி சாகும் வரை காந்தியைத் திட்டி வந்தார். அதைப்பற்றி விலாவாரியாகப் பேசுபவர்கள், காந்தியின் மற்ற மூன்று பிள்ளைகளைப் பற்றி எதுவும் சொல்வதில்லை.

அவர்கள் காந்தியை மதித்ததைப் பற்றியோ, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதைப் பற்றியோ, காந்தியைப் பற்றி அவர்கள் சொன்ன கருத்துகளைப் பற்றியோ யாரும் ஜாக்கிரதையாக எதுவும் சொல்வதில்லை. ஒரு பிள்ளை(ஹரிலால்)-யின் கருத்தைச் சொல்பவர்கள், மற்ற மூன்று பிள்ளைகள் காந்தியைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பைச் சொல்ல மறுப்பதேன்? அது நமக்கு ஒத்து வராத கருத்து என்பதாலா?

’காந்தியின் மீதான தாக்குதல், உண்மையில் நமது தேசத்தின் மீதான தாக்குதல். காந்தியின் மீதான அவதூறுகளுக்குப் பின்னால் ஏதோவொரு அன்னிய நாட்டின் ஆதரவு உண்டு’ என்பதைத் திட்டவட்டமாக நிறுவுகிறது இந்நூல்.

ஒரு நண்பர் என்னிடம் காரசாரமாக ‘தன் பிள்ளைகளுக்கே நல்ல தந்தையாக இல்லாதவரை எப்படி மகாத்மாவாக, தேசத் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியும்?’ என காந்தியப் பற்றி எதுவுமே படிக்காமல் வாதிட்டார். நான் அவரிடம் கீழ்க்கண்டவாறு சொன்னேன்: ‘ஒரு நல்ல தந்தையாக இருக்கும் தலைவரைத் தான் மகாத்மாவாக ஏற்பீர்கள் என்றால், கலைஞர் கருணாநிதியைத் தான் மகாத்மா என்று சொல்ல வேண்டும்’.

ஒரு சினிமாப் படத்தைப் பற்றிக் கருத்துச் சொல்லக்கூட, அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் நம் தேசத் தலைவர்கள் பற்றிப் பேச, அவர்களைப் பற்றி எதுவும் படித்திருக்கத் தேவையில்லை, வம்புப் பேச்சே போதும் என்று நாம் இருப்பது சரி தானா?

காந்தியைப் பற்றி அளவிட நமக்குத் தெரியாத ஆராய்ச்சித் தகவல்கள் தேவையில்லை. நமக்குத் தெரிந்த இரு தகவல்களே போதும்.

1. உலக வரலாற்றில், ஒரு சுதந்திரப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திச் சென்றவர் யாரோ, அவர் தான் அந்த நாடு விடுதலை அடைந்ததும் அதிபராக ஆகி, பதவியை அனுபவிப்பர். காந்திக்கு அம்மாதிரியான எண்ணங்கள் சிறிதும் இருந்ததில்லை.

2.’காந்திக் கணக்கு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சுதந்திரப்போராட்டத்தின் மொத்த நிதியும் காந்தியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அதிலிருந்து ஒரு பைசாவைக் கூட தனக்கோ, தன் குடும்பத்தினருக்கோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

நம் தேசத்தந்தையைப் பற்றிப் புரிந்துகொள்ள நேரமும் மனமும் உள்ள இந்தியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் ‘இன்றைய காந்தி’. (இது கட்டுரை வடிவில் ஜெயமோகனின் இணையதளத்திலும் கிடைக்கிறது.)

நூல் விபரம்:

நூல் : இன்றைய காந்தி
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க: http://www.udumalai.com/?prd=Indraya%20Gandhi&page=products&id=6320

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

52 comments:

  1. செங்கோவி, மம்முட்டி நடித்த அம்பேத்கர் படம் பார்த்தீர்களா? பார்க்காவிடில் தயவு செய்து பார்க்கவும். காந்தியை பற்றி அம்பேத்கரின் பார்வை துணிச்சலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. விளக்கம் போதவில்லை...

      Delete
  2. ///ஒரு சினிமாப் படத்தைப் பற்றிக் கருத்துச் சொல்லக்கூட, அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் நம் தேசத் தலைவர்கள் பற்றிப் பேச, அவர்களைப் பற்றி எதுவும் படித்திருக்கத் தேவையில்லை, வம்புப் பேச்சே போதும் என்று நாம் இருப்பது சரி தானா?///

    மிகவும் ஞாயமான கேள்வி செங்கோவி!படித்து விட்டும் கூட கோணல் பார்வை பார்ப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது!இன்று நாம் சொல்லும் மனிதாபிமானம்,சமூகநீதி ஆகியவை காந்தி வலியுறுத்தி நாட்டின் மனதில் பதித்தவைதானே. உங்க‌ள் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  3. மாப்ள உங்க கருத்துகளில் எனக்கு பல விஷயங்கள் முரண் பாடாக இருந்தாலும்..................
    காசுக்கு ஆசைப்படாத மனுஷன் முகம் போட்ட பேப்பருக்காகத்தான் இந்தியாவே அடிச்சிட்டு திரியுது......காந்தி மகாத்மா என்பதில் மாற்று கருத்து இல்லை என்றாலும் பல விஷயங்களில் முரண் படுகிறேன்.........பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. ஜெயமோகனுக்கு நல்ல விளம்பரம். எவ்வளவு கமிசன் தருவதாக சொன்னார் ... ஹஹா....ஹ

    ReplyDelete
  5. @! சிவகுமார் ! ஒருவரை விரும்ப வேண்டும் என்றால், இன்னொருவரை வெறுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அம்பேத்கர்-காந்தி மோதல் பற்றியும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது சிவா..அம்பேத்கர் படம் பார்க்க இயலவில்லை. எனது பார்க்க வேண்டிய படங்கள் இஸ்ட்டில் அதுவும் ஒன்று. ஆனால் என்னளவில் இருவரும் மரியாதைக்குரியவர்களே!

    ReplyDelete
  6. @kmr.krishnan//உங்க‌ள் பணி சிறக்கட்டும்.// தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா..எதிர்ப்பு வரும் என்று தெரியும், தெரிந்தே பதிவிட்டேன். நம் மனதுகு சரி என்று படுவதைப் பகிர்வதற்குத் தானே வலைப்பூ!

    ReplyDelete
  7. @விக்கி உலகம்//காந்தி மகாத்மா என்பதில் மாற்று கருத்து இல்லை என்றாலும் பல விஷயங்களில் முரண் படுகிறேன்...// பரவாயில்லை விக்கி!

    ReplyDelete
  8. @இக்பால் செல்வன் //ஜெயமோகனுக்கு நல்ல விளம்பரம்.// நான் காந்திக்கு நல்ல விளம்பரம்னுல்ல நினைச்சேன்..காந்தி எனக்கு ஏற்கனவே நிறைய கமிசன் கொடுத்திருக்கிறார் நண்பரே..அன்பு, அஹிம்சை, சத்யாக்கிரகம் என பல கமிசன்கள்...கருத்துக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  9. அண்ணன் கடைல காலைலயே செம கூட்டம் 470 பேர் வந்துட்டாங்க.. என்ன மேட்டர்?

    ReplyDelete
  10. ஏதோ பரபரப்புக்காக எழுதனும்னு சிலர் மகாத்மாவைப்பற்றி தப்பா எழுதறாங்க..

    ReplyDelete
  11. யார் என்ன சொன்னாலும் காந்தி நம் தேசப்பிதாதான், பகிர்வுக்கு நன்றி செங்கோவி

    ReplyDelete
  12. @சி.பி.செந்தில்குமார் கேப்டனுக்காக வந்தாங்களா, காந்திக்காக வந்தாங்களா-ன்னு தெரியலைண்ணே!

    ReplyDelete
  13. @இரவு வானம் //யார் என்ன சொன்னாலும் காந்தி நம் தேசப்பிதாதான்..// அப்படிச் சொல்லுங்க நைட்!

    ReplyDelete
  14. நல்ல தகவல்
    மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
    http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html

    மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது

    ReplyDelete
  15. // உலக வரலாற்றில், ஒரு சுதந்திரப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திச் சென்றவர் யாரோ, அவர் தான் அந்த நாடு விடுதலை அடைந்ததும் அதிபராக ஆகி, பதவியை அனுபவிப்பர். காந்திக்கு அம்மாதிரியான எண்ணங்கள் சிறிதும் இருந்ததில்லை.


    2.’காந்திக் கணக்கு’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சுதந்திரப்போராட்டத்தின் மொத்த நிதியும் காந்தியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அதிலிருந்து ஒரு பைசாவைக் கூட தனக்கோ, தன் குடும்பத்தினருக்கோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை.//

    இன்னைக்கு நடக்க முடியல்லைனாலும் நாற்காலியை விடாதவனுங்க எல்லாம் காந்தியை பற்றி தெரியாதவர்கள்...

    ReplyDelete
  16. ///காந்தியை பற்றி அம்பேத்கரின் பார்வை துணிச்சலாக பதிவு செய்யப்பட்டுள்ளது./// சிவகுமார்! காந்திஜி வட்டமேஜை மஹாநாட்டுக்கு லண்டன் செல்கிறார். மாண‌வர்களுக்கிடையே பேசும் போது அம்பேத்கர் பற்றிக் கேள்வி எழுகிறது.காந்திஜி சொல்கிறார்:" அவ‌ர்(அம்பேத்கர்)மட்டும் நினைத்தால் உலகின் எந்த நாட்டிலும் குடியேறி மாதம் 2000 ரூபாய் சம்பாதிது சுக போக வாழ்க்கை வாழ முடியும்.அவருடைய சட்ட அறிவு அப்படிபட்டது.ஆனால் அதையெல்லாம் புறந் தள்ளிவிட்டு,தாழ்த்தப்பட்ட தன் இன மக்களின் முன்னேற்றத்திற்காகவே, தியாகம் செய்து வாழ்கிறார்"

    அம்பேத்கர் தன்னை சாடுகிறார் என்றபோது,"அவருக்கு அப்படி என்னை சாட எல்லா உரிமையும் உண்டு.ஏனெனின் அவர் சார்ந்த சமூகத்தின் காயங்கள் அவ்வாறானவை." அதிகார வ்ர்கங்களின் தவறுகளுக்கு(மேல் சாதியினரின் கொடுமைகளுக்கு)காந்திஜி தான் பொறுப் பேற்றுக்கொண்டார்.

    அம்பேத்கர் வேண்டுமானால் காந்திஜியை வெறுத்து வார்த்தைகளைக் கொட்டி யிருக்கலாம். காந்திஜி ஒரு போதும் அம்பேத்கரை வெறுத்தவர் அல்ல.

    ReplyDelete
  17. "ஒரு நல்ல தந்தையாக இருக்கும் தலைவரைத் தான் மகாத்மாவாக ஏற்பீர்கள் என்றால், கலைஞர் கருணாநிதியைத் தான் மகாத்மா என்று சொல்ல வேண்டும்’."

    கருணானிதியின் மூத்த மகன் மு.க.முத்து,தன் தந்தை தன்னைக் கைவிட்டுவிட்டார்; தான் வறுமையில் வாடுகிறேன் எனச்சொல்லி தன் தந்தைக்கு கெட்டபெயரைக் கொடுத்தார். ஜெ. அதற்காக அவருக்கு 5 லட்சம் கொடுத்தார் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா ?

    ஒரு குழந்தை தன் தந்தை தன்னைக் கைவிட்டார் என்கிறது. மற்ற குழந்தைகள் தந்தையைபோற்றுகின்றன. எனவே மெஜாரிட்டு ஓட்டை வைத்து காந்தியைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள். இல்லையா?

    குடும்பங்களில், ஒரு கண்ணில் வெண்ணை வைப்பதும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பதும் சகஜம். பெற்றோர்கள் எல்லாம் சத்திய சீலர்கள் அல்ல. ஓர வஞசகம் எங்கும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ◆◆◆பெற்றோர்கள் எல்லாம் சத்திய சீலர்கள் அல்ல◆◆◆
      உண்மை தான்... ஆனால் முக முத்து, ஹரிலால் காந்தி போன்றவர்கள் திருந்துவது சற்று கடினம்...

      Delete
  18. கிருஸ்ணன்,

    காந்தி அம்பேத்கரப்பற்றி என்ன சொன்னார் எனபதை வைத்து அம்பேத்கர் காந்தியை விமர்சனம் செய்யவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றி காந்தி என்ன கருத்தைக்கொண்டு செயல்பட்டார் என்பதை வைத்தே காந்தி கணிக்கப்பட்டார்.

    நீங்கள் அம்பேதகரை மட்டமாக குறைக்கிறீர்கள் (அதாவது அவரைப்பிறர் புகழ்ந்தார் புகழ்தவர் மஹாத்மாவாகி விடுவார் எனகிறீர்கள் :-)

    காந்தி ஒரு தீவிர புராதனமான இந்து. அவர் அம்மதத்தின் கொள்கைகளில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார். அவை நன்றோ கெட்ட்தோ என்பதைப்பற்றி அவருக்குக் கவலை இல்லை.

    ஆனால் அம்பேத்கருக்கு இருந்தது.

    வருணக்கொள்கையின் படி, ஒரு தலித்து மலம் அள்ளுவது அவனின் தருமமாகும். அதை நன்கு செய்யின் மறு பிறவியில் ஜாதிப்புரமோசன் கிடைக்கும்.

    இதை மோடி சொன்னார். வருணக்கொளகையைச் சரியென்போர் சொல்வார்கள். காந்தியும் சொன்னார். எனினும் தலித்து மலம் அள்ளுவதால் அவனை நாம் குறைத்து தீண்டாமை பண்ணக்கூடாது எனச்சொன்னார்காந்தி.

    அம்பேதகர் மட்டுமல்ல. அனைத்து தலித்துகளும் காந்தியை வெறுத்தார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    தஞ்சாவூர் மாநாட்டில் பிராமணனே உயர்ந்தவர்கள். மற்றவர்கள் பிராமாணனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் எனச்சொல்ல காந்தி-பெரியார் சண்டை மூண்டது.

    Sengovi, There is a lot of substance in the adverse crticism of Gandhi.

    The same way you say others are motivated in criticing him harshly, exactly the same way I can say people like you, kmr kirshnan and Jemo are motivated in praising him for his anti dalit and pro brahmin opinions.

    ReplyDelete
  19. @Speed Master வருகைக்கு நன்றி மாஸ்டர்.

    ReplyDelete
  20. @MANO நாஞ்சில் மனோ//இன்னைக்கு நடக்க முடியல்லைனாலும் நாற்காலியை விடாதவனுங்க எல்லாம் காந்தியை பற்றி தெரியாதவர்கள்...// கலக்கலாச் சொன்னீங்க சார்.

    ReplyDelete
  21. @kmr.krishnan //அம்பேத்கர் வேண்டுமானால் காந்திஜியை வெறுத்து வார்த்தைகளைக் கொட்டி யிருக்கலாம். காந்திஜி ஒரு போதும் அம்பேத்கரை வெறுத்தவர் அல்ல.// காந்தி அடிப்படையிலேயே வெறுப்புக்கு எதிரானவர் அல்லவா?..அதனால் தான் அவர் மீது இவ்வளவு வெறுப்பு பொழியப்படுகிறதோ?

    ReplyDelete
  22. @jo.amalan மு.க.முத்துவை அதன்பின் ஜெ.வும் கைவிட்டார். கலைஞரே இஉதியில் மீண்டும் அடைக்கலம் தந்தார்!

    ReplyDelete
  23. @jo.amalan//எனவே மெஜாரிட்டு ஓட்டை வைத்து காந்தியைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள். இல்லையா?// மெஜாரிட்டியைப் பற்றி நான் பேசவேயில்லையே..தேசத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த ஒரு பெரியவரைப் பற்றி, ஒரு குடிகாரப் பிள்ளை அவதூறு சொல்கிறது. மற்ற மூன்று கண்ணியமான பிள்ளைகள் போற்றுகின்றன. அது ஏன் என்று யோசியுங்கள் என்றே சொல்கிறேன். மேலும் விபரம் தெரிந்து கொள்ள உண்மையிலேயே ஆர்வம் இருந்தால்..இங்கே பார்க்கவும்:http://www.jeyamohan.in/?p=5013

    ReplyDelete
  24. @jo.amalan ஆரம்ப காலத்தில் வர்ணாசிரமக் கொள்கை சரியென்று நினைத்த காந்தி, பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். நீங்கள் அவரது ஆரம்ப கால நிலைப்பாட்டையே பிடித்துக் கொண்டு பேசுகிறீர்கள்..தன் ஆசிரமத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே தலித்களைச் சேர்த்தவர் காந்தி..அவரது கக்கூஸைச் சுத்தம் செய்தவர் காந்தி..நான் சொல்வதெல்லாம் ஒன்று தான்..காந்தியை விமர்சிக்கும் முன் சத்திய சோதனை & இன்றைய காந்தி படியுங்கள்..காந்தியைப் பற்றிய பல விமர்சனக் கட்டுரைகளையும் நாங்கள் படித்திருக்கிறோம்..ஆனாலும் சொல்கிறோம் அவர் ஒரு மகாத்மா என! காந்தி மட்டுமே அல்ல, நேதாஜி-அம்பேத்கர்-காமராஜ் என நம் தேசத்தலைவர்கள் அனைவருமே எனது மதிப்பிற்கு உரியவர்களே.. ஒருவரை நேசிக்க மற்றொருவரை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது காந்தியம் மூலம் நான் கற்றுக் கொண்டது. தங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  25. ஜெயமோகன் போன்ற ஜாம்பவான்களே விவாதித்தும் யாருக்கும் புரியவில்லை எனும்போது, நான் சொல்லியா புரியப்போகிறது!..இந்தப் பதிவு ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப் படுத்த மட்டுமே..கண்ணுள்ளோர் காணக் கடவது! நன்றி.

    ReplyDelete
  26. அதைப்பற்றி விலாவாரியாகப் பேசுபவர்கள், காந்தியின் மற்ற மூன்று பிள்ளைகளைப் பற்றி எதுவும் சொல்வதில்லை//
    சூப்பர் பாயிண்ட்

    ReplyDelete
  27. காந்தி ம‌ற்றும் அம்பேத்க‌ர் ப‌ற்றி ராம‌ச்ச‌ந்திர‌ குஹா அவ‌ர்க‌ளின் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்த‌து. ம‌ற்ற‌ ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ளுக்கும் குஹாவுக்கும் உள்ள‌ வித்தியாச‌ம், குஹா வ‌லுவான‌ ஆதார‌ம் இல்லாத‌ சொத்தை வாத‌ங்க‌ளை முன் வைப்ப‌தில்லை. அவ‌ருடைய‌ உரையின் முக்கிய‌ அம்ச‌ம், காந்தி அம்பேத்கர் இருவ‌ருக்கும் அனுகுமுறையில் வித்தியாச‌ம் இருந்தாலும், அவ‌ர்க‌ளுடைய‌ இல‌க்கு ஒன்று தான். காந்தியை புரிந்து கொள்வ‌த‌ற்கு திற‌ந்த‌ ம‌ன‌தும்‌ மெச்சூரிட்டியும் வேண்டும். இங்கே ப‌ல‌ருக்கு இவை இர‌ண்டும் கிடையாது. இதுவ‌ரை ப‌டிக்க‌வில்லை என்றால், India after Gandhi ப‌டிக்க‌வும். -கிருஷ்ண‌மூர்த்தி

    ReplyDelete
  28. பதிவும் பின்னூட்டங்களும் படித்தேன், விவாதம் சூடாகப் போய்க் கொண்டு இருக்கிறது. வரலாற்றில் முக்கியமானவர்களைப் பற்றி பேசும் போது இன்றைய முன்னேறிய காலகட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு கணிக்கக் கூடாது, அன்றைய காலகட்டத்தில் அவர் நடந்தது சரியா என்றே யோசிக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து!

    ReplyDelete
  29. ஸ்னேகா, மெக்கானிக்க‌ல் இஞ்சினிய‌ரிங், விஜ‌ய்காந்த், இப்போ காந்தி,..

    எப்ப‌டி இப்ப‌டி ர‌வுண்டு க‌ட்டுறீங்க‌ செங்கோவி?? ஒரே மாதிரி இல்லாம‌ல் ப‌திவுக‌ளில் ந‌ல்ல‌ வெரைட்டி,.

    ReplyDelete
  30. @kicha குஹாவின் அந்தப் புத்தகமும் என் லிஸ்ட்டில் உள்ளது.

    ReplyDelete
  31. @middleclassmadhavi //அன்றைய காலகட்டத்தில் அவர் நடந்தது சரியா என்றே யோசிக்க வேண்டும்// சரியாகச் சொன்னீர்கள் சகோதரி! கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  32. @jothi //எப்ப‌டி இப்ப‌டி ர‌வுண்டு க‌ட்டுறீங்க‌ செங்கோவி?? ஒரே மாதிரி இல்லாம‌ல் ப‌திவுக‌ளில் ந‌ல்ல‌ வெரைட்டி,.// நன்றி! நன்றி!...அதுக்கெல்லாம் கொஞ்சம் ‘விவஸ்தை கெட்ட’ மனுசனா இருக்கணும்!

    ReplyDelete
  33. நன்றி ,

    இந்த பதிவிலும் காந்தியை திட்டுபவர்கள் இன்றைய காந்தியை படித்துவிட்டு வந்து பேசலாமே ?

    ReplyDelete
  34. @Arangasamy.K.V நல்லாச் சொன்னீங்க சார்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  35. இந்த நல்ல பதிவுக்கு வந்த நல்லவங்க/பெரியவங்க எல்லாரும் தூங்கப் போய்ட்டாங்கன்னு நினைக்கேன்..அப்போ, அடுத்த பதிவை இறக்கிட வேண்டியது தான்!

    ReplyDelete
  36. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  37. @செ.சரவணக்குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. பயபுள்ள புத்தகத்த ரொம்ம்ம்ப ஆர்வமா பாத்திட்டிருகானே! அப்படியே அவன்கிட்டயே கொஞ்சநேரம் குடுத்திடுங்க பாஸ், என்னதான் பண்றான்னு பாத்துடலாம்! :-)

    ReplyDelete
  39. @ஜீ...//என்னதான் பண்றான்னு பாத்துடலாம்!// நாம படிச்சுக் கிழிச்சோம்..அவன் இப்போ கிழிச்சுட்டு, பின்னால படிப்பான்!

    ReplyDelete
  40. Another Important Point Gandhi has accepted all his mistakes in his auto-biography.

    ReplyDelete
  41. @KUMAR உண்மை தான் நண்பரே..காந்தி மீதான குற்றச்சாட்டுகள், குற்றம் சாட்டுவோரின் கண்டுபிடிப்புகள் அல்ல. அவர் வெளிப்படையாகச் சொல்லி, வருத்தப்பட்ட விஷயங்களையே மீண்டும் இவர்கள் சொல்கிறார்கள். வரலாறு என்பது ஆற்றோட்டம் போன்ற இயக்கம். ஒரு காலத்தில் சரியாகத் தோன்றுகின்ற விஷயங்கள், மற்றொரு நேரத்தில் தவறென்று புரியும். அதனை நேர்மையாக ஒத்துக்கொள்வதும், தன்னை மாற்றிக்கொள்வதும் காந்தியின் வழிமுறை. அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட பின்னும், பழையதையே பிடித்துக் கொண்டு தொங்குவது எதிர்தரப்பின் வழிமுறை. கருத்துக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  42. நான் இரண்டு புத்தகங்களையும் படித்ததில்லை, யார் சொல்வதையும் லேசில் நம்புவதும் இல்லை.. படித்துவிட்டு வந்து கருத்துகளைப் பகிர்கிறேன்..

    நன்றி..

    ReplyDelete
  43. @சாமக்கோடங்கி//படித்துவிட்டு வந்து கருத்துகளைப் பகிர்கிறேன்..// அதையே நானும் சொகிறேன்..திட்டுவதாக இருந்தாலும் அவர் தரப்பைப் படித்துவிட்டு, அப்புறம் முடிந்தால் திட்டுங்கள்!

    ReplyDelete
  44. I strongly recommend this tamil book published by Gandhiya illakkiya sangam, Madurai PH 0452 2533957.
    THENAPPRIKKA SATHYAGRAGAM orginally written by M G himself. This is finest book about gandhi's life in South Africa. I request some one to suggest a book about gandhi's life after 1927 till his death (Auto biography stops there)

    ReplyDelete
  45. If someone reads Thomas Weber and Raghavan Narasimman Iyer, they can easiy discover from where JM copied the entire book

    ReplyDelete
  46. அவரே கழிவறையை கழுவியதையும் மனைவியை சுத்தம் செய்ய சொன்னதையும் - தெரிந்தும் மறைத்து பேசுகிறிர்கள் என நினைக்கிறன். ஆழமாக காந்தீயையை உள்வாங்கிக்கொண்டு பிறகு விமர்சிக்கவேண்டுமாறு கூறிக்கொள்ள விரும்புகிறேன். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் தூரம் இல்லாமல் வாழந்தவர் அவர்.

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.