பெரிய்ய டிஸ்கி : அண்ணே-அக்கா, முதல்லயே சொல்லிடறேன், எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது. ஸ்ரீவித்யா ஆண்ட்டி ‘ஏழு ஸ்வரங்களில்’னு பாடுனதால ஏழு ஸ்வரம்னு ஏதோ இருக்குன்னு தெரியும். பூனைக்கண் சிவரஞ்சனியை எனக்குப் பிடிக்கும்ங்கிறதால சிவரஞ்சனி-ன்னு ஒரு ராகம் இருக்குன்னும் தெரியும். உச்சஸ்தாயி-ன்னா ஏதோ கெட்ட வார்த்தைன்னே ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன். ---இந்தக் கர்மத்தை எல்லாம் எதுக்குச் சொல்றேன்னா பின்னூட்டத்துல ‘அந்த ராகம் தெரியுமா..இந்த ஸ்வரம் தெரியுமா’ன்னு கேட்டு என்னை நீங்க மிரட்டக் கூடாதுன்னு தான்!
தம்பீ..இது கொஞ்சம்கூட நியாயமில்லை! |
கொஞ்ச நாள் முன்னே எங்க தாத்தா ஒருத்தர் டிக்கெட் வாங்கினதை ஏற்கனவே சொல்லியிருக்கேன்..அவர் இறந்த மறுநாள், அவர் அஸ்தியை கரைக்க திர்நவேலி தாமிரபரணிக்கு போறதா முடிவாச்சு. நிறைய ஆள் இருந்ததால ஒரு வேன் பிடிச்சுப் போவோம்னு முடிவாச்சு. கிளம்புனப்ப, அந்தத் துக்கத்துலயும் ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸ் சி.டியை எடுத்துக்கிட்டேன்.
வண்டி கிளம்புனதும் டிரைவர்கிட்ட சி.டி.ஐக் கொடுத்தேன். கவரைப் பார்த்துட்டு, என்னை ஏற இறங்க பார்த்தாரு. பிறகு ஒன்னும் சொல்ல முடியாம சி.டி.ஐப் போட்டாரு. ஏ.ஆர்.ஹிட்ஸ் ஒலிக்க ஆரம்பித்தது. ‘கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன்’ ல இருந்து என்னோட ஃபேவரிட் பாடலான ‘எங்கே எனது கவிதை ‘ஓடிக்கிட்டிருந்தது. திடீர்னு சித்தப்பு டிரைவரைக் கூப்பிட்டாரு. ‘ஏம்பா..என்னப்பா பாட்டு போடறே..நல்ல பாட்டாப் போடுப்பா’ன்னாரு. எனக்கு பகீர்னு ஆயிடுச்சு. 'நல்ல பாட்டா..அப்போ இது’ன்னு குழம்பிப் போயிட்டேன். டிரைவருக்கு சந்தோஷம். உடனே வேற சி.டி.யைப் போட்டாரு. ‘மெதுவாத் தந்தி அடித்தானே..என் மச்சானே’ன்னு பாட்டு ஆரம்பிச்சதும் நொந்து போயிட்டேன். சித்தப்பும் தந்தை இழந்த சோகத்தை தந்தியடிச்ச படியே தீர்த்துக் கிட்டாரு.
அதுக்கு சில மாசம் முன்னாடி, தமிழ்நாட்டைச் சுத்தி சுத்தி வந்துட்டிருந்தேன். சென்னை-கும்பகோணம்-மயிலாடுதுறை-மதுரை-திருநெல்வேலி-ராஜபாளையம் னு பெரிய ரவுண்டு. பெரும்பாலும் தனியா..பஸ் பயணம். அங்கே என்ன பாட்டு போட்டாங்கன்னு யோசிச்சுப் பார்த்தா, பெரும்பாலும் இளையராஜா ஹிட்ஸ்.இல்லைன்னா தேவா-சந்திரபோஸ். இத்தனைக்கும் அப்போதான் எந்திரன் வந்து ஓடிக்கிட்டிருந்தது.
பொதுவாக வெஸ்டர்ன் மியூசிக் பாடல்கள் இரைச்சலாகத் தான் இருக்கும். வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா போன்றோரின் பாடல்களில் இதை உணரலாம். நிறைய பிண்ணனி சத்தங்களோடுதான் அவை இருக்கும். ஆனால் வெஸ்டர் பாடல்களை இரைச்சல் இல்லாமல் கொடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். (அவர் ஒலிச்சேர்க்கை செய்யாத பாய்ஸ் பாடல்கள் விதிவிலக்கு!)..உதாரணமாக காதல் தேசம் படத்தில் வந்த ’க..க..கல்லூரிச்சாலை’ பாடலைக் கேட்டுப்பாருங்கள். இரைச்சல் இல்லாமல் தெளிவாக இருக்கும். இத்தனைக்கும் ரொம்ப ஃபாஸ்ட்டான பாடல் அது.
ஒரு பேரு வந்திடக் கூடாதே! |
’ஆகாய வெண்ணிலாவே’ போன்ற இளையராஜா பாடல்களின் பிண்ணனியில் முழுக்க ஒரே ஒரு இசை (மியூசிக் க்ளிப்) வரும். பெரும்பாலான மெலோடி பாடல்களுக்கு அப்படித்தான். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் வெஸ்டர்ன் பாடல்களுக்கும் அதையே செய்தார். அதனாலோ என்னவோ இசை தெளிவாக இருக்கும்.
ஆனால், இதுக்கு முன்ன பம்பாய், முத்து போன்ற படங்களின் பாடல்கள் வெளியானப்போ, எல்லா இடத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் தான் ஒலித்தன. ஆனால் அதே பாடல்களை இப்போ எங்கேயும் பொது இடத்தில் கேட்க முடிவதில்லை. இது ஏன்?ஒருவேளை ஏ.ஆர்.ரஹ்மான் இசை நம் மண்ணோடு ஒட்டவில்லையோ?
இரு இமயங்கள் சந்தித்த போது.. |
எப்போதுமே ’டங்கு டக்கர’-ன்னு அடி பின்னுனாத்தான் நம்ம ஆட்களுக்கு பிடிக்கும். அதனால் தானோ என்னவோ நம்ம ஆட்கள் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை மறந்துவிட்டார்கள் போலும்.
பிஸ்கி : அப்புறம் சொல்ல மறந்துட்டனே, மேல இருக்கிற ஃபோட்டோல பிரபல பதிவர் ரஹீம் கஸாலி பக்கத்துல நிக்காரு பாருங்க, அவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான்.
பிஸ்கி : அப்புறம் சொல்ல மறந்துட்டனே, மேல இருக்கிற ஃபோட்டோல பிரபல பதிவர் ரஹீம் கஸாலி பக்கத்துல நிக்காரு பாருங்க, அவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான்.
@தமிழ் 007 ஆஹா..வந்துட்டாருய்யா..வந்துட்டாருய்யா..
ReplyDelete3 வது படம், வசனம் சூப்பரு!
ReplyDelete@தமிழ் 007 //3 வது படம், வசனம் சூப்பரு!// ஹா..ஹா..நன்றி..நன்றி.
ReplyDelete///ஒருவேளை ஏ.ஆர்.ரஹ்மான் இசை நம் மண்ணோடு ஒட்டவில்லையோ?///
ReplyDeleteஒட்டுறதுக்கு அது என்ன பசையா? இசை நண்பா!
///‘மெதுவாத் தந்தி அடித்தானே..என் மச்சானே’///
ReplyDeleteஇந்தப் பாட்டு என் மாப்பிள்ளை ஒருத்தனோட காதல் கீதமாச்சே!
ஹி....ஹி...ஹி... வணக்கம்...
ReplyDeleteAppalika varen...vootuku poi padichukkuren...
ReplyDelete@தமிழ் 007 //என் மாப்பிள்ளை ஒருத்தனோட காதல் கீதமாச்சே!// இது காதல் கீதமா..என்னய்யா இது!
ReplyDelete@தமிழ்வாசி - Prakashவணக்கம்!
ReplyDelete@டக்கால்டி//Appalika varen...vootuku poi padichukkuren...// நல்லது..ஒன்னும் அவசரம் இல்லை..பதிவு எங்கயும் போயிடாது.
ReplyDeleteஎன் அபிமான இசைப்புயலை பற்றி எழுதியதற்கு நன்றி.
ReplyDeleteஎப்போதுமே ’டங்கு டக்கர’-ன்னு அடி பின்னுனாத்தான் நம்ம ஆட்களுக்கு பிடிக்கும். அதனால் தானோ என்னவோ நம்ம ஆட்கள் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை மறந்துவிட்டார்கள் போலும்.
ReplyDelete......ம்ம்ம்ம்...... உலக அளவில் அவர் பெயர் தெரிய ஆரம்பித்து இருப்பதால், அவர் புகழ் நம்மூரிலும் அதிகரித்து இருக்கும் என்று நினைத்தேன். இப்படி ஆகி விட்டதே! :-(
மாப்ள ஒரு வேலை மேல் தட்டு மக்களை கவரும் வகையில் இருப்பதினாலோ என்னவோ!
ReplyDeleteஆனால் அதே பாடல்களை இப்போ எங்கேயும் பொது இடத்தில் கேட்க முடிவதில்லை. இது ஏன்?ஒருவேளை ஏ.ஆர்.ரஹ்மான் இசை நம் மண்ணோடு ஒட்டவில்லையோ//
ReplyDeleteஇப்படி சொல்லிவிடமுடியாது.. ரஹ்மான் இப்பொழுது வேகமான பாடல்களை குறைத்துவிட்டார் என்பதே உண்மை.. பொதுவெளியில் கேட்பதற்கு அவரரது பாடல்கள் தேவை இல்லை! இது எப்படி என்றால் இளையராஜாவின் திருவாசகத்தை ஏன் டீக்கடையில் போடவில்லை என்பதைப்போன்றது!
ஒரு முறை அரசு கேள்வி பதிலில் இளையராஜாவின் இசையில் என்ன இருக்கிறது...? என்பது கேள்வி.. அரசு பதில்....ஜீவன். எனக்கு அவருக்குமுன் பேசப்பட்ட எம்.எஸ்.வியின் இசையில இருந்தது... வாழ்க்கைஅனுபவம்..எளிமையான மனித உணர்வுகள்...ஏ.ஆர்.ரஹ்மான இசையில் நீங்க என்ன கண்டடைந்தீர்கள் என்பதை சொல்லுங்கள் அற்புதமான தொழில்நுடப்த்தை தவிர........
ReplyDeleteபிஸ்கி : அப்புறம் சொல்ல மறந்துட்டனே, மேல இருக்கிற ஃபோட்டோல பிரபல பதிவர் ரஹீம் கஸாலி பக்கத்துல நிக்காரு பாருங்க, அவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான்.////
ReplyDeleteஏப்பா...இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?
கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு பின்னூட்டத்துல உங்க போட்டோவும் வெளியாகும்ன்னு சொல்லியிருந்தீங்க...அது இவ்வளவு டெர்ரரான போட்டோவா இருக்கும்ன்னு சொல்லவே இல்லியே?
ReplyDeleteசிவரஞ்சனி ராகம் பற்றி சொல்றப்போ சிவரஞ்சனியோட ஸ்டில்லை போட்டிருக்கீங்களே... இதனால பதிவுலகுல பிரச்சனை எதுவும் வர்லையா? இசை ஆர்வலர்கள் உங்களை கண்டிக்கலையா? யாரும் மைனஸ் ஓட்டு போடலையா? அடபோங்கப்பா...
ReplyDelete@! சிவகுமார் ! நன்றி ஏற்றுக்கொள்ளப் பட்டது சிவா!
ReplyDelete@Chitra//அவர் புகழ் நம்மூரிலும் அதிகரித்து இருக்கும் என்று நினைத்தேன்// ஏ.ஆர்.ரஹ்மானை நம்மாட்கள் மதிக்காங்க..ஆனா அவர் பாட்டைத் தான்..
ReplyDelete@விக்கி உலகம் அப்படித் தான்னு நினைக்கேன்!
ReplyDelete@வைகை//பொதுவெளியில் கேட்பதற்கு அவரரது பாடல்கள் தேவை இல்லை! இது எப்படி என்றால் இளையராஜாவின் திருவாசகத்தை ஏன் டீக்கடையில் போடவில்லை என்பதைப்போன்றது!// இளையராஜாவின் மற்ற பாடல்கள் ஒலிக்கின்றன.ஆனால் ரஹ்மானின் பழைய ஹிட் பாடல்களைக் கூட காணோமே..ரொம்ப ஸ்டாண்டர்டா இருக்குதோ..
ReplyDelete@kamaஉயிரே மாதிரி சில பாடல்களில் ஜீவன் உண்டு..ஆனாகும் மொத்தத்தில் தொழில்நுட்பம் ஜீவனைச் சாப்பிட்டு விட்டதோ..
ReplyDelete@ரஹீம் கஸாலி ஹா..ஹா..//ஏப்பா...இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?// தெரியலியே!
ReplyDelete@ரஹீம் கஸாலி //கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு பின்னூட்டத்துல உங்க போட்டோவும் வெளியாகும்ன்னு சொல்லியிருந்தீங்க..// யோவ், உங்க ஃபோட்டோ தானய்யா இது..படிக்கிற ஆட்களைக் குழப்பாதீங்க..இந்த மாதிரி கூத்து நடக்கும்னு தான் நான் என் ஃபோட்டோவைப் போடலை!
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் //பதிவுலகுல பிரச்சனை எதுவும் வர்லையா? இசை ஆர்வலர்கள் உங்களை கண்டிக்கலையா? யாரும் மைனஸ் ஓட்டு போடலையா? // எப்படி அலையுறாங்க பாருங்க..போங்கய்யா, போயி புள்ள குட்டிகளைப் படிக்க வைங்க!
ReplyDelete@செங்கோவி வரலாறு... எனும் திரைப்படத்தில் தீயில் விழுந்த தேனா.. எனும் பாடல் சற்று கவனித்தாலும் கலங்கிவிடுவோம்....அவரது இசையில் பரந்துபட்ட அனுபவங்கள் குறைவு... அதை ஈடுகட்ட தொழில்நுட்பத்தின் பெரும்பாலும் சாய்கிறார்... அபரிதமான இசை எழுச்சி உள்ளவர் அல்ல... எம்.எஸ்.வி. இளையராஜா.. போன்ற இசைமேதைகளுடன் நிச்சியமாக என்னால் இவரை ஒப்பிடமுடியாது.... சர்வதேச தரத்துக்கான தொழிலநுடபம் அறிந்த ஒரு இசையமைப்பாளர் என்று தீர்க்கமாக சொல்லுவேன்.
ReplyDelete\\ஏழு ஸ்வரம்னு ஏதோ இருக்குன்னு தெரியும்\\ \\சிவரஞ்சனி-ன்னு ஒரு ராகம் இருக்குன்னும் தெரியும்.\\ உச்சஸ்தாயி-ன்னா ஏதோ கெட்ட வார்த்தைன்னே ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன்.\\ அடேங்கப்பா இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!! நீங்க இசையில விஷயம் தெரிஞ்சவரா இருப்பீங்க போலிருக்கே!! நமக்கு இதெல்லாம் ஒன்னும் தெரியாது. ரஹ்மான் நாலு வருஷத்துக்கு ஒரு படம் பண்றாரு, அதுவும் ராவணன் மாதிரி ஒன்னு ரெண்டு ஆயிடுது. பாட்டு ரசிகர்கள் மனசுக்கு பிடிக்கலையோ என்னவே தெரியலையே!!
ReplyDeleteரஹ்மான் உலக அளவில் எங்கோ போயிட்டிருக்கார்! ஆனா நம்மாளுகளோட ரசனை 'டண்டணக்கா' வில வந்து நிக்குது.
ReplyDelete2004 ல கில்லில டாகுடர் தொடங்கிவச்ச வினை..'அப்படிப்போடு!' அப்பா போட்டதுதான் இன்னும் முடியல! அதைவிடக் கொடுமை வருங்கால டாகுடர் பேரரசுவின் பட பாடல்களின் 'ஹிட்(!?)' எந்த மியூசிக் டைரக்டர் இசையமைத்தாலும் பேரரசு இசையமைத்தது போலவே கன்றாவியா இருக்கும்! அதை ரசிக்கிராங்கப்பா!
நீங்கள் சொன்னதுபோல வெஸ்டர்ன்ல மிகத்துல்லியமான ஒலிச்சேர்ப்பு, அமைதியான இசை எல்லாமே 'தல' ரஹ்மானின் தனித்துவம்! ஆனால் சமீப காலங்களாக தமிழில் அவரின் இசை எனக்கு அவ்வளவாகத் திருப்தியளிக்கவில்லை. எந்திரனில் காதல் அணுக்கள் மட்டுமே என்னைக் கவர்ந்தது. படத்தில் BGM செம்ம இரைச்சல்! தற்போதைய தமிழர் ரசனையை ரஹ்மான் உணர்ந்திருப்பார்தானே!
ஆனால் உலக அளவில்....சொல்ல வேண்டியதில்லை! மற்றபடி ரஹ்மானை யாரும் மறக்கல! மறக்கவும் முடியாது!
அ
ReplyDeleteபிஸ்கியில் ஏ.ஆர்.ரஹ்மானை அடையாளம் காண்பித்தமைக்கு நன்றி!!
ReplyDeleteரஹ்மான் சரி அது யாரு ரஹீம்?
ReplyDelete@kama
ReplyDeleteஎம் எஸ் வி, இளையராஜா ஜாம்பவான்கள். அதுக்காக ரஹ்மானை மட்டம் தட்டுவது ஞாயமே இல்லை. அவர் இசையில் வேண்டுமானால் மேற்கத்திய தாக்கம் இருக்கலாம், நம் இசை குறைவாக இருக்கலாம். ஆனால் இசை என்று மட்டும் பார்த்தால், அவரும் ( கவனிக்கவும் அவரும் ) ஜாம்பவான் தான்.
@ஜீ...
ReplyDeleteசார் டண்டணக்கா தான் நம்ம மரபு. மத்த இசையையும் நம்ம ரசிப்பது தப்பில்லை. தார தப்பட்டை எல்லாம் கேட்டதில்லையோ ? நீங்க தமிழர் தானே ?
Nice.,
ReplyDeleteஆமா நீங்க பதிவுல குறிப்பிட்டுள்ள ஐந்து பாடல்களின் ராகங்கள் என்னன்னு சொல்லவே இல்ல?
ReplyDeleteஏ ஆர் ரஹ்மான் மலயாளின்னு மலையாள பத்திரிக்கைகள் சொல்லி கொண்டு இருப்பது இங்கே எத்தனை பேருக்கு தெரியும்...? எனக்கும் இன்னும் விடை தெரிய வில்லை....
ReplyDelete@kama //வரலாறு... எனும் திரைப்படத்தில் தீயில் விழுந்த தேனா.. எனும் பாடல் சற்று கவனித்தாலும் கலங்கிவிடுவோம்.// உண்மை தான் பாஸ்..ரஹ்மான் வாய்ஸ்-ம் சூப்பரா இருக்கும்.
ReplyDelete@Jayadev Das //அடேங்கப்பா இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!! நீங்க இசையில விஷயம் தெரிஞ்சவரா இருப்பீங்க போலிருக்கே!! // இது மாதிரி பல திறமைகள் எனக்குள்ள ஒளிஞ்சிருக்கு சார்!
ReplyDelete@ஜீ... //ரஹ்மான் உலக அளவில் எங்கோ போயிட்டிருக்கார்! ஆனா நம்மாளுகளோட ரசனை 'டண்டணக்கா' வில வந்து நிக்குது.// டண் டணக்காவில் தான் ஆதியிலிருந்து எப்போதும் உள்ளது நம் ரசனை..அது ஒன்னும் பெரிய தப்பில்லையே ஜீ!..ஆனாலும் ரெண்டு ஆஸ்கார் வாங்கிய தமிழனை மறக்க்க்கூடாது தான்.
ReplyDelete@Speed Master// அ // என்னய்யா பின்னூட்டம் இது?..அ ஆ இ ஈ-ன்னு?
ReplyDelete@middleclassmadhavi //பிஸ்கியில் ஏ.ஆர்.ரஹ்மானை அடையாளம் காண்பித்தமைக்கு நன்றி!// நாலெட்ஜ் இஸ் பவர்!
ReplyDelete@அமுதா கிருஷ்ணா //ரஹ்மான் சரி அது யாரு ரஹீம்? // என்ன்ங்க நீங்க, எங்க அண்ணன் தானைத்தளபதி ரஹீம் கஸாலியை இப்படி கேட்டுட்டீங்க?..பின்னூட்ட்த்துல இருக்காரு பாருங்க.
ReplyDelete@krish கருத்துக்கு நன்றி பாஸ்!
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! கருத்துக்கு நன்றி பாஸ்!
ReplyDelete@Uma //ஆமா நீங்க பதிவுல குறிப்பிட்டுள்ள ஐந்து பாடல்களின் ராகங்கள் என்னன்னு சொல்லவே இல்ல?// முதல்ல இருக்குறது அபூர்வ ராகங்கள்.. மத்த்தெல்லாம் தெரியாத்தால சோக ராகம்-னு வச்சுக்கோங்க்க்கா!..இப்படிக் கேள்வி கேட்கீங்களே..நீங்களும் டீச்சரா?
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ //ஏ ஆர் ரஹ்மான் மலயாளின்னு மலையாள பத்திரிக்கைகள் சொல்லி கொண்டு இருப்பது இங்கே எத்தனை பேருக்கு தெரியும்...?// நார்த் இண்டியன்ஸ், ரஹ்மானை மும்பைக்காரர்னு சொல்றதை நான் கேட்டிருக்கேன். ஒரு தமிழனை எல்லாரும் சொந்தம் கொண்டாடுறது நமக்குப் பெருமை தான் சார்!
ReplyDelete@krish
ReplyDelete@செங்கோவி
நான் 'டண்டணக்கா' என்று குறிப்பிட்டது தாரை தப்பட்டையைக் குறைத்தோ, ஆதியிலிருந்து வரும் நம் ரசனையைக் குறைத்து மதிப்பிட்டோ அல்ல!
தற்போது வெளிவரும் பெரும்பான்மையான ஒரே மாதிரியான தாளலயத்துடனும், ஒரே மாதிரியான இரைச்சலான இசையையும்தான்! நல்ல இசைகொண்ட பாடல்கள் ஒப்பீட்டளவில் குறைவானவையே! உண்மையில் தாரை,தப்பட்டையை மிக அருமையாகக் கையாண்டவர்கள் இளையராஜா, ரஹ்மான் இருவருமே! மற்றபடி, எந்திரன் இசை பிடிக்கல என்று சொன்னேனே!
//ஒரு முறை அரசு கேள்வி பதிலில் இளையராஜாவின் இசையில் என்ன இருக்கிறது...? என்பது கேள்வி.. அரசு பதில்....ஜீவன். எனக்கு அவருக்குமுன் பேசப்பட்ட எம்.எஸ்.வியின் இசையில இருந்தது... வாழ்க்கைஅனுபவம்..எளிமையான மனித உணர்வுகள்...ஏ.ஆர்.ரஹ்மான இசையில் நீங்க என்ன கண்டடைந்தீர்கள் என்பதை சொல்லுங்கள் அற்புதமான தொழில்நுடப்த்தை தவிர........//
ReplyDeleteஒரு முறை இசை விமர்சகர் சுப்புடுவிடம் இதே மாதிரியான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் "இளையராஜா ஒரு சிறந்த கம்போசர், ரகுமான் ஒரு சிறந்த சவுண்ட் இஞ்சினியர்.
என்னைப் பொறுத்தவரை தன் சரக்கை நல்ல விலைக்கு விற்பனை செய்யும் கலை இளையராஜாவைவிட ரகுமானுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.
//எப்போதுமே ’டங்கு டக்கர’-ன்னு அடி பின்னுனாத்தான் நம்ம ஆட்களுக்கு பிடிக்கும். அதனால் தானோ என்னவோ நம்ம ஆட்கள் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை மறந்துவிட்டார்கள் போலும்.//
ReplyDeleteஏன் ரகுமான் "’டங்கு டக்கர’" போட்டதே இல்லையா?? அதை இப்போதும் கேட்க முடியுமா?
"டங்கு டக்கர" பாடல்கள் அனைத்தும் சீசனல் ஹிட்ஸ். மெலோடி மட்டுமே எப்போது வேண்டுமானாலும் கேட்க முடியும்.
ரகுமானின் மெலோடி பாடல்களை இன்னும் ஒரு பத்து வருடம் கழித்து கேட்டாலும் இதே இனிமை இருக்குமா என எனக்கு தெரியவில்லை.
ஐ,...
ReplyDelete50 வது பின்னூட்டம் என்னது, இன்றைய 1000வது வருகை என்னது (இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்? ஹி ஹி)
@ஜீ... ஜீ..உங்க முதல் கருத்து கொஞ்சம் மொட்டையா தெளிவில்லாம இருந்ததால அப்படி ஒரு தோற்றம் வந்திடுச்சு..இப்போ ஓ.கே..அண்ணந்தானே சொன்னேன்!..விட்டுடுங்க!
ReplyDelete@jothi //ஒரு முறை இசை விமர்சகர் சுப்புடுவிடம் இதே மாதிரியான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் "இளையராஜா ஒரு சிறந்த கம்போசர், ரகுமான் ஒரு சிறந்த சவுண்ட் இஞ்சினியர்.// அய்யோ..அய்யோ..இதைத் தான்யா நான் நேத்துப் பூரா யோசிச்சேன்..யாரோ சொன்னாங்களே..யாரு, யாருன்னு..ஞாபகமே வ்ரலை..சுப்புடுவா அது..யாருன்னு தெரியாமத் தான் பதிவுல அதைச் சேர்க்கலை! தகவலுக்கு நன்றி ஜோ!
ReplyDelete@jothi //50 வது பின்னூட்டம் என்னது, இன்றைய 1000வது வருகை என்னது (இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்? ஹி ஹி)// பின்னே, நாளைக்கு வரலாற்றில் இடம் பிடிக்க இது போதாதா?
ReplyDelete