Monday, March 14, 2011

சைவ மகனுக்கு அசைவ ஆத்தாவின் கடிதம்

அன்புள்ள மவனுக்கு,

ஆத்தா எழுதிக்கொள்வது. நேத்து நீ போன்ல சொன்ன விஷயத்தைக் கேட்டு குழம்பிப் போயிட்டேன் ராசா. போன்ல பேசுனா நிறைய துட்டு ஆயிடும். அதான் இந்த லெட்டர்..

என்ன ராசா திடீர்னு ‘தன் உயிரை வளர்க்க இன்னொரு உயிரைக் கொல்றது பாவம். அதனால கறி திங்கிறதை விட்டுட்டேன்’னு சொல்லீட்டே.ஜீவ காருண்யம், அது இதுன்னு என்னன்னவோ சொல்றியேப்பா..
வம்ச வம்சமா கறிசோறு தின்னு வளந்தவங்க தானே நாம. அப்படித் தின்னாத் தானே நாம பாக்குற வேலைக்குச் சரி வரும்..நீ நிறையப் படிச்ச புள்ள..நானோ பட்டிக்காட்டுல பொறந்து, பட்டிக்காட்டுல வாக்கப்பட்டு பட்டணக்கரையைவே பாக்காதவ. அதனாலயோ என்னமோ எனக்கு நீ சொன்னதுல நெறய விஷயம் புரியலைப்பா..யோசிக்க யோசிக்க நெறய கேள்வியா வருது..

உன் அப்பாரு இருந்தவரைக்கும் கறி எடுத்த அன்னைக்கெல்லாம் எப்படிச் சாப்பிடுவோம்னு ஞாபகம் இருக்கா.அவர் தட்டுல இருக்குற கறியெல்லாம் எடுத்து உன் தட்டுல போடுவாரு. நீ திருப்பி அவர் தட்டுல போடுவே. ‘இனிமே அப்பாகூடச் சாப்பிடமாட்டேன்’னு சொல்வே.இப்போ நீ சொல்றே ‘கறி சாப்பிடுறவன்லாம் காட்டுமிராண்டிக;ன்னு. அப்போ தான் சாப்பிடாம உனக்குப் போட்ட அவுகளும் காட்டுமிராண்டியா ராசா?

வம்ச வம்சமா கறி சாப்புடாத ‘இளகுன மனசு படைச்ச’ சனங்க நம்ம ஏரியால இருக்கத்தான் செய்யுதுக..எங்களை மாதிரி ‘கொடூர மனசு’ உள்ள சனங்களும் இங்க இருக்குதுக. இதுல எனக்கு ஒரு விஷயம் நெசமாவே புரியலை ராசா..ஏன் கொடூர மனசு உள்ளவுக மட்டும் வீட்டுல ஆடோ, கோழியோ வளக்காக..ஏன் இளகுன மனசு உள்ளவுக ஒரு ஆட்டை வாங்கி கடைசிக் காலம் வரைக்கும் அதுக்கு கஞ்சி ஊத்த மாட்டேங்குறாக..
உனக்கு கோணப்பேச்சி மாமாவை ஞாபகம் இருக்காய்யா..அஞ்சு பெத்தா அரசனும் ஆண்டின்னு சொல்வாக..ஆனா கோணப்பேச்சி மாமா ஆண்டி ஆகலை..ஏன்னா அவருட்ட எப்பவும் முப்பது செம்பறி ஆட்டுக இருக்கும்..அதுகளை வச்சு கெடை போடுவாரு..நல்லது பொல்லதுக்கு ரெண்டு ஆட்டை வெட்டி கறி விப்பாரு..அப்படியே அஞ்சு பொண்ணுகளையும் கரையேத்திட்டாரு. அவரு மாதிரி நம்ம ஏரியாலயே எத்தனை பேரு ஆடு,கோழியை வச்சு பொழச்சிருக்காக..

நீ சொல்ற மாதிரி எல்லாருமே கறி திங்குறதை விட்டுட்டா, அந்த அப்பாவி ஜனங்க எப்படி வாழ்வாங்க..கிராமப் பொருளாதாரம்னு ஒன்னு காந்தி காலத்துல பேசுவாங்க..அதைப்பத்தி நீ படிச்ச பொஸ்தகத்துல ஒன்னுமே சொல்லலியா..பொஸ்தகமுமா எங்கள கைவிட்டுடுச்சு?

ஆடு, கோழி மேல உள்ள இரக்கத்துல தான் பேசுதேன்னு சொல்றே..சரி, யாருமே கறி திங்கலைன்னா தன்னோட சோத்துக்கே அல்லாடற ஜனங்க எதுக்கு ஆடு, கோழி வளக்கணும்..வளத்து என்ன செய்வாங்க..அதனால அவங்க வளக்க மாட்டாங்க..அப்புறம் சிங்கம் புலி மாதிரி ஆடு கோழியும் நாட்டுல நாலோ அஞ்சோதான் மிஞ்சும். கருணை காட்டுதேன்ற பேர்ல இன்னைக்கு கோடிக்கணக்குல இருக்குற ஆடு கோழிகளை இல்லாம அழிக்கப் போறீக இல்லையா..பட்டிக்காட்டு ஜனங்க வாழக்கையையும் கெடுத்து, ஆடு கோழிகளையும் அழிச்சு..நல்லா இருக்குப்பா உங்க இரக்க குணம்..

நீ வெளிநாட்டுல வேலை செஞ்சப்போ, அவங்க மூணு வேளையும் கறியாத் திங்காங்கன்னு சொல்வியே..கேரளால இருந்துதான் நிறைய கறி ஏத்துமதி ஆகுதுன்னும் சொல்வியே..ஒருவேளை எங்களை கறி திங்க விடாமப் பன்ணிட்டு, அவங்க உடம்பை வளக்கலாம்னு பாக்குதீகளோ..உன் பாட்டன், பூட்டன், அய்யா,அந்த வெளிநாட்டுக்காரனுக எல்லாரும் கறி தின்னு பாவம் பண்னி நரகத்துக்குத் தான் போறாகளோ.அவுகளே போகும்போது, நீ மட்டும் சொர்க்கத்துப் போயி என்ன ராசா பண்ணப் போறே..
ஆட்டுக்கு நாங்க கொலயப் போடுவோம்..ஆடு புழுக்கையைப் போடும்..புழுகையை வயல்ல போடுவோம்..வயலு கொலயைப் போடும்..இது ஒரு வட்டம்யா..இது ஏம்யா கண்ணால பாத்தும் உனக்குப் புரியலை..

கோழிக்கு இரக்கப்படுதீக, சரி. ஆனா கோழி புழுவைத் திங்குமே..புழுவுக்கு என்ன செய்யப் போறீக.சின்ன மீனை பெரிய மீனு திங்குதே..கடல்ல குதிச்சு காப்பாத்தப் போறீகளோ..ஆபீசுல உட்காந்தே வேலை செய்றதால கறி தின்னாச் செறிக்க மாட்டேங்குதுன்னு சொல்லு. நான் ஒத்துக்கிறேன்..இல்லே, ‘எனக்குப் பிடிக்கலை;ன்னு மட்டும் சொல்லி நிப்பாட்டி இருந்தாலும் பிரச்சினை இல்ல.. அதைவிட்டுட்டு, உனக்குத் தான் மனசுல ஈரம் இருக்குறதாவும் நாங்கள்லாம் காட்டுமிராண்டிக மாதிரியும் பேசுதியே,அதான் எரிச்சலா இருக்கு.
எல்லாத்தையும் விடு.சைவப் புள்ளகள்லாம் வீட்டுக்கு ஒரு..ஒரே ஒரு ஆடு வளப்போம்னு சொல்லு..நான் கறி திங்கறதையே விட்டிடுதேன்..நீ லீவுக்கு வருவயேன்னு நானும் ஒரு ஆட்டை வளத்துட்டு வர்றேன்..இப்போ அதை என்ன செய்றது..

நீ தான் இரக்க குணம் உள்ளவன் ஆயிட்டயே..அதனால உன் வூட்டுக்கே அதை அனுப்பி வைக்கிறேன். கடைசிவரைக்கும் அதை கண்ணு கலங்காம வச்சுக் காப்பாத்து.

அப்புறம் முக்கியமான விசயம்..இந்த லெட்டரை என் மருமக கிட்டயும் காட்டு. ஏன்னா நீ ஆபீசுக்குப் போனப்புறம் ஆட்டுக்கு கொல கட்டுறது,  தண்ணி வக்கிறது எல்லாத்தையும் அவதானே பாத்துக்கணும்!

இப்படிக்கு,
ஆத்தா.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

 1. ம‌ட்ட‌ன் சாப்பிட‌லாமா வேணாமா? அதுவும் செம்மரி ஆடா? இல்லை வெள்ளாடா? ஒண்ணுமே சொல்ல‌லையே


  செங்கோவி, நாளாக‌ நாளாக‌ ம‌ட்ட‌ன் சாப்பிட‌வும் ப‌ய‌மாக‌த்தான் இருக்கிற‌து. ஆனால் ப்ராய்ல‌ருக்கு க‌ண்டிப்பாக‌ அவை ப‌ர‌வாயில்லை,

  ReplyDelete
 2. ம‌ட்ட‌ன் சாப்பிட‌லாமா வேணாமா? அதுவும் செம்மரி ஆடா? இல்லை வெள்ளாடா? ஒண்ணுமே சொல்ல‌லையே


  செங்கோவி, நாளாக‌ நாளாக‌ ம‌ட்ட‌ன் சாப்பிட‌வும் ப‌ய‌மாக‌த்தான் இருக்கிற‌து. ஆனால் ப்ராய்ல‌ருக்கு க‌ண்டிப்பாக‌ அவை ப‌ர‌வாயில்லை,

  ReplyDelete
 3. @jothi சாப்பிடுங்க ஜோதி..நல்லாச் சாப்பிடுங்க!

  ReplyDelete
 4. ஆத்தா நான் பாசாயிட்டேன்................
  பேரு வச்ச ஆத்தாள மறப்பேனா.................
  புரிஞ்சிகிட்டேன் ஆத்தா!

  பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 5. @விக்கி உலகம்நானும் பாசாயிட்டேன் விக்கி!..நன்றி.

  ReplyDelete
 6. @அமர பாரதி பாராட்டுக்கு நன்றி பாரதி!

  ReplyDelete
 7. நான் சுத்தமான சைவம்,.,, அண்ணன் செங்கோவி எல்லாமேட்டர்லயும் பயங்கர அசைவம் போல.. ஹி ஹி

  ReplyDelete
 8. நீங்க சாப்பாட்டுல மட்டும் தான் சைவம்னு எல்லாருக்கும் தெரியும் தலைவரே!

  ReplyDelete
 9. நான்கூட சைவந்தேன்.. சோ அப்பீட்டு அப்பாலிக்கா ரிப்பீட்டு

  ReplyDelete
 10. @டக்கால்டி என்னய்யா இது, எல்லாரும் சைவமா இருக்கீங்க..

  ReplyDelete
 11. நல்லாச் சொன்னீங்க பாஸ்! நான் அசைவம்! :-)

  ReplyDelete
 12. @சே.குமார் புரிஞ்சிடிச்சா..சரி தான்!

  ReplyDelete
 13. @ஜீ... நீங்க சாப்பட்டிலயும் நம்மள மாதிரி தானா..சந்தோஷம் ஜீ!

  ReplyDelete
 14. ஆடு வெட்டுருவங்களைத்தான் நம்புமாம் :-)

  ReplyDelete
 15. @இரவு வானம் பின்ன, சோறு(?) போட்டு வளத்தவங்களைத் தானே நம்பும்!!

  ReplyDelete
 16. எங்கூர்லே மனுசத்தொகையைவிட ஆட்டுத்தொகைதான் கூடுதல். ஆலுக்கு 14 ஆடுன்னு இப்போ கணக்கு.

  முக்கிய ஏற்றுமதியும் அதுகதான்.

  ReplyDelete
 17. oops...........

  தட்டாச்சுப்பிழை:(


  ஆலுக்கு - ஆளுக்கு என்று படிக்கவும்.

  ReplyDelete
 18. போதுண்டா சாமி..... இன்னிக்கு கீ போர்டுக்கு என்னவோ ஆகிப்போச்சு:(

  தட்டாச்சு = தட்டச்சு

  ReplyDelete
 19. ஹல்லோ சில்லி சிக்கன் இன்னும் வரல

  ReplyDelete
 20. கிலோ 300 ரூபாய் ஆக்கிட்டாங்க இதுக்காக வேணா நிறுத்திடலாம்

  ReplyDelete
 21. @துளசி கோபால் //எங்கூர்லே மனுசத்தொகையைவிட ஆட்டுத்தொகைதான் கூடுதல்.// எங்க ஊர் மக்கள் தொகையையும், உங்க ஊர் மக்கள்தொகையையும் கூட்டி, இரண்டு இடத்துலயும் இருக்கிற ஆடுகளின் எண்ணிக்கையைக் கழிச்சா கணக்கு சரியா வரும்... நான் சொல்றது சரிதானுங்களா டீச்சர்?

  ReplyDelete
 22. @துளசி கோபால் //ஆலுக்கு - ஆளுக்கு என்று படிக்கவும்// ஆலும் வேலும் பல்லுக்குறுதி-ன்னு சொல்வாங்க..அதனால பரவாயில்லைங்க!

  ReplyDelete
 23. @ஆர்.கே.சதீஷ்குமார் //சில்லி சிக்கன் இன்னும் வரல// நாளைக்கு பதிவுல உங்களுக்காக ரெண்டு லெக் பீஸே போடறதா இருக்கேன்..மறக்காம வந்திடுங்க.

  ReplyDelete
 24. @ரஹீம் கஸாலிஅட...பரவாயில்லை கஸாலி..அடுத்த பதிவுக்கு முதல்ல வரணும், சரியா...

  ReplyDelete
 25. Concept of "sacred" Veg and Non-veg came after Jainism and Buddhism severely criticised /opposed Vedic ritual sacrifices of 4 legged animals in fire/yagas and also tribal practices. Buddhism & Jainism got strong hold among the Indian masses, and its principles are mainly based on eco-balance rather than any "scared" or "God" concepts. To over come Budd'm & Jain'm, the Vedic priests has to leave their sacrifices in the name of God, become Veg then glorified it for their own benefits of getting back the respect among masses. So, it still continue......
  BTW, watch AVATAR dialogue for hunting animals for food

  ReplyDelete
 26. @Zeevaஉண்மை தான் பாஸ்..அதைப் பத்தி எழுதினா ‘வேற’ மாதிரி போயிடும்.அதான்.....தங்கள் ஆழ்ந்த அர்த்தமுள்ள பின்னூட்டத்திற்கு நன்றி!

  ReplyDelete
 27. அசைவம் சாப்பிட விரும்புபவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. மனிதனின் உடமைப்புக்கு ஏற்ற உணவு தாவர உணவுதான்.

  http://www.stephen-knapp.com/why_be_a_vegan_vegetarian.htm

  http://www.stevepavlina.com/blog/2005/09/are-humans-carnivores-or-herbivores-2/

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.