Sunday, March 20, 2011

போராட்டக் குணத்தை இழந்த போர்வாள் வைகோ (தேர்தல் ஸ்பெஷல்)

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்ற முடிவை மதிமுக எடுத்துள்ளது. நிச்சயம் இது சுயமரியாதை கொஞ்சமாவது மிச்சம் உள்ள எந்த வொரு மனிதரும் எடுக்கும் முடிவே. அந்த வகையில் இப்போதாவது வைகோ தன் சுயமரியாதையை மீட்டதில் சந்தோசமே.

ஆனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது எந்த அளவிற்கு சரியானது என்று தெரியவில்லை. நாம் ஏற்கனவே முந்தைய தேர்தல் பதிவில் சொன்ன மாதிரி, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளிலும், மதிமுகவிற்கு வாக்கு வங்கி உள்ள தொகுதிகளிலும் மதிமுக நிற்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் ஆவல்.

ஏற்கனவே தேர்தல் கமிசனின் அங்கீகாரத்தை இழந்துள்ள நிலையில், இந்தத் தேர்தலை முழுக்க புறக்கணிப்பது கட்சிக்கு நல்லதல்ல. மேலும் மதிமுகவின் நாயக்கர் சமூக ஓட்டை விஜயகாந்த்திற்கு தாரை வார்த்ததாகவே இது ஆகும். ஏற்கனவே பெரும்பாலான நாயக்கர் இன ஓட்டுக்களை விஜயகாந்த கவர்ந்துவிட்ட நிலையில், இந்த முடிவு மதிமுகவிற்கு பெரும் பாதகமாகவே முடியும்.

வேறு வழியின்றியே அதிமுகவை ஆதரிப்பதாக சீமான் போன்றோர் சொல்லி வரும் நிலையில், வைகோ இந்த நல்ல வாய்ப்பை உதறுவது நல்ல முடிவல்ல. வைகோ என்ற போர்வாள் மனதளவில் தளர்ந்து விட்டாரா? தனியே நிற்கக்கூடிய நல்ல வாய்ப்பு வந்துள்ள நிலையிலும் பின் வாங்குவது ஏன்? சீமான், நெடுமாறன் போன்ற உணர்வாளர்கள் வைகோவை இந்தத் தேர்தலில் நிற்குமாறு அறிவுறுத்துவதே சரியாக இருக்கும். அவர்கள் அம்மாவில்ம் விலை போகவில்லை என்பதற்கு அதுவே சாட்சியாகும்!

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஜெயலலிதாவின் அணுகுமுறையில் ஆரம்பத்திலிருந்தே எந்த மாற்றமும் இல்லை. அவரது அணுகுமுறையில் அகந்தை, ஆணவம், தன்னிச்சையான போக்கு ஆகியவையே திட்டவட்டமாகப் புலப்பட்டது’ என்று நேரடியாக ஜெ.வை தாக்கியதிலிருந்தே இனி சமரசத்திற்கு இடமில்லை என்றே படுகிறது.

மதிமுக தொண்டர்களை இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னாலும், நடைமுறையில் அவர்கள் வேறு யாருக்காவது ஓட்டுப் போடவே செய்வர். அதனால் மதிமுக தேர்தலில் நிற்பதன் மூலமே எஞ்சியிருக்கும் தொண்டர்களைத் தக்க வைக்க முடியும். இல்லையென்றால் கட்சி கரைந்து விடும் என்பதே யதார்த்தம்.

பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, கார்த்திக்கின் ஏதோவொரு டப்பா கட்சி எல்லாம் இந்தத் தேர்தலில் துணிந்து நிற்கும்போது வைகோ தயங்குவது ஏன்? காங்கிரஸுக்கு எதிரான ஓட்டு சிதறக்கூடாது என்பதனாலா? இனியும் ஜெ.வைப் பற்றி வைகோ கவலைப்படலாமா?

அதிமுக, திமுக வின் மேல் வெறுப்பில் இருக்கும் சில நடுநிலையாளர்கள், வைகோ என்ற தனி மனிதருக்காக மதிமுகவிற்கு ஓட்டுப் போடுவதைக் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு இருக்கும் அந்த ஆப்சனையும் வைகோ மூடுவது சரியா? நல்ல மனிதர்களும் அரசியலை விட்டு ஒதுங்கும் நிலையில், மிக்ஸியும் கிரண்டரும் தான் எங்கள் தலைவிதியா?

தனியாக நின்றால் கேவலமாகத் தோற்க வேண்டியிருக்கும் எனப் பயப்படுகிறாரா? நல்ல அரசியலுக்காக ஏங்கும் எம் போன்ற சாமானியர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தோற்றுக் கொண்டுதானே இருக்கிறோம். எங்களோடு சேர்ந்து நீங்களும் தோற்பது, உண்மையில் கௌரவமே!
மதிமுக தேர்தலில் நிற்க வேண்டும். அதற்கு தமிழின உணர்வாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் மதிமுக என்ற கட்சி இத்தோடு அழிந்து போகும்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

68 comments:

 1. ஒட்டு ஓட்டு அரசியலை விட இது கௌரவமானதும் கூட.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. ஏன் வை.கோ தேர்தலில் தனித்து நிற்க வேண்டும்?

  - நடு நிலை வாக்குகள்
  - அ.தி.மு.க, தி.மு.க எதிப்பு வாக்குகள். இவை இதுகாறும் தே.மு.தி.க.வுக்கு போயின.
  - காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள்.

  இதைவிட சரியான தருணம் வை.கோவுக்கு கிடைக்காது.

  -----------------------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள் - மார்ச் '2011)

  ReplyDelete
 4. ஏன் நண்பா இவ்ளோ சொன்னீங்களே துட்டு யாரு செலவு பண்றது...............தோல்வி நிச்சயம்னு தெரிஞ்சும் போராட இது போர்க்களம் அல்ல......இது அவரைப்பொறுத்தவரை சரியான முடிவே..........கூட்டணில பிரச்சனன்னு தெரிஞ்சதும் நேத்து வந்த டைசன நோக்கி ஒடுனான்களே தவிர உண்மைல அசிங்கப்பட்ட இவர தேடி வரல அது தான் அரசியல் ஹிஹி!

  நீங்க இன்னும் வளரனும் தம்பி.......சும்மா தமாஷுப்பா ஹிஹி!

  ReplyDelete
 5. புறக்கணிப்பு என்றாகிவிட்டது; பின்னால் இவர்களுக்கே சார்பாக வாய்ஸ் கொடுக்காமல் இருந்தால் சர்!

  ReplyDelete
 6. தேர்தலில் போட்டியிட்டு ஓட்டைப்பிரித்து தி மு க , காங்கிரஸின் வெற்றிக்கு துணை போவதை விட இதுவே சரியான முடிவு.

  ReplyDelete
 7. காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளிலும், மதிமுகவிற்கு வாக்கு வங்கி உள்ள தொகுதிகளிலும் மதிமுக நிற்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் ஆவல்//
  நிச்சயமாக வைகோ இந்த முடிவையாவது அறிவிக்க வேண்டும்

  ReplyDelete
 8. வைகோ சோரம் போக விரும்பாத நல்ல மனிதர்

  ReplyDelete
 9. ஏன் நண்பா இவ்ளோ சொன்னீங்களே துட்டு யாரு செலவு பண்றது...............தோல்வி நிச்சயம்னு தெரிஞ்சும் போராட இது போர்க்களம் அல்ல......இது அவரைப்பொறுத்தவரை சரியான முடிவே.../// repeate .... ellatthaiyum eluthuvathu easy thaniya ninna yaaru sir selavu pannuvanga

  ReplyDelete
 10. //ஏன் நண்பா இவ்ளோ சொன்னீங்களே துட்டு யாரு செலவு பண்றது...............தோல்வி நிச்சயம்னு தெரிஞ்சும் போராட இது போர்க்களம் அல்ல......இது அவரைப்பொறுத்தவரை சரியான முடிவே.//

  மிக‌ச்ச‌ரி

  ஜெய‌ல‌லிதாவைப்ப‌ற்றி தெரிந்தும் சுதாரிச்சிருக்க‌ணும்,..
  அர‌சிய‌ல் கொஞ்ச‌மாவ‌து சாண‌க்கிய‌த்த‌ன‌ம் வேணும். வெறும் பேச்சு ம‌ட்டும் அரிய‌ணை த‌ராது

  ReplyDelete
 11. வைகோ போன்ற கொசு கட்சி காணமல் போக நல்ல முடிவு செய்து உள்ளார். கொள்கை என்பது அணுவளவு மட்டுமாவது வேண்டும். வெறும் சீட் மட்டுமே கொள்கை என்றால் அம்மா இப்படி தான் நடத்துவார். சேது, ஈழம் இதற்கெல்லாம் வாய் பொத்தி அம்மாவின் பின்னால் நின்று கொள்கையை காவு கொடுத்த வைகோவிற்கு அம்மா செய்தது சரியே. இந்த முடிவிற்கு என்ன விலை யார் கொடுத்து உள்ளார்கள் என்பது தேர்தலுக்கு பின் தெரிய வரலாம்.

  ReplyDelete
 12. எனக்கு கூட வருத்தம் தான்...

  ReplyDelete
 13. எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.. அம்மாவுடன் கூட்டணியில் தொடர்வார் என்று... எதாவது அதிசயம் நிகழும் என்று நம்புகிறேன்..

  ReplyDelete
 14. தேர்தலில் போட்டியிட்டு ஓட்டைப்பிரித்து தி மு க , காங்கிரஸின் வெற்றிக்கு துணை போவதை விட இதுவே சரியான முடிவு. - I too agree with this. Dividing votes will only help DMK.

  ReplyDelete
 15. போராட்டம்.?.செம BORE ஆட்டம்...புளித்து விட்டது.

  ReplyDelete
 16. தேர்தலை புறக்கணிக்க எந்த கட்சி முடிவு செய்தாலும் அது மிகவும் தவறானது. நினைத்தால் ஓட்டு போடவும், புறக்கணித்தால் சும்மா இருக்கவும்..மக்கள் என்ன மாக்களா?

  ReplyDelete
 17. வைகோவின் இந்த முடிவால் நஷ்டம் அண்ணா.தி.மு.க-விற்குதான். வைகோ, நாஞ்சில் சம்பத் போன்ற பிரசார பீரங்கிகளை ஜெயலலிதா இழந்துவிட்டார்.

  ReplyDelete
 18. \\தேர்தலை புறக்கணிக்க எந்த கட்சி முடிவு செய்தாலும் அது மிகவும் தவறானது. நினைத்தால் ஓட்டு போடவும், புறக்கணித்தால் சும்மா இருக்கவும்..மக்கள் என்ன மாக்களா? \\ஓட்டுப் போடாமல் தவிர்ப்பதுதான் ஜன நாயகத்திற்கு விரோதமானது. இங்கே வை.கோ சொல்லி இருப்பது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்ற அர்த்தத்தில் என்றுதான் நான் நினைக்கிறேன். இது DMK விற்கு எதிரான வாக்குகளை சிதறடிக்காமல் இருக்க உதவும்.

  ReplyDelete
 19. ///தேர்தலில் போட்டியிட்டு ஓட்டைப்பிரித்து தி மு க , காங்கிரஸின் வெற்றிக்கு துணை போவதை விட இதுவே சரியான முடிவு. - I too agree with this. Dividing votes will only help DMK.

  ///

  தமாசு தமாசு.. எ தி மு க வின் மேல் கொலை வெறியில் இருக்கும் ம தி மு க செயல் வீரர்கள் லிஸ்ட் இந்நேரம் அழகிரி கையிலிருக்கும்.. பலர் இந்நேரம் வலையில் இருப்பார்கள். அவர்கள் தி மு க விற்கு போவார்கள் என்று சொல்லல ஆனா ஜெ மீது கோவத்தில் , உசுப்பேற்றப்பட்டு அவர்கள் வாக்கு ஆ தி மு க விற்கு எதிராக போகும்.
  என் ம தி மு க நண்பன் கூட ஜெ வெறுப்பில் ஆலந்தூரில் தா மோ அன்பரசுக்கு ஓட்டு போட முடிவு எடுத்துவிட்டான்

  ReplyDelete
 20. //அந்த வகையில் இப்போதாவது வைகோ தன் சுயமரியாதையை மீட்டதில் சந்தோசமே.//

  இது டூ லேட் மக்கா....

  ReplyDelete
 21. போர் வாள் மழுங்கிருச்சோ...

  ReplyDelete
 22. வைகோ எடுத்திருக்கும் இந்த முடிவு நல்ல முடிவு . போராட்ட குணத்தை இழப்பது அல்ல .மேலும் இந்த முடிவு மதிமுகவினரை மெருகூட்டும். இப்போது எடுத்துள்ள இந்த முடிவின் மூலம் மதிமுக ஒரு தனி அணியாக அதிமுக திமுக இரண்டையும் எதிர்க்கும் ஒரு சக்தியாக உருவெடுக்க இது வாய்ப்பாக அமையும்

  ReplyDelete
 23. \\ஆனா ஜெ மீது கோவத்தில் , உசுப்பேற்றப்பட்டு அவர்கள் வாக்கு ஆ தி மு க விற்கு எதிராக போகும். என் ம தி மு க நண்பன் கூட ஜெ வெறுப்பில் ஆலந்தூரில் தா மோ அன்பரசுக்கு ஓட்டு போட முடிவு எடுத்துவிட்டான்.\\ அட அமாம், இதுவும் சரிதான். அப்படியும் திருடர்கள் முன்னேற்றக் கழகம் தான் கொழிக்குமா? விடிவே இல்லையா?

  ReplyDelete
 24. s jayadev, already flash news reads - MDMK caders burnt Jaya Effigy in many districs.. and raised Ozhiga slogam against Jaya and ADMK..

  one MDMK mla alraedy moved out of MDMK and joined DMK.. many to come out..

  Alagiri is taking the count of MDMK caders who are al angry on Jaya..

  so DMK will gain in this too

  ReplyDelete
 25. •ஊரை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா : மதிமுகவினர் ஆவேசம்
  •மதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. விலகல்

  ReplyDelete
 26. //Jayadev Das said... [Reply]
  ஓட்டுப் போடாமல் தவிர்ப்பதுதான் ஜன நாயகத்திற்கு விரோதமானது. இங்கே வை.கோ சொல்லி இருப்பது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்ற அர்த்தத்தில் என்றுதான் நான் நினைக்கிறேன். இது DMK விற்கு எதிரான வாக்குகளை சிதறடிக்காமல் இருக்க உதவும்.//

  நண்பரே, நான் ஓட்டு போடுவது என்று சொன்னது மதிமுகவிற்கு என்ற அர்த்தத்தில். பொதுவாக அல்ல. ஓட்டு சிதறல் ஒரு பக்கம் இருப்பினும்..இருப்பவர்களில் ஓரளவு கிளீன் இமேஜ் உள்ள வைகோவும் தேர்தலை புறக்கணிப்பது நியாயமற்றது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. கூட்டணி நிழலில் மட்டும் சர்வகாலமும் அரசியல் நடத்துதல் சரியாக இருக்காது என்பது என் கருத்து. குறிப்பாக வைகோ விசயத்தில்.

  ReplyDelete
 27. @ராஜ நடராஜன்ஆமாம் சார்..வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 28. @THOPPITHOPPIஇப்படி சிரிப்பான் போடும்படி வைகோ நிலைமை ஆயிடுச்சே தொப்பி!

  ReplyDelete
 29. @tharuthalaiஉண்மை தான் நண்பரே...தொடர்ந்து நல்ல/ஒத்த கருத்துக்களைப் பகிர்வதற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 30. நள்ளிரவில் கமன்ட்டுகளுக்கு பதில் போட்டுக்கொண்டு இருக்கும் செங்கோவி வாழ்க!

  ReplyDelete
 31. \\நள்ளிரவில் கமன்ட்டுகளுக்கு பதில் போட்டுக்கொண்டு இருக்கும் செங்கோவி வாழ்க!
  \\நள்ளிரவு நமக்குத்தான் , அவர் இருக்கும் நாட்டில் இது மத்தியானமாக் கூட இருக்கலாம், யார் கண்டது!!

  ReplyDelete
 32. @விக்கி உலகம்//ஏன் நண்பா இவ்ளோ சொன்னீங்களே துட்டு யாரு செலவு பண்றது..// தோக்கப் போற தேர்தலுக்கு எதுக்கு செலவழிக்கணும்..உணர்வுள்ளவன் போடற ஓட்டு போதும்.//தோல்வி நிச்சயம்னு தெரிஞ்சும் போராட இது போர்க்களம் அல்ல.// போராடலாம் என்பதே என் நிலைப்பாடு விக்கி!

  ReplyDelete
 33. @Vijay//49 (O) or Vaiko// நல்ல வழியைக் காட்டியதற்கு நன்றி பாஸ்!

  ReplyDelete
 34. @middleclassmadhaviஅந்த பயம் எனக்கும் உண்டு சகோதரி!

  ReplyDelete
 35. @கே. ஆர்.விஜயன்// தி மு க , காங்கிரஸின் வெற்றிக்கு துணை போவதை விட இதுவே சரியான முடிவு.// உண்மை தான் சார்..ஆனால் இது மதிமுகவிற்கு நல்லதல்ல!

  ReplyDelete
 36. @ஆர்.கே.சதீஷ்குமார்//வைகோ சோரம் போக விரும்பாத நல்ல மனிதர்// சரியாகச் சொன்னீர்கள் சதீஷ்!

  ReplyDelete
 37. @shabiதங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.விக்கிக்கு சொன்ன பதிலே தங்களுக்கும்!

  ReplyDelete
 38. @jothi//ஜெய‌ல‌லிதாவைப்ப‌ற்றி தெரிந்தும் சுதாரிச்சிருக்க‌ணும்,..// என்ன செய்ய, வைகோவுக்கு அது தெரியலையே!

  ReplyDelete
 39. @ssk அதிமுக கூட்டணிக்கு இழப்பு என்பது என் அனுமானம்!

  ReplyDelete
 40. @!* வேடந்தாங்கல் - கருன் *!//எதாவது அதிசயம் நிகழும் என்று நம்புகிறேன்..// அது நிகழ வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன் கருன்!

  ReplyDelete
 41. @Jayadev Dasவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

  ReplyDelete
 42. @! சிவகுமார் !//தேர்தலை புறக்கணிக்க எந்த கட்சி முடிவு செய்தாலும் அது மிகவும் தவறானது// சரிதான் சிவா!

  ReplyDelete
 43. @ராஜேஷ், திருச்சி //ஆனா ஜெ மீது கோவத்தில் , உசுப்பேற்றப்பட்டு அவர்கள் வாக்கு ஆ தி மு க விற்கு எதிராக போகும்.// சரியாகச் சொன்னீர்கள் ராஜேஷ்..அதுவே நடக்கும்!

  ReplyDelete
 44. @MANO நாஞ்சில் மனோமனோ சார், இப்படி நச் நச்-னு கேட்டதுக்கு நன்றி!

  ReplyDelete
 45. @Suresh Kumar//மதிமுக ஒரு தனி அணியாக அதிமுக திமுக இரண்டையும் எதிர்க்கும் ஒரு சக்தியாக உருவெடுக்க இது வாய்ப்பாக அமையும்// அப்படி ஆனால் சந்தோசமே..தொண்டர்கள் சோர்வடையவே வாய்ப்பு அதிகம்.

  ReplyDelete
 46. @Jayadev Das//விடிவே இல்லையா?// இப்போதைக்கு இல்லை பாஸ்.

  ReplyDelete
 47. @ராஜேஷ், திருச்சி//so DMK will gain in this too// உண்மை..உண்மை..உண்மை!

  ReplyDelete
 48. @ராஜேஷ், திருச்சி தொடர்ந்து பின்னூட்டமிட்டு, பகலில் என் கடையைப் பார்த்துக்க் கொண்டதற்கு நன்றி..அலுவலகத்தில் மாட்டிக்கொண்டேன்!

  ReplyDelete
 49. @! சிவகுமார் !//ஓரளவு கிளீன் இமேஜ் உள்ள வைகோவும் தேர்தலை புறக்கணிப்பது நியாயமற்றது. அதில் மாற்றுக்கருத்து இல்லை.// சரி தான் சிவா..வைகோ தன் முடிவை மறுபரிசீலனை பண்ண வேண்டும்!

  ReplyDelete
 50. @! சிவகுமார் ! இணைய இணைப்பில் கொஞ்சம் பிரச்சினை நண்பா! அதான் இப்படி..சரியாக 2-3 நாள் ஆகலாம்! இப்போது கூட போய் போய் வருகிறது..ஆனாலும் விட மாட்டோம்ல!

  ReplyDelete
 51. @Jayadev Das//அவர் இருக்கும் நாட்டில் இது மத்தியானமாக் கூட இருக்கலாம், யார் கண்டது!!// கரெக்ட் சார்..இங்கே இப்போ 10.20 தான்..நான் இருப்பது குவைத்தில்!

  ReplyDelete
 52. வைகோ நல்ல மனிதர் என்பதில் எந்த மாற்றமில்லை! ஆனால்...அவரது கட்சியின் இன்றைய நிலைமை என்ன? வைகோ.. நாஞ்சில் சம்பத், மலை சத்யா, இவர்களை தவிர பெயர்சொல்லும்படி யார் உள்ளார்? இன்று ஜெயிக்கும் அவரது எம்.எல்.ஏ நாளை திமுக செல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம்? இவரால் கட்டுப்படுத்த முடியவில்லையே? பார்ப்போம்....

  ReplyDelete
 53. வைகோ நல்ல மனிதர் என்பதில் எந்த மாற்றமில்லை! ஆனால்...அவரது கட்சியின் இன்றைய நிலைமை என்ன? வைகோ.. நாஞ்சில் சம்பத், மலை சத்யா, இவர்களை தவிர பெயர்சொல்லும்படி யார் உள்ளார்? இன்று ஜெயிக்கும் அவரது எம்.எல்.ஏ நாளை திமுக செல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம்? இவரால் கட்டுப்படுத்த முடியவில்லையே? பார்ப்போம்....//


  வழிமொழிகிறேன்

  ReplyDelete
 54. //தனியாக நின்றால் கேவலமாகத் தோற்க வேண்டியிருக்கும் எனப் பயப்படுகிறாரா?//

  உண்மைதான்... காங்கிரஸ் நிற்கும் தொகுதியில் மட்டும் நின்றுபார்க்கலாம்...

  ReplyDelete
 55. வை கோ தனியா நின்னு ஓட்டை பிரிக்கலாம்

  ReplyDelete
 56. // காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளிலும், மதிமுகவிற்கு வாக்கு வங்கி உள்ள தொகுதிகளிலும் மதிமுக நிற்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் ஆவல்.//


  உண்மை. குறைந்த பட்சம் காங்கிரசுக்கு சவுக்கடி கொடுத்தது போலிருக்கும்..

  ReplyDelete
 57. தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புக்களையும் அரசியல் சூதாட்டத்தில் வைகோ இழந்தது வருத்தற்திற்குரியது.

  ReplyDelete
 58. @வைகை நீங்கள் சொல்வதும் சரி தான் வைகை!

  ReplyDelete
 59. @டக்கால்டி வழி மொழிந்ததுக்கு நன்றி டகால்ட்டி!

  ReplyDelete
 60. @சங்கவி தங்கள் கருத்துக்கு நன்றி சங்கவி!

  ReplyDelete
 61. @சி.பி.செந்தில்குமார் தனியாக நிற்க தொண்டர்கள் தயாராகவில்லை போல் தெரிகிறது சிபி!

  ReplyDelete
 62. @பாரத்... பாரதி... //குறைந்த பட்சம் காங்கிரசுக்கு சவுக்கடி கொடுத்தது போலிருக்கும்..// அதைத் தான் எல்லோரும் எதிர்பார்க்கிறோம்..

  ReplyDelete
 63. ”எம் போன்ற சாமானியர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தோற்றுக் கொண்டுதானே இருக்கிறோம். எங்களோடு சேர்ந்து நீங்களும் தோற்பது, உண்மையில் கௌரவமே!”

  உணர்வு பூர்வமான வரிகள்.. உங்கள் கருத்துக்கள் சிலவற்றில் என்னால் உடன்பட முடியவில்லை..
  ஆனால் நீங்கள் என்ன உணர்கிறீர்களோ அதையே நானும் உணர்கிறேன்...

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.