Tuesday, March 15, 2011

உங்க சம்பளம் கூடணுமா - சில அரசியல் டிப்ஸ்

செய்தி :
கூட்டணி விட்டு கூட்டணி தாவுன ராமதாஸ்க்கு 30 சீட்..ஆனா ஒரே கூட்டணியிலேயே இருந்த வைகோவுக்கு பட்டை நாமம்.

டிப்ஸ்:
ஒரே கம்பெனியில் வருஷக் கணக்கா உட்கார்ந்திருந்தா உங்களுக்கும் அதே நிலைமை தான். 10% இன்க்ரிமெண்ட் போடறதுக்கே பத்து மாசம் யோசிப்பாங்க. ஆனா, கம்பெனி விட்டு கம்பெனி ஜம்ப் பண்ணா, குறைந்தது 30%ஹைக் வாங்கலாம். அதனால 3-5 வருஷம் தான் மேக்ஸிமம். அப்புறம், ஒரு நிமிசம் தாமதிக்கக் கூடாது...பறந்திடணும்.

ஆமா, பறந்திடணும்!
செய்தி:
எம்.பி.பதவியை ராஜினாமா செய்யும் முடிவை பேரன் தயாநிதி கலைத்தார். மகன் அழகிரி தயங்கினார். தாத்தா அந்தர் பல்டி அடித்தார். மகள் கனிமொழி சிபிஐ விசாரணையில் மாட்டினார். திமுகவில் கலக்கம்!

டிப்ஸ்:
ஒரு கம்பெனியில முதலாளியோட சொந்தக்காரங்களா இருந்துக்கிட்டு, டாமினேட் பண்றாங்கன்னா சீக்கிரமே அந்தக் கம்பெனி புட்டுக்கப்போவுதுன்னு அர்த்தம். அந்த மாதிரிக் கம்பெனிலயே இருந்தீங்கன்னா, ஒரு நாளைக்கு நடுத்தெருவுல தான் நிக்கணும்!
பாவி...இப்படி நிக்க வச்சுட்டானே!
செய்தி:
திமுக கூட்டணியில் ’ஆளே இல்லாத’ காங்கிரசுக்கு 63 சீட்!

டிப்ஸ்:
நீங்க ஒருவேளை வேலையே தெரியாத மக்கு மன்னாரா இருக்கலாம். அப்போ உங்க டீம்ல நல்லா வேலை செய்யுற, நாலேட்ஜ் உள்ள ஆளை நல்லா ஃப்ரண்ட்ஷிப் பிடிங்க. ப்ராஜக்ட் உங்களால ரன் ஆகுதா, அவரால ஆகுதான்னே தெரியக்கூடாது. தனியா ஒரு புராஜக் கொடுத்தாக்கூட சமாளிப்பீங்க-ன்னு நம்புற அளவுக்கு நல்லா ஒட்டிக்கிட்டு ஆக்ட் கொடுங்க. 

அப்புறம் என்ன...வருசக் கடைசில உங்க ஃப்ரண்ட்டுக்கு 10% ஹைக் வந்தா, உங்களுக்கு நிச்சயம் 6%க்கு குறையாம ஹைக் வரும். (சில நேரங்கள்ல உங்களுக்கு 10% வந்து, அவருக்கு 6% வரவும் சான்ஸ் இருக்கு!)
இந்தம்மாவுக்கு என்ன பிரச்சினையோ..பாவம்!
செய்தி:
இத்தனை நாளும் குளுகுளு கொடைநாட்டிலேயே ஓய்வெடுத்த ஜெயலலிதாவுக்கு தேர்தல் நெருங்கியதும் மக்கள் ஞாபகம் வந்துவிட்டது.

டிப்ஸ்:
நீங்க ஒர்க் பண்ற குப்பை புராஜக்ட் 2 வருஷம் போகும்னா, 1 1/2 வருஷத்துக்கு ஒன்னும் கண்டுக்காதீங்க..ஏதாவது மொக்கை ஃபிகர்கூட கடலை போடுறது..சிஸ்ட்த்துல சின்னதா இண்டெர்நெட் எக்ஸ்ளோரர் ஒப்பன் பண்ணிக்கிட்டு ப்ளாக்ஸ் படிக்கிறதுன்னு எஞ்சாய் பண்ணுங்க..புராஜக்ட் முடியப்போவுதுன்னு தெரிஞ்சதும், களத்துல குதிங்க..

லேட்டா வீட்டுக்குப் போறது, எப்பவும் கையில ஒரு பேப்பரோட ஆஃபீஸ்ல குறுக்கும் நெடுக்குமா நடக்குறதுன்னு படங் காட்டுங்க! புராஜக்டே உங்க தலைலதான் நடக்குங்கிற மாதிரியே பேசுங்க. அந்த குப்பை புராஜக்ட் முடிஞ்சதும் மறக்காம உங்க பாஸ்கிட்டப் போய் ‘It's really a good project..I learned a lot'னு சொல்லுங்க..அதுக்கு அவரும் ‘ya..yaa..You put a great effort..I appreaciate it'-ன்னு சொல்வாரு!

கலர் படங்கள்:
நீங்க என்னோட வலைப்பதிவுக்கு புதுசா வந்தவர்னா, ’எதுக்கு இப்படி ஒரு சீரியஸான(!) பதிவுல சம்பந்தமே இல்லாம பொம்பளைப் படமாப் போட்டிருக்கான்..சரியான விவஸ்தை கெட்ட மனுஷனா இருப்பான் போலிருக்கே’ன்னு நினைச்சிருப்பீங்க..(பழைய ஆட்களுக்கு பழகிப் போயிருக்கும்!.).ஆனா நான் காரணத்தோட தான் இந்தப் படங்களைப் போட்டிருக்கேன். அதுலயும் ஒரு டிப்ஸ் ஒளிஞ்சிருக்கு. படங்களை உத்துப் பாத்தும் தெரியலைன்னா...நமீதாவைத் தாண்டி கீழ வாங்க சொல்றேன்.
இதுக்கு கமெண்ட் போட்டா படிக்கவா போறாங்க!

டிப்ஸ்:
எப்பவுமே சீரியஸா இருந்தா கஷ்டம்ங்க! சிலபேர் தங்களோட பாஸ்கிட்ட எப்பவும் சீரியஸா அஃபிசியல் விஷயமே பேசிக்கிட்டிருப்பாங்க..அப்படி இருந்தா வேலைக்கு ஆகாது. பாஸ் அங்கிள்கூட நல்லா மிங்கிள் ஆனாத்தான் அப்ப்ரைசல் நேரத்தில் உதவி செய்வாரு. அதனால அவருக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி பேசுங்க. உதாரணமா அவர் ஒரு ரஜினி ரசிகரா இருந்தா, ’ரஜினியோட அடுத்த படம் பூஜை போடறதுக்குள்ள, மீனாவோட பொண்ணு வயசுக்கு வந்திருமா சார்’னு கேட்கணும்.

சில பாஸ்கள் இருக்காங்க...எப்பப் பார்த்தாலும் சீரியஸாவே இருப்பாங்க..எதைப்பத்தியாவது கவலைப்பட்டுக்கிட்டே இருக்கிற அவங்ககிட்டப் போய் ‘கெக்கே பிக்கே’ன்னு ஜாலியா பேசுனா வேலைக்காகாது. அதனால நீங்க உங்க கவலையை அவர்கிட்ட பகிர்ந்துக்கணும். உதாரணமா ‘என்ன சார் இது..நமீதா இப்படி பெருத்துக்கிட்டே போகுது’ன்னு சொல்லுங்க..நல்லா மிங்கிள் ஆயிடலாம்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

64 comments:

 1. ஐயோ.. என்னாம்மா? டிப்சு சொல்லியிருக்காரு... செங்கோவிக்கு ஒரு ஓஒ.... போடுங்கப்பா...


  எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

  ReplyDelete
 2. வ‌ண‌க்கக்க்க்க்க்க‌ம்,.

  ReplyDelete
 3. //அப்புறம் என்ன...வருசக் கடைசில உங்க ஃப்ரண்ட்டுக்கு 10% ஹைக் வந்தா, உங்களுக்கு நிச்சயம் 6%க்கு குறையாம ஹைக் வரும். (சில நேரங்கள்ல உங்களுக்கு 10% வந்து, அவருக்கு 6% வரவும் சான்ஸ் இருக்கு!)///

  நீங்க‌ ஆறா இல்லை ப‌த்தா?

  ReplyDelete
 4. //(பழைய ஆட்களுக்கு பழகிப் போயிருக்கும்!.).//

  ஹி ஹி ஹி

  அதான் மிட் நைட் ம‌சாலா மாதிரி 12 ம‌ணிக்கு டெய்லி புதுப்ப்து ப‌ட‌மா போடுறீங்க‌ளே

  ReplyDelete
 5. க‌டைசி டிப்ஸ் ந‌ச்

  ReplyDelete
 6. @தமிழ்வாசி - Prakash//செங்கோவிக்கு ஒரு ஓஒ.... போடுங்கப்பா.// ஓஓ போடறதுக்கு ஓட்டு போடலாம்ல பாஸ்!

  ReplyDelete
 7. @jothi //வ‌ண‌க்கக்க்க்க்க்க‌ம்,.// வண்க்கோம்..வண்க்கோம்

  ReplyDelete
 8. @jothi //நீங்க‌ ஆறா இல்லை ப‌த்தா?// பத்து தான்..ஆனா சிலநேரங்களிலா, பல நேரங்களிலா-ன்னு சொல்ல மாட்டேனே!

  ReplyDelete
 9. @jothi//அதான் மிட் நைட் ம‌சாலா மாதிரி 12 ம‌ணிக்கு டெய்லி புதுப்ப்து ப‌ட‌மா போடுறீங்க‌ளே// அதானே..! புள்ளை படத்தை புரஃபைல்ல வச்சுக்கிட்டு நாம ரெண்டு பேரும் அடிக்கிற லூட்டி கொஞ்சம் ஓவரு தான்!

  ReplyDelete
 10. @jothi கடைசி டிப்ஸா..கடைசி படமா? சும்மா சொல்லுங்க பாஸு..

  ReplyDelete
 11. //புள்ளை படத்தை புரஃபைல்ல வச்சுக்கிட்டு நாம ரெண்டு பேரும் அடிக்கிற லூட்டி கொஞ்சம் ஓவரு தான்!//

  ஹா ஹா ஹா ஹா

  ReplyDelete
 12. // கடைசி டிப்ஸா..கடைசி படமா? சும்மா சொல்லுங்க பாஸு..//

  உண்மையிலேயே க‌டைசி டிப்ஸ்தான்,.. வித்தியாச‌மான‌ கோண‌த்தில் சொல்லி இருந்தீர்கள்

  ReplyDelete
 13. @jothi //வித்தியாச‌மான‌ கோண‌த்தில் சொல்லி இருந்தீர்கள்// நன்றி..நன்றி!

  ReplyDelete
 14. antha tips mattum thaan enakku pidikkalaa maththa ellaam arumai..vaalththukkal

  ReplyDelete
 15. @செங்கோவி
  ///@தமிழ்வாசி - Prakash//செங்கோவிக்கு ஒரு ஓஒ.... போடுங்கப்பா.// ஓஓ போடறதுக்கு ஓட்டு போடலாம்ல பாஸ்!///

  பாஸ், ஓட்டு போடுறப்போ என் இனைய தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டது. இப்ப ஓட்டு போட்டாச்சு...

  ReplyDelete
 16. @தமிழ்வாசி - Prakash திரும்பி வருவீங்கன்னு தெரியும் பாஸ், நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்..உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா..

  ReplyDelete
 17. @மதுரை சரவணன் //antha tips mattum thaan enakku pidikkalaa // சார், இப்படி மொட்டையாச் சொன்னா எப்படி சார்..எந்த டிப்ஸ் பிடிக்க்லைன்னு சொல்லுங்க சார்..இப்படி நடுராத்திரில மொட்டைக் கமெண்ட் போட்டா ,நான் எப்படி சார் நிம்மதியா தூங்குறது..

  ReplyDelete
 18. அற்புதமான பதிவு.

  ReplyDelete
 19. //படங்களை உத்துப் பாத்தும் தெரியலைன்னா...நமீதாவைத் தாண்டி கீழ வாங்க சொல்றேன்.//

  வர முடியல..!

  ReplyDelete
 20. இன்னிக்கு வடை போச்சே..இருங்க படிச்சுட்டு வரேன்

  ReplyDelete
 21. யோவ் எப்படியா உன்னால இப்படி யோசிக்க முடியுது...கண்ண கட்டுது...அதுவும் ஸ்டில்ஸ் யப்பா !!!

  ReplyDelete
 22. உதாரணமா ‘என்ன சார் இது..நமீதா இப்படி பெருத்துக்கிட்டே போகுது’ன்னு சொல்லுங்க..நல்லா மிங்கிள் ஆயிடலாம்!//

  என்ன பாஸ் நீங்க? இவ்ளோ சீரியசான மேட்டர காமெடியா சொல்றீங்க?

  ReplyDelete
 23. @வேல் தர்மா முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்!

  ReplyDelete
 24. @! சிவகுமார் !கொஞ்சம் கஷ்டம் தான்..முயற்சி செஞ்சா தாண்டிடலாம் சிவா!

  ReplyDelete
 25. @டக்கால்டி //அதுவும் ஸ்டில்ஸ் யப்பா !!// நோ..நோ, கண்ட்ரோல்..கண்ட்ரோல்!

  ReplyDelete
 26. @வைகை //இவ்ளோ சீரியசான மேட்டர காமெடியா சொல்றீங்க?// நான் எவ்வளவு சீரியஸா சொல்லியிருக்கேன்..காமெடின்னு சொல்லீட்டீங்களே பாஸ்..

  ReplyDelete
 27. ஆஹா.. அண்ணன் சிக்சர் அடிச்சுட்டார்டோய்

  ReplyDelete
 28. >>>ஆனா, கம்பெனி விட்டு கம்பெனி ஜம்ப் பண்ணா, குறைந்தது 30%ஹைக் வாங்கலாம்.

  இது உண்மைதான்

  ReplyDelete
 29. >>>ஆனா நான் காரணத்தோட தான் இந்தப் படங்களைப் போட்டிருக்கேன். அதுலயும் ஒரு டிப்ஸ் ஒளிஞ்சிருக்கு. படங்களை உத்துப் பாத்தும் தெரியலைன்னா...நமீதாவைத் தாண்டி கீழ வாங்க சொல்றேன்.

  ஏத்தமய்யா ஏத்தம்.. உமக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்...

  ReplyDelete
 30. இது ஒரு செமயான ஹிட் போஸ்ட்..

  ReplyDelete
 31. கும்மலாம்னு வந்தேன்.. ஆனா பதிவு செமயா இருக்கு.. சோ... ஐ எஸ்கேப்பு

  ReplyDelete
 32. செய்தியும் டிப்ஸ்ம் அருமை...

  அருமையான சிந்தனை....

  ReplyDelete
 33. .இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..

  ReplyDelete
 34. மேலாண்மை விதிகளை அள்ளி வீசியிருக்கீங்க...

  ReplyDelete
 35. //லேட்டா வீட்டுக்குப் போறது, எப்பவும் கையில ஒரு பேப்பரோட ஆஃபீஸ்ல குறுக்கும் நெடுக்குமா நடக்குறதுன்னு படங் காட்டுங்க! புராஜக்டே உங்க தலைலதான் நடக்குங்கிற மாதிரியே பேசுங்க. அந்த குப்பை புராஜக்ட் முடிஞ்சதும் மறக்காம உங்க பாஸ்கிட்டப் போய் ‘It's really a good project..I learned a lot'னு சொல்லுங்க..அதுக்கு அவரும் ‘ya..yaa..You put a great effort..I appreaciate it'-ன்னு சொல்வாரு!//


  தூளுங்க...

  ReplyDelete
 36. @சி.பி.செந்தில்குமார் //ஏத்தமய்யா ஏத்தம்.. உமக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்... //

  சங்கத் தலைவரே இப்படிச் சொல்லலாமா..

  //இது ஒரு செமயான ஹிட் போஸ்ட்.. //
  பிரபல பதிவர் சிபி அண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்!


  //கும்மலாம்னு வந்தேன்.. ஆனா பதிவு செமயா இருக்கு..//
  படத்தைப் பார்த்து அசந்துட்டீங்களாக்கும்!.

  ReplyDelete
 37. @சங்கவி செங்கோவியைப் பாராட்டிய சங்கவிக்கு நன்றி.

  ReplyDelete
 38. @வேடந்தாங்கல் - கருன் சிரிங்க..சிரிங்க..சிரிச்சுக்கிட்டே இருங்க!

  ReplyDelete
 39. @பாரத்... பாரதி... //மேலாண்மை விதிகளை அள்ளி வீசியிருக்கீங்க... // ஏதோ நம்மால ஆன சிறு உதவி..ஹி..ஹி..

  ReplyDelete
 40. புதுசு புதுசா சொல்லுங்க

  ReplyDelete
 41. ஹி ஹி ஹி ஹி ஹி சிலுக்கு.....

  ReplyDelete
 42. ஹி ஹி ஹி ஹி ஹி நமீதா....ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 43. சி பி செந்திலுக்கு சந்தோஷத்தை பாருங்க....

  ReplyDelete
 44. @ரஹீம் கஸாலி புதுசாச் சொன்னாத்தானே உங்களுக்குப் பிடிக்கும் கஸாலி!

  ReplyDelete
 45. @MANO நாஞ்சில் மனோ //சி பி செந்திலுக்கு சந்தோஷத்தை பாருங்க.... // தலைவரை சந்தோஷப்படுத்துறது தானே நம்ம மாதிரி தொண்டர்களோட கடைமை..அதுசரி, அவருக்கு மட்டுமா உங்களுக்கும் சந்தோஷம் தானே!

  ReplyDelete
 46. எதுக்கு எதோட முடிச்சு ஹஹா செம கலக்கல்

  ReplyDelete
 47. இனிமே இங்க வருவியா.??? வருவியா.?? ஒரு ஸ்டில்லாவது பாக்குறமாதிரி போடுயா..

  உங்க டிப்ஸ்ச பத்தி ஏதாச்சும் சொல்லணும்னு நினச்சாலும் முடியல.. கருமம் கருமம்

  ReplyDelete
 48. @தம்பி கூர்மதியன் ரொம்ப நல்லவரா இருப்பீங்க போல..சாரி பாஸ்!

  ReplyDelete
 49. @ஆர்.கே.சதீஷ்குமார் //அருமையான யோசனைகள் // ஒருத்தர் திட்டுதாரு...ஒருத்தர் அருமைங்காரு..ஒன்னும் புரியலியே!

  ReplyDelete
 50. ஸாரிலாம் எதுக்கு பாஸ்.. நீங்க ஃபேமஸான(.!?) பதிவர்.. அதிகமாக பெண்கள் வர வாய்ப்பிருக்கு.. கொஞ்சம் என்னைபோல ஆட்களும் வருவாங்க.. பொண்ணுங்க ஸ்டில்ல போடுங்க வேணாம்னு சொல்லல(சி.பி.,) ஆனா ரொம்ப கவர்ச்சியா போகவேணாமே.!!

  ReplyDelete
 51. @தம்பி கூர்மதியன் நீங்க சொல்றதும் சரி தான் பாஸ்..இனிமே கொஞ்சம் கவனமா இருந்துக்கிறேன்..உங்க அக்கறைக்கு நன்றி.

  ReplyDelete
 52. //செங்கோவி said...
  @தம்பி கூர்மதியன் நீங்க சொல்றதும் சரி தான் பாஸ்..இனிமே கொஞ்சம் கவனமா இருந்துக்கிறேன்..உங்க அக்கறைக்கு நன்றி.//

  :-))))))))))

  ReplyDelete
 53. //செங்கோவியைப் பாராட்டிய சங்கவிக்கு நன்றி.//


  ரைமீங்ல பின்றீங்க ஜீ...

  ReplyDelete
 54. Indian No 1 Free Classified website www.classiindia.com
  No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

  Start to post Here ------ > www.classiindia.com

  ReplyDelete
 55. \\அதனால 3-5 வருஷம் தான் மேக்ஸிமம். அப்புறம், ஒரு நிமிசம் தாமதிக்கக் கூடாது...பறந்திடணும்.\\ ராமதாஸ் திரும்பத் திரும்ப வெறும் இரண்டு கம்பனிகளுக்கு இடையே மட்டும் தான் வேலை பார்க்கிறார், இந்த மாதிரி சமயம் பார்த்து காலை வாருபவர்களை கம்பனிகள் நம்புமா?

  ReplyDelete
 56. \\டிப்ஸ்:ஒரு கம்பெனியில முதலாளியோட சொந்தக்காரங்களா இருந்துக்கிட்டு, டாமினேட் பண்றாங்கன்னா சீக்கிரமே அந்தக் கம்பெனி புட்டுக்கப்போவுதுன்னு அர்த்தம். \\கண்ட கண்டவங்களை எல்லாம் கல்லாப் பெட்டியில உட்கார வைக்க முடியாது சார். இந்த கம்பனியைப் பொறுத்தவரை யாரோட Joint venture வச்சுகிறாங்க என்பது முக்கியம், அப்புறம் இவங்க போட்டி கம்பனி குட்டிச் சுவரைப் போனதாக இருக்கணும். அப்படியிருந்தா இவங்கதான் ராஜா.

  ReplyDelete
 57. \\திமுக கூட்டணியில் ’ஆளே இல்லாத’ காங்கிரசுக்கு 63 சீட்!\\வேணுமின்னா Congress கூட்டணி இல்லாம தனிச்சு நின்னு பார்க்கச் சொல்லுங்க, ஒன்னும் தேறாது.

  ReplyDelete
 58. \\அதுக்கு அவரும் ‘ya..yaa..You put a great effort..I appreaciate it'-ன்னு சொல்வாரு!\\ But People would say, "Better luck next time".

  ReplyDelete
 59. \\கலர் படங்கள்:\\ அங்கங்கேயும் வண்டி நின்னு போயிடுது, படத்தையெல்லாம் பார்த்து மலைச்சு நின்னு போகவேண்டியதா இருக்கு. ம்ம்.....

  ReplyDelete
 60. மாப்ள இவ்ளோ விஷயத்துல அடி வாங்கி இருக்கீங்களா சரிப்பா நானும் கத்துக்கறேன் ஹி ஹி!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.