டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.
இன்று நாம் பார்க்கப் போவது உற்பத்தி (PRODUCTION/ASSEMBLY) & கட்டுமானம்(ERECTION) டிபார்ட்மெண்ட் பற்றி...
எதுக்கு இது?
இதுவரை படிச்ச R&D, Design எல்லாமே ப்ராக்டிகலா ஒரு பொருளா மாறுகின்ற இடம் புரடக்சன் டிபார்ட்மெண்ட். உற்பத்தி-ங்கிறது பெரிய ஏரியா..தயாரிக்கப் படுற பொருளைப் பொறுத்து உற்பத்தி முறை மாறும்.
ஃபவுண்ட்ரி, மெசின் ஷாப், ஃபோர்ஜிங், ஷீட் மெட்டல் ஃபார்மிங், வெல்டிங்-ன்னு நீங்க புரடக்சன் டெக்னாலஜி-ல படிச்ச ஒவ்வொரு சேப்டரும், நிஜ வுலகில், தனித் தனி ஏரியா..ஒவ்வொன்னும் பெரிய ஏரியா..ஃபவுண்ட்ரில ஒர்க் பண்ற எஞ்சினியருக்கு மெசின் ஷாப் நுணுக்கங்கள் தெரியாது. மெசின் ஷாப்ல ஒர்க் பண்ற எஞ்சினியருக்கு வெல்டிங்/எரக்சன் பற்றிய நுணுக்கங்கள் தெரியாது.
நீங்க எந்த ஏரியாவுல வேலை பார்க்குறீங்களோ, அதைப் பத்தி நீங்க படிச்சது மட்டும் தான் பயன்படும். மற்றவை சும்மா ஏதாவது ரெஃபரன்ஸ்க்கு உதவும். அவ்வளவு தான்.
என்ன செய்வாங்க?
உற்பத்திங்கிறது ஒரு நட்டை அல்லது ஒரு பம்ப்-இன் ஸ்பேர் பார்ட் போன்றவற்றை தயாரிக்கிற துறை. அப்படித் தயாரான உதிரிப் பாகங்களை இணைக்கற ஏரியா, அசெம்ப்ளி. ஹூண்டாய் போன்ற பெரிய கம்பெனிகள், கார் உதிரி பாகங்களை உற்பத்தி செய்றதில்லை. பெரும்பாலும் வெளில வெண்டார்கிட்ட டிராயிங் கொடுத்து, பார்ட்ஸை வாங்கிக்கறாங்க. அசெம்ப்ளி மட்டும் தான் இவங்க பண்றாங்க.
உற்பத்திலயே வர்ற இன்னொரு ஏரியா எரக்சன். இது பில்டிங் கட்டுறது, தொழிற்சாலையை நிர்மாணிக்கிறது, கப்பல் கட்டுறதுன்னு பல பெரிய புராஜக்ட்ஸ் நடக்கிற இடம். மேலே சொன்ன, உற்பத்தி செய்யப்பட்ட உதிரிப் பாகங்களை அசெம்பிள் பண்ணி தயாரிக்கப்பட்ட பம்ப், இங்க தேவையான இடங்கள்ல பொருத்தப்படும். (நம்ம வீடுகள்ல பொருத்தப்பட்ட மாதிரி!)
ஒரு பொருளை உற்பத்தி பண்ற எல்லா தொழிற்சாலைகளிலும் புரடக்சன் ஷாப் இருக்கும். பேரே சொல்ற மாதிரி, இங்க தான் அந்தப் பொருள் உற்பத்தி செய்யப்படும். அதற்கு உதவுற இயந்திரங்களையும், இயந்திரங்களை இயக்குற ஆபரேட்டர்களும் இங்க தான் இருப்பாங்க. அவங்களுக்கு வேலை கொடுத்து, அவுட்புட் வாங்குறவர்தான் புரடக்சன் இஞ்சினியர். மெட்டீரியல் டிபார்ட்மெண்ட்ல இருந்து தேவையான ரா மெட்டீரியல் வந்துடும். டிசைன் டிபார்ட்மெண்ட்ல இருந்து ட்ராயிங் வந்துடும். ஏற்கனவே மெசினும், ஆபரேட்டரும் இருக்காங்க.
அப்புறம் என்ன, புரடக்சனை ஆரம்பிக்க வேண்டியதுதான். தினமும் இவ்வளவு என்ணிக்கை உற்பத்தி ஆகணும்னு டார்கெட் கொடுத்துடுவாங்க. அதை முடிக்கமுன்னே பெண்டு கழண்டுடும். மெசின் சரியா இருந்தா, ஆபரேட்டர் பிரச்சினை பன்ணுவாங்க. ஆபரேட்டர் சரியா இருந்தா மெசின் அல்லது டிராயிங்ல பிரச்சினை வரும். எல்லாத்தையும் இழுத்துக்கட்டிப் போறதுங்கிறது, ரெண்டு பொண்டாட்டிக்காரன் பொழப்பை விட மோசமா இருக்கும்.
இங்கே சேரணும்னா..
ஒரு புரடக்சன் கம்பெனிக்கு இண்டர்வியூ போறீங்கன்னா, அவங்க என்ன பொருள் தயார்ரிக்கிறாங்க, என்ன முறையில் (ஃபவுண்ரியா..மெசின் ஷாப்பா ) தயாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, அதைப்பத்தி நல்லாப் படிச்சுட்டுப் போங்க.
டப்பு தேறுமா
டிசைன் போன்ற துறைகளை ஒப்பிடும்போது, இங்கு உடல் உழைப்பு அதிகம், சம்பளம் கம்மி. ஹூண்டாய் போன்ற ஒரு சில MNC கம்பெனிகள் கொஞ்சம் டீசண்டான சம்பளம் தருகிறார்கள்.அதனால முடிந்தவரை, இந்தத் துறையை தவிர்ப்பது நல்லது!
5000 ரூபாய் சம்பளத்துக்கு டிசைன்ல வேலையும், 10,000ரூபாய் சம்பளத்துக்கு புரடக்சன்ல வேலையும் கிடைச்சா, டிசைனை செலக்ட் பண்ணுங்க..அடுத்த ரெண்டு வருஷத்தில் புரடக்சன் எஞ்சினியரை விட எங்கயோ போய்டுவீங்க!
புரடக்சன்ல நீங்க பெரும்பாலும் பண்றது ப்ளானிங்கும், சூப்பர்வைசிங்கும் தான். அதனால வருடக்கடைசீல போனஸ்/சம்பள உயர்வு கேட்டா, ‘டிசைன்ல இருகுறவன் டிராயிங் கொடுத்தான்,ஒர்க்கர் வேலை பார்த்தாங்க. நீ என்னப்பா பண்ணெ?' -ன்னு கூச்சப்படாமக் கேட்பாங்க.
எனது ஆரம்பக்காலங்களில் கோயம்பத்தூரில் உள்ள மெசின் ஷாப்களில் வேலை பார்த்திருக்கிறேன். இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு காலை 7 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 9 மணிக்கு மேலேயும் வேலை பார்ப்போம். இரவு 9 மணிக்கு கிளம்பும்போது மேனேஜர் கேட்பார்: என்னப்பா, அதுக்குள்ள கிளம்பிட்டே!
அடுத்த வாரம் Quality Control டிபார்ட்மெண்ட் பற்றிப் பார்ப்போம்!
பத்தாயிரம் சம்பளத்தில் உடல் உழைப்பை உறிஞ்சும் நிறுவனங்கள் தற்போதுள்ள பொருளாதார நிலைக்கு மேலும் சம்பளம் வழங்க வேண்டும்.
ReplyDeleteபத்தாயிரம் மேக்ஸிமம்ங்க...நிறைய இடங்கள்ல அதுக்கும் கீழ தான்!
ReplyDeleteநல்ல தகவல்கள் செங்கோவி
ReplyDeleteபாஸ் நீங்க மெக்கானிகல் இஞ்சினியரா?
ReplyDeleteநானும் கூட மெக்கனிக்கல் இஞ்சினியர் தான்
பகிர்வுக்கு நன்றி...
நல்ல வேலை செய்றிங்க
ReplyDeleteசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ
மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு பயனுள்ள தகவல்... நன்றி...
ReplyDelete@jothi:நன்றி ஜோ!
ReplyDelete@டக்கால்டி:ஆஹா..நீங்களும் மெக்கானிக்கலா..சந்தோஷம் பாஸ்!
ReplyDelete@தமிழ்வாசி - Prakash:பாராட்டுக்கு நன்றி பிரகாஷ்!
ReplyDelete@வேடந்தாங்கல் - கருன்:நாங்களும் வாத்தியார் வேலை பார்ப்போம்ல!
ReplyDeleteவாவ் . நம்ம ஏரியா . நன்றாக இருக்கிறது .
ReplyDelete@பார்வையாளன்:நீங்களுமா..பெரிய பெரிய தலைகள்லாம் மெக்கானிகலாவே இருக்கே!
ReplyDeleteஆஹா..நீங்களும் மெக்கானிக்கலா..சந்தோஷம் பாஸ்!//
ReplyDeleteஎன்னங்க பண்றது நம்ம மூஞ்சை பாத்தாலே யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க...ஹி ஹி
@டக்கால்டி:மெக்கானிகல் பசங்கன்னாலே அப்படித்தானே பாஸ்..யாரும் நம்ப மாட்டாங்க!
ReplyDeleteநான் சிவில், ஆனால் எனக்கு கல்லூரியில் மெக்கானிகல் Dept. பசங்களை ரொம்பவும் பிடிக்கும்...
ReplyDeleteமத்த Dept. பசங்க பொண்ணுங்க கூட படிக்குறதால ஓவர் scene போடுவாங்க... ஆனா நீங்க எல்லாம் தங்கம் :)
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
நல்ல தகவல்கள்.
ReplyDeleteஉங்கள் கட்டுரை அருமை... நல்லா எழுதி இருக்கீங்க..
ReplyDelete@அருண் பிரசங்கி:நாங்க காஞ்சு கருவாடா திரிஞ்ச கதையை பெருமையா சொன்னதுக்கு நன்றி நண்பரே..ஒன்னும் கிடைக்காதவரைக்கும் மெக்கானிகல் பசங்க நல்லவங்க தான்!
ReplyDelete@சே.குமார்:நன்றி குமார்!
ReplyDelete@அருண் பிரசங்கி நீங்களே பாராட்டியதில் ரொம்ப சந்தோசம் அருண்.
ReplyDeleteஇன்னைக்கு அண்ணனைக் கும்ம முடியல.வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிட்டு அப்பீட் ஆகிக்கறேன்
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்அப்போ டெய்லி நீங்க வர்றதே என்னை கும்மத் தானா..விளங்கிரும்!
ReplyDelete//அருண் பிரசங்கி said... [Reply]
ReplyDeleteநான் சிவில், ஆனால் எனக்கு கல்லூரியில் மெக்கானிகல் Dept. பசங்களை ரொம்பவும் பிடிக்கும்...
மத்த Dept. பசங்க பொண்ணுங்க கூட படிக்குறதால ஓவர் scene போடுவாங்க... ஆனா நீங்க எல்லாம் தங்கம் :)//
எல்லா இடமும் இதே கதைதானா பாஸ்? மேத்ஸ் என்ற ஏரியாவுக்குள் போகும்போதே அது காய்ஞ்சனூராகவே இருக்கிறதே! என்ன கொடுமை...! இந்த சோகத்தையே பதிவு பதிவா நிறைய எழுதலாம்! அவ்வவ்! :-)
ஓகே ஓகே
ReplyDelete@ஜீ...:ஆமாம் ஜீ..எல்லா இடத்திலும் மத்த டிபார்ட்மெண்ட் எல்லாம் கோ-எட்..மெக்கானிகல் மட்டும் ‘பாய்ஸ்’ டிபார்ட்மெண்ட்..அப்படியே பொண்ணுக இருந்தாலும்...வேணாம், எதுக்கு வம்பு!
ReplyDelete@விக்கி உலகம்:டீக் ஹை..டீக் ஹை!
ReplyDeleteபயனுள்ள கட்டுரை.தொடரட்டும் சேவை.
ReplyDeleteவழிகாட்டும் பதிவு, பகிர்வுக்கு நன்றிகள்..
ReplyDelete@பாரத்... பாரதி... பாராட்டி ஊக்கப்படுத்தியதற்கு நன்றி பாரதி!
ReplyDelete